Jump to content

சோழர், பல்லவர் காலத்திலேயே செயல்பட்ட நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்தின் வரலாறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகம் - இலங்கை கடல் வழிப் போக்குவரத்து
படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது.

தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.

நூற்றாண்டு கால கப்பல் போக்குவரத்து வரலாற்றை கொண்ட நாகை

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு, இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறினார்.

"பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்கள் 2,500 ஆண்டுகளாக தமிழகத்தின் துறைமுகங்களில் நங்கூரம் இட்டன. தமிழகத்தின் வணிகர்கள், வணிகக் குழுக்களாக இணைந்து பல்வேறு நாடுகளோடு வர்த்தகம் செய்ததாகக் கூறும் சு.இராசவேலு, "அவ்வகையில் நாகப்பட்டினம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக நகராக விளங்கி வந்திருக்கிறது," என்றார்.

அவரது கூற்றுப்படி, நாகப்பட்டினம் அயல் நாட்டு ஆய்வாளர்களால் நிகமா என அழைக்கப்பட்டது. கிரேக்கப் பயணியான தாலமி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள நிகமா என்னும் துறைமுக நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

"நிகமா என்று அவர் குறிப்பிடும் துறைமுக நகரம் நாகப்பட்டினம்தான் என ஸ்காட்லாந்தை சார்ந்த நிலவியல் அறிஞரும் கடலோடியுமான கர்னல் யூல் கி.பி.1873ஆம் ஆண்டு அடையாளம் கண்டார்.

சங்க காலத்தில் காவேரிப்பூம்பட்டினம் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கி வந்ததால், சங்க கால இலக்கியங்களில் நாகப்பட்டினம் துறைமுகம் தொடர்பான செய்திகள் அதிகம் நமக்குக் கிடைக்கவில்லை.

எனினும் நிகமா என்னும் பெயர் நாகப்பட்டினத்தைக் குறிக்கலாம் என்ற குறிப்பிலிருந்து இக்கடற்கரை நகரம் கடல் வாணிகம் செய்து வந்த பெருவணிகர்களைக் கொண்டு விளங்கி வந்துள்ளதை அறிய முடிவதாக" கூறுகிறார் பேராசிரியர் சு.இராசவேலு.

 

வர்த்தக தலைநகரமாகத் திகழ்ந்த பண்டைய நாகை

நாகப்பட்டினம் அயல் நாட்டு ஆய்வாளர்களால் நிகமா என அழைக்கப்பட்டது

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு

நிகமா என்னும் சொல் தமிழிக் கல்வெட்டுகளிலும், மட்கல ஓடுகளிலும் குறிக்கப்பட்டுள்ள வணிகக் குழுவோடு தொடர்புடையது. நிகமம் என்றால் பெருவணிகர்கள் வாழ்கின்ற ஊர் எனப் பொருள்படும். எனவே நாகப்பட்டினம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த வணிக நகரமாக விளங்கியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் இராசவேலு.

கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராப் பாடல்களில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மாட மாளிகைகளையும் மணிமண்டபங்களையும் நெடிய மாடங்களையும் நீண்ட வீதிகளையும் கொண்டு, அலை தழுவும் நகரமாகவும் கோட்டை மதிலுடன் கூடிய நகரமாகவும் இந்நகரைப் பற்றி தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது.

இந்நகரில் பல வணிகர்கள் வாழ்ந்ததையும் பல நாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதையும் குதிரைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதையும் தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. தொடக்க கால கல்வெட்டுகளிலும் தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகை எனும் பெயரில்தான் வழங்கப்பட்டுள்ளது.

நாகையில் சீனக் காசுககளும் சீனர்கள் பயன்படுத்திய பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்துள்ளன. இதனால், சீனாவிலிருந்து கப்பல்கள் இத்துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பின்னர் இலங்கைத் தீவிற்கும் பிற நாடுகளுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நாகப்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் உள்ள தனிக்கல் ஒன்றில் "நாகைப் பெருந்தட்டான்" என்ற பெயர் காணப்படுகிறது. கிபி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கும் பழமையான கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பல்லவர் கால எழுத்து வடிவில் இருக்கிறது.

எனவே பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக நாகை விளங்கியிருக்கலாம் எனக் கூறுகிறார் சு.இராசவேலு. "தட்டான் என்பது உலோக வேலைப்பாடுகள் செய்கின்ற மக்களைக் குறிக்கும். சோழர் காலத்தில் நாகையில் தயாரிக்கப்பட்ட பல பௌத்த படிமங்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் சென்றுள்ளன."

 

சோழர்களின் கப்பற்படை தளமாக செயல்பட்ட நாகை

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து
படக்குறிப்பு, நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து 2000 ஆண்டுகால வரலாற்றை கொண்டது

சிற்பிகளும் வணிகர்களும் வாழ்ந்த பகுதியாக இந்நகரம் இருந்திருக்கிறது என்பதை வரலாற்று, இலக்கிய, மற்றும் தொல்லியல் தரவுகள் மூலம் புரிந்துகொள்ளலாம்.

