Jump to content

இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

//கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.//

 கனடிய தூதரகத்தில் இருந்து கொண்டு.... கொலைகளையும், வன்முறை சம்பவங்களையும் தூண்டிக் கொண்டிருக்கும் இந்திய கூலிப் படைகள்... ஸ்ரீலங்காவிலுள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகங்களில்  இருந்து கொண்டு எத்தனை தில்லு முல்லுகளை செய்து கொண்டிருப்பார்கள்.

உலகத்திற்கு உதவாத நாடு இந்தியா.

இது தெரிந்த உங்களுக்கு இலங்கையில் தமிழ் அரசுக் கட்சியை சுமந்திரன் போன்றவர்களிடம் இருந்து பிரித்து எடுத்து அந்தக் கட்சியை காலாவதியாக்கி ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களை தன் பக்கம் வைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிகள் உங்களுக்கு விளங்கவில்லையே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

இது தெரிந்த உங்களுக்கு இலங்கையில் தமிழ் அரசுக் கட்சியை சுமந்திரன் போன்றவர்களிடம் இருந்து பிரித்து எடுத்து அந்தக் கட்சியை காலாவதியாக்கி ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களை தன் பக்கம் வைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிகள் உங்களுக்கு விளங்கவில்லையே? 

நீங்கள்….  தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் இந்தியாவின் ஆதரவாளர்கள் என்று சொல்லி, சுமந்திரனின் தான் தோன்றித்தனமான செய்கைகளை நியாயப் படுத்தப் படுத்துவது… உங்களை நீங்களே ஏமாற்றுவதற்கு சமனானது.

பிரிந்தவர்கள் எல்லோரும் இந்திய விசுவாசிகள் அல்ல.
சுமந்திரனின் கடந்த கால செய்கைகளே… அவரை பலரும் எதிர்க்க முக்கிய காரணம். போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களில் இருந்து  அவரின் பல  செய்கைகள் அரசை காப்பாற்றுவதாகவே இருந்துள்ளதை  யாழ்.கள செய்திகளை தேடி வாசித்தீர்களானால் சுமந்திரன் எப்படிப் பட்ட வஞ்சகர் என்பது புரியும்.

சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வதை… பெருமையாக பீத்திக் கொண்டு திரிந்தவர் தமிழரசு கட்சியிலேயே இருக்க லாயக்கு இல்லாதவர்தான் சுமந்திரன். தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த தமிழரசு கட்சியின் அடிப்படை கொள்கைகளை சிதைக்காமல்,    சிங்கள கட்சியில் இருப்பதே சுமந்திரனின் கொள்கைக்கு நல்லது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஈழத்தமிழர்களை ஆபத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் இந்திய புலனாய்வு அமைப்புகள்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ‘பெரும் தவறு செய்துவிட்டது’ என்று கூறிய ட்ரூடோ – இந்திய அரசின் பதில் என்ன?

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர், அதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறியுள்ளார்
17 அக்டோபர் 2024

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அது இந்தியாவின் ‘மிகப்பெரிய தவறு’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தத் தவற்றை கனடாவால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா மண்ணில் இந்திய எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், மற்றும் பிற வன்முறைச் செயல்களில் இந்தியா ஈடுபட்டதாகக் கனடா அதிகாரிகள் குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ட்ரூடோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ‘அபாண்டமானவை’ என்று கூறியிருக்கும் இந்தியா, அவற்றை நிராகரித்திருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காகக் கனடாவின் சீக்கியச் சமூகத்தை மகிழ்விக்க ட்ரூடோ முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடா பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்தக் கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

 

அதை இந்தியா முழுமையாக நிராகரித்தது. அதன் பிறகு இரு நாடுகளும் தங்கள் பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தன. இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே சூடான கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணையின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கிடைத்த உறுதியான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் இதுதொடர்பாக ஆதாரங்கள் எதையும் புலனாய்வு அமைப்பு வழங்கவில்லை,” எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தாங்கள் வலியுறுத்தி வரும் கூற்றை ஆமோதிக்கும் வகையில் ட்ரூடோவின் கூற்று இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

