Jump to content

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது டெஸ்ட்: இந்தியாவை 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 134 ஓட்டங்களால் முன்னிலை

image

(நெவில் அன்தனி)

பெங்களூரு, எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் வெறும் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

1710_matt_henry_nz_vs_ind_1st_test.png

இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.

1710_willie_o_rourke_nz_vs_ind_1st_test.

அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 1936இல் பெற்ற 36 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸில் 1974இல் பெற்ற 42 ஓட்டங்களுக்கு அடுத்ததாக 3ஆவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

புதன்கிழமை ஆரம்பமாகவிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் கடும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்தபோது, முதலாம் நாளன்று நாணய சுழற்சியின்போது தீர்மானித்தவாறு இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில்  மெட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூக் ஆகிய இருவரின் வேகப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல்   அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் கொஹ்லி உட்பட இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர்.

இந்தப் போட்டியில் தனது 4ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த மெட் ஹென்றி 100 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.

ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் (13), ரிஷாப் பான்ட் (20) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

விராத் கோஹ்லி, சர்பராஸ் கான், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய ஐந்து முக்கிய வீரரகள் ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினர்.

ரோஹித் ஷர்மா (2), குல்தீப் யாதவ் (2), ஜஸ்ப்ரிட் பும்ரா (1) ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

மொஹம்மத் சிராஜ் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மெட் ஹென்றி 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 13.2 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் வில்லியம் ஓ'ரூக் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 12 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டிம் சௌதீ 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் காரணமாக ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உகந்ததல்ல என இந்தியாவால் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.

டெவன் கொன்வே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 91  ஓட்டங்களைப் பெற்றார்.

13 ஓட்டங்களைப் பெற்ற டொம் லெதமுடன் ஆரம்ப விக்கெட்டில்  67 ஓட்டங்களை ப்     பகிர்ந்த டெவன் கொன்வே, 33 ஓட்டங்களைப் பெற்ற வில் யங்குடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆட்டநேர முடிவில் ரச்சின் ரவிந்த்ரா 22 ஓட்டங்களுடனும் டெரில் மிச்செல் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, ரிஷாப் பான்டின் வலது முழங்காலுக்குக் கீழ் பந்து தாக்கியதால் வலி தாங்க முடியாதவராக தற்காலிக ஓய்பு பெற்றார்.

அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் விக்கெட் காப்பாளராக செயற்பட்டார்.

https://www.virakesari.lk/article/196532

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: இரண்டாவது நாள் முடிவில் பந்துவீச்சில் திணறிய இந்திய அணி

இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 17 அக்டோபர் 2024, 11:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களூருவில் இன்று தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் சுருண்டது.

நியூஸிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 50 ஓவர்கள் முடிவில்நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது, சராசரியாக 1.46 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியில் விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

உள்நாட்டில் குறைந்தபட்சம்

உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் உள்நாட்டில் கடந்த 1987-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய 75 ரன்களுக்கு சுருண்டிருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதைவிட குறைவான ரன்னில் இன்று இந்திய அணி ஆட்டமிழந்தது.

ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 36 ரன்களிலும், 1974-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களிலும் இந்திய அணி ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுப்மான் கில் கழுத்துவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாததால், கடந்த 8 ஆண்டுகளுக்குப்பின் 2016-ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் 3-வது வரிசையில் விராட் கோலி பேட் செய்ய இன்று (அக்டோபர் 17) களமிறங்கினார். ஆனால், 9 பந்துகளைச் சந்தித்த கோலி, ரூர்கே பந்துவீச்சில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்த்த 20 ரன்கள்தான் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்தார்போல் ஜெய்ஸ்வால் 13 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர்.

 
இந்தியா -   நியூசிலாந்து

3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும்தான்

நியூசிலாந்து தரப்பில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசினர். இதில் மேட் ஹென்றி 13.2 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் டெஸ்ட் போட்டியில் அவரது 100-வது விக்கெட்டை எடுத்தார்.

இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய வில்லியம் ரூர்கே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதிகபட்சம் 20 ரன்கள்தான்

இந்திய அணியில் டாப்-4 பேட்டர்களில் அதிகபட்சமாக சேர்க்கப்பட்டதே ரோஹித் சர்மா சேர்த்த 13 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் நண்பகல் உணவு இடைவேளை முடிந்த அடுத்த தேநீர் இடைவேளைக்குள் முடிந்துவிட்டது.

2-வது செஷனில் மின்னல் வேகத்தில் பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 16) தொடங்க இருந்த டெஸ்ட் போட்டி மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாளான இன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

 
இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட்டை கணிக்கத் தவறினாரா ரோஹித்

பெங்களூருவில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையாலும், காலநிலையில் இருந்த குளிர்ந்த நிலையாலும் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாகவே பிட்ச் சாதகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அணியை பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர்.

முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததைவிட பந்து நன்றாக ஸ்விங் ஆகியது. தொடக்கத்தில் 2 ஸ்லிப் பீல்டர்களை வைத்திருந்த நியூசிலாந்து அணி, வேகப்பந்துவீச்சுக்கு பிட்ச் ஒத்துழைப்பதைப் பார்த்து 3-வது ஸ்லிப்பை அமைத்தனர்.

பெங்களூரு ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர்கள்கூட பந்துவீசவில்லை.

3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முடித்துவிட்டனர். காலநிலையை கணித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார்.

ஆனால், இந்திய அணியோ பும்ரா, சிராஜ் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களுடனும், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

34 ரன்களுக்குள் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து அடுத்து எந்தவகையான உத்தியைக் கையாள்வது என்று தவித்தது. ஆனால் 2-வது செஷன் உணவு இடைவேளைக்குப்பின் தொடங்கியதும், 12 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி ஆட்டமிழந்தது.

குறிப்பாக மேட் ஹென்றி வீசிய 24-வது ஓவரில் அடுத்தடுத்து ஜடேஜா, அஸ்வின் ஆட்டமிழந்தனர், அடுத்து ஹென்றி வீசிய 25-வது ஓவரில் ரிஷப் பந்த் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

 
இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி தடுமாற்றம்

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகி வரவில்லை என்பது தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் தெரிந்தது. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ரன்களைச் சேர்க்க தடுமாறினர், பதிலடி கொடுக்க இருவரும் முயன்றும் இயலவில்லை.

டிம் சவுதி வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஏற்கெனவே ஹென்றி பந்துவீச்சில் கால்காப்பில் ரோஹித் சர்மா வாங்கினார், ஆனால், அதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. அடுத்த வாய்ப்பில் சவுதியிடம் விக்கெட்டை ரோஹித் இழந்தார்.

 
இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி

தோனியின் சாதனையை முறியடித்த கோலி

தோனியின் சர்வதேச சாதனையையும் கோலி இந்த ஆட்டத்தில் முறியடித்தார். தோனி 535 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி இருந்தநிலையில், கோலி தனது 536-வது சர்வதேச போட்டியில் இன்று விளையாடி தோனியின் சாதனையை முறியடித்தார்.

இதன் மூலம் அதிகமான போட்டிகளில் சச்சினுக்கு அடுத்தார்போல் ஆடிய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

 

விக்கெட் சரிவு

அடுத்ததாக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் ஹென்றி பந்துவீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் இதுவரை 4வது இடத்தில் களமிறங்கிப் பழகாத சர்ஃப்ராஸ் கான் சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.

12.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் திடீரென மழை குறுக்கிடவே ஆட்டம் சற்றுநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. இந்த இடைவெளியே நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, அடுத்தக் கட்ட தாக்குதலுக்கு தயாராகினர்.

சிறிய இடைவெளிக்குப்பின் ஆட்டம் தொடங்கியபின், இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் முதல் பவுண்டரியை அடித்தார். ஆனால் ஜெய்ஸ்வால் நீண்டநேரம் நிலைக்கவில்லை 13 ரன்னில் ரூர்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளைக்குச் செல்லும் முன்பாக ரூர்கே பந்துவீச்சில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளை முடிந்து இந்திய அணி வந்தபின் அடுத்த 12 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

134 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கேப்டன் டாம் லாதம், டேவிட் கான்வே இருவரும் இந்தியப் பந்துவீச்சைச் சமாளித்து எளிதாக ரன்களைச் சேர்த்தனர். பெங்களூரு பிட்ச்சுக்கு ஏற்றவாறு நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய நிலையில், இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் இதை எளி்தாக கையாண்டு சுழற்பந்துவீச்சிலும், வேகப்பந்துவீச்சிலும் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு லாதம், கான்வே ஆகிய இருவரும் 67 ரன்கள் குவித்தனர். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் லாதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் வீரர்களுடன் பல ஐபிஎல் போட்டிகளில் கான்வே ஆடியிருந்ததால், அவர் மிகவும் எளிதாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார்.

2வது விக்கெட்டுக்கு வில் யங் களமிறங்கி கான்வேயுடன் சேர்ந்தார். இருவரும் இந்தியப் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து, ரன்களைச் சேர்த்தனர். அஸ்வின், குல்தீப், ஜடேஜா பந்துவீச்சில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட் செய்தனர்.

இதில் கான்வே 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். 27.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 100 ரன்களை எட்டியது.

நிதானமாக பேட் செய்த வில் யங் 33 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கான்வே, வில் யங் கூட்டணி 75 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ரச்சின் ரவீந்திரா, கான்வேயுடன் சேர்ந்தார்.

சதத்தை நோக்கி நகர்ந்த கான்வே 91 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 22 ரன்களிலும், டேரல் மிட்ஷெல் 14 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

50 ஓவர்கள் முடிவில்நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஏராளன் said:

உள்நாட்டில் குறைந்தபட்சம்

5 பேர் முட்டையுடன் போயிருக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கிரிக்கெட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்றது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன வாரம் அல்லது அதற்கு முதல் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்தது. ம்ம்ம்...........இதுவும் ஒரு சாதனை தான்.......

மழை பெய்து முதல் நாள் குழம்பி போட்டி தடைப்பட்டுப் போனால், அடுத்த நாள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே கூடாது என்ற புள்ளிவிபரத்தை இன்று விலாவாரியாக உதாரணங்களுடன் எழுதுகின்றார்கள். இதையே ஒரு நாளுக்கு முன்னால் இந்திய அணிக்கு சொல்வதற்கு ஒரு ஆள் கூட இல்லாமல் போய் விட்டது இந்தப் பெரிய இந்தியாவில்..........🫣.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்தியா கிரிக்கெட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்றது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன வாரம் அல்லது அதற்கு முதல் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்தது. ம்ம்ம்...........இதுவும் ஒரு சாதனை தான்.......

மழை பெய்து முதல் நாள் குழம்பி போட்டி தடைப்பட்டுப் போனால், அடுத்த நாள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே கூடாது என்ற புள்ளிவிபரத்தை இன்று விலாவாரியாக உதாரணங்களுடன் எழுதுகின்றார்கள். இதையே ஒரு நாளுக்கு முன்னால் இந்திய அணிக்கு சொல்வதற்கு ஒரு ஆள் கூட இல்லாமல் போய் விட்டது இந்தப் பெரிய இந்தியாவில்..........🫣.

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

5 பேர் முட்டையுடன் போயிருக்கிறார்கள்.

இனி வ‌ரும் நாட்க‌ளில் ம‌ழை என்று தான் கூக்கில் வெத‌ர் காட்டு...............நாளை போட்டி ந‌ட‌க்குமானு தெரிய‌ல‌

 

46ர‌ன்ஸ்சுக்கு ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட்...................உண்மையில் இதை யாரும் ஏற்க்க‌ மாட்டின‌ம் இந்திய‌ அணியா இப்ப‌டி விளையாடின‌து என்று

 

ஒன்றில் ம‌ழை குறுக்கிட்டு விளையாட்டை ச‌ம‌ நிலையில் முடிக்கும்

 

ம‌ழை பெய்யாம‌ இருந்தால் சிறு வெற்றி வாய்ப்பு நியுசிலாந்துக்கு தான்...................பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் இந்திய‌ வீர‌ர்க‌ள் முத‌ல் இனிங்சில் செய‌ல் ப‌ட்டார்க‌ள்😁................................

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை, இந்திய அணியின் உத்தி என்ன?

இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரச்சின் ரவீந்திராவின் அற்புதமான சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக இருக்கிறது.

2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தார், சர்ஃப்ராஸ்கான் 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் நாளை (அக்டோபர் 19) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 20) மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ஆட்டத்தை இந்திய அணி எப்படி கையில் எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

இந்திய அணியின் வியூகம் என்ன?

இந்திய அணி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து நியூசிலாந்து அணியின் முன்னிலை ரன்களைவிட கூடுதலாக 300 ரன்கள் சேர்த்து 5வது நாள் உணவு இடைவேளைவரை பேட் செய்தால் ஆட்டத்தை வெல்வதற்கு சாத்தியமுண்டு.

ஒருவேளை விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து நியூசிலாந்துக்கு குறைந்த இலக்கை நிர்ணயிக்க நேர்ந்தால், இந்திய அணி தோல்வியை நோக்கிச் செல்ல வேண்டியதிருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு அவசியம் என்பதால் நெருக்கடியான நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்திய அணி வீரர்களின் பேட்டிங் பாணி உள்ளன.

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் அரைசதம், விராட் கோலி, சர்ஃப்ராஸ் கானின் அதிவேக அரைசதமும், பேட் செய்தவிதமும் விரைவாக ரன்களைச் சேர்க்க வேண்டும் அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து ஆடினர்.

இருவரும் மிகவிரைவாக 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களைச் சேர்த்து, 136 ரன்கள் பார்னர்ட்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

வலுவான பார்ட்னர்ஷிப்

நியூசிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் சேர்ப்பதற்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாகும்.

8-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றது.

 
இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரச்சின் ரவீந்திரா

ரச்சின் ரவீந்திராவுக்கு 2-வது சதம்

ரச்சின் ரவீந்திரா 88 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில் அடுத்த 36 பந்துகளில் இன்னும் 50 ரன்களை எட்டி, சதம் அடித்தார்.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரவீந்திரா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடித்த 2வது சதமாகும். இதற்கு முன் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார்.

சேவாக்கை முந்திய சௌதி

டிம் சௌதி 57 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

டெஸ்ட் அரங்கில் இதுவரை அதிகபட்சமாக 91 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரரான விரேந்திர சேவாக் உடைய சாதனையை டிம் சௌதி முறியடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் 4 சிக்சர்கள் அடித்து மொத்தம் 93 சிக்சர்கள் உடன் சேவாக்கை விட முன்னிலையில் உள்ளார்.

விக்கெட் சரிவு

முன்னதாக 2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், மிட்ஷெல் 14 ரன்களுடனும் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்திய பும்ரா, சிராஜ் இருவரும் தொடக்கத்திலேயே புதியபந்தை நன்கு ஸ்விங் செய்ததால், ரன் சேர்க்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிட்ஷெல் 18 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த டாம் பிளென்டன் 5 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய பிலிப்ஸ் 14 ரன்களிலும், மேட் ஹென்றி 8 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினர்.

ஆட்டம் தொடங்கி தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது. 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து பறிகொடுத்தது. இதனால் 300 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 
இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிம் சௌதி, ரச்சின் ரவீந்திரா கூட்டணி

வலுவான கூட்டணி

ஆனால், 8-வது விக்கெட்டுக்கு டிம் சௌதி, ரச்சின் ரவீந்திரா கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்தனர்.

புதிய பந்தை உணவு இடைவேளைக்குப் பின் எடுத்தபின் நியூசிலாந்து ரன்ரேட் வேகமெடுத்தது. ரச்சின் ரவீந்திராவும் அரைசதம் அடித்தபின் அடுத்த 50 ரன்களை 36 பந்துகளில் சேர்க்கவும் புதிய பந்து காரணமாக இருந்தது. சௌதியும் 3 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடிக்கவும் புதிய பந்து உதவியது.

அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையில் மோசமான ஓவர்

அதிலும் குறிப்பாக அஸ்வின் 80-வது ஓவரை வீசி அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்களை வாரி வழங்கினார். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஓவரில் அதிகபட்சமாக வழங்கிய ரன்கள் இதுதான்.

சிராஜ் வீசிய ஓவரில் ஸ்லோவர் பாலில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்களில் சௌதி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த அஜாஸ் படேல் 4 ரன்னில் குல்தீப் யாதவ் ஓவரில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தார்.

சதம் அடித்து பேட் செய்து வந்த ரச்சின் ரவீந்திரா 134 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார்.

நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்றது.

 
இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மா அரைசதம்

இந்திய அணி பிற்பகலில் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி, சில பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினர்.

ஜெய்ஸ்வால் பொறுமையாக பேட் செய்ய, ரோஹித் சர்மா இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளாக விளாசியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

ஜெய்ஸ்வால் 35 ரன்கள் சேர்த்தநிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் கீப்பர் பிளென்டலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். 59 பந்துகளில் அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் ரோஹித் சர்மா விளையாடி வந்தார்.

ஆனால், அஜாஸ் படேல் வீசிய ஓவரில் பந்து ரோஹித் சர்மா பேட்டில் பட்டு எதிர்பாராதவிதத்தில் ஸ்டெம்பில் மெதுவாகப் பட்டதால் போல்டாகி ரோஹித் சர்மா 52 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3வது விக்கெட்டுக்கு சர்ப்ஃராஸ் கான், விராட் கோலி கூட்டணி சேர்ந்தனர்.

இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோலி, சர்ஃப்ராஸ் கான்

கோலி, சர்ஃப்ராஸ் அதிரடி ஆட்டம்

முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளித்த இருவரும் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்தனர். குறிப்பாக உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆடி நன்கு அனுபவம் பெற்ற சர்ஃப்ராஸ் கான் நியூசிலாந்து பந்துவீச்சை அனாசயமாக ஆடி பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார்.

அதிலும் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்டில் தொடர்ந்து 2 பவுண்டரிகளையும், மற்றொரு ஓவரில் இரு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.

இருவரின் அதிரடியான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சர்ஃப்ராஸ் கான் கோலி இருவரும் அரைசதம் அடித்தனர்.

3வது விக்கெட்டுக்கு இருவரும் விரைவாகவே 100 ரன்களை எட்டினர். 41 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

நிதானமாக பேட் செய்த வந்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை பிலிப்ஸ் வீசியநிலையில் கடைசி பந்தில் கோலி 70 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு சர்ஃப்ராஸ் கான், கோலி இருவரும் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2024 at 20:40, ஈழப்பிரியன் said:

5 பேர் முட்டையுடன் போயிருக்கிறார்கள்.

 

On 18/10/2024 at 01:03, வீரப் பையன்26 said:

 

இனி வ‌ரும் நாட்க‌ளில் ம‌ழை என்று தான் கூக்கில் வெத‌ர் காட்டு...............நாளை போட்டி ந‌ட‌க்குமானு தெரிய‌ல‌

 

46ர‌ன்ஸ்சுக்கு ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட்...................உண்மையில் இதை யாரும் ஏற்க்க‌ மாட்டின‌ம் இந்திய‌ அணியா இப்ப‌டி விளையாடின‌து என்று

 

ஒன்றில் ம‌ழை குறுக்கிட்டு விளையாட்டை ச‌ம‌ நிலையில் முடிக்கும்

 

ம‌ழை பெய்யாம‌ இருந்தால் சிறு வெற்றி வாய்ப்பு நியுசிலாந்துக்கு தான்...................பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் இந்திய‌ வீர‌ர்க‌ள் முத‌ல் இனிங்சில் செய‌ல் ப‌ட்டார்க‌ள்😁................................

முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து இந்தியாவின்

 

நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் பாப்போம் இந்தியாவை வெல்லுகின‌மா என்று.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ம‌ழை பெய்யாட்டி நியுசிலாந் சிம்பிலா இந்தியாவை வென்று விடும்.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்ஃபிராஸ் - ரிஷப் அதிரடியால் வலுவாக மீண்டு வந்த இந்தியா - கடைசி நாள் ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சர்ஃபராஸ் கான் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இளம் வீரர் சர்ஃபிராஸ் கானின் முதல் டெஸ்ட் சதம் மற்றும் ரிஷப் பந்தின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 462 ரன்களைக் குவித்துள்ளது. இதையடுத்து, நியூஸிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கு சற்று குறைவானதாக தோன்றினாலும், இந்திய மைதானங்களில் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையே வரலாறு கூறுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தால் நாளை ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆட்டத்தை திருப்பக் கூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியிடம் இருப்பதால் ஆட்டத்தின் முடிவு என்பது மதில்மேல் பூனையாகவே இருப்பதாக கணிக்கப்படுகிறது.

டெஸ்டில் சர்ஃபிராஸ் கான் முதல் சதம்

231 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில் இந்திய அணி இன்றைய 4வதுநாள் ஆட்டத்தைத் தொடங்கியது. சர்ஃபிராஸ் கான் 70 ரன்களிலும், ரிஷப் பந்தும் களமிறங்கினர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருவரும் இடம் பெற்றிருந்த நிலையில் இப்போது மீண்டும் இணைந்து ஆடினர்.

புதிய பந்தில், காலை நேரச் சூழலைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் நினைத்தனர்.

ஆனால், அவர்களின் நினைப்புக்கு மாறாக ரிஷப்பந்த், சர்ஃபிராஸ் கான் இருவரும் அதிரடியாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். சர்ஃபிராஸ்கான் பவுண்டரி அடித்து 110 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். இவரின் கணக்கில் மட்டும் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சர்ஃபிராஸ் கான் சதம் அடித்தவுடன் தனது ஹெல்மெட்டைக் கழற்றி, பேட்டை சுழற்றி துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களைச் சேர்த்தனர். 63 ஓவர்களில் இந்திய அணி 300 ரன்களை எட்டியது. ரிஷப் பந்த் 55 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

 
இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சர்ஃபராஸ் கான்

அரங்கிற்கு வெளியே சிக்ஸர் அடித்த ரிஷப் பந்த்

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி வீசிய ஒரு ஓவரில் ரிஷப் பந்த் 107 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸர் விளாசி பறக்கவிட்டார். ரிஷப் பந்த் அடித்த சிக்ஸரில் பந்து, பெங்களூரு சின்னச்சாமி அரங்கிற்கு வெளியே சென்றது. சர்பிஃராஸ் கான், ரிஷப் பந்த் கூட்டணி 100 ரன்களைக் கடந்து அபாரமாக ஆடியது.

மழை குறுக்கிட்டதால், முன்கூட்டியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் நீண்டநேரம் கழித்து மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

மழைக்குப் பின்பும் இருவரின் அதிரடி ஆட்டத்தையும் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களால் நிறுத்த முடியவில்லை. இருவரின் அற்புதமான ஆட்டத்தில் இந்திய அணி 400 ரன்களை எட்டியது. சர்ஃபிராஸ் கான் 194 பந்துகளில் 150 ரன்கள் எட்டினார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரிஷப் பந்த் 4-வது நாள் ஆட்டத்தில் ஒரு பந்தை சிக்ஸருக்கு விளாசிய காட்சி

நியூஸி. பந்துவீச்சாளர்கள் திகைப்பு

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிய நிலையில் 2வது இன்னிங்ஸில் மிகப்பெரிய அளவுக்கு ரன்களைக் குவித்ததைப் பார்த்து நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.

குறிப்பாக ரிஷப் பந்த், சர்ஃபிராஸ் கான் இருவரையும் பிரிக்க முடியாமல் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சை அடித்தாடி, ரன்மழை பொழிந்து அவர்களை திக்குமுக்காட வைத்தனர்.