இந்நகரம் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான குடவையாறு மற்றும் உப்பனாறு ஆகிய ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், தேவாரத்தில் இந்நகர் "கழி சூழ் கடல் நாகை" எனக் குறிப்பிடப்படுகிறது.

அப்பரும், சம்பந்தரும் நாகை துறைமுகத்தில் பல்வகை கலங்கள் நின்றிருந்ததைக் குறிப்பிடுவதுடன் இத்துறைமுகத்தில் கற்பூரமும் யானைகளும் கப்பல்களில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததையும் துறைமுக கண்காணிப்பாளர்கள் இவற்றுக்குச் சுங்கவரி வசூலித்ததையும் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்பத்தில் நாகை எனக் குறிப்பிடப்பட்ட இந்நகரம், சோழர் காலத்தில்தான் பட்டினம் என்னும் வார்த்தையுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என்ற பெயருடன் அழைக்கப்படலாயிற்று. நாகை என்னும் பெயர் கடல் சங்கைக் குறிக்கும் நாகு என்னும் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார் சு.ராசவேலு.

பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்கள் தொன்மைத் துறைமுகமான காவேரிப்பூம்பட்டினத்தைத் தவிர்த்து நாகப்பட்டினத் துறைமுகத்திற்குச் சிறப்பிடம் அளித்தனர். இவர்கள் காலத்தில் இந்நகரம் மிகச் சிறந்த வணிக நகரமாகவும் சோழர்களின் கப்பற்படை இருந்த நகரமாகவும் விளங்கியது.

 
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள்
படக்குறிப்பு, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள்

முதலாம் பராந்தக சோழர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஈழத்தைக் கைப்பற்றி 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்னும் பட்டத்தை வைத்துக் கொள்கின்றார். எனவே இந்த மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே சோழர்கள் சிறந்ததொரு கப்பற்படையை வைத்திருந்துள்ளனர் என அறியலாம்.

அதன்மூலம் இலங்கையைக் கைப்பற்றியதுடன் இலங்கை அரசர்களுடன் நட்புறவு பாராட்டிய பாண்டியர்களையும் முதலாம் பராந்தக சோழர் வெற்றி பெற்றார். தொடர்ந்து சோழ மன்னன் ராஜராஜன் காலத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் நாகப்பட்டினத்தை சோழர்களின் சிறந்த துறைமுக நகரமாக மாற்றியதோடு பல கப்பல்களை அங்கிருந்து செலுத்தும் வகையில் நாகை துறைமுகத்தை விரிவுபடுத்தினார்.

கேரளப் பகுதியிலிருந்து வந்த வணிகர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் செல்ல நாகைப்பட்டினத் துறைமுகத்தையே பயன்படுத்தியுள்ளனர்.

நாகை அருகேயுள்ள கீழையூர் சிவன் கோவிலில் யவனர்கள் குறித்த முதல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழையூர் கைலாசநாதர் கோவிலில் கி.பி.1287ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் "யவனர் திடர்" என்ற சொற்கள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் யவனர்கள் பற்றிய சொல் பயன்பாட்டுடன் கூடிய முதல் கல்வெட்டு இதுதான். 'யவனர் திடர்' என்பது 'யவனர் திடல்' எனப் பொருள்படும். இது, யவனர்கள், அதாவது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்த வணிகர்கள் குடியிருந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

 
தமிழகம் - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து
படக்குறிப்பு, சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது

சோழர்களுக்குப் பின் தஞ்சாவூர் நாயக்கர் காலத்திலும் இத்துறைமுக நகரம் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது.

