Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்குவியம் – சி.ஜெயசங்கர்.

adminJanuary 8, 2025
mark-1170x1166.jpg

நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை.

இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான வடபுல ஈழத்தமிழர்களது வாழ்வின் சவால்களைப் பார்வைக்கும், பகிர்விற்கும் அதன்வழியான பொது உரையாடலுக்குமான கலை ஊடகங்களாகவும், அடையாளங்களாகவும் பதிவாக்கியிருக்கின்றன. காலங்கடந்த வாழ்விற்குரியதான உணர்வுபூர்வமானதும், அறிவுபூர்வமானதுமான விடயப்பரப்பாக ஆக்கப்பட்டிருக்கின்றன.

அசாதராரணமான ஓவியங்களை எவரும் எதிர்பாராத வகையிலான வெகு சாதரணமான சாதனங்களில் படைத்துக் கொண்டே இருந்தமை ஓவியர் மார்க்குவின் வாழ்க்கையாக இருந்தது.

காலம் அவரது கைக்கு கிடைக்கச் செய்த எதனிலும் படைப்பை நிகழ்த்திச் சென்றிருக்கிறார். உயிரை வாங்க விழுந்து வெடித்த செல் சிதைவுகளில் இருந்து சிற்பங்களை உருவாக்குவதும் அவரது இயல்பாக இருந்தது. தராதரமான நீண்ட ஆயட்காலம் கொண்ட ஊடகங்களுக்காக அவர் அங்கலாய்த்துக் கிடக்கவில்லை. அனர்த்த காலத்தை எதிர்த்து கணந்தோறும் எதிர்வினையாற்றிய ஓவியக் கலைஞர் அவர்.

a.mark-paintings-708x800.jpg

ஓவியர் அ.மாற்கு அவர்களின் இந்தத் திறந்த பரந்த துணிந்த தன்மை பெரிதும் கவனத்திற்படாததும், நுண்ணிதானதுமான விடயங்களைப் பரந்து விரிந்த தளங்களில் உரத்துப் பேச வைத்திருக்கின்றன.

அன்றாட வாழ்வின் இடையறாத தொழிற்பாடாகவும்; புதிய புதிய ஆக்கமுறைகள் உத்திமுறைகளின் எதிர்பாராத சாதனப் பயன்பாடு என்பவற்றின் ஆற்றல் வெளிப்பாட்டுக் களங்களாக ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவிய இயக்கம் அமைந்திருப்பதைக் காணமுடியும்.

ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவியப் பயணம் தனிமனிதன் சார்ந்ததாக இருந்ததில்லை. அது ஓவியர் குழாமின் இணைந்த இயக்கமாக அவரது மாணவர்களுடன் இணைந்து ஏனைய ஓவியக் கலைஞர்களை இணைத்து மற்றும் பல்துறை அறிஞர், கலைஞர், இளைஞருடன் சேர்ந்து இயங்கியதாக இருக்கிறது.

ஓவியர் அ.மாற்கு அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம், விபத்தின் பின் சக்கர நாற்காலியில் நகர்ந்த நிலையிலும் அவரது ஓவிய உருவாக்கமும், மாணவர் உருவாக்;கமும் ஓயாது நிகழ்ந்து வந்திருப்பதைக் காணமுடியும்.

ஓவியர் அ.மாற்கு அவர்களின் வரன்முறை கடந்த ஓவிய ஆக்கமுறைகளும், அணுகுமுறைகளும் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர்ந்து இயங்கிய, வாழ்ந்த மனிதரின் பெரும் சிறப்பியல்பாகும்.

இத்தகைய சிறப்பியல்பு கொண்ட மனிதரின் இயக்கமானது போர், இடப்பெயர்வு, முற்றுகை வாழ்வு, பொருளாதாரத்தடை என்பவற்றைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைந்தது. அத்தகைய நிலைமையின் நெருக்குவாரத்துள் வாழ்ந்துகொண்டு ஈழத்தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் அவர்களது மாணவர் பரம்பரையின் ஓவியச் செயற்பாடுகள் மூலம் ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளது சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்களின் ஓவிய அதிர்வுகள் வலுவாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான மூலச்சக்தி ஓவியர் அ.மாற்கு அவர்கள் திகழ்ந்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் அமைந்துள்ள வீட்டின் சிறியதொரு வீட்டு முன்றலில் இருந்தும் பின்நாட்களில் வன்னியிலும், நிறைவாக மன்னாரிலும் பலரையும் இணைத்த தனிமனித ஓவியப் பயணத்தின் உலகந்தழுவிப் பரந்து விரிந்து செல்லும் எதனையும் எதிர்கொள்ளும் எதிலும் தங்கியிராத இயக்கந்தான் ஓவியர் அ.மாற்கு அவர்களுடையது. மாற்குவின் ஓவியப் பயணம் அவராலும் அவருடன் இணைந்த மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டவை.

