Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு

image

லெபனானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் லெபனானில் நடந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அப்போது அந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் மவுனம் சாதித்துவந்தது. இந்நிலையில் முதன்முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெதன்யாகு, லெபனான் பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலடனேயே நடந்ததாக தெரிவித்தார். இதனை நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஒமர் டோஸ்ட்ரி உறுதி செய்தார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு லெபனான் தாக்குதல் பற்றி வெளிப்படையாகப் பேசியது கவனம் பெற்றுள்ளது. பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலும் தான் ஒப்புதல் வழங்கிய பின்னரே நடந்ததாக நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து அவருடன் 3 முறை பேசிவிட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களில் எதிர்ப்பை மீறி பேஜர் நடவடிக்கை மற்றும் ஹசன் நஸ்ரல்லா மீதான தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பணயக்கைதிகளை காசாவிற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து போர் தொடங்கியது. காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போரில் 43,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக மாறிவிட்டன.

இதன் நீட்சியாக தற்போது லெபனான் எல்லைக்குள் உள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஹெஸ்புல்லாக்களை அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது.

கடந்த செப்டம்பர் மாதம், லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்தியகிழக்கை மட்டும் அல்ல, மொத்த உலகையும் உலுக்கி எடுத்தியது. பின்னர் வாக்கி டாக்கிகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் என களமிறங்கியது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துவிட்டது. காயமடைந்தோர் எண்ணிக்கை 13,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் தான் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்கள் தனது ஒப்புதலுடனேயே நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198401

  • 2 weeks later...
  • Replies 52
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    எதுக்கும் இனி காற்சட்டை / டிரவுசர் பொக்கட்டுக்குள் கைபேசியை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெடித்தால் உள்ளதும் போய் விடும்.

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இரு மாதங்களுக்கு முன்னர் தாய்வானிடமிரிந்து 3000 இற்கு அதிகமான, அமைவிடத்தையும் உரையாடலையும் கண்டுபிடிக்க முடியாத பேஜர்களை ஹிஸ்புள்ளா கொள்வனவு செய்திருக்கிறது. தாய்வானில் இருந்து லெபனானிற்கு அனுப்பப்படு

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஒரு பொருளை உருவாக்குபவர்களால் அந்த பொருளை வைத்து நல்லது - கெட்டது எதுவுமே செய்ய முடியும்.😎 வீட்டில் இருக்கும் தனிப்பட்ட கணணிகளையே கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள் உள்ள  உலகத்தில் அல்லது கணணி தொழில

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் பலி

image
 

இஸ்ரேல் லெபனான் தலைநகரில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் முகமட் அபீவ் கொல்லப்பட்டுள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.

மக்கள் நெரிசலாக வாழும் ரஸ் அல் நபா பகுதியில் பாத் அரசியல் கட்சியின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதை லெபனானின் சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

கொல்லப்பட்ட ஊடக பிரிவு தலைவர் கடந்த திங்கட்கிழமை பெய்ரூட்டில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.

இந்த தாக்குதலில் சிரியாவின் பாத் கட்சியின் லெபனான் கிளையின் அலுவலகம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/199075

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 ஆண்டு ரகசிய திட்டம்: லெபனானில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்களை மொசாட் வெடிக்கச் செய்தது எப்படி?

லெபனான் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு, இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்புகளில் டஜன்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஃபி பெர்க்
  • பதவி, பிபிசி செய்திகள்

2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லெபனானை சேர்ந்த ஹெஸ்பொலா ஆயுதக்குழுவினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்புக்கு உள்ளாகின. இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட இந்த வாக்கி டாக்கிகளை ஹெஸ்பொலா குழுவினர் 10 ஆண்டுகளாக எப்படி பயன்படுத்தினர் என்பதை இஸ்ரேலின் முன்னாள் உளவுத்துறை ஏஜென்டுகள் இருவர் வெளிப்படுத்தியுள்ளனர்

இந்த வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டவை என்று வெளிக்காட்டாமல் ஏமாற்றி எவ்வாறு இவற்றை ஆயிரக்கணக்கில் ஹெஸ்பொலா குழுவிடம் விற்கப்பட்டன என்று மொசாட்டின் முன்னாள் ஏஜென்டுகள் இருவர் சிபிஎஸ் செய்திகளிடம் கூறினர்.

இந்த வெடிப்பு தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தனர்.

இது ஹெஸ்பொலா குழுவினரை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதலில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் இந்த தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என விவரித்தார்.

 

இந்த தாக்குதல் நடந்தபோது, இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மோசமான தாக்குதலை நடத்தியது. அதற்கு ஒரு நாளுக்கு பிறகு, ஹெஸ்பொலாவும் இஸ்ரேலின் இலக்குகளை தாக்கியது.

2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று, லெபனான் முழுவதும், குறிப்பாக ஹெஸ்பொலா குழுவினர் இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன.

இதனை பயன்படுத்தி வந்தவர்களுடன் சேர்த்து அவர்களுக்கு அருகில் இருந்த சிலரும் இந்த வெடிப்புச் சம்பவத்தினால் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும் குழப்பமும் நிலவியது.

இது நடந்த அடுத்த நாளே, இதே முறையில் வாக்கி-டாக்கிகளும் வெடித்தன. அதிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

இந்த சம்பவங்கள் நடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்டார் என்று இஸ்ரேல் ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன.

பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளியான சிபிஎஸ் செய்திகள் உடனான ஒரு நேர்காணலில், இரு முன்னாள் மொசாட் ஏஜென்டுகள் இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை கூறினர்.

இந்த வாக்கி டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை இஸ்ரேலின் மொசாட் நிறுவனம் மறைத்து வைத்திருந்தது என தனது பெயர் மைக்கேல் என கூறிய ஒரு ஏஜென்டு தெரிவித்தார்.

பொதுவாக இந்த கருவிகளை வைத்திருப்பவர்கள் அவர்களது உடுப்பில் இதயத்திற்கு மிக அருகே அதனை வைத்திருப்பார்கள் என்றும் அவர் கூறினர்.

லெபனான் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு, இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பேஜர் வெடிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகின

போலி நிறுவனத்தை உருவாக்கி ஏமாற்றினர்

ஹெஸ்பொலா ஆயுதக்குழு 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 16,000 வாக்கி-டாக்கிகளை "நல்ல விலையில்" வாங்கியதாகவும் மைக்கேல் கூறினார்.

"இஸ்ரேலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறிய முடியாத வகையில் வெளிநாட்டு போலி நிறுவனங்களை உருவாக்க எங்களிடம் பல வாய்ப்புகள் இருந்தன. விநியோகச் சங்கிலியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பல போலி நிறுவனங்களை உருவாக்கினோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் ஒரு போலியான உலகத்தை உருவாக்கினோம். அதற்கு கதை எழுதியது, இயக்கியது, தயாரித்தது, நடித்தது என எல்லாம் நாங்கள்தான். உலகமே எங்கள் மேடை''

முன்பு வாக்கி டாக்கிகளை மட்டுமே கொண்டிருந்த ஆப்ரேஷனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஜர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது என்று சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது.

அந்த சமயம், 'கோல்ட் அப்போலோ' என்ற தாய்வான் நிறுவனத்திடமிருந்து ஹெஸ்பொலா பேஜர்களை வாங்கி வந்ததைக் கண்டறிந்ததாக மொசாட் கூறியது.

எனவே கோல்ட் அப்போலோ என்ற பெயரில் மொசாட் ஒரு போலி நிறுவனத்தை நிறுவி, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட பேஜர்களை உருவாக்கியது. இதனை அந்த உண்மையான தாய்வான் நிறுவானத்திற்கே தெரியாமல் செய்தது.

இந்த பேஜர்களை பயன்படுத்துபவரை மட்டும் காயப்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளை மொசாட் உள்ளே வைத்ததாக சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது.

லெபனான் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு, இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,MORTEZA NIKOUBAZL/NURPHOTO VIA GETTY IMAGES

"குறைந்தபட்ச சேதம் மட்டுமே ஏற்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக எல்லா செயல்பாடுகளையும் பல முறை சோதனை செய்வதுண்டு", என்று கேப்ரியல் என்று அழைக்கப்படும் மற்றொரு இஸ்ரேலிய ஏஜெண்ட் கூறினார்.

பேஜரில் வரும் செய்திகளை உடனே எடுத்து பார்க்கும் அளவிற்கு மிகவும் அவசரமாக ஒலிக்கும் ஒரு குறிப்பிட்ட ரிங்டோனை மொசாட் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார்.

விளம்பரப் படங்கள் மற்றும் பிரசுரங்களை உருவாக்கி அதனை இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் ஹெஸ்பொலா குழுவினரை ஏமாற்றி, மொசாட் இந்த பேஜர்களை வாங்க வைத்ததாக கேப்ரியல் கூறினார்.

"இந்த பேஜர்களை ஹெஸ்பொலா எங்களிடம் இருந்து வாங்கும்போது, இது மொசாட் விற்பனை செய்தது என்று அவர்கள் கொஞ்சம் கூட தெரியவரவில்லை.''

2024- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், ஹெஸ்பொலா 5,000 பேஜர்களை வாங்கியதாக சிபிஎஸ் நிறுவனம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் ஹெஸ்பொலா சந்தேகம் கொள்ளத் தொடங்கியதாக மொசாட் அஞ்சியபோது, இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை தொடுத்தது.

லெபனான் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு, இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,REUTERS

வெடிப்புகளுக்கு பிறகு சிதைந்த ஹெஸ்பொலா

இந்த வெடிப்பு சம்பவத்தினால் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகள் எழுந்தன. பல்பொருள் அங்காடிகள் உட்பட பேஜர்கள் கொண்டு செல்லப்பட்ட எல்லா இடங்களிலும் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்த சம்பவத்தில் நடந்த உயிரிழப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. அவர்களில் பலர் கை மற்றும் கால்களை இழந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு, ஹெஸ்பொலா இன்னும் இந்த வெடிப்பு தாக்குதலில் இருந்தே மீண்டு வராத நிலையில் இருந்தபோது, இஸ்ரேல் ஹெஸ்பொலா இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. மேலும் இஸ்ரேல் லெபனானில் தரைவழி படையெடுப்பையும் தொடர்ந்தது.

இரு தரப்பினரும் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அன்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதல்களை லெபனான் கடுமையாக கண்டித்தது.

மேலும், இஸ்ரேல் லெபனானை "திகைக்க வைத்துள்ளது", என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் கூறினார்.

''இந்த தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தையும் மீறுவதாக இருக்கின்றன'' என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.