Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை பின்வருமாறு

“இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன்.

அதன் பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பல தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருந்ததுடன், எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து விளக்கங்களையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி, அது தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆயர்கள் பேரவையுடன் பரிமாறிக் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது.

செனல் 4வில் ஒளிபரப்பப்பட்ட வௌிப்படுத்தல்களை ஆராயுமாறு என்னிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹர்ஷ ஷோசா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்.

இதற்கு மேலதிகமாக, ஏ.எம்.ஜே. டி அல்விஸ், டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷான் மற்றும் கே.என்.கே. சோமரத்ன  ஆகியோர் அடங்கிய மற்றுமொரு மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்தேன்.

இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்ல.

இந்த குழுக்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் பற்றி ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமைக்கான ஒரு காரணமாகும். 

மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருந்ததா? என்று விசாரிப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட மற்றொரு பொறுப்பாகும்.

வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்?

அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.

அல்விஸ் குழு அறிக்கையானது அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும்.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வவுணதீவுப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலான அவதானிப்புகளும் மிக முக்கியமானதாகும்.

அந்தச் சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பே  கொலைகளை செய்ததாக முதலாவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தம்பிராச குமார் மற்றும் இராசநாயகம் சர்வானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அறிக்கையின் இணைப்புகளை ஆய்வு செய்யும் போது, பல முரண்பாடான விடயங்கள் வெளிவருகின்றன.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அப்போது சிறையில் இருந்த பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்ததாக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுணதீவில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரின் கணவரால் இந்த கொலைகள் இடம்பெற்றதாக இது தொடர்பான மற்றுமொரு புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌஹித் ஜமாத்தின் (NTJ) செயற்பாடுகளை புலனாய்வு அமைப்புக்கள் கண்டுபிடிக்க நான்கு மாதங்கள் ஆனதற்கு தேசிய புலனாய்வு அமைப்புகளிடம் தகவல்களைப் பெறுவதற்கான முறையான வலையமைப்பு இல்லாததே காரணம் என இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் (DMI) தெரிவித்துள்ளார்.

“Regarding the gap of four months until discovery of the NTJ, the DMI’s explanation was that it was attributable to the lack of network they had at the time to elicit the intelligence. “

REPORT OF THE COMMITTEE OF INQUIRY INTO INTELLIGENCE COORDINATION AND INVESTIGATIVE PROCESSES RELATED TO THE EASTER SUNDAY BOMBINGS OF 21ST APRIL 2019 (Page No 12)

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவாக இருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதியில் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்தாலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாட்டில் கடும் வீழ்ச்சி காணப்படுவதைக் காணமுடிகிறது. பலமான புலனாய்வு வலையமைப்பு நம்மிடம் இல்லை என்பது ஒரு பயங்கரமான நிலையாகும்.

ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விடயத்தில் எனது கவனம் செலுத்தப்பட்டது.

ஆயர்கள் பேரவையின் பதிலைப் பெற்று, சட்டமா அதிபரின் அறிக்கையுடன் புலனாய்வு பிரிவின் வீழ்ச்சி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதே எனது நோக்கமாக இருந்தது.

ஏனெனில் இவ்வாறு தேசிய புலனாய்வு சேவையின் வீழ்ச்சி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய மூவர் கொண்ட குழுவின் ஊடாக புலனாய்வு அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க முன்மொழிவதற்கும் நான் உத்தேசித்திருந்தேன்.

ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவின் கடுமையான வீழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனது கைக்கு வந்த போதிலும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதால் அந்த அறிக்கைகளை நான் பகிரங்கப்படுத்தவில்லை.

இது தொடர்பில் அறிக்கை கோர வேண்டிய தேவை இருந்தமையால் மேற்படி நடைமுறையை நான் பின்பற்றியதாகவும் குறிப்பிடுகின்றேன்.

என்னைப் பற்றி பேராயர் கூறிய அனைத்து கருத்துக்களும் ஆதாரமற்றவை.

ஈஸ்டர் அறிக்கைகள் குறித்து ஆயர்கள் பேரவை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஈஸ்டர் அறிக்கையை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

https://thinakkural.lk/article/311131

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தேசிய புலனாய்வு சேவையின் வீழ்ச்சி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது

ஆமா..... வெளிநாட்டு புலனாய்வுப்படை ஒன்று ஸ்கொட்லன்ட்?  இருக்கலாம், தாம் ஈஸ்ரர் குண்டுவெடிப்பை விசாரிப்பதாக அறிவித்தபோது, இலங்கையில் திறமை மிக்க புலனாய்வுப்படை இருக்கிறது, வெளிநாட்டினரின் உதவி தேவையில்லை, அது தமது நாட்டின் மதிப்பை குறைக்கும் என்றார்  கோத்தா. அவர்கள் வந்தால் தான் கைது செய்யப்படுவேன் என்று பயந்தாரோ என்னவோ. குண்டு வெடிக்கப்போகிறது என்று கணித்து துல்லியமாக வந்த செய்தியை நடை முறைப்படுத்த தெரியாமல் கோட்டை விட்ட புலனாய்வு, முஸ்லீம் தீவிரவாதிகள் கொன்ற போலீசாரை முன்னாள் போராளிகள் என்று கைது செய்த புலனாய்வு, இந்த திறமையில் சும்மா சாதாரண மனிதனுக்கு உயிராபத்து என்று புலனாய்வை நியமிக்கினமாம். உலகிலேயே சிறந்த புலனாய்வுப்படை என்று சான்றிதழ் கொடுக்கினமாம். அதில விடுதலைப்புலிகளை வேறை அழித்தவையாம். செல்லும் செல்லாததுக்கெல்லாம் முன்னாள் விடுதலைப்புலிகளை கைது செய்து புலனாய்வை புகழுகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுகிறது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.