Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

avu.jpg

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இச்சூழலில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

#avustreliya# #social media#

https://thinakkural.lk/article/312800

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரின் கைத்தொலைபேசிகளை பிள்ளைகள் பயன்படுத்துகின்றார்களே. தாம் சமூக ஊடக கணக்கை சொந்தமாக உருவாக்க முடியாது போனாலும் பெற்றோர் பயன்படுத்தும் இலத்திரனியல் சாதனங்கள் வாயிலாக பிள்ளைகள் சமூக ஊடகத்தினுள் உலவுவதை  கட்டுப்படுத்த இயலாதே.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

நல்லதொரு விடயம் .

அமெரிக்காவில் சிகரட் குடிவகை வாங்க முடியாது.

ஆனாலும் அத்தனை இளசுகளுமே புகைக்கிறார்கள்,தண்ணயடிக்கிறார்கள் எப்படி?

சட்டத்தால் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் சிகரட் குடிவகை வாங்க முடியாது.

ஆனாலும் அத்தனை இளசுகளுமே புகைக்கிறார்கள்,தண்ணயடிக்கிறார்கள் எப்படி?

சட்டத்தால் தடுக்க முடியாது.

சட்டம் கடுமையாக்கப்பட்டால் எல்லாம் சரியாக்கபடும் இதே கேள்வியை சிங்கப்பூரில் கேட்டு பாருங்க அப்படித்தான் .

முதன் முதல் கனடா வந்தபோது ஒரு பப் காண்பதே அரிதானது இங்கு இங்கிலாந்தில் பப் இல்லாத இடத்தை காண்பது அரிது .

இளசுகளுக்கு ரெத்தம் சூடானது இலகுவாக டம்மி ஐடி தயாரித்து தேவையான பொருள்களை வாங்கி விடுவார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

நல்ல விடயம். இதை எல்லா நாடுகளிலும் அமுல்படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை - சட்டமூலத்திற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அங்கீகாரம்

29 NOV, 2024 | 11:22 AM
image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்த நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.

செனெட்டில் இந்த சட்ட மூலத்திற்கு ஏற்கனவே  அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் சனப்பிரதிநிதிகள் சபையும் இதற்கு ஆதரவளித்துள்ளது.

சிறுவர்களை சமூக  ஊடகங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதே இந்த சட்டம் என பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தினை ஆதரிக்கும் விதத்தில் அவுஸ்திரேலியாவில் பெற்றோர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த தடை நடைமுறைக்கு வருவதற்கு ஒருவருடமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.'

social_media_ban.jpg

இந்த சட்டத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்றால் அவற்றிற்கு எதிராக அபராதம் விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தடை எவ்வாறு செயற்படும் என்பது குறித்தும், அந்தரங்கத்தின் மீதான அதன் பாதிப்புகள் மற்றும்சமூக தொடர்பு குறித்து போதிய விளக்கமில்லை என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலகில் பல நாடுகள் சமூக ஊடக பயன்பாடுகள் குறித்து தடைகளை விதித்துள்ள போதிலும் 16 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடை விதித்துள்ள முதல் நாடு அவுஸ்;திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே உள்ள பயனாளர்களிற்கும் பெற்றோரின் சம்மதத்துடன் பயன்படுத்துவதற்கும் இந்த சட்டத்தில் கட்டுப்பாடுகள் இல்லாதததும் குறிப்பிடத்தக்கது.

social_media_teen_1.jpg

மேலும் புதிய சட்டமூலம்காரணமாக  எந்த தளங்கள் தடை செய்யப்படும் என்பது குறித்தும் எதனையும்  குறிப்பிடவில்லை, இது குறித்து அவுஸ்திரேலியாவின் தொடர்பாடல் அமைச்சர்  இலத்திரனியல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் ஆலோசனையை பெற்ற பின்னர் தீர்மானிப்பார்.

எனினும் ஸ்னாப்சட், டிக்டொக், பேஸ்புக் இன்ஸ்டகிராம் டுவிட்டர்  ஆகியவற்றை 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கலாம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடையை நடைமுறைப்படுத்துவதற்காக வயதை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த வேண்டியிருக்கும் என  அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனை எதிர்வரும் மாதங்களில் பரீட்சித்து பார்க்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/199975

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கக் கூடிய விடயம். சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதனை விட, சமூக ஊடகங்கள் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றன என்பது அதிகம் பொருந்தும். பெற்றோர்களால் கூட இதனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.