‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்!
By
கிருபன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
0
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
Posts
-
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் - முழு விவரம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது முதல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன. இந்த வழக்கில் இதுவரை தெரிய வந்துள்ள தகவல்கள் என்ன? நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது? இதையொட்டி கடந்த சில தினங்களில் தமிழக அரசியலில் நடந்த சம்பவங்கள் யாவை? அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ன நடந்தது? சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். டிசம்பர் 25-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் 37 வயதான ஞானசேகரன் என்றும், அவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டார். எஃப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தில் என்ன நடந்தது? பின்னர் டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது. மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின. ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடாது என்று சட்டங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் இந்த விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டுமென்று அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலோடு முன்வந்து, அரசு மீது நம்பிக்கை வைத்துப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது," என்றார். ''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இதற்கிடையே, காவல்துறையின் அலட்சியம் மட்டுமே இதற்குக் காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் டிசம்பர் 28-ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் நடத்தியது ஏன்? மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமையன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 'மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை' எனக் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் வெளியிட்ட விளக்கத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் விருப்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார். அதோடு, "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" எனக் குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் திமுகவை சேர்ந்தவரா? இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலானது. அதுகுறித்து டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை" என்று தெரிவித்தார். மேலும், ஞானசேகரன் திமுக நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது எனக் கூறிய அவர், "பொதுவாக மக்கள் அமைச்சர்களைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது. துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மக்கள் நின்று புகைப்படம் எடுப்பது சகஜம்தான்," என்று விளக்கமளித்தார். அதோடு, "தமிழ்நாடு முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல் இல்லை, தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்," என்றும் கூறினார். இந்நிலையில் டிசம்பர் 28 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த அண்ணாமலை, "மாணவியை பாலியல் தாக்குதல் செய்த திமுக நிர்வாகி ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் வெகு சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்," என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபர் "திமுகவை சேர்ந்தவர் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று திமுக அரசு நினைக்கிறது?" என்றும் விமர்சித்துள்ளார். சென்னை காவல்துறை அளித்த விளக்கம் என்ன? இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 26-ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், "ஒரு குற்றவாளி எந்தக் கட்சியில் இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதியளித்தார். அப்போது சமூக ஊடகங்களில் எஃப்.ஐ.ஆர் வெளியானது பற்றி பதிலளித்த அவர், இத்தகைய வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாகக்கூடாது என்றும் அது தவறும் என்றும் தெரிவித்தார். அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேவேளையில், "எஃப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தகவல்கள் லாக் ஆவதில் தாமதமாகி இருக்கலாம். அந்த நேரத்தில் இதைப் பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பார்கள்" என்று விளக்கினார். குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறித்துப் பேசிய ஆணையர், "இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் என்ற ஒருவர் மட்டுமே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. இதுபோல வேறு யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றார். தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட அதிர்வலைகள் யாவை? கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தமிழக தலைநகரின் முக்கிய இடங்களில் ஒன்று. அங்கு இத்தகைய சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், "இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதை வன்மையாகக் கண்டித்ததோடு சாட்டையடி போராட்டத்தையும் மேற்கொண்டார். டிசம்பர் 26ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்று கூறினார். மேலும், டிசம்பர் 27 அன்று காலை 10 மணியளவில் கோயம்புத்தூரில் தனது வீட்டின் முன்பாக, அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் சில