Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற டக்ளஸ் - சுப்பையா பொன்னையா குற்றச்சாட்டு!

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%21

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுப்பையா பொன்னையா குற்றம் சுமத்தியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மஹிந்தவின் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பணத்தைப் பெற்றுக்கொண்டார். 

ஆனால் எங்களுக்கு 10,000 அல்லது 15,000 ரூபாய் வரையில் வேதனம் வழங்கினார்கள். 

கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் 3000 ரூபாய் சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர். 

ஆனால் அவ்வாறு எதுவுமே சேமிக்கப்படவில்லை. 

வேதனம் கேட்ட சிலரை டக்ளஸ் இல்லாமல் ஆக்கியுள்ளார் என சுப்பையா பொன்னையா குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.hirunews.lk/tamil/390605/மஹிந்தவிடம்-கோடிக்கணக்கான-பணத்தைப்-பெற்ற-டக்ளஸ்-சுப்பையா-பொன்னையா-குற்றச்சாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை.
அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

மஹிந்தவின் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பணத்தைப் பெற்றுக்கொண்டார். 

ஆனால் எங்களுக்கு 10,000 அல்லது 15,000 ரூபாய் வரையில் வேதனம் வழங்கினார்கள். 

 

சரியான கணக்கு வழக்கு வெளியே வந்தால், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு போய் விடுவார் போலத் தெரியுதே...............

நாங்களும் இடதுசாரிகள், நீங்களும் இடதுசாரிகள்................ இப்படியும் சொன்னர் இவ்வளவையும் செய்துவிட்டு......................

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியடி குத்தியனின் ஊழல் பட்டியல் மிக நீளமானது, அவற்றில் சில ( கொலை, ஆட்கடத்தல், காட்டிக்கொடுத்தல், கூட்டிக்கொடுத்தல் என்பன புறம்பாகும்)

- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் மூலம் நான்காயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக சம்பாதித்திருக்கின்றார்.
- ஸ்ரீதர் திரையரங்கு உட்பட தனியார் சொத்துக்களை அபகரித்து இருக்கின்றார்.
- அரச சொத்துக்களை முறை தவறி பயன்படுத்தியதன் மூலம் அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்திருக்கின்றார்
- பிரதேச மற்றும் நகர சபைக்களுக்கு சொந்தமான அரச வாகனங்களை அபகரித்திருக்கின்றார்
- அரச பொது நிர்வாகத்தில் அத்துமீறி தலையீடு செய்து அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார்
- சிபாரிசுகள் மூலமான முறைகேடான அரச ஊழியர் நியமனங்கள் ஊடக திறைசேரிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார்
- பனை அபிவிருத்தி சபை, திக்கம் வடிசாலை, வட கடல் நிறுவனம் உட்பட நிறுவனங்களை சீரழிந்து இருக்கின்றார்
- திருமதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் மட்டும் விடுவிக்கப்பட்ட 81 கோடி ரூபா பணத்தை ஒரே தடவையில் கையாடல் செய்து இருக்கின்றார்
- பாராளமன்ற உறுப்பினருக்குரிய வரி சலுகை மூலம் இறக்குமதி செய்த Toyata Land Cruiser வாகனத்தை GAPC பெரேரா என்பவருக்கு விற்று காசு சம்பாதித்திருக்கின்றார்
இழுவை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களிடம் கப்பமாக ரூபா 5,000 வசூலித்திருக்கின்றார்
- யாழ்ப்பாண ஈ பி டி பி அலுவலகத்திற்கான லட்சக்கணக்கான மின்சார நிலுவையை செலுத்த தவறி ஏமாற்றியிருக்கின்றார்
- கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, ளிலும் தனக்கு சொந்தமாகவிருந்த வீடுகளுக்கான 1 கோடிக்கும் அதிகமான தண்ணீர் கட்டணத்தை செலுத்த தவறியிருக்கின்றார்.
- வீதி புனரமைப்பு உட்பட அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதன் திறைசேரிக்கு கோடிக்கணக்கான இழப்பை ஏற்படுத்திருக்கின்றார்
- யாழ்ப்பாண மற்றும் கொழும்புக்கு இடையில் பசில் ராஜபக்சே சகிதம் நடத்தபட்ட சொகுசு பஸ் சேவையில் முறைகேடுகளில் ஈடுபட்டு அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்
கோவில்கள் புனரமைப்பு என்கிற பெயரில் முறைகேடான காசோலை மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றார்
- முறைகேடான கஸ்தூரியார் வீதி புது கட்டட ஒப்பந்தம்,
- DD தொலைக்காட்சி நிறுவனத்தையும் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தையும் சட்டவிரோதமாக நடத்தியமை,
- மாநகரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிக நியமனங்கள் என பல்வேறு தரப்பட்ட மோசடிகள் ஊடாக யாழ் மாநகர சபைக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்
- கடலட்டை பண்ணைகளை முறைகேடாக வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்
- பளை உட்பட பல பகுதிகளில் ஈபிடிபி உறுப்பினர்கள் முறைகேடாக அரச காணிகளை அபகரிக்க துணை போயிருக்கின்றார்
- டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவர் தம்பி தயானந்தா ஆகியோர் மதுபான அனுமதி பத்திரங்களை முறைகேடாக பெற்று இருக்கின்றார்கள்.
மூலம்: இனமொன்றின் குரல் முகநூல்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுப்பையா பொன்னையா குற்றம் சுமத்தியுள்ளார். 

இடிஅமீனின் வரலாற்று தொடரில், இடிஅமீனை போட்டு தள்ள சதிதிட்டம் தீட்டியவர்களை போட்டு கொடுப்பவர்களை, உனக்கு எவ்வளவு காலமா இந்த விஷயம் தெரியும் என்று கேட்டுவிட்டு நீண்டகாலமா தெரியும் என்றால் முதலில் போட்டு கொடுத்தவரைத்தான் போட்டு தள்ளுவாராம் இடிஅமீன் ,

ஏனென்றால் என்னை போட்டு தள்ளுவது பற்றி உனக்கு பிரச்சனையில்லை, உனக்கு அவர்களுடன் தனிப்பட்ட பிரச்சனை என்றபடியால்தான் இப்போது உண்மையை சொல்கிறாயென்று படித்த ஞாபகம்.

அதேபோல் காலம் முழுவதும் டக்ளஸ் காலடியில் கிடந்து எந்தவித குற்ற உணர்வுகளுமில்லாமல் மக்கள் நிம்மதியையும் , மக்கள் சொத்துக்களையும்,உயிர்களையும் சூறையாடிவிட்டு இன்று உங்கள் பங்குபிரிப்பில் தகராறு என்றதும் அவன் நல்லவனில்லை என்கிறீர்கள். இன்றும் மஹிந்த குரூப் ஆட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக டக்ளஸ் புராணம்தான் பாடியிருப்பீர்கள், ஆதலால்  உங்கள் பக்கம் எந்த புனிதமும் இல்லை.

என்ன இழவுனாலும் பண்ணிப்போட்டு போங்கள், ஆனால் எனக்கிருப்பது ஒரேயொரு சந்தேகம், 

டக்ளஸ் திருமணமும் செய்யவில்லை, வாரிசுகளும் இல்லை எதுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்து சேர்க்கிறார்?

யாருக்காக?

அநுர அரசின் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் சுத்திகரிப்பு நடவடிக்கை முடிந்து வடக்கு பக்கம் திரும்பினால் டக்ளசுக்கெதிரா சாட்சி சொல்ல டக்ளசின் முன்னாள் கட்சி உறுப்பினர்களுட்பட எண்ணிலடங்காதவர்கள் அணி திரள்வார்களென்பது இப்போதே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை! மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோது, வடக்கில் எல்லாம் இயல்பு நிலையில் உள்ளது எனக்காட்ட, இவர் அரசுக்கு முண்டு கொடுத்து, தகுதியற்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிக்கமர்த்தி தேர்தலில் காலங்களில்  தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். அரசிடமும் கூலி வாங்கி, மக்களை கடத்தி கொலை, கொள்ளை நடத்தியும் சேகரித்துக்கொண்டார். இதில அரசோடு சேர்ந்து மக்களின் பிரச்னைக்காக உழைத்தாராம். அப்போ ஏன் மக்கள் இவரை நிராகரித்தனர் என்று யாரும் பேட்டி எடுக்கவில்லையா இவரிடம்? முன்பெல்லாம் கலைத்து கலைத்து பேட்டி எடுத்தார்களே. இவரே கேட்டு கொடுத்திருப்பாரோ? சிலர் தனக்கெதிராக பொய்யான அவதூறுகளை பரப்பியதால் தோற்றுவிட்டாராம். அதெப்படி, இவர் நன்மை செய்திருந்தால் எப்படி அவதூறு பாரப்பமுடியும்? சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? முறையிடுபவர்கள் முழுசம்பளம் பெறலாமென எதிர்பார்ப்போடு சேர்ந்திருப்பார்கள், உண்மை தெரிந்த பின் விலகவும் முடியாது, முறைப்பாடு அளிக்கவும் முடியாது, தாம் செய்தது தமக்கு எதிராக திரும்பும் எனத்தெரியும், அதனால் காத்திருந்திருக்கிறார்கள். சேர்த்தது எல்லாவற்றையும் பிடுங்கிப்போட்டு உள்ளே போடவேண்டும். எல்லாத்துறைகளிலும் இவரால் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வேலை செய்யவும் தெரியாது, நீதி நிஞாயமும் தெரியாது, ஊழலும் லஞ்சமும் சண்டித்தனமுமே நிறைந்திருக்கிறது. இவரால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் யாவரையும் விசாரணை செய்து தகுதியற்றவர்கள் நீக்கப்படவேண்டும். விசேஷமாக பிரதேச செயலகங்களில் அதிகமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு பிரச்சனைகளை கையாளும் அறிவுமில்லை திறனுமில்லை மக்களை அலைக்கழிக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக

ஒவ்வொரு தடவையும் அரசாங்கம் மாறியவுடன் தோலுண்ணி போல ஓடிப்போய் ஒட்டிக்கொள்வது இதற்காகத்தான். சொல்வது, மக்களுக்கு சேவை செய்வதற்காக என்று. அனுர ஒட்டவே விடேல்லை ஆளை, தொல்லை தொடங்கி விட்டது. அராஜகர்களுக்கு இனிமேல் இறங்குங்காலந்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.