Jump to content

சூடானில் நூற்றுக்கும் அதிகமானோரை கொன்ற துணை இராணுவப்படைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளை கடுமையான பசி அல்லது பஞ்சத்துக்கும் தள்ளியுள்ளது. 2021 இல் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது.

https://thinakkural.lk/article/311213

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.
    • பஞ்சு மிட்டாய் சேலை கட்டி . ..........!   😂
    • வலிமையான எதிரிகளோடு மோதி வெல்வாரா விஜய்? -சாவித்திரி கண்ணன்   மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் இரு பெரும் அதிகார மையங்களை தன் எதிரிகள் என பகிரங்கமாக விஜய் அறிவித்துள்ளார். ஆக எதிர் நீச்சல் போடத் துணிந்து விட்டார். இன்றைய த.வெ.க மாநாடு தரும் செய்திகள் என்ன..? ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் என்ன…? எனப் பார்ப்போம்; இத்தனை வருடங்களாக விடுபடாத புதிராக தொடர்ந்த நடிகர் விஜய்யின் அரசியல் தற்போது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது! ஒரு நடிகனாக இருக்கும் வரை சினிமா வியாபார வெற்றி கருதி அவர் மனதில் புதைத்து வைத்திருந்த உணர்வுகளை சிறப்பாகவே வெளிப்படுத்திவிட்டார். விஜய்க்கு இருக்கும் இந்த தெளிவுக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட விதை தான் அடிப்படையாக இருக்க முடியும். இடதுசாரி, திராவிட இயக்க சித்தாந்த சாயலில் அவர் படமெடுத்தவர். அந்த வகையிலும், ஒரு பெரும் திரைக் கலைஞன் என்ற வகையிலும் அரசியலைப் பற்றிய அடிப்படை புரிதல்களை விஜய் பெற்றுள்ளவர் தான் என்பது அவருடைய இன்றைய கன்னிப் பேச்சில் இருந்து நமக்கு தெரிய வருகிறது. விஜய்யின் 50 நிமிட பேச்சில் தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. மிகைப்படுத்தப்பட்ட  பிம்பங்களையோ, வாக்குறுதிகளையோ அவர் தரவில்லை. அலங்காரச் சொல் பிரயோகங்கள் எதுமில்லை. பெரியாரையும், காமராஜரையும், அம்பேத்கரையும், வேலு நாச்சியாரையும், அஞ்சலை அம்மாளையும் தங்கள் முன்னோடியாக ஏன் கருதுகிறோம் என்பதற்கு அவர் தந்த விளக்கங்களையே அவரது கொள்கை அறிவிப்பாக நாம் கருதலாம். தன்னுடைய கொள்கைகள் யாரது எதிர்ப்புகளையும், வெறுப்புகளையும் பெற்றுத் தரும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அனைவரும் சமம், அனைவருக்குமான வாய்ப்பு, மதச்சாரபற்ற  கொள்கை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் பண்பாடு என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார். அடுத்ததாக அவருடைய நெருங்கிய அரசியல் சகாக்களாக இன்று வெளிப்பட்டவர்கள் மிகப் பெரிய தொழில் அதிபர்களோ, புகழ் பெற்றவர்களோ, அறிவுத் தளத்தில் அறியப்பட்ட பிரபலங்களோ அல்ல, மிக சாதாரண நடுத்தர பிரிவினர், அசல் தமிழர்கள்! தலைவரைப் பற்றி மிகைப்பட புகழ்ந்து பேசுதல், மிகப் பெரிய பிம்பங்களை அவர்களைக் கொண்டு தன்னைக் குறித்து கட்டமைத்தல் ஆகியவற்றை விஜய் செய்யவில்லை. அந்த வகையிலும் இந்த மாநாடு கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து பேச்சாளர்களும் கொள்கை சார்ந்தே பேசினர். அதுவும் மிக அளவானவர்களே பேசினர். அவர்களே, இவர்களே என்று பேசிச் செல்லும் புகழ்ச்சி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நேரடியாக மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளுக்கு வந்தது சிறப்பு தான்! பொன்னாடை அணிவிக்கும் பன்னாடை கலாச்சாரத்திற்கும் , தோள் தாங்க முடியாத பெரிய மலர் மாலைகளை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவ்வளவு மாவட்ட செயலாளர்களும் பொன்னாடைகளையும், மலர் மாலைகளையும் வாங்கி வந்து வரிசையில் நின்று போட்டு போட்டோவுக்கு போஸும் தந்திருப்பார்கள். அதற்கே ஒரு மணி நேரம் ஓடியிருக்கும். வெற்றிக் கழகம் என்ற பெயருக்கேற்ப வெள்ளியில் வீரவாள் பரிசளிக்கப்பட்டிருக்கலாமோ, என்னவோ. ஆயினும், இது ஆடம்பரம் மட்டுமல்ல, வாள் என்பது வன்முறையை நினைவூட்டத்தக்கது என்பதால், அதை தவிர்த்திருக்கலாம். நிழ்ச்சியை அதிகமாக வளர்த்துச் செல்லாமல் ஏழு மணிக்குள் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்துக் கொண்டது பல வகைகளிலும் நல்லது. நிகழ்ச்சியை தொகுத்தளித்த பெண் தமிழை சரியாக உச்சரித்தார். உணர்ச்சி மேலோங்கப் பேசினார். சில நேரங்களில் சற்று மிகையாக பேசினார். மற்றும் ஒருவர் ‘தமிழ் நாட்டின் வருங்கால நிரந்தர முதல்வர்’ என விஜய்யை விதந்தோதினார்.