முறை அடித்துக்கொண்டார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தனது சாட்டையடி போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தான் கையில் எடுத்துள்ள போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும் என்றார். "அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இன்று இந்தப் போராட்டத்தைத் வேள்வியாகக் கையில் எடுத்துள்ளோம்" என்றார். அதோடு 48 நாட்கள் விரதம் இருக்கவுள்ளதாகக் கூறியதோடு, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்றும் சூளுரைத்தார். நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது? Getty Images இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிசம்பர் 27ஆம் தேதி மாலை நடந்த விசாரணையின்போது, "வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல் ஆணையர் எப்படி கைதானவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வந்தார்?" என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதோடு பாதிக்கப்பட்ட மாணவியைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, மாணவி அங்கு சென்றிருக்ககூடாது என்று கூறக் கூடாது. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்," எனக் கூறினர். எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறுநாள்(டிசம்பர் 28) விசாரணையின்போது, எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்து விளக்கமளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டதாக விளக்கமளித்தார். அதேவேளையில், இந்த விவகாரத்தில் 14 பேர் மீது விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சர்ச்சையான காவல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் காவல்துறை யாரையும் பாதுகாக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தவே காவல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்ததாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பிலான வளாகத்தில் 8 வழிகள் உள்ளன. வளாகத்தில் 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 செயல்படுகின்றன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார். அமைச்சர்களுடன் எடுத்த புகைப்படம் பற்றி நீதிபதிகள் கூறியது என்ன? இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, "குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் செல்வாக்கு நிறைந்த அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்" என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒரு நிகழ்வில் நம்முடன் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து முடிவுக்கு வரக்கூடாது. இது பொருந்தாத வாதம்" எனக் கண்டித்து, குற்றச் சம்பவம் குறித்து மட்டும் பேசுமாறு கூறினர். இறுதியாக, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் எவ்வளவு முக்கியமானது? கிண்டியில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி. டெக், ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வளாகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. உயர்தர தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்வியை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை வடிவமைப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 1978இல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம், மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் திறமையான நிபுணர்களை உருவாக்கும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வலுவான அடித்தளத்துடன், பரந்த அளவிலான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyvjw17px0o
-
தென் கொரியா: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 124 பேர் உயிரிழப்பு 29 டிசம்பர் 2024, 01:50 GMT Reuters புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 124 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. Reuters இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. Reuters ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். "விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது. 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது. Reuters தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார். "இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. EPA/Yonhap சோய் சாங்-மோக் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார். மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது. EPA/Yonhap ஜேஜூ ஏர் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த விபத்து நடந்ததற்காக மணிப்பு கேட்டனர் முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது. ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c20e26w86g7o?at_campaign=ws_whatsapp
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
