Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இன்று இலங்கை வரும் IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196011

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேச நாணய நிதியம் சமநிலையான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் - ஜனாதிபதி

image

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணய நிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினரை  சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணய நிதியம் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணய நிதியம் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என தெரிவித்துள்ள அவர் சிறுவர் வறுமை, போசாக்கின்மை போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் மாற்று திறனாளிகளிற்கு சிறந்த ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊழலிற்னுகு எதிராக போரிடுவது குறித்த தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/199112



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் போனப்பிறகும் அந்த சாப்பாடு அதே 4 ரூபாவுக்கு 7, 8 வருடங்களுக்கு இருந்தது. நாங்கள் இருந்தபோதும் கொஞ்சம் நல்ல சாப்பாடு கொண்டுவர முயற்சி செய்தோம், தமிழர்கள் சார்பிலும்  சில நல்ல கறிகளை சிபாரிசு செய்தோம், ஜேவிபி மாணவர் அமைப்பு அப்பிடியே அடித்து அமத்திவிட்டார்கள். கான்டீன்காரனும் என்னதான் செய்வது, மலிவாக கிடைக்கும்  அழுகிய மரக்கறிகளை கொண்டு வந்து சமைத்து போடுவார்கள், வாயில் வைக்க முடியாது 
    • (Tamil voter) Sri Lanka is A multicultural country? with just over 25% of the population are ethnic minorities however What AKD's cabinet evidently reflects is that minorities are RULED by majority. It further divides the country that is already polarised ethnically. Cabinet appointments explicitly shows that not everyone is equal in our country, one of the promises AKD was pontificating against before the election . Even the far right parities had few ministers from the minorities in the past just to show all Sri Lankans are inclusive in governing but NPP demonstrably exceeds those parties in terms of divide and rule. Tamils definitely feel let down by the appointments and those Tamils VOTED FOR AKD should now feel ashamed. 39        17  இலங்கை ஒரு பன்முக கலாச்சார நாடு? மக்கள்தொகையில் வெறும் 25% க்கும் அதிகமான சிறுபான்மையினர் இன சிறுபான்மையினராக உள்ளனர், இருப்பினும் AKD இன் அமைச்சரவை தெளிவாக பிரதிபலிக்கிறது, சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் ஆளப்படுகின்றனர். ஏற்கனவே இன ரீதியாக துருவப்படுத்தப்பட்ட நாட்டை மேலும் பிளவுபடுத்துகிறது. நமது நாட்டில் அனைவரும் சமமானவர்கள் அல்ல என்பதை அமைச்சரவை நியமனங்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன, தேர்தலுக்கு முன்பு ஏகேடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. அனைத்து இலங்கையர்களும் ஆட்சி செய்வதில் உள்ளடங்கியவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே கடந்த காலங்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த சில அமைச்சர்களை தீவிர வலதுசாரிகள் கூட பெற்றிருந்தனர், ஆனால் பிளவுபடுத்துதல் மற்றும் ஆட்சி செய்வதில் NPP அந்த கட்சிகளை விட அதிகமாக உள்ளது. இந்த நியமனங்களால் தமிழர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைகின்றனர், AKDக்கு வாக்களித்த தமிழர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும். 39 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. ☹️
    • 🤣................. 'உடனடித் தீர்ப்புகள்...............' வழங்கப்படும். அவர்கள் எல்லோருமே நடமாடும் நீதிமன்றங்கள் போல...........🤣. 'உங்களுக்கு பொருத்தமானது எதுவோ அதையே நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்கள்..............' என்று சொல்வார்கள். இலங்கைக்கு இப்போது இது தான் பொருத்தமானது போல...... இங்கு அமெரிக்காவில் நாங்களும் தான் ட்ரம்பை அதிபராக்கியிருக்கின்றோம். ஆற்றிலோ குளத்திலோ போய் விழாமல், உயிருடன் தானே இன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றோம்................😜.  
    • "அமைதியான் சூழலை இயற்கை தான் உருவாக்கி தந்துள்ளது "என எழுதியுள்ளார்களே அங்க தான் வெளிப்படையாக தெரிகின்றது இடதுசாரி செம்பு,அனுரா சொம்பு என்பது ....வலதுசாரி எழுதியிருந்தால் இறைவன் ,கடவுள் என ......
    • @goshan_che (Nada) Cabinet is not diverse. It should represent the minorities too. Hope this will be looked at.  48        53  சிறுபான்மையினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று சொல்லியற்கு 48 பேர் விரும்பவில்லை. #################   ##############   ########### (Francis.) First day in office laid the foundation for communal displeasure regardless of any reasons.  88        26  பதவிக்கு வந்த முதல் நாள், எந்தக் காரணமும் இல்லாமல் வகுப்புவாத அதிருப்திக்கு அடித்தளமிட்டது. 88 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 26 பேர் மட்டுமே ஆமோதித்து இருக்கின்றார்கள்.  ###############    #############   ############ Many muslims voted but no even a single minister  Are promises made correctly?  9        17  பல முஸ்லிம்கள் வாக்களித்தனர் ஆனால் ஒரு அமைச்சர் கூட இல்லை திங்கள்,  வாக்குறுதிகள் சரியாக கொடுக்கப்பட்டதா? 9 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.