Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
 
 
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
 
அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் சுதந்திரம், ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
 
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில் ,சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு - இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து உள்ளதுடன், சராசரி ஆயுள் காலம் 75 - ஐ தாண்டுகிறது. என்றாலும் அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது?
 
பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 ஞாபகம் வருகிறது:
 
‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
 
“உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன்: "வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன்,என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன். ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன்.
 
ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்ப தும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்கத் தொடங்குவதும் அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம். அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா?
 
"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே"
 
இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்வி ட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து , இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார்.
 
அது மட்டும் அல்ல, நற்றிணை 10 இல் , காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும். எனவே, உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்த போதும் அவளைப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறது. இது இரு சாராருக்கும் பொருந்தும்.
 
"பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்த லோம்புமதி பூக்கே ழூர"
 
மேலும் உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படி எடுத்து உரைக்கிறது;
 
"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?"
 
அதாவது, பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது.
 
ஆனால், பொதுவாக இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை" மிகவும் கொடியது. அது மட்டும் அல்ல, முதுமையை இன்னொரு குழந்தைப் பருவம் எனலாம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் விரும்புவார்கள். இதை நாம் அறிய வேண்டும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 02 தொடரும்.
310163297_10221650926045223_8577689424774768620_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=XBLtvcu_D24Q7kNvgH4FbyS&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=Ae3m1OpviUIo7iEJkP49T4m&oh=00_AYBbsGtoJ-_lCMBS60233-TL8AzfH6ccOm_GOBmE5ntmuw&oe=6727CCFC 310392264_10221650925365206_4329245784942173533_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=QUpnqcptgS0Q7kNvgGxRU60&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=Ae3m1OpviUIo7iEJkP49T4m&oh=00_AYCLACr_JPWBYKPrs25DuQQrIugP7x5Q20oA27oB2eZS8Q&oe=6727D1D6
 
 
 
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதுமையில் தனிமை = இளமையில் வறுமை?

இப்பொது எதிர்பார்ப்பது எல்லாம் எந்த நேரத்திலும் vegetable (இதன் தமிழாக்கம் அசைவு, இயக்கம் வெகுவாக குறைவது அல்லது முற்றாக அற்றுப்போவது) ஆகிவிடக் கூடாது என்பது தான்.

முதுமை இருந்தால், அதிலும் இயங்கி கொண்டு இருக்க வேண்டும், அப்படியே எவருக்கும் சுமை இல்லாமல் போய்விட வேண்டும் என்பதே.

ஆனாலும், முற்றாக என் (எவரின் கையிலும்) கையில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 02
 
முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவு களையும் நேர த்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கி றது. தனிமையில் வாழ்வது, அவர் சமூ கத்தில் இருந்து தனிமை படுத்தப் பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். மற்றது எவ்வளவு அடிக்கடி முதியோர்கள் சமூக நடவடிக்கைகளில் ஈடு படுகிறார்கள் என்பதும் ஆகும். பொதுவாக, வயது போகப் போக சமூக தொட ர்புகள் குறைய தொடங்கு கின்றன. உதாரண மாக வேலையில் இருந்து ஓய்வு பெறுதல், நெரு ங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இறப்பை தழுவுதல், அல்லது அவரால் தன் பாட்டில் அசைதல் முடியாமை [lack of mobility] போன்றவை யாகும். தனிமைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க , அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூர மானதும் ஆகும். இந்த முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்து விடுவ தில்லை. எனவே முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படு த்திக் கொண்டால் அதை அவரால் தன்பாட்டில் தவிர்க்கவும் முடியும்.
பொதுவாக,ஒருவர் முதுமை நிலையை அடையும் பொழுது, அவரின் உடலின் செயல்பாடு குறையத் தொடங்கு கின்றன. உதாரணமாக, திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறை பாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவி யல் பாதிப்புகள் என பல்வேறு முறை களில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றுகின்றன. மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் இலகுவாக உட்படு கின்றது. இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமை ப்படுத்லின் காரணமாகவே ஏற்படுகிறது என லாம். இன்று ஒருவரின் ஆயுள் எதிர்பார்ப்பு உலக அளவில் 71.5 ஆண்டுகளை (68 ஆண்டுகள் 4 மாதம் ஆண்களுக்கும் 72 ஆண்டுகள் 8 மாதம் பெண்களுக்கும்) தாண்டியுள்ளது என கணிக்கப் பட்டு ள்ளது. என்றாலும் இது நாட்டுக்கு நாடு அங்கு நிகழும் சூழலைப் பொறுத்து வேறுபடுகிறது. உதாரணமாக,ஒட்டு மொத்தம் ஆயுள் எதிர்பார்ப்பு ஜப்பானில் 82 .6 ஐயும் , ஸ்விட்சர்லாந்து 81 .7 ஐயும் , ஆஸ்திரேலியா 81 .2 ஐயும்,கனடா 80 .7 ஐயும், சிங்கப்பூர் 80 .0 ஐயும் , ஐக்கிய இராச்சியம் 79 .4 ஐயும், ஐக்கிய அமெரிக்கா 78 .2 ஐயும் , அப்படியே மலேசியா 74 .2 ஐயும் ,இலங்கை 72 .4 ஐயும் , இந்தியா 64 .7 ஐயும் தாண்டி யுள்ளது.
 
