Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

No photo description available.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்சே குடும்பம்  ஒட்டுக்குழு  பிள்ளையானை பயன்படுத்தி  கோரமான  பல்வேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது . 

அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது 

குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு  உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது 

அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரமுகர்களும் பிள்ளையானை வைத்தே கொலை செய்யப்பட்டனர். 

பத்திரிகையாளர் நடேசன் போன்ற பத்திரிகை பிரமுகர்களையின் கொலைகளையும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கி இருந்த பிள்ளையானை வைத்தே கோத்தபாயா ராஜபக்சே செய்தார். 

முன்னாள் துணைவேந்தர் ரவீந்தரநாத் அவர்களையும்  ராஜபக்சே குடும்பத்துடன் நெருக்கிய தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் துணையுடனே பிள்ளையான் கடத்தி படுகொலை செய்தான். 

இது தவிர, இலங்கை முழுவதும் தமிழ் வியாபாரிகள் பலரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட பிள்ளையானை கோத்தபாயா அனுமதி அளித்து இருந்தார் . இவ்வாறு கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான 
வர்த்தகர்கள் வெலிகந்த மற்றும் கபரண இராணுவ முகாம்களில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர் 
மேற்படி வர்தகர்களிடம் பறிக்கப்பட்ட பணம் பிள்ளையனிடம் மட்டுமின்றி மூத்த இராணுவ அதிகாரிகளிடம் பகிரப்பட்டு இருந்தது 

மேற்படி கடத்தல் சம்பவங்களில் போது ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட சிங்களவர்கள் பலர் கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா என்பவன் அம்பலப்படுத்தி இருக்கின்றான் 

இது தவிர ,வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் மேற்படி விவகாரங்களை தெரிந்து இருந்தாலும் பிள்ளையானுக்கு ராஜபக்ச குடும்பத்தில் இருந்த  தொடர்பு காரணமாக அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை 

அதே போல பிள்ளையானை பயன்படுத்தி பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலையில்  கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன 

6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி, , 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் போன்ற குழந்தைகளை கூட ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் கப்பம் பெறுவதற்காக பிள்ளையான் கடந்து கொன்ற சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு  தெரிந்தே நடந்தது 

2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பொது பிள்ளையானை பயன்படுத்தி தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திய பசில் ராஜபக்சே வாக்கெடுப்பில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. 

இது போதாதென்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்ட  சம்பவங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில் பிள்ளையானுக்கு எதிராக கண் கண்ட சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றது. 

கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான  புலனாய்வு துறை அதிகாரிகள் வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை உருவாக்கி கருணா பிள்ளையான் குழுக்களுடன் இணைத்தே இயக்கி வந்தார்கள் . அதே போல முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக  பிள்ளையானையே பயன்படுத்தினார்கள் 
அதே போல  திரு அருண் தம்பிமுத்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை நாமல் ராஜபக்சே உதவிகளுடன் தான் பிள்ளையான்  தக்க வைத்து இருக்கின்றான்  

கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் புலனாய்வு துறை தளபதியாக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெந்தாவிதாரண அவர்களால் பிள்ளையானுக்கு மேற்படி வீடு பிள்ளையானுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருந்தது.
 
இந்த வீட்டு விவகாரத்தில் பிள்ளையான் போலி உறுதி தயாரித்து தேவராஜ் என்பவனுக்கு விற்று அவனிடம் வாங்குவது போல பாசாங்கு செய்து முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த மோசடி 7 வருட கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதும் ராஜபக்சே குடும்ப தலையீடு காரணமாகவே இதுவரை நீதி வழங்கப்படவில்லை.

அதே போல முதலமைச்சராக இருந்த போது பிள்ளையான், பிரதீபன்  மற்றும் கண்ணன் ஆகியோர்  சேர்ந்து புதூர் வங்கியில் 15 கோடி பெறுமதியான நகைக மற்றும்  35 லட்சம் பணத்தை  கொள்ளையடித்து இருந்தனர்.  
இந்த கொள்ளையில் பிள்ளையானுக்கு இருந்த தொடர்பை இலங்கை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி பிள்ளையானை கைது செய்ய முயன்ற போதும் ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை கைது செய்ய அனுமதிருக்க வில்லை.
 
அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

மேற்படி கொலை தொடர்பாக தெளிவான சாட்சியங்கள் இருக்கின்ற போதும் ராஜபக்ச குடும்ப தலையீடு காரணமாக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை. 

அதேபோல பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக வைத்து கொண்டு பாசிக்குடாவில் பலவேறு சட்டவிரோத முதலீடுகளை பசில் ராஜபக்சே செய்து இருந்தார்.
 
மேற்படி சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இன்றைக்கும்  பிள்ளையானும் அவன் கூட்டாளிகளும்  வரிந்து கட்டி கொண்டு  ராஜபக்சே குடும்பம் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள்.

இனமொன்றின் குரல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவலைப்படாதீர்கள், மஹிந்தா ரணிலுடன் கூட்டுச்  சேர்ந்து செய்த அடூழியங்களுக்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. அவர்கள் இவர்கள்மேல் பழி போடுகிறார்களா, இவர்கள் அவர்கள்மேல் கை நீட்டுகிறார்களா என்பதெல்லாம் இல்லை. எல்லோருமே தண்டிக்கப்படவேண்டும். முன்பெல்லாம் மஹிந்த கூட்டத்தை விசாரணைக்கு அழைத்தால்; மக்கள் புடை சூழ வருவார்கள். இப்போ மக்களே வலைபோட்டு பிடித்து கொடுப்பார்கள். தேர்தலில் தமது விருப்பத்தை மக்கள் காட்டியிருக்கிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்வேன் என்றார், அதை செய்யுங்கள் என்றே மக்கள் ஆணை அளித்துள்ளார்கள். எதற்கும் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதிருக்கிறது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.