Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்!

டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்!

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனை முன்னிட்டு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நவம்பர் 6 தொடங்கினர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருகின்றனர்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அவர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கான ஏற்பாடுகளும், தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும் விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியை தொடங்கினர்.

பொலிஸார் அமைத்திருந்த கொங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் காயமடைந்ததால் பேரணியை சற்று நிறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளனர்.

இதனால் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஷம்பு எல்லையைவிட்டு வெளியே நகர முடியாத வகையில் ஆணி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஷம்பு எல்லையில் பெரும் எண்ணிக்கையில் பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

https://athavannews.com/2024/1411436



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.