இவை யாவும் வழக்கமான அரசியல் கலாச்சார மரபுகளில் இருந்து இவர்கள் இன்னும்  முற்றாக விடுபடவில்லை என்பதை சொல்லின. இன்றைய தினம் பணம் கொடுக்காமல் வாகனங்களை ஏற்பாடு செய்து தராமல், பிரியாணி, குவார்ட்டர் கொடுக்காமல் இவ்வளவு பெரிய மக்கள் திரள் கூடியதற்கு காரணம், விஜய்யின் சினிமா புகழ் மட்டுமல்ல, ஒரு மாற்று அரசியலை விரும்பும் மக்களின் மழுங்கடிக்க முடியாத எதிர்பார்ப்புகளும் என்பதை நாம் உணர வேண்டும். ஒரு மிகப் பெரிய அரசியல் மாநாட்டை  வசூல் வேட்டை நடத்தாமல் தான் சம்பாதித்த சொந்த பணத்தை கொண்டு மட்டுமே நடத்தியது. ‘சிறந்த கொள்கைகளை பேச்சளவில் மாத்திரமன்று, செயலிலும் காட்டுவேன்’ என்றது, ‘மதச்சார்பற்ற’ என்பதையும், ‘அனைவரும் சமம்’ என்பதை வலியுறுத்தியதால் ‘பாஜக தான் பிரதான எதிரி’ என்பதை புரிய வைத்தது, ‘ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்’ என்றதன் மூலம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடுத்த எதிரி என அடையாளம் காட்டியது, திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரண்டையும் ஏற்றது ஆகியவை அவரது அரசியல் பக்குவத்தை உணர்த்தின. எல்லாவற்றுக்கும் மேலாக தனித்தே தங்கள் கட்சியால் அனைத்து தொகுதிகளிலும் நின்று வெல்ல முடியும் என்றாலும், தகுதியானவர்களை அரவணைத்து கூட்டணி வைக்கவும், அதிகார பகிர்வு கொள்ளவும் முன் வந்தது மற்றொரு சிறப்பாகும் என்றாலும், தனியாக களம் கண்டு வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை இருந்தால், அவ்விதமே செயல்படட்டும். கறைப்பட்டுள்ள இன்றைய அரசியல் கட்சிகள் எதனுடனும் கைகோர்க்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அடுத்ததாக ‘விஜய் பக்கம் காற்றடிக்கிறது’ என்றவுடன், மற்ற கட்சிகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் அணிவகுத்து வருவார்கள். அவர்களை தவிர்க்காமல் விட்டால் விஜய்யின் ‘நல்லாட்சி’ என்பது நிறைவேறாத கனவாகிவிடும். இதுவும் பத்தோடு பதினொன்று என்றாகிவிடும் ஜாக்கிரதை. இன்றைய த.வெ.க மாநாடும், அதில் விஜய் பேச்சும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை விதைத்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. அதே சமயம் தேர்தலுக்கு எஞ்சி இருக்கும் இன்னும் ஒன்றரை வருடங்களில்  விஜய் அரசியல் சார்ந்து மக்கள் பிரச்சினைகளில் என்னென்னெவெல்லாம் பேசுகிறார்..? எந்தெந்த பிரச்சினைகளுக்கு குரக் கொடுக்கிறார்..? எந்தெந்த விவகாரங்களில் களம் காண்கிறார். கட்சியின்  கிளை  அமைப்புகளை எவ்வாறு கட்டமைக்கிறார்..? என்பதைக் கொண்டே அவரது எதிர்காலம் இருக்கும். சாவித்திரி கண்ணன்   https://aramonline.in/19638/tvk-conference-vijay-speech/
    • இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில் தக்கவைக்கும் முடிவைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரட குறிப்பிட்டுள்ளார்.  எவ்வாறாயினும், அமைப்பின் பங்காளி உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைச்சரவை அத்துடன், உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸின் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் (BRICS) என்பது உலகின் முன்னணியாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த குழுவாகும். 16ஆவது உச்சி மாநாடு பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, குறித்த நாடுகளின் பெயர்களது முதல் எழுத்துக்களை கொண்டு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.  எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகும். இந்தநிலையில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக அடுத்த ஆண்டு பிரேசில் பொறுப்பேற்கும். பிரிக்ஸின் 16ஆவது உச்சி மாநாடு, ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ரஸ்யாவில் நடைபெற்றது.  https://tamilwin.com/article/brics-rejected-sri-lanka-s-request-1730023922
    • அண்மையில் அறுகம் குடா பகு­தியில் இஸ்ரேலிய சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்ள­தாக உளவுத்தக­வல் ஒன்று கிடைக்கப்பெற்­றது. இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இதன் விளைவுகளை கருத்திற் கொண்டு அதெனை மறைத்து விட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் முக்கிய தகவல்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி, https://tamilwin.com/article/arugam-bay-issue-udaruppu-lankasri-1730045113
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.