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

போதிய பயணிகள் இன்மையால், அந்தச் சேவை நிறுத்தப்பட்டு, இந்த ஆண்டு மறுபடியும் தொடங்கப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் அரியநேத்திரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், சுமந்திரன் தலைமையிலான மற்றைய தரப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இவரது இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளமை தமிழ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1400086
    • விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 7   18 SEP, 2024 | 08:52 PM ( அபி லெட்சுமண் ) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான  ஏற்பாடு செய்து கொடுக்கப்படுவதுடன் கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர்  வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும்  உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக  வாக்களிக்க, வாக்குச் சீட்டினை  தொட்டுணரக்கூடிய வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, தேர்தலன்று  வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட விரோதமானது. இயலாமையுடையவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாயின் அதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ” இன்று புதன்கிழமை (18) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.  வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது   தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எஸ். அச்சுதன் மற்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ். மாதவ ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது. இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் எவ்வாறு தமது வாக்குகளை இடவேண்டும் எனவும் வாக்காளர்களுக்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்தும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோரினால் எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி,இன்று 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைவதுடன் அமைதி காலம் பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.  எனவே இதனைக் கருத்திற்கொண்டு அச்சு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தேர்தல் தொடர்பான செய்தி வெளியீட்டு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டனர். வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பில் தெரிவிக்கையில்,  நாடளாவிய ரீதியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகச் சுவரொட்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இலகுவாக வாக்களிப்பதற்காகவும் இலகுவாக வாக்குச் சாவடிகளை அணுகுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  தமது வாக்குரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா ? எனவும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமது வாக்குரிமை தொடர்பில் கிராம சேவகரைச் சந்தித்துத்  தேர்தல் தொடர்பிலான தகவலினை பெற்றுக்கொள்ள முடியும். வாக்களிப்பதற்காக  அடையாள அட்டை ,சாரதி அனுமதிப் பத்திரம் ,கடவுச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கப்பட்ட பத்திரம் , மத குருமார்களுக்கான அடையாள அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கமுடியும். அடையாள  அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை அணுகி தற்காலிக அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்காவிடில் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி விநியோகிக்காமல் இருக்கும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது www.elections.gov.lk  என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கு  மேலதிகமாக இயலாமை கொண்டவர்கள் வாக்களிப்பதற்கான  ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர்  வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும்  உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக  வாக்களிப்பதுடன் வாக்குச் சீட்டினை  தொட்டுணரக்கூடிய வகையில் ஏற்பாடுகளும் செவிப்புலனற்றவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று  வாக்களிக்கும்  போது சைகை மொழி பிரயோகம்  போன்ற ஏற்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது முறைமைகள் நாடளாவிய ரீதியில் உள்ள 13423 வாக்குச் சாவடிகளிலும் பின்பற்றப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையத்தில் பின்பற்றக்கூடியவை எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கமுடியும். எனவே கால தாமதமின்றி வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிக்கச் செல்லும்  போது அயலவர்கள் , நண்பர்கள் என்பவர்களோடு  வாக்குச் சாவடிக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன்  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் . வாக்காளர்  தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் தான் வாக்களிக்க முடியும். எனவே நேர்த்தியான முறையில் தனது வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் வாக்குகளை அளித்த பின்னர் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிக்கும் முறைமை தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது வேட்பாளரின் பெயருடன் காணப்படும்  வாக்குச் சீட்டில் வாக்களிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூட்டுக்குள்  வாக்கினை அளிக்க வேண்டும். தனது முதல் வாக்கினை அளிக்கும் போது 1 எனவும் விருப்பு வாக்குகளை அளிக்கும் போது 2,3 எனவும் வாக்களிக்க முடியும்.  அதற்கு மேலதிகமாக தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டத்துக்கு அமைய விருப்பத் தெரிவினை இடுவதற்காக புள்ளடி இட முடியும் என்பதுடன் மேலதிக கோடுகள் காணப்படும் போது வாக்கு நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோர் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/194048
    • அப்பிடியோ? இந்த தலை கீழ் வரலாற்றை எங்கே எடுத்தீர்கள்? பதில் அவசியமில்லை. 2014 இல் கிரிமியாவை ஒரு எதிர்ப்புமில்லாமல் வந்து ரஷ்யா பிடித்தது நட்புறவான செயல் என்கிறீர்களா? அந்த நேரம் சும்மா இருந்தது போல இப்போதும் சும்மா மேற்கு இருந்திருந்தால், நீங்களும் இப்ப அகதியாக மேற்கு நோக்கி வந்திருப்பீர்கள் என நான் ஊகிக்கிறேன்! கிழக்கு நோக்கி ரஷ்யாவுக்கு போயிருப்பீர்கள் என்று சொன்னாலும் நம்புகிறேன்😎! இவ்வளவு "உலக நலன்" கருதி எழுதுகிறீர்கள் என்கிறீர்கள்! ஆனால், நீங்கள் வந்து தஞ்சம் பெற்ற நாடே அமெரிக்காவினால் நாசிகளிடமிருந்தும், பின்னர் நேட்டோவினால் ஸ்ராலினிடமிருந்தும் காப்பாற்றப் பட்ட நாடு என்பதை எங்கேயும் வாசித்தறியவில்லையா? அல்லது உருப்படியான ஒலி ஒளி மூலங்களில் கேட்டுக் கூட அறிய முடியவில்லையா? இதற்கு தற்போது உங்களிடம் இருக்கிற ஒரு சோடி கண்ணும் காதுமே போதுமே உங்களுக்கு? பாவிக்க மாட்டீர்களா😂?
    • ஹிஸ்பல்லா அமைப்பின் மீது ஒரு எதிர்கால இராணுவ நடவடிக்கையின் போது அதிர்ச்சி வைத்தியமாக (element of surprise) செய்யவிருந்த வேலையை, இஸ்ரேல் இப்போதே அவசரமாகச் செய்ய வேண்டி வந்து விட்டது என்கிறார்கள். இனி புதுக் கொம்பனியொன்றை உருவாக்கி, புதிய அண்டர் வேர் மாதிரி ஏதாவது ஹிஸ்பல்லா போராளிகளுக்கு விற்றுத் தான் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் இஸ்ரேல்😎! 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.