பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர, புட்டினுக்கு கடிதம்!
By
தமிழ் சிறி
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Posts
-
இதில் 1989 இலிலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலம், இந்த காலத்தில் இலங்கையில் நிலை கொண்டிருந்தத இந்திய அழிவு படை விலகிய காலம், அவர்களை கருநாநிதி வரவேற்க செல்லவில்லை காரணம் இலங்கையில் தமிழ் மக்களை அழித்த படையினரை வரவேற்கமாட்டேன் என. இரண்டாம் கட்ட போர் காலத்திற்கும் 1991 அவர் ஆட்சி நீக்கப்பட்டதற்குமிடையே சில மாதங்கள் இருந்ததனனால் அக்கால கட்டமாகவும் இருக்க முடியாது ஆகவே 1996 இற்கு பின்னரான கால கட்டமாக இருக்க வாய்ப்பிருக்கு என கணித்து உங்கள் வயதினை கணித்துள்ளேன், அப்படி பார்த்தால் நான் உங்களை விட வயதானவன்😁.
-
நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஆறுகள் மற்றும் நீர்வளங்களைப் பயன்படுத்துவதில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டங்கள் சில முக்கியக் கோட்பாடுகளை வலியுறுத்துகின்றன: 1. சம மற்றும் நியாயமான பயன்பாடு: பகிரப்பட்ட நீர்வளங்களை நாடுகள் சமமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த வேண்டும். இதில் சமூக மற்றும் பொருளாதார தேவைகள், மக்கள் தொகை, மாற்று வளங்களின் கிடைப்புகள் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன. 2. முக்கியமான சேதத்தைத் தவிர்த்தல்: ஒரு நாடு தனது நடவடிக்கைகள் மூலம் மற்ற நாடுகளுக்கு முக்கியமான சேதத்தை ஏற்படுத்தக்கூடாது. எந்த சேதமும் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஆலோசித்து தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். 3. ஒத்துழைப்பு கடமை: பகிரப்பட்ட ஆறுகளின் மேலாண்மையில் நாடுகள் ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பகிர்ந்து, ஆலோசித்து, திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 4. திட்ட அறிவிப்பு மற்றும் ஆலோசனை: புதிய அணைகள் போன்ற திட்டங்களை முன்னெடுக்க முனைந்தால், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த கோட்பாடுகள், 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “சர்வதேச நீர்வழிகளின் நவீன நவீனமற்ற பயன்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தம்” (UN Watercourses Convention) மற்றும் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “நாடுகள் கடந்து செல்லும் நீர்வழிகள் மற்றும் சர்வதேச ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த ஐரோப்பிய பொருளாதார ஆணைய ஒப்பந்தம்” (UNECE Water Convention) ஆகியவற்றில் உள்ளன. இந்த ஒப்பந்தங்கள், நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நீர்வளங்களை சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. (ChatGPT யைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. குறைபாடுகளைப் பொறுத்தருள்வீர் 😁) ✋ நீர்ப் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பாக UN ல் தெளிவான வரையறை இதுவரை இல்லை எனக் கூறப்படுகிறது என்பதைக் கவனிக்க.
-
இஸ்ரேல் சிறிய அணுக்குண்டைப் பாவித்ததா ? என்று முன்னணி ஊடகங்கள் எதிலும் செய்திகள் எவையும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. Israel drops 'earthquake bomb' on Syria causing huge mushroom cloud as Americans urged to leave US embassy in Damascus advises Americans to leave Syria as it issues warning about armed conflict and ‘terrorism throughout the country’ https://www.standard.co.uk/news/world/israel-earthquake-bomb-syria-tartus-middle-east-b1200171.html
-
By nunavilan · பதியப்பட்டது
குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் ஆடற்கலையென்றவுடன எங்களில் பலர் பரதநாட்டியத்தை மட்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதனோடு எங்களுக்கு பரிச்சியம் அதிகம் அதனால்தான். குச்சுப்புடி, கதகளி, மோகினியாட்டம் என்றெல்லாம் நிகழ்த்தப்படும் ஆடல்வகைகளை பயிலவும், அரங்கேற்றவும், ரசிக்கவும் எங்களுக்கு பொதுவாக சந்தர்ப்பம் கிடைப்பதி;லை. ஆனால் யாழ்மாவட்டத்தில் வல்வை மண்ணில் பிறந்த ஒரு நாட்டியக்கலைஞர், பரதத்தோடு இம்மூன்று ஆடல்வகைகளையும் இந்தியாவில் சிறந்தகுருமாரிடம் கற்றுத்தேர்ந்து, இலங்கை திரும்பியபின் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முக்கியமாக தெய்வீக அழகும் பக்திபாவமும் பொருந்திய அவரது குச்சுப்புடி நடனநிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது. அவர்தான் ரங்கா விவேகானந்தன்.. தனது எட்டாவது வயதில் தனது முதலாவது குரு காலஞ்சென்ற கீதாஞ்சலி கே.நல்லையா அவர்களிடம் பரதம் பயின்று அரங்கேறிய ரங்கா, பின்னர் தென்னிந்தியா சென்று பரதத்தின் நுணுக்கங்களை குரு மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடமும், கதகளி நாட்டியக்கலையை குரு கோபிநாத் அவர்களிடமும், மோகினி ஆட்டம் என்ற ஆடற்கலையை குரு கலாமண்டலம் நடனம் கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் பயின்று, தனது சிறப்புக்கலையான குச்சுப்புடி நடனத்தை குச்சுப்புடி கலைக்கழக நிறுவனரான குரு வேம்பட்டி சின்ன சத்தியம் அவர்களிடம் உயர்நிலைமாணவியாக தேர்ந்து, 'நாட்டிய விசாரத்' என்ற டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். தென்னிந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் குச்சிலாபுரம் என்ற கிராமத்தில் உருவாகியதாகக் கூறப்படும், இந்த ஆடற்கலை ஆரம்பத்தில் பிராமண ஆடவர்களாலேயே நிகழ்த்தப்பட்டதாம். சித்தேந்திர யோகி என்பவர் இதை செழுமைப்படுத்தி, பெண்கள் ஆடும்வண்ணம் அமைத்து பிரபல்யப்படுத்தினார் என்கிறார்கள். நாட்டியநாடகம் போன்ற அமைப்பில் பக்தி சார்ந்த கதைகள் சொல்லும் இந்த நாட்டியவடிவம், ஆடுபவரின் திறனால், வேறுபட்ட உணர்வுக்கோர்வைகளை பார்ப்பவர் மனதில் எளிதாக உருவாக்கும் எழில்மிகு கலையாகும். தனது குச்சுப்புடி நாட்டியக்குருவான வேம்பட்டி சின்னசத்யம் அவர்களுடன், இந்தியாவெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற ரங்கா, தொடர்ந்து விசேட அழைப்புக்களின் பேரில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, சுவீட்சலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலகப்பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். தொழில்ரீதியான மேற்கத்திய 'பாலே' நடனக்கலைஞர்கள் உள்ளிட்ட வேறுபட்ட நாட்டியக்கலைஞர்களுக்காக சிறப்புப் பயிற்சிப்பட்டறைகள் நடாத்தவும் ரங்கா அழைக்கப்பட்டிருக்கிறார். இத்தாலியில் ஸ்போலெற்றோ என்ற நகரில்; நடைபெற்ற 'இரண்டு உலகங்களின் நாட்டியவிழா', ஜெர்மனியில் பொன் நகரிலும், இத்தாலியில் அங்கோனா நகரிலும், குறோசியா நாட்டிலும் நடைபெற்ற சர்வதேச நாட்டியவிழாக்களில் இந்திய நடனக்கலையை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாட ரங்காவை அழைத்திருந்தார்கள். பின்னாளில் இவ்வாறு உலகப்பிரசித்திபெற்ற இந்தக்கலைஞரின் ஆரம்பகாலத்தில் வழங்கிய ஒரு குச்சுப்புடி நாட்டிய நிகழ்ச்சியில் நானும் சம்பந்தப்பட்டது ஒரு மறக்கமுடியாத அனுபவம். ரங்கா அப்போதுதான் இந்தியாவில் படித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார். அவரது தந்தையாரான விவேகானந்தனும், எனது பெரியதந்தையாரான பொன்னையாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் கிராமமான கரவெட்டிகிழக்கில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ரங்காவின் குச்சுப்புடி நடன நிகழ்வொன்றை நடாத்துவதற்கு சம்மதித்தார்கள். இருபது வயதிற்கு அண்மித்த எனது இளமைக்காலத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளனாக அமையும் வாய்ப்பை பெரியப்பா எனக்கு தந்தார். எனக்கு மிகுந்த சந்தோசம். ரங்காவின் குச்சுப்புடி நடனத்திற்கான பாடல்கள் யாவையும் தென்னிந்தியாவிலிருந்தே பதிவுசெய்து கொண்டு வந்திருந்தார்கள்;. எல்லாமே தெலுங்குப்பாடல்கள். ஆனால் அவற்றுக்கான விளக்கத்தை தமிழில் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நடனத்தின் முன்னதாக, அந்த விளக்கங்களை சுவைபட சொல்லிவைத்தேன். கலைஞனாக வரவேண்டுமென்ற ஆசை துளிர்விட்டுக்கொண்டிருந்த காலம். எனவே சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு விளக்கங்களை நாடகபாணியில் ஆனால் மிகையில்லாமல் வழங்கியதாக ஞாபகம். அத்தோடு ரங்கா கொழும்பிலும், கண்டியிலும் நடாத்திய இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு என்னை 'நிகழ்ச்சித்தொகுப்பாளனாக' அழைத்து சந்தோசப்படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ரங்காவின் மிகச்சிறந்ததோர் நடனநிகழ்வை அண்மையில் நின்று பார்க்கவும், அதில் சிறிதளவேனும் என்பங்கும் இருக்க நேர்ந்ததும் சந்தோசமான நினைவுகளாயின. இசையைப்போலவே, நடனத்திற்கும் பூகோள எல்லைகளோ, இனங்களின் பிரிவுகளோ தடையாகவிருப்பதில்லை என்பார்கள். இந்தக் கலைவடிவங்களைப் பொறுத்தவரையில் அனேகமான சுவர்களெல்லாம் இடிந்து போய்விடுகின்றன. கலை பலரையும், பல இனங்களையும், பல நாடுகளையும் இணைத்து ஒன்றாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த கருத்தின் அடிப்படையில் ரங்கா விவேகானந்தன் தொடரந்தும் தன் கலைப்பணியில் இயங்கிக்கொண்டிருக்கிறார். அதுவும் கீழைத்தேய கலையின் பரிச்சியமே இல்லாத தென் அமெரிக்காவின் ஆர்ஜென்ரீனா நாட்டில் வாழ்ந்து கொண்டு 'ஆனந்தராஜம்' என்ற பெயரில் இந்த நாட்டின் முதலாவது இந்திய நாட்டிய, இசைப்பள்ளியை நிறுவி நடத்திவருகிறார். ஸ்பானியமொழி பேசும் சிறுமிகளும், இளம்பெண்களும், தென்னிந்தியபாணி நடன ஆடையலங்காரங்களுடன், குச்சுப்புடி நடனங்களை இவரது நெறியாள்கையில் பயின்று அரங்கேறி வருகிறார்கள். மொழிபுரியாவிடினும், இசையினாலும், ஆடற்கலையின் அழகினாலும் கவரப்பட்ட அந்நாட்டுப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு புதிய கலைவடிவத்தில் பயிற்சிபெற ரங்காவின் 'ஆனந்தராஜம்' நடனப்பள்ளிக்கு மகிழ்வுடன் அனுப்பிவருகிறார்கள். கனடா, இலங்கை, அவுஸ்திரெலியா, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவரிடம் பயின்று அரங்கேறியவர்கள் அந்த பாரம்பரியத்தை தொடர்ந்தும் பரப்பிவருகிறார்கள். இவர்களோடு ஆர்ஜென்ரீனா நாட்டிலிருந்து சில்வியா றிஸ்ஸி, லியோனாரா பொனெற்றோ, நேற்றாலியா சல்காடோ என்ற பெயர்களும் வெகுசீக்கிரத்தில் இணைந்து கொள்ளப்போகின்றன. 'மிகுந்த அழகுடன் காந்தம் போல பார்ப்போரைக் கவரும் நாட்டிய பாணி இவருடையது' என்று லண்டன் ரைம்ஸ் நாளேடு இவருடைய நாட்டிய நிகழ்ச்சி பற்றி கூறியிருக்கிறது. இப்படி எண்ணிலடங்கா பாராட்டுக்களை உலகெங்கிலிருந்தும் தனதாக்கிக்கொண்ட நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் எங்கள் மண்ணுக்கு சொந்தமானவர் என்று நாங்கள் நிச்சயமாப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இறுதியாக ஒரு தகவல், நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் அடியொற்றி பாக்குநீரிணையை நீந்திக்கடந்து, வேறு பலசாதனைகளை நிறுவி, ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறப்பைத்தழுவிக்கொண்ட 'ஆழிக்குமரன்' ஆனந்தன், ரங்காவின் (ரங்கமணியின்) உடன்பிறந்த சகோதரனாவார். https://ksbcreations1.blogspot.com/2010/10/6.html
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts