Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”

 image_e46abee4b6.jpg

பு.கஜிந்தன்

ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22)  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் (African Giant Snail- Lissachtina fulica)  பிரித்தானியர் ஒருவரால் பின் விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நிய இனம். ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும் போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன.

சராசரியாக 5 தொடங்கி 6 ஆண்டுகள் வரை வாழ்கின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றன. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரை கௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது.

உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெரும் காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரை தேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல் பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன. ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்கு காவிச் செல்கின்றன. 

இவற்றோடு  மனிதர்களில் மூளை மென்சவ்வு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி புழுக்களை இவை காவித் திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கு, உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது. 

 ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல்  பொது அமைப்புகளும், பொதுமக்களும்  முன்வரவேண்டும். உப்பு நீர் கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை  அழுத்துவதன் மூலம்  சுலபமாக அழிக்க முடியும். ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது.

இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயல்படவில்லை எனில் ஏற்கெனவே பாரிய பொருளாதார சீரழிவுக்கு, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்க நேரும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஆபிரிக்க-நத்தைகளால்-பேராபத்து/150-349129

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்கா பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்

ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும் இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது.

பயிர்பச்சைகளையெல்லாம் தின்றுதீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக இவை அமையும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் (African Giant Snail- Lissachtina fulica) பிரித்தானியர் ஒருவரால் பின்விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நியஇனம். ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க அமைப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும்போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன.

சராசரியாக 5 தொடங்கி 6 ஆண்டுகள் வரை வாழுகின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000 இற்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றது. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரைகௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது.

உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெருங்காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரைதேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல்பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன.

ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்குக் காவிச் செல்கின்றன. இவற்றோடு  மனிதர்களில் மூளைமென்சவ்வு அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிப் புழுக்களை இவை காவித்திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கும், உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதனை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது.

ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல்  பொதுஅமைப்புகளும், பொதுமக்களும்  முன்வரவேண்டும். உப்பு நீர்க்கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை  அமிழ்த்துவதன் மூலம்  சுலபமாக அழிக்க முடியும்.

ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது. இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயற்படவில்லையெனில் ஏற்கனவே பாரிய பொருளாதாரச் சீரழிவுக்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்கநேரும் என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/314051

Lissachatina fulica - Wikipedia

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆபிரிக்க நத்தைகளை அமெரிக்காவின் சில பகுதிகளில் வெற்றிகரமாக கட்டுப் படுத்தியிருக்கிறார்கள். கட்டுப் படுத்தும் வழி கீழே:

Metaldehyde is a pesticide used to control snails and slugs and is approved for use in a variety of vegetable and ornamental crops in the field or greenhouse, on fruit trees, small-fruit plants, in avocado and citrus orchards, berry plants, banana plants and in limited residential areas. Available products can be applied as granules, sprays, dusts or bait pellets. Applications are typically made to the ground around the plants or crops to be protected.

Property owners inside the treatment area will be notified in person or by posted notice at least 24 hours in advance of the planned pesticide treatment.

Metaldehyde works by disrupting the mucus production ability of snails and slugs. This reduces their digestion and mobility and makes them susceptible to dehydration. Snails and slugs that have eaten metaldehyde often seek hiding places, become inactive and begin to die within days.

https://www.fdacs.gov/Agriculture-Industry/Pests-and-Diseases/Plant-Pests-and-Diseases/Invasive-Mollusks/Giant-African-Land-Snail/Pasco-County-Treatment-and-Quarantine-Information

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 28 டிசம்பர் 2024, 05:23 GMT
     

பருவமழைக் காலத்தின் ஓர் அதிகாலை வேளை அது. வேளச்சேரி ரயில் நிலையத்திற்குப் பின்புறத்திலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அமைதியும் பசுமையும் நிறைந்த சாலை.

நான்கு அடி எடுத்து வைப்பதற்குள் நான்கைந்து நத்தைகளைப் பார்த்துவிடலாம். சாலையோரத்தில் முளைத்திருந்த காக்காமூக்கு, வெள்ளெருக்கு, எருக்கு ஆகிய செடிகளில் கிளைக்கு ஏழெட்டு நத்தைகளைப் பார்க்கலாம்.

அவற்றின் பெயர் கிழக்கு ஆப்பிரிக்க நத்தை (Giant East African Snail).

இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிரியாகக் கருதப்படுகின்ற இந்த நத்தை இனம், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 500 முட்டைகளுக்கு மேல் இடக்கூடிய இந்த நத்தையினம் இந்தியாவுக்குள் வந்தது எப்படி?

இதனால் ஏற்படும் அபாயங்கள் என்ன? இவற்றைக் கட்டுப்படுத்துவது இன்னும் சவாலாகவே இருப்பது ஏன்?

 

கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் இந்தியாவுக்கு வந்தது எப்படி?

தென்னிந்தியாவில் காணப்படும் பிற நத்தைகளைவிட அளவில் பெரிதாக வளரக்கூடிய இவை கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. பிரிட்டிஷ் மெல்லுடலி ஆய்வாளரான வில்லியம் ஹென்றி பென்சன், 19ஆம் நூற்றாண்டில் இரண்டு கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்கிறது ஓர் ஆய்வு.

மொரிஷியஸில் இருந்து அவர் கொண்டு வந்த அந்த ஒரு ஜோடி நத்தைகளை, திரும்பிச் செல்லும்போது, தனது நண்பரும் அண்டை வீட்டில் வாழ்ந்தவருமான ஒருவரிடம் கொடுத்துச் சென்றார். அந்த நபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட நத்தைகளை கொல்கத்தாவில் இருந்த தனது வீட்டுத் தோட்டத்தில் திறந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் இந்த நத்தை இனம் பல்கிப் பெருகிவிட்டதாக 1858இல் பென்சன் பதிவு செய்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

இப்படித்தான் இந்தியாவுக்குள் இந்த நத்தைகளின் பெருக்கம் தொடங்கியது. அதற்குப் பிறகு, வரலாற்றில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட நத்தை இனங்களில் இதுவும் ஒன்று.

இவை இந்தியா முழுக்கப் பரவியதில் மனிதர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு, பென்சன் விட்டுச் சென்ற நத்தைகள் கொல்கத்தாவில் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின.

கொல்கத்தாவில் இருந்து, 1960களில் செல்லப் பிராணியாக வளர்க்கும் ஆசையில் கொல்லர் ஒருவர் அதை பிகாரில் உள்ள தனது ஊருக்குக் கொண்டு சென்றார். பிறகு அவை பிகாரின் அண்டை மாநிலங்களுக்கும் பரவின. அதேபோல், விவசாயி ஒருவர் அவற்றைப் பிடித்து ஆந்திர பிரதேசத்தின் அரக்குப் பள்ளத்தாக்கில் அவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு தோட்டத்தில் 1996ஆம் ஆண்டு கொண்டு வந்து விட்டார்.

இப்படியாக நாடு முழுவதும் பரவிய கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள், 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின், உலகளவில் ஆபத்தான 100 ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலிலும் உள்ளது.

அளவுகடந்த இனப்பெருக்கம்

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

பிற நத்தை இனங்களைப் போலவே, இவையும் இருபாலுயிரி பிரிவைச் சேர்ந்தவைதான். அதாவது, ஒரே நத்தையில் ஆண், பெண் இரு பாலுக்குமான இனப்பெருக்க உறுப்புகளும் இருக்கும்.

இதன்மூலம் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இரண்டு நத்தைகளுமே கரு உருவாக விந்தணுக்களைக் கொடுப்பதோடு, விந்தணுக்களைப் பெற்றுத் தங்களது முட்டையில் கருவை உருவாக்கவும் செய்கின்றன. இத்தகைய உயிரினங்களை இருபாலுயிரி என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

ஆனால், இது ஏன் ஆக்கிரமிப்பு உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது? அதைப் புரிந்துகொள்ள நாம் முதலில் ஆக்கிரமிப்பு உயிரினம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சூழலியல் அமைப்புக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினம், அங்கு ஊடுருவி வேகமாகப் பரவி, அந்தப் பகுதியுடன் இயற்கைத் தொடர்பைக் கொண்டிருக்கும் பிற உயிரினங்களின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறும்போது, அந்த உயிரினம் ஆக்கிரமிப்பு உயிரினமாகக் கருதப்படுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

கப்பல் போக்குவரத்து, வணிகம், அலங்காரம், வளர்ப்பு போன்ற காரணங்களுக்காகக் கொண்டுவரப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் ஒரு புதிய வாழ்விடத்திற்குள் நுழையும் உயிரினங்கள் அல்லது தாவரங்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறலாம்.

கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளைப் பொறுத்தவரை, பென்சன் இந்தியாவுக்கு கொண்டு வந்த ஒரு ஜோடி நத்தைகள், இந்திய நிலப்பரப்பை அவை ஆக்கிரமிக்கத் தொடக்கப் புள்ளியாக அமைந்தன.

இந்த நத்தைகள், உள்ளூர் நத்தை இனங்களைவிட மிக வேகமாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்வதால், அவற்றைவிட அதிவிரைவாகப் பரவி வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நத்தை, ஓர் ஆண்டில் 5 முதல் 6 முட்டைத் தொகுப்புகளை இடுகின்றன. ஒரு தொகுப்பில் 150 முட்டைகள் வரை இருக்கும். இதன்படி, ஓர் ஆண்டில் அவை சுமார் 500 முட்டைகள் வரை இடுவதாகக் கூறுகிறார் பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளரும் மெல்லுடலிகள் வல்லுநருமான என்.ஏ.அரவிந்த்.

அதோடு உணவுச் சங்கிலியில், ஒவ்வோர் உயிரினத்திற்கும் அவற்றை உண்ணக்கூடிய வேட்டையாடி உயிரினம் இருக்கும். ஆனால், "இந்த நத்தைகளுக்கு இந்திய நிலப்பரப்பில் வேட்டையாடி எதுவும் இல்லாததும் இவை பெருகி சூழலியல் சமநிலையைக் குலைக்கக் காரணமாக அமைகின்றன" என்கிறார் அவர்.

விவசாயத்திற்கு ஊறு விளைவிக்கிறதா?

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

இந்த நத்தைகள் விவசாயத்திற்குப் பெரும் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த்.

"கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் எதை வேண்டுமானாலும் சாப்பிடும். புதர்கள், செடிகள் என இயற்கையில் வளர்ந்திருக்கும் தாவரங்களில் தொடங்கி, வாழை, பாகற்காய், வெண்டைக்காய், தக்காளி, உருளைக் கிழங்கு, பசலைக் கீரை, கொத்தமல்லி எனப் பல்வகை பயிர்ச் செடிகள் உள்பட அனைத்தையுமே சாப்பிடும்."

தாவரங்கள் மட்டுமின்றி இறந்த உயிரினங்களையும் அவை சாப்பிடுவதாகக் கூறினார் அரவிந்த்.

இந்த நத்தை இனம், "அளவில் சுமார் 15 செ.மீ வரைக்கும் வளரக்கூடியவை."

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில், மதுரை மாவட்டத்திலுள்ள பரவை என்ற பகுதியில் வாழைத் தோட்டங்களில் பெருந்திரளாகப் பரவிய இந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளால் பெருமளவிலான வாழை உற்பத்தி அழிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இவை கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் மத்தியில் முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது.

தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய் போன்ற செடிகளின் மீது பரவி முற்றிலுமாக அழித்துவிடுவதால், பெருமளவிலான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த நத்தைகளால் அதிகளவில் பாதிக்கப்படுவது சிறு, குறு விவசாயிகளே என்கிறார் முனைவர் அரவிந்த்.

"ஐம்பது ஏக்கர், நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளைவிட, ஒன்றிரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளே இதனால் அதிக இழப்புகளைச் சந்திக்கிறார்கள்.

