Jump to content

ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதியை கலைக்கும் உத்தரவு

அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க | Ranil Accepted Defeat Of The Presidential Election

அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/ranil-accepted-defeat-of-the-presidential-election-1726961495#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அத்தனைபேரும் இனி அனுராவுக்கு தூது அனுப்புவார்களா அல்லது தொலைபேசி எடுத்து நேரடியாக வாழ்த்து சொல்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தோல்வியின் எதிரொலி - மனைவியுடன் வெளியேறிய ரணில்
 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது பாரியார் சகிதம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடன் வெற்றி பெறும் வேட்பாளரிடம் அதிகாரத்தை சுமூகமாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட கோவைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

https://ibctamil.com/article/ranil-wickremesinghe-leaves-official-residence-1726994260

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சஜித் பிரேமதாச 4,363,035  (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன்  (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையென தெரிவித்து இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://ibctamil.com/article/presidential-election-2024-sri-lanka-results-1727003951
    • சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சன்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்று முடிவெடுத்த ஈழ தமிழர்களுக்கு எனது ராயல் சல்யூட். இந்தியாவின் அழுகிய பின்மூச்சை இனியும் ஈழ தமிழர்கள் மணந்து கொண்டு திரிய தயாரில்லை என்பதை பதிவுசெய்திருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலில் கூத்தமைப்பானுகள் இதே போன்று அடிவாங்கும் அந்த நன்நாள் எனது பொன் நாள்  
    • அத்துடன் வெறியூட்டும் சக்தி வாய்ந்த தமிழ் இனவெறி பிரசாரமும் அரியநேத்திரனுக்கு மேற்கொள்ளபட்டது
    • ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு புதிய இணைப்பு ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.     இரண்டாம் இணைப்பு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு தேர்தவுக்காக அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர். நாட்டின் தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு தேர்விற்கு நகர்ந்துள்ளது. முன்னிலை வகிக்கும் இரண்டு வேட்பாளர்கள் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாத நிலையில் முன்னிலை வகிக்கும் முதல் இரண்டு வேட்பாளர்களான அநுர மற்றும் சஜித்தை தவிர்த்து ஏனைய வேட்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டிலிருந்து இரண்டாவது விருப்பத்தேர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முதல் இரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும். இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயன்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மேலும் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் இறுதி முடிவுகள் இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாம் இணைப்பு  ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு இன்று (22) பிற்பகல் அல்லது நாளை (23) முற்பகல் வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் இந்தநிலையில், வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும். எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/srilanka-presidential-election-final-result-update-1726989972#google_vignette
    • கூத்தமைப்பான் கைகாட்டியதால் முக்கியமாக கருமாந்திரம் கை காட்டியதால்  என்னுடைய குடும்பத்தில் மட்டும் அண்ணளவாக 30 வாக்குகள் அனுராவிற்கு விழுந்திருக்கிறது 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.