Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,IMD.GOV.IN

படக்குறிப்பு, 'ஃபெங்கல்' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது

நேற்று (நவம்பர் 25) வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவம்பர் 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவம்பர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 27-ஆம் தேதிக்கு அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை எங்கு மழை பெய்யும்?

நாளை தமிழகத்தின் பெருவாரியான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இங்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நாளை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கட்டுமரம், வலை, விசைப்படகு ஆகியவற்றை உரிமையாளர்கள் அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்து கொள்ளுமாறும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 
'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பலத்த மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது.

இதனால் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்,கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது. யாழ்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்
படக்குறிப்பு, லங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

தொடர்மழை காரணமாக இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மலையகத்தின் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, மற்றும் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பெரிய கற்கள் சாலையில் விழுந்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்

அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை வருகிற முதலாம் திகதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 2,198 மில்லியன் கன அடி இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1410056

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புயல் நிலவரம்: தமிழகத்தில் நவ.30 வரை மழை எச்சரிக்கை; மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்

27 NOV, 2024 | 04:02 PM
image

சென்னை: சென்னையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamil_nadu_rain5.png

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (நவ.26) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.27) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அதன்பிறகு, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று (நவ.27) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.28-ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.29-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.30-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.1-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச.2-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.3-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரைக்காற்று எச்சரிக்கை: இன்று (நவ.27) தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.நாளை (நவ.28) தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.29 மற்றும் நவ.30-ம் தேதிகளில், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

tamil_nadu_rain4.png

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில், இன்று (நவ.27) முதல் நவ.29ம் தேதி வரை, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.30 மற்றும் டிச.1-ம் தேதிகளில், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்க க்கடலின் ஆந்திர கடலோரப்பகுதிகளில், இன்று (நவ.27) காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, இன்று மாலை முதல் 30-ம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று (நவ.27) காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், நவ.28-ம் தேதி காலை காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் சற்று குறைந்து நவ.29-ம் தேதி வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், நவ.30-ம் தேதி காலை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று (நவ.27) காலை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, 29-ஆம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

tamilnadu_rain1.jpg

அரபிக்கடல் பகுதிகளில், நவ.27ம் தேதி முதல் நவ.29ம் தேதி வரை, தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/199856

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேகம் குறைந்த 'ஃபெங்கல்': எங்கே நிலைகொண்டுள்ளது? எப்போது கரையைக் கடக்கும்? - சமீபத்திய தகவல்கள்

'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,IMD.GOV.IN

படக்குறிப்பு, தமிழகத்தின் கனமழை எச்சரிக்கை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக தீவிரமடையும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போதைய அறிக்கைபடி, நவம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் கரையைக் கடக்கும் முன் வலுவிழக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, தமிழகத்தின் கனமழை எச்சரிக்கை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நவம்பர் 28 முதல் 30 வரை கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 2 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கை கடற்கரையை ஒட்டி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம். அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை கடக்கும், அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28 மாலை முதல் 29 நவம்பர் காலை வரை தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் (இடையிடையே 85 கிமீ) காற்று வீசக்கூடும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

 

வேகம் குறைந்த புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நேற்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்தில் தெரிவித்தது. இதற்கு ‘ஃபெங்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தென் மேற்கு வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்து வெறும் 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது" என தெரிவித்திருந்தது.

நேற்று (27 நவம்பர்), மாலை 5.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 420 கி.மீ. தூரத்திலும், சென்னை தென் கிழக்கே 500 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு இருக்கிறது. ” எனக் குறிப்பிட்டிருந்தது.

புயல் வரும் 30 ஆம் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2ம் தேதி வரை மழை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

இன்றைய மழை நிலவரம்

தமிழகத்திற்கு புயல் ஆபத்து சற்று தணிந்துள்ள நிலையில் இன்று, வியாழக்கிழமை கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்வாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களில் எங்கு மழை பெய்யும்?

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழையின் காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்டா விவசாயிகள் கவலை

'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விளை நிலங்களில் கனமழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நவம்பர் 28-ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை புயலாக வலுவடையும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

`29ஆம் தேதி முதல் தீவிர மழை’

'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுயாதீன வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், ``இன்று டெல்டா முதல் சென்னை வரை பகல்/இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்ந்த காற்று வீசக்கூடும். 29ம் தேதி முதல் தீவிர மழை தொடங்கி 30ம் தேதி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2ல் மிதமான மழை பெய்யலாம்” என்று கணித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஃபெஞ்சல் புயல்: வானிலை ஆய்வு மைய கணிப்பு தவறியதா? - 5 கேள்விகளும் பதில்களும்

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 மணி 30 நிமிடங்களுக்கு ஃபெஞ்சல் புயலாக உருவானது.

