Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக்கட்சியின்(Itak) பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியலினூடாக தெரிவுசெய்தமையானது சுமந்திரனை(M.A.Sumanthiran) நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தந்திரோபாயமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தேசிய பட்டியலுக்கான பெயர் பட்டியல் உறுப்பினர்களை முன்னதாகவே கொடுக்காதது சுமந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தியாக கூட இருக்கலாம்.

தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும், சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர்.

சுமந்திரன் மீதான வெறுப்பே தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணம். தாம் நினைக்கின்ற விடயங்களை எடுத்து நடத்தக்கூடிய விடயங்களில் சுமந்திரன் வல்லவர் என குறிப்பிட்டுள்ளார். 

சம்பந்தனின் பதவியையும், அவரின் வயது மூப்பையும் அவர் தனக்கு சாதகமாக சுமந்திரன் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://tamilwin.com/article/sumathiran-s-next-step-to-enter-parliamen-1734690467?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர்.

நாங்கள் முன்பே கூறியதுதான். சிவஞானத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டாரோ. பதவிக்காக எந்தப்பக்கமும் இழுபடும் தன்மையானவர்கள். வேலியில போன ஓணான்களை பிடித்து, அவர்களின் பின்புலம்அறியாமல், வீட்டுக்குள்ள சேர்த்த மாவையரால, வீடு இரண்டாகி கலேபரமாயிருக்கு. இளையவர்கள், சட்டம் நுணுக்கம் தெரிந்தவர்கள், உதவியாக இருக்கும் என்று நினைத்திருப்பார். அவரோ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தெரியாமல், எதுக்கெடுத்தாலும் கோட்டு வாசலில் போய் நிக்கிறார்கள். அப்போ கட்சி பிரச்சனையை சுமுகமாக தீர்க்கத்தெரியாதவர், நீதிமன்ற பிரச்சனையை எப்படி கையாளுவார்? அரைகுறையால் இருந்ததையும் கெடுத்து விட்டதுதான் மிஞ்சியது. இந்த திறமையில் மோடி "உங்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்." என்று அனுராவுக்கு கூறியது கேவலமாம். இருந்தாலும், சுமந்திரன் தந்திரமாய் பாராளுமன்றம் போனால், ரொம்ப மூக்குடைபடுவார். அவரது திட்டம், தமிழ்தேசியக்கட்சியை பிரித்து, தமிழரசுக்கட்சியை உடைத்து, தமிழரை சிங்களத்துக்கு அடிமையாக்குவது. அதை அவர் செவ்வனே செய்ய சில நாசகாரிகளை தெரிந்தெடுத்து வைத்திருக்கிறார், இன்னும் கொண்டுவருவார். இவர் ஆட்டம் நீடித்தால்; அடுத்த தேர்தலில் மக்கள் தமிழரசுக்கட்சியை துடக்கு கழித்து விடுவார்கள்.         



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.