Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

பாவனைக்கு உதவாத அரிசி

 

அதன்படி தற்போது இந்தியாவில்(India) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது.

மனித பாவனைக்கு உதவாத அரிசி இறக்குமதி! திருப்பி அனுப்ப நடவடிக்கை | Imported Rice In Sri Lanka Found Infested

 

அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என நேற்று (14) உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும்.

பரிசோதனை

 

அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது.

மனித பாவனைக்கு உதவாத அரிசி இறக்குமதி! திருப்பி அனுப்ப நடவடிக்கை | Imported Rice In Sri Lanka Found Infested

அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை.

தற்போதைக்கு மனித பாவனைக்கு உதவாத குறித்த அரிசித் தொகையை மீண்டும் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/imported-rice-in-sri-lanka-found-infested-1734238699

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களை  சந்தோசமாக வைக்க விலைகளை குறைக்கணும் உள்ளூர் விவசாயிககளின்  உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிப்பதை பற்றி எந்த ஒரு அரசும் கவலைப்பட போவதில்லை பிச்சைக்கு உணவை இறக்கி அதை அது செமிக்காமல் தமிழர் மேல் இனவாதம் கக்குவது என்று போனால் இன்னும் சில ஆண்டுகளில் அழகான தீவு நரகமாக மாறி விடும் . 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.