 

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதில்

இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து, வியாழக்கிழமை (அக்டோபர் 17) அன்று பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘கனடா இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை’ என்று கூறியிருக்கிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியுள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பாகப் பல செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளோம், அதில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது,” என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனடா அரசு ஒரு சிறு தகவலைக் கூட எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. நேற்று நாங்கள் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டோம். கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது, ஆனால் அதற்கு தை ஆதரிக்க எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கவில்லை,” என்றார்.

“எங்கள் இராஜதந்திரிகளுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

‘இந்திய அரசு தவறு செய்துவிட்டது’

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கனடிய அரசின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது

ஹர்தீப் சிங் நிஜ்ஜார், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான இவரை இந்தியா பயங்கரவாதி என்று அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் சர்ரே பகுதியில், ஒரு வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்த ஜஸ்டின் ட்ரூடோவின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு, இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

நிஜ்ஜாரின் மரணம் இந்தியாவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நிஜ்ஜார் கொலையை விசாரிக்கப் புலனாய்வு அமைப்புகளைக் கேட்டுக் கொண்டதாக கனடா பிரதமர் தெரிவித்தார்.

ஆனால், “இந்தக் கொலையை உளவுத்துறையினர் ஏற்கெனவே கண்காணித்து வருவதைத் தாம் பின்னர் அறிந்ததாகவும்” கூறினார்.

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” இந்தியா தெரிவித்துள்ளது

இந்த விஷயத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறிய அவர், “கடந்த ஆண்டு கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருந்தால், அந்தக் குற்றச்சாட்டை கனடாவால் புறக்கணிக்க முடியாது,” என்றார்.

“நாங்கள் இந்தியாவை தூண்டிவிடவோ அல்லது சண்டையிடவோ நினைக்கவில்லை. அதேவேளையில், கனடாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் தலையிடலாம் என்று நினைத்து இந்திய அரசு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. கனடியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது,” என்று கூறினார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” தெரிவித்துள்ளது.

“இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க கனடா எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. பிரதமர் ட்ரூடோ மட்டுமே இதற்குப் பொறுப்பு. இந்தப் பொறுப்பற்ற செயல் இந்தியா – கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.

 

இந்தியா – கனடா உறவில் விரிசல்

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாக ட்ரூடோ கூறினார்

கடந்த திங்களன்று, கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் பல தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததாகக் கூறியது.

இதனுடன், இந்தியா ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது. ஆனால், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில், தனது அரசு, ஆறு இந்திய தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறினார்.

இதுதவிர, கனடாவின் ராயல் மௌன்ட் போலீசார், திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்திய ஏஜென்டுகள் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக காலிஸ்தான் ஆதரவாளர்களை, கனடாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான பிஷ்னோய் குழுவின் உதவியுடன் குறிவைப்பதாகக் கூறியது.

 

ஜி20 மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ என்ன செய்தார்?

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, “மோதி இப்பிரச்னை தொடர்பாக தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்" என ட்ரூடோ தெரிவித்தார்

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நிஜ்ஜார் கொலை குறித்த விவரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று தனது அரசு முடிவு செய்ததாக விசாரணையின்போது ட்ரூடோ தெரிவித்தார்.

“நாங்கள் நினைத்திருந்தால், உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே இதைப் பகிரங்கப்படுத்தி, இந்தியாவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இந்தியா எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக, இதுதொடர்பாக நாங்கள் பின்னால் இருந்து வேலைகளை தொடர்ந்தோம். இதற்கான ஆதாரங்கள் குறித்து இந்தியா எங்களிடம் கேட்டது. உங்களின் (இந்தியா) பாதுகாப்பு முகமைகள் அதுகுறித்து தெரிவிக்கும் என கூறினோம். ” என்று கூறினார்.