2024 : வென்றவை தோற்றவை – நிலாந்தன். இந்த ஆண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்கள் தமிழ் அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்தன.இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலானது தமிழ் அரசியலில் சீரழிவை குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் சீரழிவை வெளியே கொண்டு வந்தது. இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமையை வெளியே கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியத் தரப்பின் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கமே தேர்தல்தான். கட்சித் தலைவரை தேர்தல்மூலம் தெரிந்தெடுப்பது கட்சி ஜனநாயகத்தைச் செழிப்பாக்கும். எனினும் தமிழரசுக் கட்சி தன் தலைவரை தேர்தல்கள்மூலம் தெரிந்தெடுக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கவில்லை.அந்த அடிப்படையில் சுமந்திரன்தான் கட்சியின் தலைவராக வந்திருக்க வேண்டும்.ஏனென்றால் சம்பந்தர் அவரைத்தான் தன்னுடைய வாரிசாக வளர்த்தார்.ஆனால் சுமந்திரன் ஜனநாயக வழிமுறைமூலம் தன் பலத்தைக் காட்ட விரும்பினார்.எனினும் அது அவருடைய பலவீனத்தைத்தான் காட்டியது.அவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் விளைவாக கட்சி இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அந்த தேர்தல் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் உட்பகையை வெளியே கொண்டு வந்தது. தமிழரசுக் கட்சி எந்தளவுக்குத் தூர்ந்து போய் உள்ளது என்பதனை அது வெளிப்படுத்தியது. அதேபோல இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்த் தேசிய அரசியல் எந்தளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது. சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டதை;டக்ளஸ்,பிள்ளையான்,அங்கஜன் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டதை;தமிழரசு கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்ததை,வெற்றியாகக் காட்டமுடியும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் ஆசனங்கள் குறைந்துவிட்டன.அது ஒப்பீட்டளவில் தோல்வி. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தேசமாக, பலமாக இல்லை. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம்.ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளிப்படுத்தும் இரண்டு தேர்தல் நடந்திருக்கின்றன.இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியை பெறத் தேவையான பலத்தை பெருக்கிக் கொள்ள முடியாதிருக்கிறார்கள் என்பதனை வெளியே கொண்டுவந்தன. எனினும் இந்த இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் ஒரு தேர்தல் வந்தது.அது ஜனாதிபதித் தேர்தல்.அதில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் ஏறக்குறைய 2,26,000.அது ஒரு அடிப்படை வெற்றி.கட்சிகளைக் கடந்து தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்ட போகிறோம் என்று கூறி ஒரு மக்கள் அமைப்பு அந்தத் தேர்தலைக் கையாண்டது.ஏழு கட்சிகளை வைத்து கட்சிகளைக் கடந்த ஒரு வாக்குத் திரட்டியை ஏற்படுத்தலாம் என்று அந்த அமைப்புத் திட்டமிட்டது. அதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்புக்குள் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். கட்சிகளைக கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தின.இங்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.தேர்தல் பரப்புரைக்காக பிரம்மாண்டமான கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பொழுது,குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்களைக் கொண்டுவரும் பேருந்துகளுக்கு சிறிய தொகைப் பணம் வழங்கப்பட்டது. எரிபொருட் செலவு,சாரதி மற்றும் வழிநடத்தினருக்கான சிற்றுண்டி,தேனீர் செலவுகள். இவ்வாறு வலிகாமம் பகுதியில் இருந்து மக்களைக் கொண்டு வந்த ஒரு பேருந்து உரிமையாளரிடம் செலவுப் பணத்தை கொடுத்த பொழுது, அவர் அதை வாங்க மறுத்து விட்டார்.”15 ஆண்டுகளாக கட்சிகளுக்குத்தான் ஆட்களை ஏற்றி இறக்குகிறேன். இதுதான் முதல் தடவை இப்படி ஒரு கூட்டத்துக்கு ஆட்களைக் கொண்டு வருவது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை இப்படி ஒன்றாக ஒரு கூட்டத்துக்கு அழைத்துக் கொண்டு வருவது என்பது புதியது. 2009க்கு முந்திய நினைவுகளை அது மீட்டியது. எனக்கு நீங்கள் விருப்பம் என்றால் எரிபொருள் செலவு மட்டும் தாருங்கள்” என்று கேட்டார். கட்சி கடந்து தமிழ் மக்களைத் திரட்டும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு எழுச்சி ஏற்பட்டது என்பதனை காட்டும் ஒரு உதாரணம் அது. அதுபோலவே ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை கிராமங்கள் தோறும் சிறிய மற்றும் பெரிய மக்கள் சந்திப்புகளை நடத்தியது.இந்த சந்திப்புகளில் 75 விகிதமானவற்றில் ஒரு விடயம் திரும்பத் திரும்ப மக்களால் கூறப்பட்டது. என்னவென்றால், “கட்சிகளோடு வராதீர்கள், மக்கள் அமைப்பாக வாருங்கள், கட்சிகள் வேண்டாம்” என்பதே அது. ஆனால் மக்கள் அமைப்பு தேர்தலை நேரடியாகக் கையாள விரும்பவில்லை. அதற்குரிய கட்டமைப்புப் பலமும் இருக்கவில்லை. எனவே கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியது.அந்தப் பொதுக் கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய அனுபவம்.கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எழுதிச் செயல்படுவது என்பது. ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையும் அவ்வாறான ஓர் அனுபவந்தான். ஆனால் அங்கே புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்ந்தபின் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாகியது. அது தேர்தலில் ஒரு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது.கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் சுமார் ஒன்றரை லட்சம் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. ஒரு பெரிய ஊடகத்தின் முதலாளி மக்கள் அமைப்பிடம் சொன்னார் “கிழக்கில் இருந்து கொண்டு வரும் ஒரு வேட்பாளருக்கு வடக்கில் வாக்களிப்பார்களா?” என்று. “ஒரு பத்தாயிரம் வாக்குகள் கிடைக்குமா” என்று கேட்டார்.ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட 20 மடங்கு வாக்குகள் கிடைத்தன. தமிழ்ப் பொது வேட்பாளர் கடந்த 15 ஆண்டு கால தேர்தல் அரசியலில் தமிழ் மக்களுக்கு ஒரு புது அனுபவம். தமிழ்ப் பொது வேட்பாளரை இந்தியாவின் புரஜக்ட் என்று கூறி நிராகரித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது சிவில் சமூகங்கள் முன் கை எடுத்ததனால் உருவாகிய திரட்சி என்ற பொருள்பட அதை வியாக்கியானம் செய்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளை தேசியவாத வாக்குகள் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.