Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

484487998_1063527115812260_9012103329067

484565966_1063530089145296_7344260311536

  • Replies 51
  • Views 2.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னகோன், அரகலய போராட்டத்தின் போது... மகிந்த, கோத்தாவின் அடியாட்களுக்கு காலிமுகத்திடலில் அரகலய உண்ணாவிரத போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தச் சொல்லி கட்டளை

  • satan
    satan

    ஞானசார தேரரின் நிலையை பாத்தீங்களா? அதனால மற்றைய மொட்டையள் அடக்கிக்கொண்டு இருக்குதுகள். ஒன்று புதுசா கிளம்புது, நாளடைவில் அடங்கும். ஞானசார தேரர் மற்றைய அரசியல் தலைவர்கள் போல் இவரிடமும் போனவர், இனவாதத்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    பாதாள உலக கோஷ்டிகள்... தாம் செய்யும் செயலை கண்டு கொள்ளாமல் இருக்க, 200,300 போத்தல் என்று ரொக்கமாக கொடுத்திருப்பார்கள். இவ்வளவு வீட்டில் இருப்பில் இருந்தது என்றால், குடித்து முடித்தது.... இன்னும் எத்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண் 

Published By: DIGITAL DESK 3 19 MAR, 2025 | 09:23 AM

image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை  (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் (சி.சி.டி) எட்டு முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிஐடிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பல நாட்களாக லைமறைவாக இருந்து வந்த தென்னகோனைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை கோரி தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை 17 ஆம் திகதி  மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

அதனை தொடர்ந்து, தென்னகோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை  (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/209607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024-07-24-deshabandu.jpg?resize=650%2C3

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரண்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இதேவேளை உயர் நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், பிரிவு அதிகாரிகளும் மற்றும் துணைப் போலீஸ் அதிகாரிகளும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1425695

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-254.jpg?resize=750%2C375&ssl

தேசபந்து தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் விசேட அறிக்கை!

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

பல நாட்களாக தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

அத்துடன் நேற்று (18) குற்றப் புலனாய்வு திணைக்கள குழுவொன்று ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டை சோதனையிட்டதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 மது போத்தல்களும், 1009 மதுபான போத்தல்களும் அங்கு காணப்பட்டதாகவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது துப்பாக்கிகள் என சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ரக ஆயுதம் மற்றும் இரண்டு நவீன கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பாரியளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வந்தார்.

மாத்தறை நீதிவான் நீதிமன்றம் தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது, அதன் பிறகு அவர் மாத்தறை நீதிவானின் உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

பின்னர், குற்றப் புலனாய்வுத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது.

மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை இரத்து செய்யக் கோரி, இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை திங்கட்கிழமை (17) மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

https://athavannews.com/2025/1425749

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

484813161_1064368482394790_3221707927101

484964576_1064258035739168_4206551076506

485250490_1064257182405920_8950863952569

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024-07-24-deshabandu.jpg?resize=650%2C3

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதன்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், குறித்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1425780

5 hours ago, தமிழ் சிறி said:

795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 மது போத்தல்களும், 1009 மதுபான போத்தல்களும் அங்கு காணப்பட்டதாகவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ஸப்பா.... இவற்றுக்கிடையில் என்ன வித்தியசமாம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

ஸ்ஸப்பா.... இவற்றுக்கிடையில் என்ன வித்தியசமாம்?

வெளிநாட்டு போத்தல்களும், உள்நாட்டு போத்தல்களுமாக இருக்குமோ? 🤣

ஆதவன் செய்தி நிறுவனம் வாசகரின் மூளைக்கு வேலை தருகின்றது. 😂

ஒரு முன்னாள் பொலீஸ் மாஅதிபரின் வீட்டில் 795 + 214 + 1009 = 2018 மது போத்தல்கள் இருந்துள்ளது என்றால்.. அவர் எப்படிப் பட்ட யோக்கியனாக இருந்திருப்பார். ஒரு சாராய குதமே... வீட்டில் இருந்துள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் கைப்பற்றல் ; பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்.

Published By: Digital Desk 3

19 Mar, 2025 | 04:08 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை  குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023.12.31 ஆம் திகதி  வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன், தொடர்புடைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 6 பேரை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த்தியுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை  அரசுடமையாக்குவது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை  முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்  இன்றைய தினம்  மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ஹோகந்தர பகுதியில் உள்ள  தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் சோதனையிட்ட போது   வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 795 மதுபான போத்தல்கள், 214 வைன் போத்தல்கள் உட்பட  1009 மதுபான போத்தல்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல் தேசபந்து தென்னகோன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் இரண்டு ஆப்பிள்  வகையான ஸ்மார்ட் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றார்.

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் கைப்பற்றல் ; பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் | Virakesari.lk

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

485182188_1065269258971379_5278857168687

485695639_1065268708971434_1905692735152

485673750_1065154182316220_7117425907686

தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25-67da545da2a1b.jpg?resize=600%2C375&ss

தேஷபந்து தென்னகோனிற்கு விளக்கமறியலில் நீடிப்பு!

