Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 OCT, 2024 | 03:29 PM
image

4 நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான  அட்மிரல் ஸ்டீவ் கேலர், நாளை வியாழக்கிழமை (10) இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதை அறிவிப்பதில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது.

2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த அதியுயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் இதுவாகும். தனது விஜயத்தின் போது, நீடித்த, மீண்டெழும் தன்மையுடைய, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினைப் பேணிப்பாதுகாப்பதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் வலுவான பங்காண்மையினை அட்மிரல் கேலர் மீள வலியுறுத்துவார். 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும், கடல்சார் கள விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்காகவும், நாடுகடந்த அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துவதற்காகவும், மற்றும் அமெரிக்க மற்றும் இலங்கை இராணுவங்களுக்கிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு தொர்பாக கலந்துரையாடுவதற்காகவும் அட்மிரல் கேலர் சிரேஷ்ட இலங்கை அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொள்வார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியினையும் ஸ்திரத்தன்மையினையும் ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பங்காளரான இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவதில் அமெரிக்கா கொண்டுள்ள வலுவான உறுதிப்பாட்டினை இவ்விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

அட்மிரல் ஸ்டீபன் கேலர் கட்டளைத்தளபதி, அமெரிக்க பசிபிக் கப்பற்படை

அட்மிரல் ஸ்டீபன் கேலர் ஒரு கடற்படைக் குடும்பத்தில் வளர்ந்தார். அவர் போல்டர் நகரிலமைந்துள்ள கொலராடோ பல்கலைக்கழகத்திலிருந்து 1986 ஆம் ஆண்டில் பௌதீகவியலில் விஞ்ஞான இளமானிப் பட்டமொன்றைப் பெற்றுக்கொண்ட பட்டதாரியாவார். அங்கு அவர் Naval Reserve Officer Training Corps (NROTC) படைப்பிரிவினூடாக படைத்துறைப்பணிக்காக நியமிக்கப்பட்டார். 

1989 மார்ச் மாதத்தில் கடற்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், 600 தடைவைகள் விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானங்களைத் தரையிறக்கியது உட்பட 3,900 இற்கும் மேற்பட்ட மணித்தியாலங்கள் F-14 Tomcat மற்றும் F-18 Super Hornet ஆகிய விமானங்களை ஓட்டியுள்ளார்.

கடற்படைப் போர்க் கல்லூரியிலிருந்து தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் தொடர்பான முதுமானிப்பட்டத்தினைப் பெற்றுள்ள அவர் Joint Staff College and the Navy Nuclear Program இன் பட்டதாரியுமாவார்.

கடலில் Fighter Squadron (VF)211, VF-41 பிரிவுடன் பணியாற்றிய அவர், USS Carl Vinson (CVN 70) இன் நிறைவேற்று அலுவலராகவும், Fighter Squadron (VFA) 143; USS Bataan (LHD 5); USS Dwight D. Eisenhower (CVN 69); மற்றும் Carrier Strike Group Nine ஆகிய பிரிவுகளின் கட்டளைத்தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த தொழிற்பாட்டுப் பயணங்களின் போது அவர் Operations Desert Storm, Southern Watch, Iraqi Freedom, Inherent Resolve, Freedom’s Sentinel, Deliberate Guard, மற்றும் ஹைட்டிக்கு அவசரகால பேரனர்த்த நிவாரணங்களை வழங்கிய நடவடிக்கையான Unified Response, மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் சரியிணை போட்டி நடவடிக்கைகள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.

தரையில், கேலர் VF-101 இன் பயிற்சியளிக்கும் விமானியாகவும், கடற்படை அதிகாரிகள் பணியகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரியாகவும், டிஜிபூட்டியில் Joint Task Force Horn of Africa இன் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க கப்பற்படைகள் தலைமையகத்தில் கப்பற்படை பயிற்சிகளுக்கான பணிப்பாளராகவும்; அமெரிக்க இந்தோ-பசிபிக் தலைமையகத்தில் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளராகவும் (J3); அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் பிரதி கட்டளைத் தளபதியாகவும்; அமெரிக்க 3ஆவது கப்பற்படையின் கட்டளைத் தளபதியாகவும், மற்றும் Joint Staff இன் மூலோபாயம், திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான பணிப்பாளராகவும் (J5) அவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி அவர் பொறுப்பேற்றார்.

https://www.virakesari.lk/article/195842

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

4 நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான  அட்மிரல் ஸ்டீவ் கேலர், நாளை வியாழக்கிழமை (10) இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதை அறிவிப்பதில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது

சீன போர்க் கப்பலில் பயிற்சி எடுக்கப் போகிறாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சீன போர்க் கப்பலில் பயிற்சி எடுக்கப் போகிறாரோ?

பாய்மரக் கப்பலாம்! அது தான் பாக்க வந்தவர்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.

கடற்படைப் பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

https://thinakkural.lk/article/310551

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.