பொதுவாக இவர்கள் இரண்டு விதமான பிரச்சனை களுக்கு முகம் கொடுக்கிறார்கள். முதலாவது, அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதி க்கப்படுதலும் அதன் காரணமாக,வெளியில் தனி மையில் போக முடியாததால், ஓர் இடத்தில் முடங்கிப் போதல், அதனால் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரைச் சார்ந்தி ருத்தல், சமூகத் தொடர்பு குறைந்து போதல் போன்றவையாகும். மற்றது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, பிறரைச் சார்ந்திருப்பது, அவர்க ளால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுது போக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை [ஆர்வ மின்மை] போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும். இவர்களது மிக முக்கிய தேவை என்பது அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவையாகும். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் மிகக் மிக்க கொடுமை யானது அவர்கள் அனுபவிக்கும் முதுமையில் தனிமைதான். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர் முதுமையில் தனிமையில் பேச்சு துணை இன்றி சிலவேளை இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது சில வேளை இருப்பது, தனது சுகதுக்கங்களை மனம் விட்டு பேச முடியாது சிலவேளை இருப்பது, போன்ற நிலைமைகள், அவர்களை கட்டாயம் துன்பப் படுத்தும். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சினை களை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அவற்றுக்குத் தீர்வு என எதுவும் அவர்கள் கண்ணில் படுவதும் இல்லை. நாளை நமக்கு முதுமை வரும் போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே இன்று நம் முன் நடமாடும் தாய் தந்தையரை, மற்றும் முதியோரை, நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை,நாம் அனைவரும் எமது மனதில் ஏற்றுக் கொண்டாலே இதற்கு விடை இலகுவாகி விடுகிறது எனலாம். இனி முக்கிய சில தகவல்களை கீழே தருகிறேன்.
 
1. முதுமையில் தனிமை இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது. உதாரணமாக, முதிர்ந்தோரில், 52 அல்லது அதற்கு மேற்பட்டோரில், சமூகத்தில் இருந்து தனிமையாதலும் மற்றும் தனிமையில் இருப்பதும் [social isolation and loneliness] இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக, ஒரு மனிதன் தனித்தோ அல்லது எந்த வித சமுக தொடர்பு இன்றியோ இருப்பது, அதனால் ஒன்றி இருக்கும் பொழுது, அவர்களின் நம்பிக்கை உடையவர்களால் ஏற்படும் உடனடியான மருத்துவ கவனிப்பு அற்றுப் போகிறது. இது கடுமையான தீவிர நோய் அறிகுறிகள் ஏற்பட வழி வகுக்கலாம். எனவே, தனிமையை குறைப்பதே இறப்பின் வீதத்தை குறைக்கும் முதல் காரணியாக நாம் கொள்ளலாம்.
2. தனிமையை ஒருவர் உணரத் தொடங்குவது, அவரின் உடல் ,மன ஆரோக்கியத்தை [physical and mental health] கட்டாயம் பாதிக்கும். அதிலும், முக்கி யமாக, முதுமையில் தனிமை மிகவும் பொல்லாதது. இங்கு தனிமை என்பது எதோ தனித்து கண் காணாத இடத்தில், யாவரும் இன்றி, தனி மனிதனாக வாழ்வது அல்ல. தனிமை எல்லா நிலை யிலும் உண்டு. உதாரணமாக, குடும்பத்தினரோடு, ஆனால், பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்களும் தனி மையில் இருப்பவர்களே! அனுபவம், அறிவு எல்லாம் மிகுந்த முதுமை பொது வாக இனிமையாக இருக்கலாம் என ஒருவர் எண்ணலாம். ஆனால் உண்மை அப்படி அல்ல. நோய்நொடிகள், தனிமை என்று முதுமையை வாட்டும் பிரச்சினைகள் பல இன்று உண்டு. இதிலிருந்து தப்பிக்க வழிகளும் சில இருக்கின்றன. இளமையாக இருக்கும்போதே நமக்கும் முதுமை உண்டு என்பதை உணர வேண்டும். அந்த உண்மை புரிந்தாலே முதுமை இனிமை ஆகிவிடும். ஆகவே நாம் தான் நம்மை தயார் படுத்த வேண்டும். உதார ணமாக, முதியோர் நிலையம் [senior centers], அப்ப டியான தனிமை உணர்வுகளை தோற்கடிக்க வைக்கும் ஒரு வழியாகும்.
 
3.ஒருவர் தனிமையை உணரும் பொழுது அல்லது தனிமையை அனுபவிக்கும் பொழுது,அவரின் அறிவாற்றலில் வீழ்ச்சி [cognitive decline] ஏற்பட்டு , டிமென்ஷியா [dementia] என்ற மனத்தளர்ச்சி யினால் ஏற்படும் மறதிநோய், புத்திமாறாட்டம், போன்ற ஆபத்துக்கள் நிறைய உண்டு. இவை ஆய்வு மூலம் நிருவப் பட்டுள்ளன [feelings of loneliness are linked to poor cognitive performance and quicker cognitive decline.]. வயதான பிறகு மனது பந்த பாசங்களை எதிர்பா ர்க்கும். இருந்தாலும் அவர்களோடு அதிக எதிர் பார்ப்பு களை வைத்திருக்காமல், எம்மை நாம் தயார் படுத்தினால் முதுமையை ஓரளவாவது இனிமை ஆக்கலாம். உதாரணமாக, டாக்டர் கசியப்போ [Dr. Cacioppo] ,நாம் ஒரு சமூக இனங்க ளாக [social species] பரிணாமம் அடைந்து உள்ளோம் என்கிறார். எனவே எங்கள் மூலையில் அப்படியான எண்ணம் இறுக்கமாக படிந்துள்ளது. எனவே அவை நிறைவேறாத வேளையில், அது உடல் மற்றும் நரம்பியல் [physical and neurological] தாக்கங்களை உண்டாக்கலாம்.
 
4.முதியோர்கள் முறை கேடுகளால் அல்லது முதி யோர் வன்கொடு மைகளால் மிகவும் பாதிக்கப் படுவதற்கு [vulnerable to elder abuse], சமூக தனிமை [Social isolation] இலகுவாக வழிவகுக்கிறது, பல ஆய்வுகள் இதை ஆதரிக்கின்றன. மேலும் இதை கருத்தில் கொண்டு,ஜூன் 15-ல் உலக முதியோர் வன்கொடுமை விழிப்பு ணர்வு நாள் உலகம் எங்கும் அனுசரிக்கப்படுகிறது. 2050-ல் ஒட்டுமொத்த இளைஞர்களின் எண்ணிக்கையை விடவும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. ஏற்கெ னவே உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. இதனை முன்னிறுத்தி முதியோர் எதிர்கொள்ளும் சவா ல்களையும் பிரச்சினைகளையும் அவதா னிக்கத் தொடங்கியது உலக சுகாதார அமைப்பு. அதன் விளைவாக முதியோர், முதியோரைப் பராமரி ப்பவர்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றுகூடி முதியோருக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளை ஐ.நா. சபை 2006-ல் அறிவித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
 
5. நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்ற ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோர் பெரும் பாலும் சமூகமாக தனிமை ப்படுத்த ப்ப டலாம் [likely to be socially isolated]. இவர்கள் மற்ற முதியோர்களை விட குறைந்தது இரண்டு மடங்கு தனிமையில் வாழ நேரிடலாம். இவர்கள் அதிகமாக ஒற்றையாக [single] ஆக வாழ்வதுடன் மேலும் அதிகமாக தமக்கென பிள்ளைகள் அற்றவர்க ளாகவும் இருப்பார்கள். அது மட்டும் அல்ல அவர்களின் இரத்த உறவினர்களிடம் [biological families] இருந்து அநேகமாக பிரிந்து வாழ் பவர்க ளாகவும் இருப்பார்கள். அவர்களை ஆதரிப்பதற்கு பொதுவாக அவர்களளைப் பற்றிய களங்கம் மற்றும் பாகுபாடு [Stigma and discrimination] ஒரு தடையாக உள்ளது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும்.
22713260_10210453810684337_8237452597062568284_o.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=ZhkvKqPRccoQ7kNvgGhxiuS&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AlPJqNRAgWHmPFQQZFGZR2Y&oh=00_AYBnGhk8GqnCV5hGihUHX29BPvrZnImiKrHQlMjpn4vLDA&oe=67518FC6
 
  • நியானி changed the title to "முதுமையில் தனிமை [Senior Isolation]"
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 03


பகுதி 02 இல் நாம் முக்கிய மான, முதுமையில் தனிமையைப் பற்றிய, முதல் ஐந்து தகவல்களை பார்த்தோம். "சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே." என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நற்றிணை 210 ,பிறரைத் துன்புற விடாமையே சான்றோர் மதிக்கும் செல்வம் என்கிறது. அப்படி யென்றால், எமது பெற்றோரை எம் மதிப்புக்குள்ள முதியோரை தனிமை படுத்தி, அதனால் தனிமை அவர்களை துன்புறுத்த நாம் விடலாமா? என்பதை நாம் கட்டாயம் ஒரு தரமாவது  சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனையை தூண்ட நான் மேலும் சில தகவல்களை கீழே தருகிறேன்.


6. சமூக தனிமை பொதுவாக நீண்டகால நோய்க்கு வழி வகுக்க லாம். உதாரணமாக, நீடித்த அல்லது  வீரியம் குறைந்த நாள்பட்ட நுரையீரல் நோய் [chronic lung disease],கீல்வாதம் [arthritis], பலவீன மான அசைவுத்தன்மை [impaired mobility], மற்றும்  மன ச்சோர்வு [depression] ஆகும். எனவே சரியான பரா மரிப்பு ஒன்றை அவர்க ளுக்கு உறுதி செய்வதன் மூலம் இவற்றை நாம் குறைக்கலாம். உதாரணமாக, வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு தொலை பேசி யில் கதைப்பதாலும் அவர்களிடம் போய் வருவதா லும் [phone calls and visits] இவற்றின் தாக்கங்களை குறைக்கலாம். அப்படியே மற்றவர்களுக்கும் ஆகும். இது மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு [high blood pressure] கூட வழி வகுக்கிறது. 


7. சமூகத்தில் இருந்து  தனிமைப்படுத்தப்பட்ட மூத்த வர்கள் [Socially isolated seniors] அதிகமாக எதிர் கால த்தைப் பற்றிய நம்பிக்கை யற்ற வர்களாக பொது வாக இருக்கிறார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் [community - based programs and services] அங்கு கட்டாயம் தேவைப்படுகிறது.


8. உடல் மற்றும் புவியியல் தனிமை [Physical and geographic isolation] சமூக தனிமைக்கு அநேகமாக வழி வகுக்கிறது. இங்கு உடல் தனிமை என்பது மனித தொடர்புகள் மிக அருகி காணப்படும் ஒரு நிலை அல்லது ஒரு தனிமை சிறையில் இருப்பது போன்ற ஒரு நிலை எனலாம் [limited Human contact or solitary confinement].அதே போல புவியியல் தனிமை என்பது தனது இனத்தில் இருந்து பிரிந்து இருத்தல் எனலாம். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆறுக்கு ஒரு முதியோர் உடல், பண்பாடு மற்றும் புவியியல் தடைகளுக்கு [physical, cultural, and/or geographical barriers] முகம் கொடு த்து, அதனால் அவர்கள் தங்கள் சக உறுப்பினர்கள் மற்றும் சமூக ங்களில் [peers and communities,] இருந்தும் விலக்கப் படுகிறார்கள். சலுகை மற்றும் சேவைகள் [benefits and services] பெற்று தங்கள் பொருளாதார பாது காப்பை [economic security] மேம்படுத்தும் வாய்ப்பை இந்த விலகல் தடைசெய்கிறது. அது மட்டும் அல்ல, ஆரோக்கியமான, சுயாதீன வாழ்க்கையை வாழக்கூடிய திறனை யும் தடை செய்கிறது. முது மையில் தனிமையில் இருப்பவர்களுக்கு பொது வாக நீண்ட கால பராமரிப்பும் தேவைப்படுகிறது.


9. ஒருவர் தனிமையையும் தனிமை படுத்தலையும் எதிர் நோக்க பெரிய ஆபத்து காரணியாக அமை வது,அவர் தனது துணையான கணவனையோ அல்லது மனைவியையோ இழப்பது ஆகும். பொது வாக கையறுநிலை [bereavement] தனிமையை ஏற்படுத்துவதுடன், கூடவே சமூகத்துடனான பரஸ்பரத்தையும் [social interactions] இழக்க வழி கோலுகிறது. மேலும்  இன்று வாகனத்தை பாது காப்பாக ஓட்டும் ஆற்றல் [safe driving expectancy] இருபாலாருக்கும் 70  வயதை தாண்டினாலும், இன்னும் பல முதியோர் தமக்கு போக்கு வரத்து வசதிகள் பற்றாது என உணர்கிறார்கள். ஆகவே இதுவும் தனிமையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது.


10. முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர் [family caregiver] கூட சமூகத்தில் இருந்து தம்மை தனிமைப்படுத்தும் ஒரு ஆபத்தை பொதுவாக எதிர் பார்க்கிறார்கள். குடுப்ப உறுப்பினராக இருந்து, பெற்றோரை, கணவனை அல்லது மனைவியை, அல்லது இன்னும் ஒரு குடும்ப உறுப்பினரை பராமரிப்பது ஒரு மகத்தான பொறுப்பு ஆகும். உதாரணமாக, அந்த உறுப்பினர் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோயில் [Alzheimer’s disease], அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் பைத்திய மான டிமென்ஷியா நோயில் [dementia], அல்லது ஒரு உடல் வலுக்குறைவில் [a physical impairment] இரு ந்தால், அது பராமரிப்பவருக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது. இதனால், அந்த குடும்ப பராமரிப்பவர் தனது சமூக தொடர்புகளை குறைக்க வேண்டி அல்லது புறம் தள்ள வேண்டி இருக்கலாம். இது அவர்கள் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்து கிறது.


11. தனிமை தொற்றும் [contagious] தன்மையுடையது. அதாவது ஒருவர் தனிமையில் இருக்கும் பொழுது ,அந்த தனிமை அநேகமாக அவரின் நண்பருக்கோ அல்லது அவர் தொடர்பு கொள்ளும் ஒருவருக்கோ பரவக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, இதனால் தங்கள் சமூக பிணையலை [social cohesion] பாது காக்கும் பொருட்டு, மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை மேலும் தனிமைப்படுத்த பார்க்கி றார்கள். இது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அது மட்டும் அல்ல தனிமையான மக்கள் ஆரோக்கிய மற்ற நடத்தைகளில் [unhealthy behavior] தம்மை பொதுவாக ஈடுபடுத்து கிறார்கள். உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவு, குறைந்த உடற்பயிற்சி [lack of physical activity], புகை பிடித்தல் [smoking] போன்றவையாகும். எனவே ஒரு சமூக சூழலில் வாழ்வதே இவையே தடுக்கும் ஒரு வழியாகும். மேலும் அவர்கள் தொண்டூழியராக [Volunteering] தொழிற்படுவதன் மூலம் தனிமையையும் தனிமை படுத்தலையும் குறைக்க முடியும். முதியோர்கள் தமது அனுபவங்களை அறிவாற்ற ல்களை பயன் படுத்தி தமது சமூகத்திற்கு பங்களிக்க முடியும். இது அவர்களின் வாழ் நாளை கூட்டுவதுடன் [boost longevity] மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கும் [mental health and well-being] பங்களி க்கிறது. நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள் என்றால், கட்டாயம் சுகாதார தொடர்பான பாடங்கள், கணனி சம்பந்த மான பாடங்கள், அல்லது உடற்பயிற்சி சம்பந்த மான பாடங்கள் போன்றவற்றில் பங்கு பெறுவது நன்மை பயர்க்கலாம்?


12. தொழில் நுட்பம் [Technology] ஓரளவு தனிமையை குறைக்கலாம் என நாம் எதிர் பார்க்கலாம். உதாரணமாக, காது கேட்க்கும் தன்மையை இழந்தவர்களுக்கு  காதொலிக்கருவி [hearing aid ] ஒன்று கொடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணை ப்பதன் மூலம் அவர்களின் தனிமையை குறைக்கலாம். அதே போல உடல் பயிற்சிகள் [Physical activity] தனிமையை குறைக்கி ன்றன. உதாரணமாக,கூட்டு உடற் பயிற்சி [Group exercise programs] இதில் முக்கியமான ஒன்றாகும். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றா யினும் அதை பற்றிய விபரங்களை, உண்மைகளை அறிவதன் மூலம் நாம் அதை தடுக்க அல்லது குறைக்க முடியும்.


பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடு மையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், தனிமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனை க்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப் படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளை விட பொதுவாக, மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெ டுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோ ரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தி யாகப் படிக்கு ம்போதே நமக்கு வலிக்கிறது என்றா ல், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலு க்குள் பொருத்திக்கொள்வ தற்கு எதிர்கொ ள்ளு ம்தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்த வர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளை களை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளை களால் தனித்துவிடப்படும்போது மிகப்பெ ரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்ப தும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டி யது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டிய டிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொ டுப்ப து, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லி க்கொடு ப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன்.


இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டா ட்டங்கள், விடுமுறைகள்... கூட்டுக்குடும்பம் என்றால் வயதான வர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால்   இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்...  ஒருக்கா எம்மை நினைக்க ... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும்  வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோ ர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோ ர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்!   


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 


முற்றிற்று

22851797_10210490950412807_844669372195129778_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=VCrdhKMnimIQ7kNvgHf4-CD&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAirsCS9a1mkyjF4CJ-hJkP7wojPCxJCSoLffegMF6c2Q&oe=675542CC   22814039_10210490960413057_2827831130213372970_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=ik4gSt_NlQYQ7kNvgFooAr9&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYC8wd5EM3IXh-yI3I3IP_e7iHC69n2wYTInaoZtLmgYJA&oe=67553D11 

 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பாடல்: பச்சை குத்திகினே உன்னோடை பேரை படம்: டீசல் இசை: டிபு நீனன் தோமஸ் வரிகள்: ரோகேஸ் பாடியவர்: கானா குணா
    • நானும் சைக்கிளும் (சிறுகதை)   நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்...   வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பாரு. பளபளன்னு தொடச்சி ஆயில் கிரீஸ் எல்லாம் போட்டு நிப்பாட்டி இருப்பாரு. மணிகணக்கில் வாடகை நாள் வாடகை உண்டு...   சின்னபசங்க போனா தரமாட்டாரு. கீழபோட்டு வண்டி பாழாயிடும் போங்கடா ந்னு வெரட்டுவாரு . இதுக்கு நடுவில அம்மாயி வீட்டுக்குப்போனப்ப அங்க ஒரு வாடகைச்சைக்கிள் கடை இருந்துச்சு.   அம்மாயிகிட்ட அழுது அடம் பிடிச்சி காசு வாங்கிட்டு அங்க போனேன். சின்ன சின்ன சைக்கிள் எல்லாம் இருந்துச்சு. அங்கபோய் சைக்கிள் கேட்டா யாரு நீ புதுபையனா இருக்க தெரியாத பயலுகளுக்கெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னாரு. நான் அம்மாயி பேர் சொல்லி அவங்க பேரன்ன்னு சொன்னவன்ன யாரு மூத்த மக பேரனான்னு கேட்டுட்டு சரி இந்தத்தெருவுக்குள்ளயே ஓட்டுன்னு குடுத்தாரு. ஆனா சின்ன சைக்கிள்னா ஓட்டிடலாம்ற கனவு ஓட்டிப்பாத்தப்ப தகர்ந்துருச்சு..... சிறுசானாலும் பெருசானாலும் பழகுனாத்தான் ஓட்டமுடியும் ந்னு தெரிஞ்சிக்கிட்டேன் சைக்கிள் கடைக்காரு நான் படுற பாட்டைப்பாத்துட்டு மூணுசக்கர சைக்கிள் குடுத்தாரு. இது ஈசியா இருக்கும் ஓட்டலாமுன்னு சொன்னாரு. ஆனா அது எனக்குப்பிடிக்கல. என் லட்சியம் என்னா ஆகுறது....   இதுமாதிரி நான் இருந்தப்ப எனக்குக் கெடைச்ச வந்தான் மோகன். அவன் சகல கலா வல்லவன் அப்பயே சைக்கிள் ஓட்டுவான். அவங்க மாமா வைச்சிருந்த ஸ்கூட்டர் ஓட்டுவான். அவன் சொன்னான் நான் ஒனக்குக்கத்துத் தாறேன்ன்னு காசுகொண்டா நான் கேட்டால் ரவி அண்ணன் சைக்கிள் குடுப்பாரு. நான் கத்துத்தாறேன்னான். ரொம்ப சந்தோசமாப்போச்சு. அம்மாகிட்ட காசு கேட்டு கிடைக்காத்துனால அய்யா கிட்ட வேலை செஞ்சு காசு சம்பாதிச்சி 2 ரூ எடுத்துக்கிட்டு மோகன் கிட்டப்போனேன் அவனும் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கிட்டு வந்தான். அவன் சொன்னான் மொதல்ல கொரங்கு பெடல் போட்டுப் பழகு. நான் பிடிச்சிக் கிறேன்னு சொல்லி சைக்கிள்ல ஏத்தி விட்டான் அது மேல ஏறாம பார்குள்ள காலை விட்டு ஓட்டுறது. அவன் பிடிச்சிக்கிட்டு பின்னாடி ஓடி வருவான். இது ஒரு வாரம் ஓடிச்சி. இடையில் கைய விட்டு என்னத் தனியா ஓட்டவிட்டான். ஓரளவு பேலன்ஸ் பண்ணுறது கைவசம் வந்துச்சு. இதுக்கு சாயங்காலம் அவனுக்கு டி, ஆர் டீ க்கடையில பஜ்ஜி வாங்கித்தரணும்.... அடுத்தவாரம் பார்மேல ஏறி ஓட்டச் சொல்லிக் குடுத்தான். அந்தசைக்கிள்ல கால் சீட்டுல ஒக்காந்தா எட்டாது அதுனால உயரமான எடத்துல கொண்டு போய் சைக்கிள நிறுத்தி அதுல ஏறிக்கிட்டு பார்மேல ஒக்காந்து ஓட்டனும்.   அன்னிக்கி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப்போனோம். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கிட்ட பயிற்சி. அப்ப எல்லாம் பஸ்டாண்டு அங்க வரல. ரொம்ப பஸ் வராது. ஃப்ரீயா இருக்கும். அங்க சைக்கிள் மேல என்னை ஏத்திவிட்டு ஓட்டச்சொல்லி பின்னாடி பிடிச்சிகிட்டு அவன் ஓடிவந்தான்.   கொரங்கு பெடல்ல இருந்து பார்ல ஏறி ஓட்ட ஆரம்பிச்ச வன்ன சைக்கிள் ரொம்ப வேகமா ஓட்ட முடிஞ்சது. ஆனா அவனால ஓடி வரமுடியல விட்டுட்டான். இது தெரியாத நான் படுவேகமா ஓட்டினேன்... அப்புறம்தான் தெரிஞ்சது பின்னாடி மோகன் இல்லைன்றது...   கைகால் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. அது ஒரு இறக்கம் அதுனால சைக்கிள் வேகமா ஓடிச்சி பிரேக் புடிக்கனும் ன்னு தோணல....   கைகால் நடுக்கம் வேற நேர போய் ஒக்காந்துருந்த ஒரு பாட்டிமேல போய் மோதி சைக்கிள் கீழ விழுந்து டைனமோ நொறுங்கிப்போச்சி நெறையா தேய்ப்பு வேற. பாட்டி பாவம் குய்யோ மொறையோன்னு கத்துச்சு. அதுக்குள்ள மோகன் ஓடியாந்து என்னை தூக்கி விட்டு சைக்கிள் எடுத்தான் அதுஹேண்ட் பார் முறுக்கிக்கிடுச்சு அதை நேராக்கி என்னையும் ஏத்திக்கிட்டு தப்பிச்சி வந்துட்டோம்... இன்னும் நேரம் இருந்துச்சு.   எனக்கு மொழங்காலு கைமூட்டு எல்லாம் தேய்ஞ்சு ரத்தம் ஒழுகுச்சு.. அதுல குல வழக்கப்படி மண்ணை அள்ளி தேய்ச்சிட்டு சைக்கிள் கடைக்கிப்போனோம் . அங்க ரவி அண்ணகிட்ட எதுவும் நடக்காதமாதிரி சைக்கிள நிப்பாட்டுனோம் அண்ணே போதும் சைக்கிள் விட்டுட்டோம் நோட் பண்ண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நழுவினோம்...   அவர் எப்புடியோ கண்டுபிடிச்சிட்டாரு. கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு எந்திரிச்சி வந்து வண்டியபாத்தாரு. இதுக்குத்தான் சின்னபசங்களுக்கு நான் சைக்கிள் குடுக்குறதில்ல. சைக்கிள் டேமேஜ் ஆயிடுச்சு 50 ரூ ஆகும் டைனமோ நொறுங்கிப்போச்சு. பார் வளைஞ்சிடுச்சு போக்கஸ் கம்பி ரெண்டு கட்டாயிடுச்சு சைக்கிள்ள பெயிண்டு போயிடுச்சு. ஒழுங்கா 50 ரூ குடுங்கன்னாரு எனக்கு ஆடிபோச்சு உசிறுஅஞ்சு ரூ கேட்டாலே ஆயிரம் கேள்விகேக்கும் அப்பாவை எப்புடிச்சமாளிக்கிறதுன்னு தெரியல அதுக்குள்ள ரவி அண்ணன் சட்டையக் கழட்டிக்குடுத்துட்டு போ. காசைகொண்டாந்து குடுத்துட்டு சட்டைய வாங்கிட்டுப்போன்னாரு. நான் சட்டையக் கழட்டிக் குடுத்துட்டு ( இருக்குறதே ரெண்டு சட்டைதான்) ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்குப் போய்ட்டேன் அம்மா கிட்ட 50 ரூ கேட்டேன் எதுக்குன்னு கேட்டாங்க. விவரம் சொன்னேன்..   அம்புட்டுகாசுக்கு நான் எங்க போறது.. அப்பாகிட்டகேள் ந்னு சொன்னாங்க. அவர்கிட்டப்போனா முதுகுதோல உரிச்சிடுவாரேன்னு நடுங்கிட்டு இருந்தேன்..... அதுக்குள்ள அப்பா வந்தாரு. அவர் கையில என் சட்டை இருந்துச்சு.. அதைப்பாத்ததுமே குலை நடுங்க ஆரம்பிச்சது... அவர் மூஞ்சி கடும் கோவத்துல இருந்துச்சு.... பட படத்துச்சு நெஞ்சு இன்னிக்கி முதுகுத்தோல் உரியப்போகுதுன்னு தெரிஞ்சி போச்சு ஏன்னா அவர் மூஞ்சில அம்புட்டு கோவம்... என்னக்கூப்புட்டாரு. எங்க போட்ட இந்த சட்டையன்னாரு. நான் முளிச்சேன்.... அடி கிடி பட்டதான்னு கேட்டாரு. நான் கைகால காமிச்சேன் அம்மாவை கூப்புட்டு அதுல தேங்கா எண்ணை தடவச்சொன்னாரு.... இனிமே அவன் கிட்ட சைக்கிள் எடுக்காத என் சைக்கிள் தாறேன் ஒழுங்காப்பழகிக்கோ அவன் திருட்டுப்பய ஓவராக்காசு கேட்டான் மிரட்டிடு 20 ரூ குடுத்திட்டு வந்தேன்.இனிமே என்சைக்கிள் எடுத்து ஓட்டிப்பழகுன்னாரு. யார் இது நம்ம அப்பாவா முதுகுத் தோல் உரியும் நு இருந்தப்ப அவர் யாருன்னு காட்டிட்டாரேன்னு கண்ணு கலங்கிடுச்சு. அவர்தான் "அப்பா என்ற குலசாமி" அ.முத்துவிஜயன் All reacti
    • இந்த அதானி குழுமம் ஒரு இந்தியாவின் பினாமி போல திகழ்வதற்கு  உதாரணமாக இந்திய அண்டை அதானி குழுமம் நாடுகளில் ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்களை பின்னர் அந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஏற்படும் இராய தந்திர போர்களில் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றமை பொதுவான இயல்பாக காணப்படுகின்றது. அதானி குழுமம் ஒரு Public listed ஆக இருந்தும் பங்குதாரர்களின் நலனை கருத்திற்கொள்ளாமல் இவ்வாறு இந்திய அரசுக்கு ஆதரவாக செயற்படுவதனை கேள்விக்குள்ளாக்கமல் இருக்கிறார்கள். இந்த அதானி குழுமத்துடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதனை அந்தந்த நாட்டு மக்கள் ஊழல் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டும்.  
    • முன்னர் ஐரோப்பியர்களிடையே கூட சாம்ராஜித்திற்கு மேலாக (சிற்றரசு, அரசு, பேரரசு என்பவற்றிற்கு மேலாக) போப் இருந்தது போல இலங்கையில் பெளத்த மதம் தற்காலத்திலும் உள்ளது, பொதுவாக மதங்களின் பிற்போக்குவாதம் ஒரு நாட்டை சீரழித்த நல்ல உதாரணமாக இலங்கை இருந்துள்ளது, அது இந்த இடது சாரி என கூறிக்கொள்ளும் இந்த அரசிலும் நிகழ்வதுதான் வேடிக்கையாக உள்ளது. ஆனால் இந்த நிலை எப்போதும் மாறும்? எப்போது இலங்கை உருப்படும்?
    • மக்கள் நிராகரித்தாலும் சாணக்கியனுக்கு மொழிபெயர்ப்பாளராகச் சென்று படம் பிடிக்கலாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.