Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆவணங்கள் அச்சிடும் பணி ஆரம்பம்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள், வர்த்தமானி அறிவித்தல் போன்றவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 25 மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 25 வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன.

https://thinakkural.lk/article/309954

  • Replies 63
  • Views 4.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம். அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண

  • வாதவூரான்
    வாதவூரான்

    இவ்வளவு சனத்தொகை உள்ள கொழும்பிலையே மொத்தமாக 10 குழுக்கள் தான் போட்டியிடுகினம் ஆனால் வடக்குகிழக்கில் ? வாக்குகளைப்பிரிக்க திட்டமிட்டு களமிறங்குவதாகவே தெரிகிறது

  • நிழலி
    நிழலி

    கடைசியில் என்னையும் இவர்களை ஆதரிக்க வைக்கப் போகின்றார்கள். உண்மையில் நல்ல விடயங்களை செய்ய தொடங்கியுள்ளார்கள் போல் உள்ளது. கந்தளாயில் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரச துறையினரும், நாட்டு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு 

Published By: VISHNU  26 SEP, 2024 | 03:58 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தல் குறித்து சுற்றறிக்கைகளை இன்று அல்லது நாளை வெளியிடுவோம். ஜனாதிபதித் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதை போன்று பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கு அரச துறைகளினதும், நாட்டு மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 70 உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய மற்றும் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் விடயதானங்களுக்கு அமைய 9 ஆவது பாராளுமன்றம் நேற்று (நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ) கலைக்கப்பட்டது.

பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் 2024.10.04 ஆம் திகதி முதல் 2024.10.11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும்.

அதற்கமைய 2024.11.14 ஆம் திகதி வியாழக்கிழமை பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்தவும், 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை 2024.11. 21 ஆம் திகதி வியாழக்கிழமை   நடத்துவதற்கும் தீர்மானித்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய தேர்தல் பணிகளை முன்னெடுப்போம். ஜனாதிபதித் தேர்தலில் போது அரச சொத்துக்கள் பயன்பாடு தொடர்பில் வெளியிட்ட சுற்றறிக்கைகள் மற்றும் நிருபங்கள் பொதுத்தேர்தலுக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

பொதுத்தேர்தல் தொடர்பிலான சுற்றறிக்கைகளை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளோம். 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்துக்கு அமைவாகவே பொதுத்தேர்தல் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 நாட்களுக்கு பின்னர் தேர்தல் செலவினங்கள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவோம்.

ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் நடத்தப்பட்டது. எவ்வித பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்கிய   ஒத்துழைப்பை  பொதுத்தேர்தலுக்கும் வழங்குமாறு அரச துறைகளிடமும், நாட்டு மக்களிடமும் வலியுறுத்துகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/194813

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான காரணிகளுடன் பிறிதொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க அனுமதி கோர முடியும்;  2024.10.01 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: VISHNU   27 SEP, 2024 | 01:21 AM

image

தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படும் வாக்காளர்கள் பிறிதொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிக்க அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும். 2024.10.01 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிலோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 127 (ஆ) பிரிவின் கீழ் தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினையளிக்க முடியாது என்று நியாயமான  அச்சமடையும்   வாக்காளர்கள், பிறிதொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பதற்கு அனுமதியளிக்குமாறு  கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியும்.

எவரேனும் வாக்காளர் அவரது விண்ணப்பப்பத்திரங்களை 2024.10.01 ஆம் திகதிக்கு முன்னர் இராஜகிரிய சரண மாவத்தை என்ற முகவரியில் உள்ள  தேர்தல்கள் செயலகத்தக்கோ அல்லது தாம் வசிக்கும் மாவட்டத்தின்  மாவட்டத் தேர்தல்கள் அலுவகத்துக்கோ சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர் 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பப் பத்திரங்களை பூர்த்தி செய்தல் வேண்டும். அந்த இடாப்புக்கள் அனைத்தும் மாவட்ட செயலகங்களிலும் , கச்சேரிகளிலும் மற்றும் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலும் வைக்கப்படும். அத்தோடு 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பின் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களை www.elections.gov.lk இணையத்தளத்தினூடாக பரீட்சிக்க முடியும்.

விண்ணபப் பத்திரத்தில் காணப்படும் தகவல்கள் சரியானவையென விண்ணப்பதார் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். விண்ணப்பப் பத்திரங்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களில், இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும், அத்துடன் www.elections.gov.lk   என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

https://www.virakesari.lk/article/194878

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சின்னம் தேவை - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்

29 SEP, 2024 | 10:54 AM
image

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கு சின்னத்தை கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமிழ் பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராக களம் இறக்கியிருந்தது.

குறித்த சுயேச்சை குழுவுக்கு சங்கு சின்னமாக வழங்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் தமக்கான சின்னத்தை கோரி விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரு விதிமுறையின் கீழ் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஏற்கனவே குத்துவிளக்கு சின்னம் பயன்படுத்தியிருந்த போதிலும் அதனை விடுத்து சங்கு சின்னம் தற்போது மக்கள் மத்தியில் அறியப்பட்டுள்ளமையினால் அந்த சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு கூட்டணியில் பலர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/195031

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் 

29 SEP, 2024 | 02:42 PM
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான செலவுத்தொகை என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பொதுத் தேர்தல் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து நேற்று (28) இரு வேறு கலந்துரையாடல்கள் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/195061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தல் பிரச்சார காலம் - மானியம் குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்

30 SEP, 2024 | 05:04 PM
image

ஜனாதிபதியின் மானியம்  குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு தற்போது பொதுத்தேர்தல் பிரச்சார சூழலில் உள்ளதால் இந்த மானியங்கள்  குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு குறிப்பிட்ட அமைச்சுகளிற்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது என அதன் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் தங்களிற்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அதனை அறிவித்துள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் நஜித் இன்டிக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மானியங்கள் வழங்குவதை இதே காரணத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியிருந்தது.

https://www.virakesari.lk/article/195160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு - முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

30 SEP, 2024 | 05:58 PM
image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு ; 

1. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுதந்திர சதுக்கம் கொழும்பு 07 

2. தொழில் திணைக்களம், தொழில் செயலகம், நாராஹென்பிட்டி கொழும்பு 05 

3. கல்வி அமைச்சு , இசுருபாய, பத்தரமுல்ல 

4. பதிவாளர் நாயகம் திணைக்களம், இல . 243/3A , டென்சில் கொப்பேகடுவ மாவத்தை , பத்தரமுல்ல 

5. அஞ்சல் தலைமையகம், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, கொழும்பு 10

6. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு , மாளிகாவத்தை 

7. நகர அபிவிருத்தி அதிகார சபை 

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 

தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் 

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் அந்தந்த மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

 

 

 

 

WhatsApp_Image_2024-09-30_at_05.07.55.jp

WhatsApp_Image_2024-09-30_at_05.08.03.jp

https://www.virakesari.lk/article/195169

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகுதிப் பெற்றுள்ள சகல அரச உத்தியோகஸ்தர்களும் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு

30 SEP, 2024 | 05:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் பொதுத்தேர்தலுக்கும் தபால்மூல வாக்களிப்புக்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். நாளை செவ்வாய்க்கிழமை  (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி  வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இம்மாதம் 4 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ள அரச உத்தியோககஸ்தர்கள் நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.  

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த சகல அரச உத்தியோகத்தர்களும். பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குக் (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டுமென்பதுடன், அனைத்து தாபனத் தலைவர்கள், அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்  தபால் மூல வாக்களிப்புக்கு 736, 586 பேர் விண்ணப்பிருத்திருந்த நிலையில் 24,286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.  இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் 712321 அரச உத்தியோகஸ்தர்கள் தபால்மூலம் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/195166

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலுக்கான நிதி: கிடைத்தது அங்கீகாரம்

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், 2024.11.14 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு திகதி குறித்தொதுக்கப்பட்டது.

ஆனாலும், 2024 வரவு செலவுத் திட்டத்தில் பொதுத்தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.

நிதி ஒதுக்கீ்டு

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுத்தேர்தலை நடாத்துவதற்காக திறைசேரியில் இருந்து நிதியை விடுவிப்பதற்கு அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிப்பதற்காக ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான நிதி: கிடைத்தது அங்கீகாரம் | Funds From Treasury To Conduct General Elections

அத்துடன் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு ஏற்புடைய 2025 ஆம் ஆண்டில் ஈடுசெய்யப்பட வேண்டிய செலவான 06 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை 2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் இடைக்கால நிறைவேற்றும் சரணக்கின் மூலம் ஒதுக்கி வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://ibctamil.com/article/funds-from-treasury-to-conduct-general-elections-1727772734

  • கருத்துக்கள உறவுகள்

இனி அதுகளுக்கு நல்ல கொண்டாட்டம் தான் பறந்து பறந்து வெடிக்க வெளிக்கிட்டிடுங்கள். தாயகத்து மக்கள் முகத்தில காறி உமிழ்ந்து எத்தனையோ தரம் சொல்லிவிட்டார்கள். மாம்பிசின் மாதிரி ஒடியோடி ஒட்டிகொண்டு திரியுங்கள்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தல்; இதுவரை 37 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் - தேர்தல் ஆணைக்குழு

02 OCT, 2024 | 05:46 PM
image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை (செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை) 37 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-10-02_at_03.50.14__1

https://www.virakesari.lk/article/195333

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன - யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்

Published By: VISHNU   04 OCT, 2024 | 02:12 AM

image

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (3) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/195436

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமன பத்திரம் தாக்கல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பம்!

04 OCT, 2024 | 03:24 PM
image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (04)  நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.  

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான  ஜேஜே முரளிதரன் தெரிவித்தார்.    

மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட சிகிச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.  இன்று முதலாவது நியமன பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கை இடம் பெற்றது மோகன் டிலான் என்பவரின் தலைமையில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்வற்காக எட்டு பேர் போட்டியிடுகின்றனர் நான்கு லட்சத்தி 49,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் தேர்தல்கள் இடம் பெற உள்ளன. 

442 வாக்கு அளிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கை ஆரம்பமானது தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1728030269744__1_.jpg

1728030269758.jpg

1728030269778.jpg

https://www.virakesari.lk/article/195473

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல்; இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்; தேர்தல் ஆணைக்குழு

05 OCT, 2024 | 11:53 AM
image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத்  தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

அதன்படி, பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும், கண்டி  மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும், நுவரெலியா  மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 01 வேட்பாளரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 15 வேட்பாளர்களும், வன்னி மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15 வேட்பாளர்களும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும், புத்தளம்  மாவட்டத்திலிருந்து 06 வேட்பாளர்களும் , அநுராதபுரம்  மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 1 வேட்பாளரும் , பதுளை  மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும் , மொனராகலை மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் , இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் , கேகாலை மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

WhatsApp_Image_2024-10-04_at_21.32.03.jp

https://www.virakesari.lk/article/195533

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல்; இதுவரை 05 பேர் வேட்பு மனுத் தாக்கல்

05 OCT, 2024 | 01:23 PM
image
 

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரை 05 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் 2 பேரும் சுயேட்சை குழுவாக  3 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp_Image_2024-10-04_at_21.32.03.jp

https://www.virakesari.lk/article/195536

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனப் பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310304

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தல்; அனைத்து வேட்பாளர்களும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 2   07 OCT, 2024 | 05:04 PM

image

14.11.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ,வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

 2023 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் பிரிவு 80 (1) (பி), 82 (1) (ஈ) , 82 (2) , 89 , 90 (4) ஆகியவற்றின் படி வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்படும் அன்று, வேட்புமனுவுடன் அவர்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உறுப்புரை 99 A இன் படி, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளையும் தமது வேட்பு மனுவுடன் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுப் படிவத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறுவது அபராதத்துடன் கூடிய குற்றமாகும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

123-1.jpg

https://www.virakesari.lk/article/195702

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

2023 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் பிரிவு 80 (1) (பி), 82 (1) (ஈ) , 82 (2) , 89 , 90 (4) ஆகியவற்றின் படி வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்படும் அன்று, வேட்புமனுவுடன் அவர்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.

இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம்.

அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசேட தேவையுடைய வாக்காளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Published By: DIGITAL DESK 2   07 OCT, 2024 | 06:15 PM

image
 

தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக்கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை உடன் அழைத்துச் செல்ல சட்ட ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,

அவ்வாறு உடன் அழைத்துச் செல்லும் உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டும் என்பதோடு அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அல்லாதவராகவும் இருக்க வேண்டும். 

மேலும், உதவியாளர் ஒருவரோடு வருகைதருவதற்கும் இயலாத வாக்காளர்கள், பழைய முறைப்படி வாக்கெடுப்பு நிலைய அலுவலர் ஒருவரின் முன்னிலையில் தலைமை தாங்கும் அலுவலர் ஊடாக தனது வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக்கொள்வதற்கு வசதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-2.jpg

https://www.virakesari.lk/article/195711

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர, தேர்தலுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு நியமிக்கப்படாதவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தக் கோருவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும், அத்தகைய அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிப்பதில்லை என்றும் அத்தகைய விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு நிறுவன பிரதானிகளை அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆலோசனைகளுக்கமைய செயற்படத் தவறினால் அரசியலமைப்பின்படி அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/310429

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தல்; தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு

image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தபால்மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/195795

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தல்; வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை

image

பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அரசியல்வாதிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் வேட்புமனுக்களை கையளிக்கும் போது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கணிசமான இடத்தை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சிலர்  மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்பதை அவதானித்துள்ளோம்.

மேலும், மக்கள் அந்தந்த கட்சியால் வேட்புமணுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர்.

எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தமது கட்சி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தெரிவு செய்யாமல் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கணிசமான வாய்ப்பை வழங்குவதற்கு முன்வர  வேண்டுமென கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இந்நாட்டில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். அந்த வகையில் குறிப்பாக அவ்வீதம் நீண்டகாலமாக 50% முதல் 52% வரையில் காணப்படுகிறது.

ஆனால், இந்நாட்டு வரலாற்றில் பெண்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்  6% வீதத்தினை விட அதிகரிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதன் காரணமாக ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில்  பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

https://www.virakesari.lk/article/195794

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு தேர்தல் களத்தில் போட்டியிடும் பிரதமர்

இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.

இதற்கிடையில் புதிய அரசாங்கத்துக்கு போட்டியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் எந்த மாவட்டத்தில் அவர் போட்டியிடுகிறார் என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

https://thinakkural.lk/article/310459

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவில் பெண்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் : முன்னாள் பெண் அமைச்சர் கோரிக்கை

“எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிவேறுபாடின்றி அதிகமான பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பெண்களை மதிக்கும் நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்” என முன்னாள் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே(sudarshini fernandopulle) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொரளையில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். மேலும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர்:

அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பட்டும்

“இம்முறை பொதுத்தேர்தலில் கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி அனைவரும் மன உறுதியுடன் அதிக பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பட்டும். பெண்களிடம் பேசத் தெரியாதவர்களுக்கும், பெண்களை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மக்களுக்கும் வாக்களிக்காதீர்கள்.

அதிகளவில் பெண்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் : முன்னாள் பெண் அமைச்சர் கோரிக்கை | Send More Women To Parliament

ஊழல், மோசடிகள் குறையும்

பெண்களை மதிக்கும் நபர்களை மட்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அதிக அளவில் பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல், மோசடிகள் குறையும்.

அதிகளவில் பெண்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் : முன்னாள் பெண் அமைச்சர் கோரிக்கை | Send More Women To Parliament

எந்தக் கட்சியானாலும் முக்கியமான பதவிகளுக்கு பெண்களை நியமித்தால் அவர்கள் மீதான வன்முறைகள் குறையும் என்றார்.

முன்னாள் அமைச்சரான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/send-more-women-to-parliament-1728476192

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தல்; தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 

மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவின் ஏனைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

மேலும், அரச அலுவலகங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பணிபுரிபவர்கள் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/195909

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.