ஏனெனில், பெருவிவசாயிகளால் ஒரு ஏக்கர் வாழை உற்பத்தியில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால், அந்த ஒரு ஏக்கர் மட்டுமே இருக்கும் விவசாயிக்கு, தனது மொத்த உற்பத்தியுமே வீணாகும்போது இழப்பின் வீரியம் பெரிதாக இருக்கும்," என்கிறார் அவர்.

சூழலியல் சமநிலையை எவ்வாறு குலைக்கிறது?

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

இவற்றின் வாழ்வியல் குறித்து விளக்கிய முனைவர் அரவிந்த், குளிர்ச்சியான பருவநிலையும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்போது மட்டுமே இவை நிலத்தின் மேல்புறத்தில் நடமாடுவதாகக் கூறினார். அதுதவிர அனைத்து நேரங்களிலும் நிலத்திற்கு அடியிலேயே அவை வாழ்கின்றன.

இவை அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதீதமாகப் பெருகியும் வருவதால், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பூர்வீகமாக வாழும் மற்ற நத்தை இனங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த்.

அதோடு இந்த நத்தைகள் மிகத் தீவிரமாகச் சாப்பிடுகின்றன. பொதுவாக, ஒரு நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கும் அங்குள்ள தாவரங்களுக்கும் இடையே ஓர் இயற்கை உறவு காணப்படும். அவை ஒன்றிணைந்து பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருவதால், ஓர் ஒத்திசைவு காணப்படும்.

ஆனால், புதிதாக ஊடுருவும் கிழக்கு ஆப்பிரிக்க நத்தையைப் போன்ற உயிரினங்களுக்கும் அவற்றுக்கும் இடையே எந்தவித ஒத்திசைவும் இருக்காது.

அதனால், இவற்றின் வேகத்திற்கும் பசிக்கும் உள்ளூர்த் தாவரங்கள் மற்றும் உயிரினங்களால் ஈடுகொடுக்க இயலாது. இதன் விளைவாக, மற்ற நத்தைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும், அது சில நேரங்களில் இன அழிப்புக்குக்கூட வித்திடும் என்கிறார் அரவிந்த்.

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

இந்த நத்தைகளின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றின் நடத்தைகளைக் கண்காணித்துள்ளேன். பெரும்பாலும், மாலை அந்தி சாயும் நேரத்தில் இருந்து காலையில் அதிகபட்சமாக 7 மணி வரை அவற்றின் நடமாட்டத்தைக் காண முடியும்.

இலைகள், பழங்கள், விதைகள் என அவை பாரபட்சமின்றிச் சாப்பிடுவதைக் கண்டுள்ளேன். ஒருமுறை எருக்கஞ்செடியின் அடித்தண்டு முதல் நுனிப்பகுதி வரை நிறைந்திருந்த நத்தைகளை எண்ணிப் பார்த்தபோது கிட்டத்தட்ட 30 நத்தைகள் இருந்தன.

இவை மழைக்காலங்களில் ஈரப்பதம் நிறைந்து காணப்படும்போது அதிகம் தென்படும். பிற காலங்களில் வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக நிலத்தடியில் சென்றுவிடுகின்றன.

மழைக்காலங்களில்கூட இரவு நேரங்களில் வெளியே நடமாடும் இவை, பகலில் நிலத்தடியில் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் தேடிச் சென்றுவிடுவதாகக் கூறுகிறார் அரவிந்த்.

கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதில் உள்ள சவால் என்ன?

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

இந்த நத்தைகளின் தாயகமாகக் கருதப்படும் புருண்டி, எத்தியோப்பியா, மொரிஷியஸ், கென்யா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இவற்றை வேட்டையாடிச் சாப்பிடக்கூடிய நத்தைகள், பறவைகள், தட்டைப்புழுக்கள் (Flatworms) இருக்கின்றன.

''ஆனால், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவற்றைச் சாப்பிடக்கூடிய வேட்டையாடிகளே இல்லை. இதனால் அவை பல்கிப் பெருகுகின்றன.