முற்றுமுழுதாக கலைஞர் மைய பயணமாக அமைந்ததன் காரணமாக அதன் கலை வெளிப்பாடுகளான ஓவியங்களும் அந்தக் கலைஞர்கள் நோக்கிலானதாக அமைந்திருப்பது முக்கிய படிப்பினைக்குரியது. இதையொத்த சமாந்தரக் கலைப்பயணத்தை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது மூப்பிலான ஈழத்து நாடக அரங்க இயக்கத்திலும் காணமுடியும்.

எங்கள் வளத்தில் எங்கள் பலத்தில் எங்கள் தளத்தில் எங்கள் நோக்கில் நாங்கள் நின்றோம், முன்சென்றோம் என்ற வகையிலான படிப்பினைக்குரிய பயணம் இது.

அ.மாற்கு அவர்களது வியக்க வைக்கும் பயணம் குவியப்படுத்தப்பட வேண்டியது. அவரது படைப்பின் பொருள் மட்டுமல்ல படைப்பின் ஊடகங்களும்;; படைப்பாக்க முறைமைகளும் வியம்பப்படுத்தப்பட வேண்டியது. அ.மாற்கு அவர்களே வியம்பத்தக்க செய்தியாகி நிலைநிற்கின்றார். மாற்குவியம் என்பது இதுதான்.

சி.ஜெயசங்கர்

 

https://globaltamilnews.net/2025/210054/

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமன ஓர் ஒவியர்!

இவர் பிறப்பால் ஒரு சிங்களவர் என்றும், எங்கள்ண்ட கவி அருணாசலம் சாரின் ஆசான் என்றும் எங்கேயோ வாசித்திருக்கின்றேன். (தவறாக இருக்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

IMG-8003.jpg
மார்க் மாஸ்ரர்
எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும்.

மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான்.

ஒருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார்.

"இதிலையிருந்த ரண்டு புத்தகங்களைக் காணயில்லை. எடுத்தனீரோ?"

எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை.

"நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..."

"அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகங்களும் எங்கை? "

"எனக்குத் தெரியாது.."

"உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்."

நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான்.

"அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.."

மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன்.

"போட்டு வாறன்."

"அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் "

மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது.

அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று, அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது, என்னை சந்தேகித்தது என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை.

நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது.

"எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..."

நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

"வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.."

"தெரியும்..."

"தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?"

குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன்.

"மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்திருக்கிறான். சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்."

என்னால் எதுவுமே பேச முடியவில்லை.

"புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.."

"வாழ்த்துக்கள் மாஸ்ரர் "

"அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?"

கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.

"அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாகக் கையசைத்தார். மார்க் மாஸ்ரரை நான் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான்.

நான் புலம் பெயர்ந்து வந்த போது மார்க் மாஸ்ரரும் இடம் பெயர்ந்து மன்னாருக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது. 2002 இல் நான் தாயகம் போன போதுமன்னாருக்குச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா?” என அரசியல்துறையிடம் காரணத்தையும் சொல்லிக் கேட்டேன். “செய்யலாம்என்றார்கள். அடுத்தநாள் நேரில் வந்து செய்தி சொன்னார்கள், “மார்க் மாஸ்ரர் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் 2000ம் ஆண்டில் காலமாகிவிட்டார்என்று.

1973ம் ஆண்டு பிறந்த மார்க் மாஸ்ரரின் செல்வகுமாரனுக்கு இப்பொழுது 51 வயதாக இருக்கும். இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லை.

“நான் எனது மாணவர்களால் நினைவு கூரப்படுவேன்மார்க் மாஸ்ரர் சொன்னது நினைவில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கவி அருணாசலம் .........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

 தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) 1987 - இணைப்பு
அடுத்த தலைமுறை ஓவியர்கள் அனேகம் பேரை உருவாக்கிய ஆசான்.
அனுபவப் பகிர்வுக்கு நன்றி கவி அவர்களே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.