மேலும், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

இதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதைத் தான் அறிந்திருப்பதாக அவரிடம் கூறியதாகவும் அதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். “மோதி தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார். கனடாவில் இந்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் இருப்பதாகவும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்” என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார்.

ஜி20 உச்சிமாநாட்டில் இருந்து நாடு திரும்பிய பிறகு கனடா நாடாளுமன்றத்தில் நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளைப் பகிரங்கப்படுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில கருத்துக்கள் வேறு வேறு பெயரில், வசனநடை, பொருள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன, பதியப்படுகின்றன. ஒரே கருத்து பலபெயரிலா? அல்லது பல பெயரில் ஒருவரா?
    • 15 பிளாஸ்ரிக் கதிரைகளுடன் ஒரு மேசையும் இலவசமாக கிடைக்கும். 😂 “ஆ”வெண்டு பார்த்துக் கொண்டு இருங்கோ… சுமந்திரன். 🤣 நீங்கள் செய்யிற வேலைக்கு 15 🩴செருப்படிதான் கிடைக்கும்.    வாங்க ரெடியாய் இருங்கோ. 😂
    • இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு கடந்த சில வருடங்களாக பெருமளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வருவதால் இத்தாலி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. 2023 ம் ஆண்டில் ஏறக்குறைய 160,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் மட்டும் பயணித்து இத்தாலிக்குள் நுளைந்திருக்கிறார்கள். இவர்களது கடல் பயணம் மிக மிக ஆபத்தானதாக இருந்த போதிலும் பல ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, பல மாதங்களாக  ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டிருந்த  புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான திட்டம் ஒன்றை இத்தாலி இப்பொழுது நடைமுறைப் படுத்தத் தொடங்கியிருக்கிறது. மத்தியதரைக் கடல் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை, அல்பேனியா நாட்டில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்கே வைத்துப் பராமரிப்பது என்பதே அந்தத் திட்டம். கடந்த திங்கட்கிழமை படகொன்றின் மூலம் இத்தாலிக்குள் நுளைய முயன்ற எகிப்து, பங்களாதேஷைச் சேர்ந்த பதினாறு ஆண்கள் இப்பொழுது அல்பேனியா நாட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அந்த முகாமுக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளார்கள். இந்த முகாமில் ஆண்கள் மட்டுமே பராமரிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் இத்தாலியிலேயிலேயே தங்க வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாவார்கள். அல்பேனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த முகாமுக்குக் கொண்டு வரப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களது விண்ணப்பங்கள் ஒரு மாதத்துக்குள் பரிசீலிக்கப்பட்டு, புகலிடம் பெறத் தகுதியுடையவர்கள் இத்தாலிக்கு அனுப்பப் படுவார்கள். நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அல்பேனியாவில் இருந்து உடனடியாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த வருடம் மே  மாதத்தில். இரண்டு முகாம்களை அல்பேர்னியாவில் அமைப்பது என்று இத்தாலி முடிவெடுத்திருந்தது. ஆனால் தொழில்நுட்பப்  பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு போன்ற சிக்கல்கள் காரணமாக முதலில் ஒரு முகாமை மட்டும் அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.  அல்பேனிய நாட்டில் அமைக்கப்பட்டாலும் இந்த முகாமை இத்தாலியே நிர்வகிக்கிறது. இதற்கான செலவாக, தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு 670 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடொன்றின் முகாமுக்குக் கொண்டு சென்று, அங்கு வைத்துப் பராமரிக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இத்தாலி மிளிர்கிறது. இத்தாலியைத் தொடர்ந்து யேர்மனி, பிரான்ஸ் நாடுகளும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே வைத்து பராமரிக்க முன்வரலாம்.   (செய்தியின் பிழிவு இங்கே இருந்து எடுக்கப்பட்ட்டது) https://www.zdf.de/nachrichten/politik/ausland/eu-migration-italien-albanien-lager-100.html    
    • இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.