உதாரணமாக இந்திய நிலப்பரப்பை எடுத்துக்கொண்டால், இங்குள்ள தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துக்கும் இடையே இயற்கையாகவே ஓர் உறவு உருவாகியிருக்கும். இதற்கிடையே ஊடுருவும் உயிரினத்திற்கும் அதற்கும் தொடர்பிருக்காது.

இந்திய நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள் எதுவும் அவற்றைச் சாப்பிட விரும்பவில்லை. சொல்லப்போனால், இந்த நத்தைகளை அவை ஓர் உணவாகவே கருதவில்லை. இது இவற்றுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டது." என்கிறார் அரவிந்த்

"ஆக உணவுக்குப் பஞ்சமில்லை, வாழ்விடத்திற்குக் குறைவில்லை, அபாயங்கள் ஏதுமில்லை. இத்தகைய சொர்க்கபுரியைப் போன்றதொரு சூழலில் எந்தவோர் உயிரினமும் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்குப் பெருகவே செய்யும். அதுதான் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் விஷயத்திலும் நடந்துள்ளது.'' என்கிறார் அவர்.

ஹவாய் தீவிலும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றை அழிப்பதற்காக, ரோஸி வுல்ஃப் நத்தை என்ற வேட்டையாடி நத்தையை அறிமுகம் செய்தனர்.

ஆனால், "அவை கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை மட்டுமின்றி உள்ளூர் நத்தைகளையும் சாப்பிடத் தொடங்கியதால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டன," என்கிறார் அரவிந்த்.

இதன் பரவலைத் தடுக்க வழியே இல்லையா?

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளின் பரவலைத் தடுக்க முனைவர் அரவிந்த் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார்.

"பீருடன் வெந்நிலா எசென்ஸ் கலந்து அல்லது அழுகிய வாழைப்பழங்களை ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட வேண்டும். மாலை வேளையில் சீரான இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால், நத்தைகள் அதை நோக்கிப் படையெடுத்து இருப்பதைக் காண முடியும்," என்கிறார் அவர்.

அப்படிக் கூடும் நத்தைகளில் உள்ளூர் நத்தைகளும் இருக்க வாய்ப்புண்டு. அவற்றைக் கவனமாகப் பிரித்து எடுத்துவிட்டு, ஆப்பிரிக்க நத்தைகளை உப்புநீரில் போட்டால் அவை இறந்துவிடும்.

ஆனால், இந்தச் செயல்முறையை அனுதினமும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அரவிந்த். "மொத்தமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஆப்பிரிக்க நத்தைகளே இல்லை என உறுதியாகத் தெரியும் வரை இதைச் செய்ய வேண்டும்."

அவரது கூற்றுப்படி, ஒருவேளை இரண்டு நத்தைகள் இதிலிருந்து தப்பித்தாலும், அவை மீண்டும் பல்கிப் பெருகிவிடும். ஏனெனில், "இப்போது நாடு முழுக்க சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்த உயிரினம், ஆரம்பத்தில் இந்திய நிலப்பரப்பிற்குள் வந்தபோது அவற்றின் எண்ணிக்கை வெறும் இரண்டுதானே."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நோக்கி படையெடுக்கும் ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் : ஏற்படவுள்ள பேராபத்து

அண்மையில் தொடர்ந்த சீரற்ற காலநிலை காரணமாக தமிழர் பிரதேசங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளானதுடன் மக்கள் தொடர்ச்சியாக பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

இதில் முக்கிய விடயமாக ஆபிரிக்கா பெரும் நத்தைகள் (Giant African land snai) சமீபத்தில் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில், இவை பயிர்பச்சைகளை எல்லாம் தின்று தீர்ப்பதுடன் உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும் நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன.

இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் (P. Ayngaranesan) அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், இது குறித்து பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி,

https://ibctamil.com/article/disaster-from-african-giant-snails-for-farmers-1735910964#google_vignette

எதுக்கும் சீனர்கள் சைட் டிஷ்ஷாக இதனை உண்கின்றனரா என அறியவும். அவர்கள் உண்பார்களாயின், பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு வரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.