பட மூலாதாரம்,IMD.GOV.IN

படக்குறிப்பு, வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 மணி 30 நிமிடங்களுக்கு ஃபெஞ்சல் புயலாக உருவானது.

'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறாது' எனக் கடந்த வியாழன் அன்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், 'புயலாக மாறி கரையைக் கடக்கும்' என வெள்ளிக்கிழமை காலையில் அறிவிப்பு வெளியானது.

'ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும்' என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதற்கு மாறான சூழல் ஏற்பட்டது ஏன்?

வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன?

"தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே 30ஆம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்" என வியாழனன்று(நவம்பர் 28) வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

"வியாழன் மற்றும் வெள்ளி காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகப் புயலாக வலுப்பெறக் கூடும்" எனவும் அவர் தெரிவித்தார்.

 

அடுத்த அறிவிப்பு சொன்னது என்ன?

நவம்பர் 30 சனிக்கிழமை பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும்

பட மூலாதாரம்,IMD.GOV.IN

படக்குறிப்பு, நவம்பர் 30 சனிக்கிழமை பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும்

ஆனால், வெள்ளி (நவம்பர் 29) காலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் 7 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணிநேரத்தில் இது புயலாக மாறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கிழக்கில் 310 கி.மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 360 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (நவம்பர் 30) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும் எனவும் அப்போது காற்றின் வேகம் 70-80 கி.மீட்டர் வேகத்தில் இருந்து 90 கி.மீ வேகம் வரையில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக மாறியது ஏன்?

இந்த மாற்றம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசும்போது, "இலங்கையில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் அதன் நகர்வில் ஏற்பட்ட குறைவு காரணமாகவும் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது" என்கிறார் அவர். மேலும், மழை அளவு குறைந்ததற்கும் இதுவே காரணம் என்று விளக்கமளித்தார்.

இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த புயல், வெள்ளியன்று மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கணிப்பு தவறியதா?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,IMD.GOV.IN

படக்குறிப்பு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"இயற்கையில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல முன்னாள் இயக்குநர் ரமணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று எதிரும் புதிருமாக வந்தால் செங்குத்தான அமைப்பாக இருக்காது. அதனால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 63 கி.மீட்டருக்கு மேல் சென்றால் புயல் வரும் எனக் கணிக்கிறோம்.

அதுவே, 62 கி.மீட்டருக்குள் வந்தால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Deep depression) என்கிறோம். தற்போதைய சூழலை, 'புயல் இல்லாத புயல்' என்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள். இது இயற்கை என்பதை ஏற்க வேண்டும்" என்கிறார்.

அந்தந்த நேரத்தில் உள்ள சூழல்களைக் கணித்து முடிவுகள் அறிவிக்கப்படுவதாகவும் கூறுகிறார், ரமணன்.

எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு?

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 29) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 29) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன?

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் குறித்த விவரம்

பட மூலாதாரம்,TNDIPR-X

படக்குறிப்பு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் குறித்த விவரம்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்துள்ளதாக, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் செயல்படும் மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் வெள்ளியன்று (நவம்பர் 29) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீ மேலாக அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீ அதிகமாக மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார்நிலையில் உள்ளன. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும் 806 படகுகளும் மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (நவம்பர் 29) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெங்கல் புயல் இம்சைய விட இவுங்க (சானல்) இம்சை தாங்க மிடியல ..

அரசியல்வியாதியல் வழமை போல வெட்டிய மடித்து  கட்டி வெள்ளம் பார்க்க வெளிக்கிட்டினம் ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெங்கல் புயல் இம்சைய விட இவுங்க (சானல்) இம்சை தாங்க மிடியல ..

அரசியல்வியாதியல் வழமை போல வெட்டிய மடித்து  கட்டி வெள்ளம் பார்க்க வெளிக்கிட்டினம் ..

ஈழத்தாய் போல ஹெலிகாப்டரில் இருந்து யாரும் பார்த்தார்களா?

  • Like 1
Posted

முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது - வரலாறு காணாத அதிகபட்ச மழை எங்கு பெய்தது? இன்று என்ன நிலவரம்?