சர்ஃபிராஸ், ரிஷப் அற்புத ஆட்டம்

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் சர்ஃபிராஸ் கான் டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை எட்டி 150 ரன்களில் ஆட்டமிழந்தார். கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 2-வது இன்னிங்ஸில் 99 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியை நெருக்கடியில் இருந்து மீட்ட சர்ஃபராஸ் கான் - ரிஷப் பந்த் ஜோடி

திருப்புமுனை ஏற்படுத்திய புதிய பந்து

80-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது. புதிய பந்தில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய போதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. புதிய பந்தில் வீசப்பட்ட 10.2 ஓவர்களில் இந்திய அணி சர்ஃபிராஸ் கான்(150), ரிஷப் பந்த்(99), கே.எல்.ராகுல் (12) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

டிம் சவுத்தி பந்துவீச்சில் கவர் திசையில் அஜாஸ் படேலிடம் கேட்ச் கொடுத்து சர்ஃபிராஸ் கான் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் சதம் அடிக்க ஒரு ரன் இருக்கையில் ரூர்கே பந்துவீ்ச்சில் கிளீன் போல்டாகி 99 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் 90 ரன்களுக்கு மேலாக குழித்து சதம் அடிக்கமுடியாமல் ஆட்டமிழப்பது இது 7-வது முறையாகும். கே.எல்.ராகுலும் 12 ரன்களில் ரூர்கே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த 3 முக்கிய பேட்டர்கள் ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணிக்கு புதிய தெம்பை, உற்சாகத்தை அளித்தது. பின் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவை(5) ரூர்கே வீழ்த்த, அஸ்வின்(15), பும்ரா(0), சிராஜ்(0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஹென்றி வீழ்த்தினார்.

 
இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

54 ரன்களுக்கு 7 விக்கெட்

இந்திய அணி 408 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாகத்தான் இருந்தது. ஆனால், 2வது புதிய பந்துவீச எடுத்தபின் கடைசி 54 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி 99.3 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி, ரூர்கே தலா 3 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்?

நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் என பெரிய ஸ்கோர் செய்தாலும், கடைசி நாளில் ரன்களை சேஸிங் செய்வது சின்னசாமி மைதானத்தில் மிகக் கடினமாக இருக்கும்.

ஏனென்றால், ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறி சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கடந்த கால வரலாறு உணர்த்துகிறது. இந்திய அணியில் இருக்கும் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் சுழற்பந்துவீச்சையும், பும்ராவின் வேகப்பந்துவீச்சையும் எதிர்கொண்டு இந்த மைதானத்தில், டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் 107 ரன்கள் இலக்கை சேஸ் செய்வது எளிதானதாக இருக்காது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி நாள் ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 74 ஆண்டுகளில் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் குறைவாக எடுத்து சுருண்ட ஒரு அணி 6 முறை மட்டுமே அதில் இருந்து மீண்டு வந்து, ஆச்சர்யகரமான வெற்றியை பெற்றுள்ளது.

2012-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 99 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான் அணி, அந்த டெஸ்டை 71 ரன்களில் வென்றது. 2019-ஆம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 85 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அந்த ஆட்டத்தில் வென்றது. 2019-ஆல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 67 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இந்திய அணியைப் பொருத்தவரை வரலாறு அதற்கு சாதகமாக இல்லை. 100 ரன்களுக்கும் குறைவாக 27 முறை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்துள்ளது. அதில் 5 முறை மட்டுமே இந்தியா டிரா செய்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் குறைவாக சேர்த்த டெஸ்டில் இந்திய அணி ஒருமுறை கூட வென்றது இல்லை.

அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் எதிரணி 300 ரன்களுக்கும் மேலாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி தோற்றுள்ளது. 2008-ஆல் ஆமதாபாத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், 1985-இல் சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், 2009-இல் ஆமதாபாத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் , 1959-இல் டெல்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆகியவற்றில் எதிரணி ஆகிய, 300க்கும் அதிகமான ரன்களை முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 300 ரன்களுக்கும் மேலாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளதால், இந்திய அணி தோல்வியடையுமா? அல்லது இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதுமா? என்பது நாளை தெரியும்.

 
இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி தோற்றால் என்ன ஆகும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இந்திய அணிக்கு இன்னும் 5 வெற்றிகள் தேவைப்படுகிறது. நியூஸிலாந்துடன் 3 மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் என மொத்தம் 8 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் குறைந்தபட்சம் 5 வெற்றிகளை இந்திய அணி பெற வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

தற்போது இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 98 புள்ளிகளுடன் 74.24 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 90 புள்ளிகளுடன் 62.50 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்துக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி தோற்றால்கூட, இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் செல்வதில் உடனடியாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மண்ணில் 36 வருடங்களுக்குப் பின்னர் நியூஸிலாந்துக்கு டெஸ்ட் வெற்றி

image

(நெவில் அன்தனி)

ந்தியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

இன்றைய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என நியூஸிலாந்து முன்னிலை அடைந்துள்ளது.

இந்திய மண்ணில் 36 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் 1988இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து கடைசியாக வெற்றி பெற்றிருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டி மழையினால் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிடம் 0 - 2 ஆட்டங்கள் கணக்கில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து இந்தியாவுடனான டெஸ்டில் வெற்றிபெறக்கூடிய அனுகூலமான அணியாக ஆரம்பத்தில் கருதப்படவில்லை.

ஆனால், மெட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூக், டிம் சௌதீ ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சகளுடன் இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, ரச்சின் ரவிந்த்ராவின் அபார சதத்தின் உதவியுடன் 402 ஓட்டங்களைக் குவித்தது.

download__3_.png

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 356 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் சர்பராஸ் கான் குவித்த சதம் சதம், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட் ஆகியோர்  குவித்த அரைச் சதங்களின் பலனாக 462 ஓட்டங்களைப் பெற்றது.

சர்பராஸ் கானும் ரிஷாப் பான்ட்டும் 4ஆவது விக்கெட்டில் 177 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

download__2_.png

மத்திய வரிசையில் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் இந்தியா தோல்வி அடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் நியூஸிலாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்ட்டது.

ஆனால், நான்காம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தினால் இரண்டாவது புதிய பந்து எடுக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் கடைசி 7 விக்கெட்கள் 54 ஓட்டங்களுக்கு சரிந்தது.

107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் மழையினால் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் 2ஆம் நாள் ஆரம்பமான இப் போட்டி 5ஆம் நாளான இன்று முற்பகல் முடிவுக்கு வந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 46 (ரிஷாப் பான்ட் 20, யஷஸ்வி ஜய்ஸ்வால் 13, மெட் ஹென்றி 13.2 - 3 - 15 - 5 விக்., வில்லியம் ஓ'ரூக் 12 - 6 - 22 - 4 விக்., டிம் சௌதீ 6 - 4 - 8 - 1 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 402 (ரச்சின்  ரவிந்த்ரா 134, டெவன் கொன்வே 91. டிம் சௌதீ 65, வில் யங் 33, ரவிந்த்ர ஜடேஜா 72 - 3 விக்., குல்தீப் யாதவ் 99 - 3 விக்., மொஹமத் சிராஜ் 84 - 2 விக்.)

இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 462 (சர்பராஸ் கான் 150, ரிஷாப் பான்ட் 99, விராத் கோஹ்லி 70, ரோஹித் ஷர்மா 52, யஷஸ்வி ஜய்ஸ்வால் 35, வில்லியம் ஓ'ரூக் 92 - 3 விக்., மெட் ஹென்றி 102 - 3 விக்., அஜாஸ் பட்டேல் 100 - 2 விக்.)

நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 107) 2ஆவது இன்: 110 - 2 விக். (வில் யங் 48 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 39 ஆ.இ., ஜஸ்ப்ரிட் பும்ரா 29 - 2 விக்.)

ஆட்டநாயகன்: ரச்சின் ரவிந்த்ரா

https://www.virakesari.lk/article/196695

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவின் உலக சாதனை பயணத்தில் சிக்கல் - சிஎஸ்கேவுக்கு ரச்சின் நன்றி

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்தின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்தது. ஆனாலும், நியூசிலாந்துக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு அது வெற்றி பெற போதுமானதாக இருக்கவில்லை.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த ரன்களில் சுருண்டது ஒட்டுமொத்தமாக இந்த போட்டியையே தாரை வார்த்துவிட்டது.

இந்த தோல்விக்கு இந்திய அணி மேற்கொண்ட தவறான முடிவுகளே காரணமாகிவிட்டன. இதனை கேப்டன் ரோகித் சர்மாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய அணி கோட்டை விட்டது எங்கே?

ஆட்ட நாயகன் விருது பெற்ற ரச்சின் ரவீந்திரா, ஐ.பி.எல். தொடரில் தான் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் என்ன சொன்னார்?

இந்த தோல்விக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணியின் நிலை என்ன?

கடைசி நாளில் என்ன நடந்தது?

பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா சிறிது நேரத்திலேயே அந்த முடிவு தவறானது என்று உணர்ந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா வெறும் 46 ரன்களில் ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டத்தால் 402 ரன்களைக் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் ஆகியோரின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்த இந்திய அணி 462 ரன்களைக் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. அத்துடன் நான்காவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் 107 என்ற எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணியை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிரட்டினார். இரண்டாவது பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஒரு முனையில் பும்ரா மிரட்டலாக பந்துவீச, மறுமனையில் முகமது சிராஜூம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால், நியூசிலாந்து அணி தொடக்கத்தில் ரன்களை சேர்க்கவே சிரமப்பட்டது. குறிப்பாக, நியூசிலாந்து வீரர்கள் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ளவே மிகவும் சிரமப்பட்டனர். பும்ரா வீசிய 8 ஓவர்களில், அதாவது 48 பந்துகளில் 22 பந்துகளை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் தவறான ஷாட் ஆடினர். தனது இரண்டாவது பந்தில் டாம் லாதமை வீழ்த்திய பும்ரா, அடுத்த சிறிது நேரத்தில் டெவோன் கான்வேயையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அவர் 17 ரன்களை எடுத்தார்.

 
இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

எளிதாக ரன்களை சேர்க்க முடியாவிட்டாலும் கூட, குறைவான இலக்கு என்பதால் நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி களத்தில் இருந்தனர். அதேநேரத்தில், முதல் இன்னிங்ஸைப் போலவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையை இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா உணர்ந்தது. இதனால், வேகப்பந்துவீச்சைக் கொண்டு நியூசிலாந்து வீரர்களுக்கு தொடக்கத்தில் அளித்த நெருக்கடியை இந்திய அணியால் தொடர முடியவில்லை.

அடுத்து வந்த சுழற்பந்து வீச்சாளர்களை நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி எதிர்கொண்டனர். ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரின் பந்துகளில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன் சேர்த்தனர். குறிப்பாக, முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரச்சின் ரவீந்திரா அச்சமின்றி ஆடினார். அவரும் வில் யங்கும் சேர்ந்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ரவீந்திரா 39 ரன்களும், வில் யங் 48 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மண்ணில் 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"டாஸில் தோற்றது நல்லதாகி விட்டது"

முதல் டெஸ்டில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்,

"நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். டாஸில் தோற்றது ஒரு வகையில் நல்லதாகிவிட்டது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் பந்துவீசினர். அதற்கான பரிசும் கிடைத்தது. இந்தியா வலுவாக மீண்டும் வரும் என்பது தெரியும். அவர்கள் அதனை செய்தார்கள். ஆனால், இரண்டாவது புதிய பந்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஓ ரூர்கி இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசினார். டிம் சவுத்தி, ஹென்றி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸில் ரச்சினுடன் சவுத்தி அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியமானது. சில போட்டிகளே ஆடியுள்ள ரச்சின் கடந்த ஓராண்டாக அவரது பணியை மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறார். " என்று கூறினார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ஃபராஸ், ரிஷப் பற்றி ரோகித் கூறியது என்ன?

இந்திய அணியின் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, "முதல் இன்னிங்சில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இது ஒரு நல்ல முயற்சி. 350 ரன்கள் பின்தங்கியிருக்கும் போது, அதிகம் யோசிக்க முடியாது. ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. சற்று ரிஸ்க் எடுத்தாலும் கூட ரிஷப் பந்த் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்." என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், "நல்ல பந்துகளை தடுத்தாடியும், சில பந்துகளை விட்டும் ஆடிய பந்த், அவரது இயல்பான ஷாட்களையும் ஆடினார். சர்பராஸின் ஆட்டத்தை மறக்க முடியாது. நான்காவது போட்டியில் ஆடும் அவர் சிறந்த, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருக்கிறது. நீங்கள் மனதளவில் தெளிவாக இருந்துவிட்டால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தடையேதும் இருக்காது" என்று கூறினார்.

"முதல் போட்டியில் தோற்ற பிறகு பல முறை நாங்கள் மீண்டு வந்திருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பிறகு அடுத்து வந்த 4 போட்டிகளையும் வென்றோம். இது நடக்கவே செய்யும். இன்னும் 2 போட்டிகள் இருக்கின்றன. நாங்கள் வலுவாக மீண்டு வருவோம்" என்று ரோகித் சர்மா கூறினார்.

 
இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சி.எஸ்.கே.வுக்கு நன்றி "

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற உதவிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய அவர், "பெங்களூருவில் பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. என்னுடைய சிறப்பான ஃபார்மும், சரியான முன்தயாரிப்புமே இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். இந்த தொடருக்காக நான் கருப்பு மண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன்." என்று கூறினார்.

"(சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய போது) ஒவ்வொரு நாளும் வலைப் பயிற்சியின் போது பல வகையான வலைப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டேன். அது விலை மதிப்பில்லாத சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்த வசதிகளை செய்து தந்த சென்னைக்கு நன்றியுடையவனாக இருப்பேன். பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது." என்றும் ரச்சின் ரவீந்திரா கூறினார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி கோட்டை விட்டது எங்கே?

இந்த டெஸ்ட் தொடங்கும் முன்பே இந்திய அணி நிர்வாகம் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை ஆட்டத்தின் முடிவு காட்டுகிறது. நியூசிலாந்து அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க, பெங்களூரு ஆடுகளத்தின் தன்மையை சரிவர கணிக்காமல் இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது தவறான முடிவாகிவிட்டது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் நியூசிலாந்து பேட்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க முடியாமல் போய்விட்டது.

அதேபோல், பெங்களூருவில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் தடைபட, இரண்டாவது நாளில் டாஸ் வென்றதும் பேட்டிங்கை இந்தியா தேர்வு செய்தது தவறாகிப்போனது. ஆடுகளத்தை சரியாக கணித்து திட்டமிட்டு பந்துவீசிய நியூசிலாந்து அணி, ஓரிரு செஷன்களிலேயே இந்த டெஸ்டின் முடிவை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் இந்தியா மிகக் குறைந்த ரன்களில் சுருண்டதே மீண்டு வர முடியாத நெருக்கடியில் அணியை தள்ளிவிட்டது.

இந்தியா உலக சாதனையை தொடர்வதில் சிக்கல்

இந்திய அணி 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனை படைத்துள்ளது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து பெற்ற வெற்றியால், இந்த சாதனையை இந்திய அணி நீட்டிப்பது இப்போது சவாலாக மாறியுள்ளது. அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை வென்று தனது உலக சாதனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்ற நிலையில் இருக்கிறது.

இந்த வகையில், ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - அணிகளின் நிலை

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,X/ICC

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்ற பின் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (44.44 சதவீதம்) 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து (43.06 சதவீதம்) 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (34.38 சதவீதம்), பாகிஸ்தான் (25.93 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வ‌ரும் இர‌ண்டு ம‌ச்சிலும் நியுசிலாந்தால் வெல்ல‌ முடியாமா என்றால்

ச‌ந்தேக‌ம் தான்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் அணியில் இணைக்க‌ப் ப‌ட்டு உள்ளார்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள்

அஸ்வின் 3 விக்கேட் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் 7விக்கேட் 

முத‌லாவ‌து இனிங்சில் 10விக்கேட்டையும் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளே எடுத்தார்க‌ள் 

 

பாராட்டுக்க‌ள் இருவ‌ருக்கும்

த‌மிழ‌னாய் இதை நினைத்து பெருமை ப‌டுகிறேன்..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஜோடி மட்டுமே வீழ்த்தியது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 12 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனே நகரில் தொடங்கியது.

தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அற்புதமான ஆஃப் ஸ்பின்னைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்கள் பேட் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூஸிலாந்து அணியின் சரிவுக்கு காரணமாகினர்.

197 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த நியூசிலாந்து அணி அடுத்த 62 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து சுந்தர், அஸ்வின் பந்துவீச்சில் பறிகொடுத்தது.

அதிலும் கடைசி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூஸிலாந்து வாஷிங்டன் சுழற்பந்துவீச்சில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள்

23.1 ஓவர்கள் வீசிய வாஷிங்டன் சுந்தர் 59 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற்று இன்று களமிறங்கிய சுந்தர், இந்த போட்டியில் அருமையாக பந்து வீசினார். 4 டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தநிலையில் இன்று ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் முதலிடம்

அனுபவ பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 24 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டத்தில் முதல் இரு விக்கெட்டுகளை எடுத்து தொடங்கி வைத்தது அஸ்வின் என்றாலும் அதன்பின் விக்கெட் கிடைக்காமல் இந்திய அணியினர் திணறினர். வாஷிங்டன் சுந்தர் பந்துவீச வந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

அது மட்டுமல்லாமல் கடந்த 2019-ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக 43 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் சாதனை படைத்திருந்தார்.

அவரின் சாதனையை அஸ்வின் இன்று முறியடித்தார். அஸ்வின் 38 போட்டிகளில் 188 விக்கெட்டுகளை எட்டினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 38 டெஸ்ட் போட்டிகளில் 189 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் உலகளவில் முதல் இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்களில் நேதன் லேயனை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார். ஆஸ்திரேலிய வீரர் நேதன் லேயன் டெஸ்டில் 530 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அஸ்வின் 531 விக்கெட்டுகளை எட்டி 7-வது இடத்துக்கு முன்னேறினார்.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின்

வலது ஆஃப் ஸ்பின்னர்கள் ஆதிக்கம்

இந்திய அணிக்காக முதல்முறையாக வலதுகை ஆஃப் ஸ்பின்னர்கள் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதுதான் முதல்முறையாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களான அஸ்வின், சுந்தர் இருவரும் ஆட்டத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு ஆதிக்கம் செய்தனர். நியூசிலாந்து அணியின் சரிவைத் தொடங்கி வைத்தது அஸ்வின் என்றாலும், அதை வெற்றிகரமாக முடித்து வைத்தது வாஷிங்டன் சுந்தர்தான்.

டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்ஷெல் ஆகியோரின் கூட்டணியை உடைத்து நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டமிழக்க வைத்ததில் அஸ்வின், சுந்தர் இருவரின் பங்கு முக்கியமானது. நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 197 ரன்களுக்கு 3 விக்கெட் என வலுவாக இருந்ததால், 300 ரன்களைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், 259 ரன்களுக்குள் இந்திய வீரர்கள் ஆல்அவுட் ஆக்கினார்.

உள்நாட்டில் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பந்துவீசி நல்ல ஃபார்மில் இருந்த வாஷிங்டன் சுந்தர் தனது பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை வெளிப்படுத்தி, பந்துவீச்சின் வேகத்திலும் மாறுபாட்டை காண்பித்ததால் அவருக்கு விக்கெட்டுகள் கிடைத்தது எளிதாகியது. நியூசிலாந்து அணி கடைசி 62 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

புனே ஆடுகளத்தில் பேட் செய்வது எளிதானது அல்ல என்பதை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிரூபித்துவிட்டனர்.

நியூசிலாந்து ஸ்கோர்போர்டில் ரிஷப் பண்ட், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பெற்றிருப்பார்கள் வேறு எந்த பீல்டர் பெயரும் இடம் பெற்றிருக்காது என்பதே இருவரின் சிறப்பான பந்துவீச்சுக்கு சான்றாகும்.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வினை சாதனையை 5-வது டெஸ்டிலேயே சமன் செய்த சுந்தர்

அஸ்வின் டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாக இருந்த 7 விக்கெட் சாதனையை தனது 5வது டெஸ்டிலேயே வாஷிங்டன் சுந்தர் சமன் செய்துள்ளார்.

அஸ்வின் 2017-ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. அந்த சாதனையை தற்போது சுந்தர் சமன் செய்து, அவரும் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆறுதல் தந்த கான்வே, ரவீந்திரா

நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு ஆறுதலாக இருந்தது கான்வே, ரச்சின் ரவீந்திராவின் பேட்டிங் மட்டும்தான். இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் இருந்ததைப் போல ரவீந்திரா இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கான்வே 76 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கீழ்வரிசையில் களமிறங்கிய சான்ட்னர் 33 ரன்கள் சேர்த்தார். மற்றவகையில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

வில் யங் - கான்வே பார்ட்னர்ஷிப் 62 ரன்களையும், கான்வே - ரவீந்திரா பார்ட்னர்ஷிப் 59 ரன்களையும் அதிகபட்சமாகச் சேர்த்தனர்.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரவீந்திராவை பிரமிக்க வைத்த சுந்தர்

ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் பேட் செய்தார். ஆகாஷ்தீப், ஜடேஜா, அஸ்வின் என மாறி, மாறிப் பந்துவீசியும் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

அப்போது சுந்தர் பந்துவீச அழைக்கப்பட்டார். சுந்தர் வீசிய ஓவரின் முதல் பந்தை ரவீந்திரா ஸ்ட்ரோக் வைத்து தடுத்தாட முயற்சிக்க, பந்து லேசாக டர்ன் ஆகி ஆஃப் ஸ்டெம்பில் பட்டு க்ளீன் போல்டாகியது.

தன்னை போல்டாகிய பந்து குறித்து ரவீந்திரா சில வினாடிகள் பிரமித்து தனது பேட்டையும், ஸ்டெம்பையும் மாறி, மாறிப் பார்த்து செய்வதறியாது திகைத்து நடந்து சென்றார்.

இந்த விக்கெட்தான் சுந்தரின் விக்கெட் வேட்டைக்கு தொடக்கமாக அமைந்தது.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டக்அவுட் ஆன ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா டக்அவுட்

இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்கினர். டிம் சௌதி வீசிய 3வது ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அடுத்து, சுப்மான் கில் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் சேர்த்து, 243 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், சுப்மான் கில் 10 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் அஸ்வின் 3 விக்கேட் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் 7விக்கேட் 

முத‌லாவ‌து இனிங்சில் 10விக்கேட்டையும் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளே எடுத்தார்க‌ள் 

பாராட்டுக்க‌ள் இருவ‌ருக்கும்

த‌மிழ‌னாய் இதை நினைத்து பெருமை ப‌டுகிறேன்..............................................

உதயநிதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய பின் தான் இப்படியான அற்புதங்கள் எல்லாம் நடக்குது என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்................😜.

முதல் டெஸ்ட் மாட்சை தோற்ற இழுக்கில், இனி இரண்டு டெஸ்ட் மாட்சுகளிலும் சுழல் பந்து வீச்சு மட்டும் தான் போல........ 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

உதயநிதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய பின் தான் இப்படியான அற்புதங்கள் எல்லாம் நடக்குது என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்................😜.

முதல் டெஸ்ட் மாட்சை தோற்ற இழுக்கில், இனி இரண்டு டெஸ்ட் மாட்சுகளிலும் சுழல் பந்து வீச்சு மட்டும் தான் போல........ 

அஸ்வின்  ஏற்க‌ன‌வே தெரிவு செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர் 

 

2019ம் ஆண்டுக்கு பிற‌க்கு வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் இன்று தான் ரெஸ் ம‌ச்சில்  இந்தியா அணிக்காக‌ விளையாடுகிறார்

ம‌ட்டையாலும் அடிப்பார் ப‌ந்தும் ந‌ல்லா போடுவார்

 

இவ‌ரின் சுழ‌ல் ப‌ந்தில் நியுசிலாந் வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவுட் ஆகினார்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் 300க்கு மேல் அடிக்கும் நிலை இருந்த‌து வீர‌ர்கள் சீக்கிரம் அவுட் ஆக‌ 259க்குள் ச‌க‌ல‌ வீர‌ர்களும் அவுட் 

 

ப‌ல‌ வாட்டி யோசிச்சு இருக்கிறேன் . வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரிட‌ம் திற‌மை இருந்தும் அணியில் சேர்க்காம‌ இருக்கின‌ம் என்று................