உயர் நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை  ஏப்ரல்  மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று பிற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேஷபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்திறகு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

தேஷபந்து தென்னகோனிற்கு விளக்கமறியலில் நீடிப்பு!

உயர் நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை  ஏப்ரல்  மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது. உய...
  • கருத்துக்கள உறவுகள்

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை - எட்டு வீடுகள் ஆனால் அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம்.

20 Mar, 2025 | 12:06 PM

image

முன்னாள் பொலிஸ்மா அதிபர்தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்ற ஒன்றில் பொலிஸார் ஈடுபட்டனர் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தின் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் திலீபா பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.பிரபாகரனை தேடுவது போல .

இவர் நேற்றுவரை தனது சமூக மத செல்வாக்கை பாவித்து கைதுசெய்யப்படுவதை தவிர்;த்து வந்தார்.

இவர் தனது முகவரியாக வழங்கியுள்ள வீட்டில் உண்மையில் பௌத்தமதகுரு ஒருவர் வசிக்கின்றார்.

கடந்த சில நாட்களாக பொலிஸார் அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,மற்றும் ஏனையவர்களிடம் இவர் எங்கிருக்கின்றார் என விசாரணை செய்தனர்.

செல்வாக்குள்ளவர்களுடன் இவர் உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளார்,இவரது வீட்டை சோதனையிட்டவேளை 795 மதுபான போத்தல்கள் அங்கு காணப்பட்டன.100க்கும் மேற்பட்ட ஆடம்பர பரிசு கூடைகள் காணப்பட்டன.

அரசாங்க ஊழியர்களால் சிறிய பரிசுப்பொதியை கூட பெறமுடியாது, இவரால் எப்படி இதனை பெற முடிந்தது.

அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை ,அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை,ஆனால் அவருக்கு எட்டு வீடுகள் உள்ளன.இதன் காரணமாகவே இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை விட ஆபத்தானவர் என தெரிவிக்கின்றேன் இவர் ஒரு பிசாசு.

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை - எட்டு வீடுகள் ஆனால் அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

485359262_1066103435554628_5684002074800

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2025 at 23:57, தமிழ் சிறி said:

ஒரு முன்னாள் பொலீஸ் மாஅதிபரின் வீட்டில் 795 + 214 + 1009 = 2018 மது போத்தல்கள் இருந்துள்ளது என்றால்.. அவர் எப்படிப் பட்ட யோக்கியனாக இருந்திருப்பார். ஒரு சாராய குதமே... வீட்டில் இருந்துள்ளது.

லஞ்சமாக மதுப்போத்தல்களை கேட்டிருப்பாரோ பதவியில் இருந்தபோது. இவர் பதவியில் இருந்தபோது, பல சமூக விரோதிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளாராம், அதனால்சிறையில்,  சிறைக்கைதிகளால் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாம் என இவரது சட்டத்தரணி வாதாடியுள்ளார். இவரே ஒரு சமூக விரோதி, சட்டத்தை மதித்து காப்பாற்ற வேண்டியவர்  சட்டத்திற்கு தண்ணி காட்டியவர், சட்டத்தை மதிக்கத்தெரியாதவர், இவர் யாருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருப்பார்? மதுப்போத்தல் கொடுக்க மறுத்தவர்களுக்கு? சட்டமா அதிபரின் சொலிசிற்றார் திலீப் சொல்கிறார், இவர் செய்த கர்மா வினைதான் இவரை பிடித்திருக்குதாம். அப்போ நாடுமுழுவதும் கர்மவினை நிறைந்திருக்கு, அவர்களை எப்போ அது பிடிக்கும்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

லஞ்சமாக மதுப்போத்தல்களை கேட்டிருப்பாரோ பதவியில் இருந்தபோது. இவர் பதவியில் இருந்தபோது, பல சமூக விரோதிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளாராம், அதனால்சிறையில்,  சிறைக்கைதிகளால் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாம் என இவரது சட்டத்தரணி வாதாடியுள்ளார். இவரே ஒரு சமூக விரோதி, சட்டத்தை மதித்து காப்பாற்ற வேண்டியவர்  சட்டத்திற்கு தண்ணி காட்டியவர், சட்டத்தை மதிக்கத்தெரியாதவர், இவர் யாருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருப்பார்? மதுப்போத்தல் கொடுக்க மறுத்தவர்களுக்கு? சட்டமா அதிபரின் சொலிசிற்றார் திலீப் சொல்கிறார், இவர் செய்த கர்மா வினைதான் இவரை பிடித்திருக்குதாம். அப்போ நாடுமுழுவதும் கர்மவினை நிறைந்திருக்கு, அவர்களை எப்போ அது பிடிக்கும்? 