ஃபெஞ்சல் புயல்

பட மூலாதாரம்,X/@INDIAMETDEPT

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.

மேற்கு - தென்மேற்கு திசையில் புயல் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், 6 மணிநேரத்தில் மெதுவாக நகர்ந்து வந்து கரையை கடந்துள்ளது.

 

''ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க துவங்கி, இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் இருந்தது'' என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை 7 மணியளவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ''தற்போதைய நிலவரப்படி இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும்'' என கூறியுள்ளார்.

புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

எங்கு அதிக மழை?

இன்று காலை 7 மணி நிலவரப்படி, ''கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன'' என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

''புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது'' என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல்
படக்குறிப்பு, புயல் கரையை கடந்தாலும், புதுச்சேரியை சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள்

புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி இருந்தது.

''மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் உள்ளன. இதற்காக சுமார் 4000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

 
ஃபெஞ்சல் புயல்
படக்குறிப்பு, புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் சாலையில் விழுந்துகிடக்கும் மரம்

இன்று என்ன நிலை?

இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சென்னையில் மீண்டும் விமான சேவை

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.

226 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் சென்னையில் தரையிறக்கப்படவிருந்த 20 விமானங்கள் வேறு ஊர்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் துவங்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஃபெஞ்சல் புயல்: தமிழ்நாடு புதுச்சேரியை புரட்டிபோட்ட மழை - புகைப்படத் தொகுப்பு

புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு, புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடல் மழை நீரை உள் வாங்காததால் தண்ணீர் தேங்கியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல்
படக்குறிப்பு, இன்று காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது
புதுச்சேரி -ஃபெஞ்சல் புயல்
படக்குறிப்பு, புதுச்சேரியின் கிருஷ்ணா நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு ராணுவத்தினர் அழைத்து சென்றனர்
புதுச்சேரியில் சாலையில் ஓடிய வெள்ளத்தில் முழ்கிய ஒரு இருசக்கர வாகனம்

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு, புதுச்சேரியில் சாலையில் ஓடிய வெள்ளத்தில் முழ்கிய ஒரு இருசக்கர வாகனம்
புதுச்சேரியில் சாலையில் ஓடிய வெள்ளத்தில் முழ்கிய ஒரு இருசக்கர வாகனம்

பட மூலாதாரம்,DEFENCE PRO

புதுச்சேரி -ஃபெஞ்சல் புயல்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, புதுச்சேரியில் அரசு பேருந்து நிறுத்துமிடத்தில் சூழ்ந்துள்ள தண்ணீர்.
புதுச்சேரி -ஃபெஞ்சல் புயல்

பட மூலாதாரம்,X/@NDRFHQ

படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளம் சூழ்ந்துள்ள வீட்டில் இருந்து மூதாட்டி ஒருவரை பாதுகாப்பாக அழைத்து வரும் மீட்பு படை வீரர்
வட தமிழகத்தின் கடலோர பகுதிகளின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு, வட தமிழகத்தின் கடலோர பகுதிகளின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி -ஃபெஞ்சல் புயல்

பட மூலாதாரம்,X/ADG PI - INDIAN ARMY

படக்குறிப்பு, மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்
சென்னை: ஃபெஞ்சல் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மீனவ படகுகள்
சென்னை: ஃபெஞ்சல் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது
புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
படக்குறிப்பு, திருவண்ணாமலையில் சாலையில் ஓடிய வெள்ளம் காரணமாக, ஒரு பக்க சாலை மூடப்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது - எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது

ஃபெஞ்சல் புயல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்துவிட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல், புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.

மேற்கு - தென்மேற்கு திசையில் புயல் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், 6 மணிநேரத்தில் மெதுவாக நகர்ந்து வந்து கரையை கடந்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

''ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க துவங்கி, இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் இருந்தது'' என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை 7 மணியளவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 40 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்றும் இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணியளவில் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

எங்கு அதிக மழை?

இன்று காலை 7 மணி நிலவரப்படி, ''கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன'' என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

''புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது'' என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல்
படக்குறிப்பு, புயல் கரையை கடந்தாலும், புதுச்சேரியை சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள்

புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி இருந்தது.

''மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் உள்ளன. இதற்காக சுமார் 4000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, புதுச்சேரியிலுள்ள ரெயின்போ நகர் பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளம்  
ஃபெஞ்சல் புயல்
படக்குறிப்பு, புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் சாலையில் விழுந்துகிடக்கும் மரம்

இன்று என்ன நிலை?

இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

புதுவையில் கடும் பாதிப்பு

புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புதுச்சேரியில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் கூறுகிறார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ராணுவம் வந்துள்ளதாக பிபிசி தமிழ் செய்தியாளர் கூறுகிறார்.

'' மழையின் தாக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. உள்வட்ட சாலைகளில் முழுங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடரும் என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்'' என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த்.

புதுச்சேரி
படக்குறிப்பு,புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்

''இந்த நகர் உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுதான் வரலாறு காணாத மழை.இந்த அளவுக்கு மழையை நான் பார்த்ததில்லை. வீடுகளில் தரைத்தளம் மூழ்கியுள்ளது'' என்கிறார் ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் நாராயணசாமி.

''வீடு முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. வீட்டில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை'' என்றார் ஜெனனி என்பவர்

மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ரமேஷ் குமார்,'' நாங்கள் படகுகளை கொண்டு வந்துள்ளோம். 20-30 பேரை மீட்டுள்ளோம். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதே எங்களது முதன்மை பணி'' என கூறுகிறார்.

புதுச்சேரி
படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்

சென்னையில் மீண்டும் விமான சேவை

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.

226 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் சென்னையில் தரையிறக்கப்படவிருந்த 20 விமானங்கள் வேறு ஊர்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் துவங்கியது.

புதுச்சேரியில் 4 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்

புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 48.45 செ.மீ மழை பெய்துள்ளது.

ரெய்ன்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடு சேதமடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
    • ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அனைவரும் எம்முடன் இணைந்து எம்முடைய இம் முயற்சிக்கு கரம் தருவீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் இ.இ. கவிமகன் இயக்குனர் முருகு வெளியீட்டகம் முள்ளிவாய்க்கால் மண் முன்னால் வெளியிடப்பட்ட பகிரப்படாதபக்கங்கள். *********************************************** “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நீண்ட கனவு தனது அடைவை பெற்றுக் கொண்டது. எதிர்பார்த்தளவு வருகையாளர்களுடன் மண்டபம் நிறைந்து இருந்தது. காலை 9.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்வு 30 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. போராளி மருத்துவர் திரு. தணிகை அவர்களின் தலமையில் நிகழ்வுகள் ஆரம்பித்த போது, ஆனந்தத்தில் விழிகள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை. மாவீரங்களின் உன்னத தியாகங்களை, இது மாவீரர்களான போராளிகள் மட்டுமல்லாது, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய போராளிகள் மற்றும் மக்கள் நாட்டுப்பற்றாளர்கள் என பல நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் “பகிரப்படாதபக்கங்கள்” மிக நீண்ட கால உழைப்பின் பெறுபேறாக வெளியில் வந்தது மனம் மகிழ்வுக்குரியது. திருமதி. தீபாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்வு ஆரம்பமாகிய போது ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.,சிறீரவீந்திரநாதன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மகளிர் பிரிவப் பொறுப்பாளர் திருமதி. வசந்தி ஏற்றி வைக்க இப் புத்தகத்தில் இடம்பெற்ற 16 மாவீரர்களின் திருவுருவப்படத்துக்கும் வருகையாளர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜேர்மனியின் தமிழ் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகன் அவர்கள் ஆரம்பித்துவைக்க வருகையாளர்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தை செய்தார்கள். அதன் நிறைவு வந்த போது அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வின் தலமையுரை ஆரம்பித்தது. தலமையுரையினை நிகழ்வின் தலைவர், போராளி மருத்துவர் தணிகை நிகழ்த்தினார். தொடர்ந்து புத்தகத்துக்கான அறிமுகவுரையினை கடற்புலிப் போராளி மருது அவர்கள் நிகழ்த்தி முடித்த போது, மிக முக்கிய நிகழ்வான புத்தக வெளியீடு நடைபெற்றது. பகிரப்படாதபக்கங்கள் என்ற நூலினை வெளியிட்டு வைக்குமாறு நூலாசிரியர் கவிமகனின் தாயாரான, திருமதி. இந்திரப்பிரபா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூட போராளி மருத்துவர் தணிகை மற்றும் நூலாசிரியர் கவிமகன் ஆகியோர் கூட இருந்தனர். மாவீரன் லெப். கேணல் மேனனின் துணைவியாரான யசோ அவர்களிடம் முதல் பிரதியை கையளித்து. நூலினை வெளியிட்டு வைத்தார் கவிமகனின் தாயார். வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றதும் சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது சிறப்புப் பிரதியினை நூலாசிரியர் கவிமகன் வழங்க, சிறப்புப் பிரதியின் முதல் பிரதியை உறவுகளுக்குக் கரங்கொடுப்போம் அமைப்பை சேர்ந்த அமுதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் கவிமகனால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து உறவுகளை ஒன்றிணைப்போம் அமைப்பை சேர்ந்த திரு. வேணுவின் தேசியத்தலைவர் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்வின் முக்கிய பேச்சுக்களான நூல் பற்றிய ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரை ஆகியவை தொடர்ந்த போது, அவற்றை முறையே லண்டன் மாநகரில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கோபிரட்னம் அவர்களும், பெண் எழுத்தாளர் மாலினி மாலாவும் வழங்கினர். பல விடயங்கள் அவர்களால் நிறை குறை என்ற இரு பெரும் வகைக்குள் சுட்டிக் காட்டி, இப் புத்தகம் பற்றிய அலசல் ஒன்றை செய்திருந்தார்கள். அதன் நிறைவில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றது. அதில் இன்னும் பல படைப்புக்கள் இவ்வாறு வெளிவருவதற்கு தாம் உதவி புரிவதாக உறுதி வழங்கினார். தொடர்ந்து நூலாசிரியர் கவிமகன் ஏற்புரை வழங்கினார். அதில் ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரையில் சந்தேகிக்கப்பட்ட அல்லது குறைகளை களைவதற்காக கூறப்பட்ட விடயங்களுக்கான விளக்கங்களையும், காரணங்களையும் விளக்கினார். பின் புத்தகத்தில் இருந்த சில விடயங்களைச் சுட்டிக் காட்டி அவற்றை எழுதத் தூண்டிய காரணிகளையும் விளக்கினார். தொடர்ந்து தான் இப் புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வரை தன் தோளோடு கூட நின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தன் ஏற்புரையினை நிறைவு செய்தார் கவிமகன். இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்று நடைபெற்றதை சுட்டிக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச தியாகங்களாக பதிவாகியிருக்கும் இத் தொகுப்பின் வெளியீடு, எமது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மண் வைக்கப்பட்டு அதன் முன் நிலையிலே வெளியீடு செய்யப்பட்டது.     https://eelamaravar.wordpress.com/2019/06/14/ltte-history-book/
    • தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். மூன்று வருடங்கள் யாழில் கற்கைநெறிகள் வெற்றிகரமாக த்தொடர்ந்தாலும், யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட போது மருத்துவக்கல்வி தேக்க நிலையை அடைந்தது. வன்னிக்கு புலிகளின் தளம் நகர்த்தப்பட்ட காலத்தில் மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவனாக(3rd MBBS) இருந்த கிருபாகரன் களங்களில் ஓர் முன்னணி களமருத்துவராக பணியாற்றிவர். 

