Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொபதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது.. 

சிங்கள மக்களும் தமிழ்மக்களும் பல பாடங்களை அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள், 

அத்தோடு யாழ்மக்கள் சில பாடங்களை ஒருசில அரசியல் வாதிகளிடமிருந்து கற்கவும் போகிறார்கள் (அது வேற கதை)..

🏠 எகத்தாளமும், சுத்துமாத்தும், பல சதிகளை சிரித்து கொண்டே செய்து விட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து பேட்டி கொடுக்கும் சுமந்திரன்,  தன்மீதான வெறுப்பை நிறையவே சம்பாதித்து தனதும் தமிழரசு கட்சியினதும் தோல்வியை தானே உறுதிப்படுத்தி இருந்தார்..

🚴 24 கரட் தனமும் தனது பாரம்பரை கட்சியில் , தலைமை பதவியை பாதுகாப்பதே பிரதான நோக்கமாகவும், களத்தில் இறங்கி பணியாற்றும் செயற்றிறன் இன்றி ஓதுவார் தமது இருப்புக்காக பலதையும் சொல்லக்கேட்டு கட்சியை சீரழித்த கஜேந்திரகுமார்; சுமந்திரன் புராணம் பாடுவதை தவிர தமிழரசின் விரக்தி வாக்குகளை தனதாக்கி 2020 வளர ஆரம்பித்த மக்கள் அலையை மேலும் வளர்த்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காது அவர் விரும்பியவாறே ஒரு ஆசனத்தை மட்டும் தக்க வைத்துள்ளார். 

🐚 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து உருப்படியாக பாராளுமன்றத்தில் கதைக்க கூட தெரியாத பழைய அயுதக்குழுக்கள் எல்லாம் சேர்ந்து தாம் அறமற்றவர்கள் எனகாட்ட அடிப்படை அறமின்றி சங்கை திருடி பின்கதவால் பாராளுமன்றம் வரப்பார்தார்கள் கிடைக்கவில்லை

🦌 கிடைத்த குறுகிய காலத்தில் பல உள்ளக வெளியக நெருக்கடிகளுக்கு மத்தியில் நல்லூர் பிரதேச்சபை மற்றும் மாநரசபையை சிறப்பாக நடத்தினாலும், அடப்படை கட்டமைப்பு ஏதுமற்ற மிகப்புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியில் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக தம்மை இணைத்த மணி அணி, சைக்கிளில் இருந்து பிரிந்தாலும் அவர்களை குறை சொல்வதையும் அவர்களது துரோகப்பட்டங்களுக்கு பதில் சொல்வதிலும் குறியாக இருந்தார்களே தவிர அவர்களை விட மேம்பட்டவர்களாக தம்மை நிறுவாது மக்களிடம் வாக்கு கேட்டார்கள்.. கிடைக்கவில்லை.

🥭 சுமந்திரனின் திமிர்த்தனத்தாலும் தனக்கு கட்சிக்குள் எடுபிடிகளாகவும் இல்லை என்பதற்காக தமது விலக்கப்பட்ட தனது வியாபாரத்திலேயே குறியாக இருக்குமர சரவணபவன், தவராசா போன்றோர் தமது ஈகோவுக்காக்கவும் அரசியல் இருப்புக்காகவும் மாம்பழத்தில் நின்றார்கள். கிடைக்கவில்லை

இதில் மக்களை பொறுத்தவரை ஒருகட்சிக்கு மட்டும் வாக்கினை அள்ளி வளங்குவதற்கு யாருமே ஒருவரை விட ஒருவர் திறமாக இருக்கவில்லை .. 

ஆனால் எல்லோரும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் ஆணையை கோரி நின்றார்கள் மக்கள் குளத்தோடு கோவித்துகொண்டு கழுவாமல் இருக்கமுடியாதென அனைவருக்கும் தமது வாக்குகளை பகிரந்தளித்தார்கள்.  

ஒட்டுமொத்தமாக இந்த 5 கட்சிகளுக்கும் இம்முறை யாழில் விழுந்த தமிழ்த்தேசிய வாக்குகள் -140,000. 2020 இல் கிடைத்தது 200,000 வாக்குகள்.

ஊசிக்கும், பல சுயேட்சைகளுக்கும், போக மிக சொற்ப வாக்குகளே அநுரபக்கம் போயிருக்கிறது.

அத்தோடு தமிழ்த்தேசியத்தின் பக்கம் திருப்பமுடியத சலுகைகளை நோக்கிய வாக்குதான் NPP பக்கம் சென்றிருக்கிறது.

 

2020 தேர்தலில் யாழில் டக்கிளஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் பெற்ற வாக்குகள் 115,000

2024 இல் JVP+ டக்கிளஸ் மற்றய தேசியக்கட்சிகள் = 114,000

 

எங்கடசனம் தமிழ்த்தேசியத்தில் நின்று மாறாது தமிழ் அரசியல் வாதிகளுக்கும், அநுரவுக்கும் சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

Copied from Para https://www.facebook.com/share/1JW4gY83aL/பரன்

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஒரு அலசல். இணைப்பிற்கு நன்றி விசுகர்.
அதிலும்… சென்ற தேர்தலில் பெற்ற வாக்கையும் இம்முறை பெற்ற வாக்கையும் ஒப்பிட்டமை சிறப்பு. 👍🏽

  • Thanks 1
  • விசுகு changed the title to மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது.. 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல ஒரு அலசல். இணைப்பிற்கு நன்றி விசுகர்.
அதிலும்… சென்ற தேர்தலில் பெற்ற வாக்கையும் இம்முறை பெற்ற வாக்கையும் ஒப்பிட்டமை சிறப்பு. 👍🏽

தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களை விதைப்பதை தவிர வேறு என்ன வேண்டும் சகோ....

நன்றி. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.