Jump to content

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்.

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2024/1401508

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல முடிவு   ஜேர்மனியில் உள்ளவர்களை முதலில் கூப்புடவும்  🙏

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.