களமருத்துவ செயற்பாட்டுக்கான பயிற்சிகளை சத்திரசிகிச்சை நிபுணர் சூரியகுமாரன் அவர்களிடம் பெற்றார். அதேபோல வைத்தியக் கலாநிதி எழுமதி கரிகாலன் மற்றும் தமிழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர் காசிலிங்கம் சுஜந்தன் அவர்களிடமும் மேலதிக பயிற்சிகளை பெற்றார். கடுமையான சண்டைகள் நடைபெறும் காலங்களில் களத்திலும் மற்றைய காலங்களில் வன்னிப்பெருநிலப்பரப்பில் காணப்பட்ட கிராமிய வைத்தியசாலைகளிலும்(Rural and Remote Hospitals)தனது மகத்தான மருத்துவ சேவையை மனநிறைவுடன் ஆற்றிவந்தார். சமாதான நாடகம் நோர்வே நாட்டின் தலைமையில் அரங்கேறிய காலத்தில் மீண்டும் யாழ் சென்று யாழ் மருத்துவபீடத்தில் தனது மருத்துவ சத்திரசிகிச்சைமானி பட்டப்படிப்பை வெற்றிகரமாகவும் திறமைச் சித்திகளுடனும் நிறைவு செய்தார். இயல்பாகவே அன்பும் பெரும் பண்பும் நிறைந்த இவர் பொதுமக்களையும் போராளிகளையும் ஆழமாக நேசித்தார். அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

சண்டை மிக உக்கிரமாக நடைபெற்ற காலங்களில் சத்திரசிகிச்சைக் கூடங்களில் மயக்க மருந்து கொடுக்கும் பொறுப்பு மிகுந்த கடினமான பணியைதானே தெரிவு செய்து மருத்துவ சேவையில் சிறந்து விளங்கினார். பூநகரி மண்ணை மீட்க நடைபெற்ற ஈரூடகத் தாக்குதலான தமிழர் சேனையின் தவைளைப் பாய்ச்சல் படைநடவடிக்கையில்(Operation Frog)பங்கேற்றவர். 

அந்த நடவடிக்கையில் படுகாயமடைந்தமையால் ஓர் கையையும் காலையும் மடிக்க முடியாத நிலையை அடைந்தார். பாதிப்படைந்த கையையும் காலையும் சத்திரசிகிச்சை ஒன்றின் மூலம் சீர்ப்படுத்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த என்பியல் நிபுணர்கள் (Orthopedic Surgeons) பலர் முயன்றும் முடியாமல் போய்விட்டது. மனவலிமை மிக்க வைத்தியர் கிருபா அவர்கள் அவற்றை ஓர் குறையாக எண்ணாமல் தனது கடமைகளை ஓடியோடி செய்து முடிக்கும் போது பிரமிக்காதவர்கள் இல்லை எனலாம். தீவிரமான பொது வாழ்வில் கிருபா அல்லது கிருபாகரன் என்று அறியப்பட்ட இவரின் இயற்பெயர் கந்தசாமி தயாபரன் ஆகும். 

ஈர நெஞ்சம் கொண்ட இந்த வைத்தியர் “கோணாவில் கிருபா””வாசுகி கந்தசாமி” 
என்ற பெயர்களிலும் ஈழத்து இலக்கிய வானிலும் சிறகடித்தவர். மாங்கனித்தீவில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளையும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகளையும் எழுதி வந்தார். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் அதாவது 17/05/2009 ஆம் தேதி இலங்கைப் படையினரின் கட்டுப்பட்டுப் பகுதிக்குள் மனைவியுடன் வந்தவரின் எந்தவிதமான தொடர்புகளும் இன்று வரை கிடைக்கவில்லை.

மனைவி,
சகோதரங்கள் மற்றும் பெற்றோரால் இன்று விண்ணிலும் மண்ணிலும் தேடப்படும் ஒருவராக வைத்தியர் கிருபாகரன் உள்ளார்.  
    • “நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோருடன் யானும் அவரை சத்திரசிகிச்சை மேசையில் ஏற்றினோம். தனது மக்கள் மீது கொண்ட வாஞ்சை காரணமாக எம்மிடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்தவருக்கு சத்திரசிகிச்சை செய்வதாயின் பொது மயக்கமருந்து கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம். பொது மயக்கமருந்து (General Anesthesia) கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை குருதி அமுக்கத்தைச்( Blood Pressure) சோதித்த போது குருதி அமுக்கமானது அதிகரித்துக் காணப்பட்டது. அதற்காகவும் சத்திரகிச்சையைக் கைவிடமுடியாத நிலை. அவரை எங்களால் இயன்றளவு ஆசுவாசப் படுத்தி நிமிடங்களின் பின்னர் மீண்டும் சோதித்த போதும் குருதியமுக்கம் அதே நிலையிலேயே இருந்தது. பொதுவாக நாங்கள் பாவிக்கும் மயக்கமருந்துகள் குருயமுக்கத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை இந்த நிலையில் உயர் குருதி அமுக்கம் உள்ள ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்தால் மேலும் குருதி அமுக்கம் அதிகரித்து நிலைமையை மோசமாக்கிவிடும் என்பது வெளிப்படையானது. ஆதலினால் அன்று அங்கிருந்த இளைய மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர்( Anesthetist) அந்நிலையில் மயக்கமருந்து கொடுக்க மறுத்துவிட்டார். மேலதிக உதவிக்காக மயக்கமருந்து கொடுக்கும் மூத்த வைத்தியர்களை அந்த இடத்துக்கு அழைக்க முடியாதவாறு பலமாக எறிகணைகள் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு அண்மைய இடத்திலும் மைதானத்திலும் விழுந்து வெடித்துகொண்டேயிருந்தது. விண்ணும் மண்ணும் அதிர்ந்து கொண்டிருக்க தனது உயிரிலும் மேலாக மக்களை நேசித்த அந்தத் மறத்தலைவனையும் நெஞ்சிருத்தி நிமிர்வோம்! https://vayavan.com/?p=12795
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.