Jump to content

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!

 

Indria_image.jpg

மதுரை: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

மதுரை டிவிஎஸ் காலனியில் வசித்து வந்த இந்திரா சௌந்தரராஜன் மர்மதேசம், விடாது கருப்பு, ரகசியம், சொர்ண ரேகை, அத்திப்பூக்கள் போன்ற டிவி தொடர்கள் நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்திலும் இந்திரா சௌந்தரராஜன் பணியாற்றியுள்ளார்.

இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் குளியலறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்தது. உடனடியாக உறவினர்கள் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். இவருடைய மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்களை எழுதியுள்ளார். இன்றைய தினம் நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த அதிர்ச்சியிலிருந்த மீளவதற்குள் இந்திரா சௌந்தரராஜனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

700 சிறுகதைகள், 340 நாவல்களையும் எழுதிய இந்திரா சௌந்தரராஜன், 105 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/madurai/famous-novelist-indra-soundararajan-passed-away-653309.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

ஆழ்ந்த இரங்கல்கள் . .........!

எனக்கு மிகமிகப் பிடித்த எழுத்தாளர் ...........!

பகிர்வுக்கு நன்றி தோழர் . ........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளருக்கு என்னுடைய அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பாா்களே சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் ஆண் : உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல.........!   --- சொல்லிட்டாளே அவ காதல ---  
    • தங்க முகத்தில் குங்குமம் இட்டாள் மங்கை . .......!  😂
    • அரச செலவழிப்பது. அரசில் நேரடியாக இருக்கும் வேலைகளை மட்டும் அல்லாது அதற்கு வெளியேயும் வேலைகள், உப தொழிதுறைகள் (industries) ஐ உருவாக்குகிறது. இது வேலைகள் / தொழில்கள் குறையும் /முடங்கும் நிலையை ஏற்றப்படுத்தலாம், மறுவளமாக பணவீக்கத்தையும் குறைக்கலாம். இந்த அரச செலவுக்கு குறைப்புக்கு கிட்டத்தட்ட ஒப்பனை அளவு, தனியார் துறை முதலிடாவிட்டால், பொருளாதாரத்தை தாக்கக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், அரசு செலவை குறைக்கும் போது, தனியார் துறை பொதுவாக முதலிடாது. அனால், டிரம்ப் இன் எதிர்பார்ப்பு, அரச செலவை குறைப்பதன் மூலம், வரியை குறைப்பது. இது தாக்கப்போவது டிரம்ப் க்கு வாக்களித்த நடுத்தரம் மற்றும் அதன் கீழான வருமானத்தை கொண்டவரை. அமெரிக்க அரசின் பணம் வீணாக்குவது,முக்கியமாக, இராணுவத்தில் (என்றே நினைக்கிறன்).   இதில் டிரம்ப் கைவைக்க போய், டிரம்புக்கு impeachment இல் வந்து நின்றாலும் ஒன்றும் புதினம் இல்லை.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.