பாதாள உலக கோஷ்டிகள்... தாம் செய்யும் செயலை கண்டு கொள்ளாமல் இருக்க, 200,300 போத்தல் என்று ரொக்கமாக கொடுத்திருப்பார்கள். இவ்வளவு வீட்டில் இருப்பில் இருந்தது என்றால், குடித்து முடித்தது.... இன்னும் எத்தனை ஆயிரம் போத்தல்களோ.

வெட்கக்கேடு. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொலிஸ் மாஅதிபர் செய்யும் வேலையா இது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பதவிகளையும் பாதுகாப்பையும் கொடுத்தவர்கள் யாரென்று வெளியில் வந்தால், அது இன்னும் வெட்கக்கேடு. அதையும் சரி என்று வாதாடுவார்கள். நாடு முழுவதுமே வெட்கக்கேட்டால் நிறைந்துள்ளது. இவர்  அதிகாரத்தில் இருக்கும் போது அளித்த   சாட்சியங்கள் மீண்டும் விசாரணை செய்யப்படவேண்டும், இவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவரது நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படவேண்டும். இவர் ஒன்று தற்கொலை செய்துகொள்ளலாம் அல்லது கொலை செய்யவும் படலாம். இவருக்கு உதவியவர்கள் யாவரும் விசாரணை, தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இவர் முறையாக மன்றில் ஆயராகி தன் பக்க நிஞாயத்தை எடுத்துக்கூறியிருந்தால்; இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. இவர் மறைந்தது, இவருக்குப்பின் நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பதையே நிரூபிக்கின்றன. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

485109978_3918124088429557_5076382953232

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-330.jpg?resize=750%2C375&ssl

சிறைச்சாலையில் தேஷபந்துக்கு விசேட வசதி!

இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி நேற்று (24) முதல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.

வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேஸ்பந்து தென்னகோன், அந்த உத்தரவினைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேஷபந்து தென்னகோன் கண்டி தும்பறை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டு, வீட்டில் இருந்து உணவு எடுத்துவர அனுமதி கோரியிருந்தார்.

சிறைச்சாலைகள் திணைக்களம் குறித்த கோரிக்கையை பரிசீலித்து வீட்டிலிருந்து உணவு எடுத்து வர அனுமதித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மூன்று வேளை உணவுக்கும் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1426353

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-336.jpg?resize=750%2C375&ssl

தேசபந்துக்கு எதிரான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சபையில் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வாக்களித்ததைத் தடுக்க, முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் SJB முதன்முதலில் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பை மீறி தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதாகவும், இந்த அரசியலமைப்பு மீறலுக்கு முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல, சபாநாயகரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பு சபையில் நடந்த நிகழ்வுகள் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டு, நாட்டின் உச்ச சட்டத்தை முற்றிலும் புறக்கணித்து நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

தேசபந்து தென்னகோன் அரசியலமைப்பை மீறி நியமிக்கப்பட்டபோதும், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்பட்டபோதும், இப்போது அவரை விமர்சிப்பவர்கள் முற்றிலும் அமைதியாக இருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

தாமதமாக இருந்தாலும் கூட, நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது கொண்டு வரப்படுவதைப் பற்றி அவர் திருப்தி தெரிவித்தார், மேலும் அதற்கு தனது கட்சியின் முழு ஆதரவையும் மீண்டும் வலியுறுத்தினார்.

இன்று காலை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசபந்து தென்னகோனை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426400

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

486767426_1071194568378848_5641462429826

486564341_1070679365097035_5946252911426

486749628_1070562555108716_4423823699845

  • கருத்துக்கள உறவுகள்

தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

29 MAR, 2025 | 10:20 AM

image

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பொலிஸாரிடமிருந்து  தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படும் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதுகாப்புப்  பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் என்பதுடன் மற்றையவர்  தலவத்துகொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆவார். 

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/210505

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-37.jpg?resize=750%2C375&ssl=

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில்!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 2) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவின் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தப் பிரேரணை தொடர்பான கவலைகள் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இந்த விவகாரம் பல கவலைகளை எழுப்புகிறது என்றார்.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நிலையியற் கட்டளைகளின் கீழ் சில வரம்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தப் பிரேரணையைத் தொடர விரும்புவதாகக் கூறினார்.

https://athavannews.com/2025/1427206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Deshabandu.jpg?resize=750%2C375&ssl=1

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
https://athavannews.com/2025/1427323

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

deshabandu-parliament-6.jpg?resize=650%2

தேஷபந்து தென்னகோன் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

”கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென” முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றத்தில் சற்று முன்னர்  சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமர்ப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை வெலிகம ஹோட்டலொன்றுக்கு அருகில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் உயிரிழந்த மற்றும் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில்  தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427961

################### #################### ########################

Update :தேஷபந்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Athavan News
No image preview

Update :தேஷபந்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான...

தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images-4.jpg?resize=275%2C183&ssl=1

பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாத்தறை நீதவான், பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோனுக்கு பத்துலச்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணை வழங்கி விடுவித்துள்ளார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்து இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428199

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.