Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

“ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது வயதில் காலமானார்.

1943 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார். 

கிராமிய பாடல்கள், திரையிசை பாடல்கள், பக்தி பாடல்கள் எதுவாயினும் இனிமையான குரலில்  பாடி பலரை மகிழ்வூட்டியவர் ஆவார். 

மறைந்த தென்னிந்திய பாடகரான டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் 1980இல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக வருகை தந்தபோது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்துக்கு  தென்னிந்திய திரைப்பட பாடகரான  சௌந்தரராஜன் “ஈழத்து சௌந்தரராஜன்” என்கிற பட்டத்தை வழங்கினார்.

அதனால் அன்று முதல் இவர் ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு,  வடமராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பல ஆலயங்களுக்கு அவர் தனது குரலில் அதிகளவான பாடல்களை பாடியிருந்தார்.

அவரது இழப்பு ஈழத்து கலைஞர்களுக்கும் அவரது  ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

IMG-20241108-WA0054.jpg

IMG-20241108-WA0041.jpg

IMG-20241108-WA0040.jpg

IMG-20241108-WA0057.jpg

https://www.virakesari.lk/article/198263

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ஏராளன் said:

மறைந்த தென்னிந்திய பாடகரான டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் 1980இல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக வருகை தந்தபோது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்துக்கு  தென்னிந்திய திரைப்பட பாடகரான  சௌந்தரராஜன் “ஈழத்து சௌந்தரராஜன்” என்கிற பட்டத்தை வழங்கினார்.

டி.எம்.சௌந்தரராஜன் 1965இல்தான் பருத்தித்திறைக்கு வந்திருந்தார். அவரது இசை நிகழ்ச்சி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில்தான் நடைபெற்றிருந்தது.

அன்னாருக்கு அஞ்சலி

large.IMG_7468.jpeg.13fc888edeb37b471e28

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் . ........!  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.