அது காலத்தால் பிந்திய ஞானம்.கஜேந்திரக்குமாரை அந்த அணிக்குள் இணைப்பதற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை கடுமையாக உழைத்தது.ஆனால் கஜேந்திரன் ஒரு சந்திப்பின்போது சொன்னார் “இந்த விடயத்தில் நீங்கள் வென்றால் நாங்கள் எங்களிடம் இப்பொழுது இருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.அதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் பொது வேட்பாளரை எதிர்க்கிறோம்.” என்று. சிறீதரன் சொன்னார் “மக்களமைப்பு சுயேட்சையாக வேட்பாளர்களை இறக்கப் போவதாக எமது ஆதரவாளர்கள் கதைக்கிறார்கள்” என்று. ஒரு மூத்த அரசியல்வாதி மற்றொரு மூத்த அரசியல்வாதி மற்றொரு கட்சியின் தலைவரிடம் கூறினாராம் “இவங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இல்லாமல் போய் விடுவோம்” என்று. சுமந்திரன் அதனை மூர்க்கமாக எதிர்த்தார். அதை ஒரு கேலிக் கூத்து என்று வர்ணித்தார். மக்கள் அமைப்பைக் கடுமையாக எச்சரித்தார். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழும் வாக்குகள் அனைத்தும் “வீணாய் போகும் வாக்குகள்” என்று எச்சரித்தார்.அதனை அவர் சஜித்தின் கூட்டத்தில் பேசும்போது சொன்னார். தமிழ் ஊடகங்களிலும் ஒரு பகுதி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இருந்தது. ஊடகவியலாளர்களில் சிறு பகுதியினர் எதிராக இருந்தார்கள். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் முகநூலில் எழுதினார் “கட்டுரை எழுதுவது வேறு தேர்தலில் வேட்பாளர் நிறுத்தி வெல்வது வேறு இரண்டும் ஒன்று அல்ல” என்று. தமிழ் மக்கள் பொதுச்சபையைச் சேர்ந்த கருத்துருவாக்கிகளை சில ஊடகவியலாளர்களும் சில யூடியூப் வெறுப்பர்க்களும் எதிரியைவிடக் கேவலமாக சிறுமைப்படுத்தினார்கள். தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் பயந்தார்கள். பெரும்பாலான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் பயந்தார்கள். அல்லது உஷார் அடைந்தார்கள். “நாடு முழுவதும் மாற்றத்துக்காக நிற்கும் பொழுது நீங்கள் மட்டும் அதற்கு எதிராக போகப் போகிறீர்களா” என்று அனுர கேட்டார்.தமிழ் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது. முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனிடம் சொன்னார்.”தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது பொதுவான பேரழிவு”என்று சஜித் எச்சரித்தார். ஆனால் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்கையும் கிழக்கையும் இணைத்தார்.தமிழ் தேர்தல் வரலாற்றில் ஒரு தனி நபருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகளை அவர் வென்றார். எனினும் பொது வேட்பாளருக்கு கிடைத்த அடிப்படை வெற்றியை கொண்டாட முடியவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டது.அடுத்த தேர்தலை கையாள்வதற்கு மக்கள் அமைப்பு தயாராக இருக்கவில்லை. மக்கள் அமைப்புக்குள் இருவேறு கருத்துக்கள் கிளம்பின. அதனால் மக்கள் அமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன.மக்கள் அமைப்பு தேர்தலைக் கையாளாத ஒரு பின்னணியில்,வெற்றிபெற்ற சின்னத்தைத் தாங்கள் சுவிகரிப்பது என்று பொதுக் கட்டமைப்புக்கள் இருந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. அது பொதுக் கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறானது.அதன் விளைவாக கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு சோதனைக்கு உள்ளாகியது. சங்குச் சின்னத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கவில்லை.ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைக்கப்படாத கட்சிகள் மீண்டும் சிதறின. அதிகரித்த அளவில் சுயேச்சைகள் தோன்றின.தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குத் தண்டனையாக அமைந்தன. அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஒரே அளவு ஆசனங்கள்.தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை மேலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி தனிக் கட்சியாக அதிக ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது. ஏனென்றால் தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்களை தேசமாகத் திரட்டுவது.ஆகப் பெரிய திரளாகத் திரட்டுவது. அவ்வாறு திரட்டப்படாத காரணத்தால்தான் இம்முறை தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை குறைந்தது.தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தமிழரசுக் கட்சியும் உட்பட எல்லாக் கட்சிகளும் தோல்வியடைந்து விட்டன. எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவுகளை வெளியே கொண்டுவந்தன.எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளைப் பலப்படுத்தியது. இந்த ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்த குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரனுபவம் அது. கட்சிகளைக் கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளை அது புதுப்பித்தது. அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக உழைத்தால் மட்டும்தான் புதிய ஆண்டில் தமிழ் மக்கள் வெற்றி பெறலாம். https://athavannews.com/2024/1414409 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை! போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார். அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். இதில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1414404
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts