Jump to content

‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

October 21, 2024

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை, பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று, இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை, 13 வது திருத்தம் அல்லது அது போன்ற அதிகார பகிர்வு தேவை இல்லை என தெரிவித்திருக்கின்றார்.

இது முதலாவது அடி, இரண்டாவது ஐக்கியநாடுகள் பொதுச் சபையிலே, மனித உரிமை பேரவையிலே அங்கு வந்த தீர்மானத்திலே ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி விசாரணைகளை மேற்கொள்வது என்பதை மறுத்து இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் அதனை மறுத்து உள்ளக விசாரணைதான் என கூறியிருக்கின்றார். ஆகவே இதில் என்ன தெரிகிறது என்றால் இந்த பிரச்சினையில் அவர்கள் சர்வதேசத்திற்கும் உதவ தயாராக இல்லை, இதை நம்பி எங்களுடைய மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பொதுத் தேர்தலில் இறங்கியுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையின் பின்னணியிலேதான் அவர்களுடைய அந்த அமைச்சரவையில் இருக்கக் கூடிய. அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் ஜனாதிபதியின் கருத்துக்கள் தான். வெளிவிவகார அமைச்சகமும் இவ்வாறு கூறியிருக்கின்றது என்றால் இதைவிட என்ன கருத்துக்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன.

புதுமையான இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டும், இதுவரை தேர்தல்களில் விருப்பு வாக்கு அழிக்கப்படாது கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கப்படும், ஆனால் இம்முறை விருப்பு வாக்குகளை வருகின்ற வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவே இது பேரினவாத கட்சிகளைப் போன்று அடிஎடுத்து வைக்கின்றது என்பதைச் சொல்கிறது.

ஆகவே வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்துக்களையும் வைத்து பார்க்கின்றபோது ஜே.பி.வி இன்னும் இனவாத்த்திலிருந்து மீளவில்லை, தமிழருக்கு தமிழினத்திறக்கு எதிரான அனியாயங்களுக்காக 8000 க்கு மேற்பட்ட படையினரை நாங்கள் தான் சேர்துக் கொடுத்தோம் என்று மார்தட்டியவர்களுக்கு எங்களுடைய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே இராணுவம்தான் எங்களுடைய மக்களை படுகொலை செய்தது, மானபங்க படுத்தியது, கற்பழித்தது. அவ்வாறு செய்தவர்களுக்கு நீங்கள் சாமரம் வீசுவது போல வாக்களிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம், இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்.

2004 ம் ஆண்டு வீசிய கடற்கோள் அதாவது சுனாமியின் பின் சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் இணைந்து சுனாமியின் பின் அந்நேரம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அரசாங்கமும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை செய்தார்கள் பீரொம்ஸ். அதாவது post tsunami operational management structure சுனாமிக்கு பின்னரான மீள் கட்டுமானம். பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டு அவற்றை எல்லாம் செயற்படுத்தப்படுகின்ற பருவம் வருகின்றபோது அதனுடைய தலமைச் செயலகம் கிளிநொச்சியிலே அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அதற்கு எதிராகவும் நீதிமன்றம் சென்று அதனையும் தடுத்தவர்கள். அதைவிட கொழும்பிலேயும் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் செய்தவர்கள் ஜேவிபியினர். இவ்வாறு இருக்க ஜே.பி.விபியினருக்கு நீங்கள் வாக்களிக்க முயன்றல் அது எங்களை அகல பாதாளத்தில்தான் கொண்டு சென்று விடும் என்பது எனது தாழ்மையான கருத்து என்றார்.

 

https://www.ilakku.org/இனவாதத்திலிருந்து-ஜே-பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தில் இருந்து சிவாஜிலிங்கமும் ஜேவிபியும் மீளவேண்டும்.  அதுவே மீட்சி. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய நியூசிலாந்து பெண்கள் அணி - ஆண்கள் அணியால் முடியாததை சாதித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தனது சக வீரர் ஜெஸ் காருடன் கட்டுரை தகவல் எழுதியவர், மனோஜ் சதுர்வேதி பதவி, விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நியூசிலாந்தின் கனவு இறுதியாக நனவாகியிருக்கிறது. நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது மூன்றாவது முயற்சியில் நியூசிலாந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன், 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்றது நியூசிலாந்து மகளிர் அணி. தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த பிறகும் தென்னாப்பிரிக்காவால் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனது. கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய 10 வீராங்கனைகள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினர். ஆனால் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். நியூசிலாந்து அணி சாம்பியன் ஆனதும், ஒட்டுமொத்த அணியும் கேப்டன் சோஃபி டிவைனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அனைத்து வீராங்கனைகளின் கண்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தன. கேப்டன் சோஃபி டிவைன் என்ன சொன்னார்? இந்த வெற்றி குறித்துப் பேசிய நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், "முந்தைய நாள் இரவு எனது அணியுடன் கோப்பையை கைப்பற்றுவது போல் கனவு கண்டேன். பத்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு கோப்பையை வென்றிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து சரியான திசையில் பயணித்தோம். அதன் பலன்தான் இது,” என்றார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், "இறுதி ஆட்டத்தில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. ஏழாவது ஓவருக்கும் 11-வது ஓவருக்கும் இடையே எங்களது ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. ஆனால் வெற்றியின் பெருமை நியூசிலாந்து அணிக்கே சேரும்," என்றார். நியூசிலாந்துக்கு முதன்முறையாகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததில் ஒரு வீராங்கனை முக்கியப் பங்கு வகித்தார் என்றால், அது அமெலியா கெர்தான். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஐந்து விக்கெட்டுகளுக்கு 158 ரன்களை எட்டச்செய்தார். அவர் 43 ரன்கள் எடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க அணியால் நியூசிலாந்தைத் தோற்கடிக்க இயலவில்லை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா முதல் விக்கெட் வீழ்ந்தபோது களம் இறங்கிய அமெலியா, விக்கெட்டில் திடமாக நின்று அணியை பலப்படுத்தினார். தொடக்கத்தில் உறுதுணையாக விளையாடிய அவர், கடைசி நிமிடத்தில் தனது கூர்மையான ஆட்டத்தால் அணி நல்ல ஸ்கோர் பெற உதவினார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் கூட ‘மேட்ச் சேஞ்சர்’ என்று கருதப்படும் ஒரு வீராங்கனை. அவர் விளையாடும் போதே தென்னாப்பிரிக்கா தனது கோப்பைக் கனவை நனவாக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் பத்தாவது ஓவரின் முதல் பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் தனது அணிக்குச் சாதகமாக மாற்றினார் அமெலியா. அமெலியா சிறப்பான சுழற்பந்து வீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெலியாவைத் தவிர, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட்டுக்கு 126 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் அந்த அணியின் பவுலர் ரோஸ்மேரி மேயரும் முக்கியப் பங்காற்றினார். அவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெலியா, "இந்த வெற்றியைப் பற்றிப் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றி பெற்ற பிறகு நான் கொஞ்சம் உற்சாகமாக இருந்தேன். ஃபீல்டிங் செய்யும் போது எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் என்னால் எனது பொறுப்பை நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி," என்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் அமெலியா கெர் சிறப்பாக விளையாடினார் ஆண்கள் அணியால் செய்ய முடியாத சாதனை நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியால், ஒருமுறை மட்டுமே (2021-ஆம் ஆண்டு) ஐசிசி டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வர முடிந்தது. ஆனால் கோப்பையை வெல்லும் அதன் கனவு இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், நியூசிலாந்து மகளிர் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சாதித்திருக்கிறது. பெண்கள் அணி சாம்பியனான நிலையில், இப்போது ஆண்கள் அணியும் இதிலிருந்து உத்வேகம் பெறக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பவர் பிளேயிலும் தென்னாப்பிரிக்க அணி மோசமாகச் செயல்பட்டது பவர்பிளேயை இழந்த தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வோல்வார்ட் மற்றும் தாஜ்மின் பிரிட்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 51 ரன்கள் சேர்த்த போது, அணி வெற்றியை நோக்கி நகர்வது போல் இருந்தது. அந்த நேரத்தில் வூல்வர்ட் முழு ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்தார். இந்த ஜோடியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். தஜ்மினின் விக்கெட் வீழ்ந்ததால் இந்த பார்ட்னர்ஷிப் முறிந்த பிறகு, வோல்வார்ட் மூலம் நியூசிலாந்து அணிக்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், பத்தாவது ஓவரில் வோல்வார்ட், போஷ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அமெலியா போட்டியை ஓரளவு தனக்குச் சாதகமாக மாற்றினார். அடுத்த 13 பந்துகளில் மரிஜான் கேப் மற்றும் டி கிளர்க்கின் விக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டபோது போட்டியின் முடிவு பெரிதும் தீர்மானமாகிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இப்போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது சிறந்த பீல்டிங்கால் உருவான அழுத்தம் நியூசிலாந்து ஆக்ரோஷமாகத் தொடங்க முயற்சித்தது. இதற்குச் சான்றாக இரண்டு ஓவர்களில் நான்கு பவுண்டரிகள் அமைந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களைச் சுதந்திரமாக ஷாட்களை விளையாட அனுமதிக்கவில்லை. நியூசிலாந்து பேட்டர்களான சுசி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் வெளியே வந்து ஷாட்களை ஆடிய போதெல்லாம், அவர்களால் எச்சரிக்கையான பீல்டர்களை ஊடுருவி வெற்றிபெற முடியவில்லை. பொதுவாக அணிகள் மிடில் ஓவர்களில் வேகமாக ரன்களை எடுக்க முயற்சிக்கும். ஆனால் தென்னாப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக டிரையன் மற்றும் மலாபா ஆகியோர் தொடர்ந்து பந்துவீசி ரன்களின் வேகத்தை அதிகரிக்காமல் தடுத்தனர். இதில், பேட்டர்களை பவுண்டரி அடிக்க விடாமல் தடுப்பது முக்கியப் பங்காற்றியது. எட்டாவது மற்றும் 13-வது ஓவர்களுக்கு இடையில் பவுண்டரிகள் அடிக்கப்படாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர். டி கிளர்க் வீசிய 15-வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து ரன் வேகத்தை அதிகரித்தார் ஹால்லிடே. இதன் பிறகு, மற்ற பேட்டர்களும் அடித்து ஆட முயன்றனர். இதன் காரணமாக அந்த அணி ஐந்து விக்கெட்டுக்கு 158 ரன்களை எட்டியது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நியூசிலாந்தின் பேட்டிங்கிற்கு தென்னாப்பிரிக்க அணி ‘பிரேக்’ போட்டது நியூசிலாந்து அணி எப்படிச் சமாளித்தது? தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சு மற்றும் சிறந்த பீல்டிங் காரணமாக, நியூசிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது. ஆனால் இதையும் மீறி விக்கெட்டுகளுக்கு இடையே தொடர்ந்து ஓடினர். ரன்களின் வேகத்தை அவர்கள் குறையவிடவில்லை. கடைசி 5-6 ஓவர்களில் நியூசிலாந்து அணி விரைவாக ரன்களைக் குவித்தது. அமெலியா கெர் ஒரு முனையைச் சமாளித்தபடி ரன்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். ப்ரூக் ஹால்லிடே அவருக்கு ஒரு நல்ல துணையாக இருந்தார். ஹால்லிடே 135 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்து 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்தது மட்டுமின்றி, அமெலியாவை வேகமாக ரன் எடுக்கத் தூண்டினார். https://www.bbc.com/tamil/articles/cg78ll2zk40o
    • இலங்கைக்கு வந்துள்ள புதிய கடவுச் சீட்டு.
    • இணையவழி மோசடிகள், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,  சமூக ஊடகங்களில் உள்ள போலிக் கணக்குகள் மூலம் அதிகளவான  இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன. இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 8 ஆயிரம் முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் ஒ.டி.பி. இலக்கங்களுடன் தொடர்புடையவை ஆகும். தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை பல்வேறு நபர்களுக்குப் பகிர்வதாலும் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன. இதனால், பொதுமக்கள் தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களுக்குப் பகிர வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196775
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.