 

அஸ்வினுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஓய்வை அறிவித்து விட்டு இள‌ம் வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு வ‌ழி விடுவ‌து சிற‌ப்பு

 

ஹா ஹா இதுக்கை ஏன் உதாவாநிதிய‌ இழுக்கிறீங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிர‌ம் கோடிய‌ ஊழ‌ல் செய்த‌ ஊழ‌ல் ராஜாவை ப‌ற்றி க‌தைப்ப‌தில் பெருமை இல்லை குருவே...................😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

156 ர‌ன்ஸ் தான் இந்தியாவால் அடிக்க‌ முடிந்த‌து..................நியுசிலாந் 400ர‌ன்ஸ் அடித்தால் வெற்றி அவ‌ர்க‌ள் ப‌க்க‌ம் போக‌ கூடும்.....................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: பலம்வாய்ந்த நிலையில் நியூஸிலாந்து

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் பூனே, மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

2510_washington_sudar_ind_v_nz.png

சுழற்சியும் எகிறிப் பாயும் தன்மையும் கொண்ட ஆடுகளத்தில் மிகத் திறமையாக விளையாடி முதல் இன்னிங்ஸ் நிறைவில் 103 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து, அந்த எண்ணிக்கையை 301 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டுள்ளது.

2510_mitchell_santner_nz_v_ind.png

வியாழக்கிழமை (24) ஆரம்பமான அப் போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்த நியூஸிலாந்து, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது.

டெவன் கொன்வே (76), ரச்சின் ரவிந்த்ரா (65) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர்.

கொன்வேயுடன் 3ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் டெரில் மிச்செலுடன் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா பகிர்ந்தார்.

அவர்களைவிட மிச்செல் சென்ட்னர் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுழல்பந்துவீச்சாளர் வொஷிங்டன் சுந்தர் 59 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி தனது அதிசிறந்த டெஸ்ட் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். இது அவரது முதலாவது 5 விக்கெட் குவியலாகும்.

ரவிச்சந்திரன் அஷ்வின் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று (25) காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, முதல் போட்டியில் போன்றே மோசமான அடி தெரிவுகளால் 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ரவிந்த்ர ஜடேஜா (38), யஷஸ்வி ஜய்ஸ்வால் (30), ஷுப்மான் கில் (30) ஆகிய மூவரே 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஓட்டம் பெறாமலும் விராத் கொஹ்லி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் மிச்செல் சென்ட்னர் 53 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெற்றனர்.

தனது 29ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மிச்செல் சென்ட்னர் டெஸ்ட் அரங்கில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 103 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து, 2ஆவது இன்னிங்ஸில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அணித் தலைவர் டொம் லெதம் 86 ஓட்டங்ளைப் பெற்றார். டொம் ப்ளண்டல் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தனது முதலாவது 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

https://www.virakesari.lk/article/197123

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ஷா (அமித் ஷாவின் மகன்) உலக கிரிக்கெட் தலைவராகும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் இப்படித் தவ்வுகின்றது............... இந்திய சுழல் பந்துவீச்சில் நியூசிலாந்து சுருண்டு போகும் என்று பார்த்தால், இந்திய அணி இப்படி கவிழ்ந்து கிடக்குதே............🫢.  

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

ஜெய் ஷா (அமித் ஷாவின் மகன்) உலக கிரிக்கெட் தலைவராகவும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் இப்படித் தவ்வுகின்றது............... இந்திய சுழல் பந்துவீச்சில் நியூசிலாந்து சுருண்டு போகும் என்று பார்த்தால், இந்திய அணி இப்படி கவிழ்ந்து கிடக்குதே............🫢.  

தனக்குத் தானே வெட்டின குழியா(ஐ மீன் குழிப் பிட்ச்) இது அண்ணை?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

தனக்குத் தானே வெட்டின குழியா(ஐ மீன் குழிப் பிட்ச்) இது அண்ணை?!

🤣...........

குரல்தர வல்ல வல்லுநர் பையன் சார் @வீரப் பையன்26 வந்து, கோலியையும் ரோகித்தையும் அந்தக் குழிக்குள் போட்டு மூடச் சொல்லுவார் என்று தெரிகின்றது............. 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே வீரர் சான்ட்னர் சுழலில் இந்திய அணி வீழ்ந்தது எப்படி?- விறுவிறுப்பான கட்டத்தில் புனே டெஸ்ட்

இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 34 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனேயில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் சுருண்டது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களில் ஆட்டமிழந்து. தற்போது, 2வது இன்னிங்ஸில் பேட் செய்துவரும் நியூசிலாந்து அணி இன்றைய (அக்டோபர் 25) ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என்ற முன்னிலை பெற்றுள்ளது.

டாம் ப்ளன்டெல் 30 ரன்னிலும், க்ளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரைசதம் கூட இல்லை

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக ஜடேஜா(38), கில்(30), ஜெய்ஸ்வால்(30) ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன் அனைவரும் 20 ரன்களுக்குள்ளே ஆட்டமிழந்தனர். கடந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றினர்.

வரலாற்று வெற்றியை நோக்கி நியூசிலாந்து?

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருப்தால், 5 நாட்கள்வரை ஆட்டம் நீடிக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை அல்லது நாளை மறுநாளில்கூட டெஸ்ட் போட்டி முடிவுக்கு வரக்கூடும் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

இதுவரை இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து அணி முதல்முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் முயற்சியில் இருக்கிறது. ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று ஒரே நாளில் இரு அணிகளிலும் சேர்த்து 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுப்மான் கில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்

ஆட்டம் எப்படி மாறும்

புனே ஆடுகளம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். இந்த ஆடுகளத்தில் இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது.

நியூசிலாந்து அணி வசம் இன்னும் 5 விக்கெட்டுகள் இருப்பதால், 350 ரன்களுக்கு மேல் இந்திய அணிக்கு இலக்கு வைக்கலாம்.

இந்த பிட்ச்சில் சேஸிங் (chasing) செய்வது இந்திய அணிக்கு மிகக் கடினமாக இருக்கும். பிட்சின் தன்மை நாளுக்கு நாள் மாறுகிறது, அதனால் அது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதலாக ஒத்துழைப்பு அளிக்கும்.

சான்ட்னர், அஜாஸ் படேல், பிலிப்ஸ் ஆகியோரின் பந்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் டர்ன் ஆகிறது. ஆதலால், நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் கணித்து ஆடுவது எளிதானதாக இருக்காது.

இந்திய அணி சுழற்பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தால் டெஸ்ட் தொடரையே இழக்க நேரிடலாம். அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறுவதற்கு அந்த அணியின் கேப்டன் டாம் லாதம்(86), டாம் பிளென்டல்(30) பேட்டிங் குறிப்பிடத்தக்க உதவி புரிந்தது.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் குவித்தார்

சான்ட்னரின் முதல் 5 விக்கெட்

இதுவரை சான்ட்னர் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதில்லை.

ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 53 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க காரணம் என்ன?

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் 10 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகளை மிட்செல் சான்ட்னர் மட்டுமே வீழ்த்தியிருந்தார். 2 விக்கெட்டுகளை கிளென் ப்லிப்ஸ், ஒரு விக்கெட்டை சௌதியும் கைப்பற்றினர்.

ஆனால், சான்ட்னர் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் 7 பேர் ஆட்டமிழந்ததில் சர்ஃப்ராஸ் கான் மட்டுமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்திருந்தார். மற்ற 6 பேட்ஸ்மேன்களுமே கால்காப்பில் வாங்கியும், போல்டாகியும் விக்கெட்டை இழந்திருந்தனர்.

இதற்கு முக்கியக் காரணம் சான்ட்னர் தனது பந்துவீச்சில் “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்” என்ற முறையில் பந்துவீசினார். அதாவது தனது பந்துவீச்சின் இலக்கை ஸ்டெம்பை நோக்கியே வைத்திருந்தார்.

இரண்டாவதாக சான்ட்னர் பந்துவீச்சின் வேகம் மணிக்கு 90 கிலோமீட்டருக்கும் குறைவாகவும், அதேநேரம் பந்தை “டாஸ்” செய்யும் அளவு அதிகமாகவும் இருந்தது.

புனே போன்ற மெதுவான ஆடுகளத்தில் வேகம் குறைவாக வீசும் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்” வீசும் சான்ட்னர் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும் அவர்கள் விக்கெட்டை இழக்க நேரிடலாம்.

இந்த உத்தியில்தான் சான்ட்னர் பந்துவீசினார். குறிப்பாக வேகத்தைக் குறைத்து சான்ட்னர் பந்துவீசியதால், பந்து பிட்ச் ஆனபின் நன்கு ட்ர்ன் ஆகி, திடீரென பவுன்ஸ் ஆகியது. இதனால் பந்தை கணித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது.

ஒரே இடத்தில் பந்து பலமுறை பிட்ச் ஆனாலும், ஒவ்வொரு முறை பிட்ச் ஆகும்போது பந்து ஒவ்வொரு விதமாக சென்றது. இதை புரிந்து கொண்ட சான்ட்னர் ஆடுகளத்துக்கு ஏற்ப தனது பந்துவீச்சை மாற்றிக்கொண்டார்.

ஆனால், பிட்சுக்கு ஏற்ப இந்திய பேட்டர்கள் தங்கள் பேட்டிங்கை மாற்றாததால், இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர்.

முதல் 5 விக்கெட்டுகளை 83 ரன்களுக்கு இழந்த இந்திய அணி, அடுத்த 5 விக்கெட்டுகளை 73 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை மிட்செல் சான்ட்னர் வீழ்த்தியிருந்தார்

இந்திய அணியைப் பொருத்தவரை எதிரணி 100 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இருமுறை மட்டுமே வென்றுள்ளது.

2000-01-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும், 1976-ஆம் ஆண்டில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் மட்டும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த டெஸ்டில் 300 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்படும் இலக்கை இந்திய அணி சேஸ் செய்யுமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை

சான்ட்னரின் இன்று 17.3 ஓவர்கள் மட்டுமே வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதே புனே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ஓ கீஃப் பந்துவீச்சில் இந்திய அணி ஆட்டத்தில் சுருண்டது.

இந்த பிட்ச்சில் பந்தில் அதிகமான டர்ன் இருக்கிறது, பந்து பல்வேறு விதத்தில் திரும்புகிறது இதற்கு ஏற்றார்போல் இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை இருக்க வேண்டும்.

அதாவது ஒரே இடத்தில் பிட்ச் ஆகும் பந்து ஒருமுறை அதிகமாக டர்ன் ஆகியும், 2வது முறை குறைவாக டர்ன் ஆகியும், 3வது முறை நேராகவும் பேட்டரை நோக்கி வரும்போது பேட்டர்கள் குழப்பமடைகிறார்கள். இந்த பிட்ச்சின் இயல்புத்தன்மைக்கு ஏற்ப பேட்டிங் உத்தியை இந்திய வீரர்கள் மாற்ற வேண்டும்.

குறிப்பாக விராட் கோலி, ஃபுல்டாஸாக சான்ட்னர் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது பந்து மெதுவாக வந்து க்ளீன் போல்டாகினார்.

பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சர்ஃப்ராஸ்கான் அதே அணுகுமுறையோடு இந்த ஆட்டத்திலும் பேட்டிங் செய்தபோது, ஸ்வீப் ஷாட்டில் விக்கெட்டை இழந்தார்.

ஆடுகளத்தின் தன்மையையும், சான்ட்னரின் பந்துவீ்ச்சையும் கணித்து ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவர் மட்டுமே ஓரளவுக்கு பேட் செய்தனர். சுந்தர் 18 ரன்களையும் ஜடேஜா 38 ரன்களையும் குவித்தனர். இருவரும் அதிரடியாக சில ஷாட்களை ஆடியதால்தான் இந்திய அணி 150 ரன்களைக் கடந்தது.

 
இந்தியா - நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இழந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வாஷிங்டன் பந்துவீச்சில்தான் இழந்தது.

நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை

ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக பேட் செய்தனர். பவுண்டரி அடிக்க வாய்ப்பிருக்கும் எந்தப் பந்தையும் அவர்கள் வீணடிக்கவில்லை. ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களிலும், கால்களை நகர்த்தியும் ஷாட்களை ஆடி, இந்தியப் பந்துவீச்சாளர்களை குழப்பினர்.

இதனால், அஸ்வின் 6 ஓவர்களை வீசி 33 ரன்களையும், ஜடேஜா 3 ஓவர்களில் 24 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் டாம் லாதம் 82 பந்துகளில் அரைசதம் அடித்து அதிரடியான பேட்டிங் உத்தியை செயல்படுத்தினார்.

ஆனால், வாஷிங்டன் சுந்தரின் வேகக்குறைவான சுழற்பந்துவீச்சை கையாளத் தெரியாமல், அதிரடியாக ஷாட்களை அடிக்க முயன்றபோது நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இழந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வாஷிங்டன் பந்துவீச்சில்தான் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் உத்தியைக் கையாண்டு பந்துவீசியதால், கால்காப்பில் வாங்கியும், போல்டாகியும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்துவரும் நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என்ற முன்னிலை பெற்றுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣...........

குரல்தர வல்ல வல்லுநர் பையன் சார் @வீரப் பையன்26 வந்து, கோலியையும் ரோகித்தையும் அந்தக் குழிக்குள் போட்டு மூடச் சொல்லுவார் என்று தெரிகின்றது............. 

குருவே

இந்திய வீர‌ர்க‌ளின் அன்மைக் கால‌ விளையாட்டு ச‌ரி இல்லை

 

இல‌ங்கையிட‌ம் ஒரு நாள் தொட‌ரில் தோல்வி

இப்போது சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந்திட‌ம் இர‌ண்டாவ‌து தோல்வியும் உறுதியாகி விட்ட‌து

 

ப‌ல‌ம் இல்லா வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்றார்க‌ள் , இல‌ங்கையிட‌ம் தோல்வி அடைந்த‌ நியுசிலாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல சிர‌ம‌ ப‌டுகின‌ம்😁

 

கோலி ரோகித் ச‌ர்மா இவ‌ர்க‌ள் அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு முத‌லே ஓய்வை அறிவித்தால் இருக்கிற‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மான‌த்தை த‌ன்னும் காப்பாற்றி கொள்ள‌லாம் 

 

நியுசிலாந் 301 ர‌ன்ஸ் முன்நிலையில்   நிக்குது இன்னும் கூடுத‌லா 100ரன்ஸ் அடிச்சால் இந்தியாவை வென்று விடுவினம்.................சிரிக்க கூடாது சில‌து விளையாட்டு நாளையோட‌  கூட‌ முடிந்து விடும் 😁

 

இப்ப‌ எல்லாம் ஜ‌ந்து நாள் விளையாட்டு 3 அல்ல‌து 4 நாட்க‌ளில் முடிந்து விடுது

 

18 வ‌ருட‌த்த‌  முன்னேக்கி பார்த்தால் ப‌ல‌ விளையாட்டு 5 நாள் ஆகியும் வெற்றி தோல்வி இன்றி ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்கு

 

20ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு பொறுமை அற‌வே இல்லை குருநாதா😁.........................

Edited by வீரப் பையன்26
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரசோதரன் said:

🤣...........

குரல்தர வல்ல வல்லுநர் பையன் சார் @வீரப் பையன்26 வந்து, கோலியையும் ரோகித்தையும் அந்தக் குழிக்குள் போட்டு மூடச் சொல்லுவார் என்று தெரிகின்றது............. 

நான் நேற்று சொன்னேன் தானே இன்றுட‌ன் விளையாட்டு முடிந்து விடும் என்று 

விளையாட்டு 3 நாள் தான் எடுத்த‌து 5 நாள் விளையாட்டை 

 

113 ரன்ஸ்சால் நியுசிலாந் பெரிய‌ வெற்றி😁.............................

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.