Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பையா ஐ லவ் யு ........ பழைய பையனைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது . ....... சும்மா ஒரு ஜாலிக்காகத்தான் இதில் பங்கு பற்றுகிறோம் . ........ கடைசி அணியில் வருபவர்களுக்குத்தான் கலாய்ப்பதற்கு வசதிகள் இருக்கு . ......... முதல் அணியில் இருப்பவர்கள் சும்மா பம்மிக்கொண்டு இருக்க வேண்டும் ........ நான் கூட விலத்தித்தான் போனேன் ஆனால் அதுவா வந்து பிலாக்காய் பிசின் மாதிரி ஒட்டிக் கொண்டு நிக்குது . .........! 😂

ஜ‌ லவ் யூ ரூ த‌லைவ‌ரே❤️🥰👍

மிம்ஸ் சும்மா சிரிப்புக்காக‌ செய்த‌து😁

இன்று உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்க‌ அதிக‌ வாய்பு இருக்கு த‌லைவ‌ரே👍............................

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கும் அதே டீம்தான் விளையாடுதாம்! அப்ப இப்பவே முட்டைக்கோப்பிக்கு ஆர்டர் பண்ணலாம்!

CSK (probable XII): 1 Devon Conway, 2 Rachin Ravindra, 3 Rahul Tripathi, 4 Vijay Shankar, 5 Shivam Dube, 6 Ravindra Jadeja, 7 MS Dhoni (capt, wk), 8 R Ashwin, 9 Anshul Kamboj, 10 Noor Ahmad, 11 Khaleel Ahmed, 12 Matheesha Pathirana

LSG (probable XII): 1 Aiden Markram, 2 Mitchell Marsh/Himmat Singh, 3 Nicholas Pooran, 4 Rishabh Pant (capt, wk), 5 Ayush Badoni, 6 David Miller, 7 Abdul Samad, 8 Shardul Thakur, 9 Akash Deep, 10 Ravi Bishnoi, 11 Avesh Khan, 12 Digvesh Rathi

டூபேஐயும் டோனிஐயும் தவிர சென்னை அணியில் பவர் ஹிட்டேர்ஸ் யாரும் இல்லை! LSG இல் ஐந்துபேர் இருக்கிறார்கள்!

CSKன் மீள் எழுச்சி இன்று ஆரம்பமாகிறது என்ற எதிர்பார்ப்பு எகிர்கிறது. CSKன் எழுச்சி யாழ் களத்தையும் புரட்டிப் போடும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

க‌ந்த‌ப்பு அண்ணையும் அபிஷேக் ஷர்மாவை தான் தெரிவு செய்து இருக்கிறார்👍...............................

நான் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களை பெறுபவர் என்பதில் அபிஷேக் சர்மாவை தெரிவு செய்தேன். தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் தெரிவு செய்யவில்லை.

2 minutes ago, செம்பாட்டான் said:

CSKன் மீள் எழுச்சி இன்று ஆரம்பமாகிறது என்ற எதிர்பார்ப்பு எகிர்கிறது. CSKன் எழுச்சி யாழ் களத்தையும் புரட்டிப் போடும்.

SRH, MI ஆகிய அணிகள் கடைசி போட்டிகளில் எழுச்சி பெற்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரன்டாவதாக வந்ததையிட்டு விருந்துக்கு ஏற்ப்பாடு செய்திருக்கிறேன்.தவறாமல் எல்லாரும் கலந்து கொழ்ழுங்கோ.😂

  • கருத்துக்கள உறவுகள்

CSK துரத்துவதற்கு முடிவு செய்திருக்கினம்.

அணியில் இரு மாற்றங்கள். அஸ்வினையும் டெவோன் கான்வேயையும் தூக்கியாச்சு. ஷேக் ரசிட் ஆரம்பத் துடுப்பராகவும் ஒவோட்டனும் அணியில் இணைந்திருக்கினம்.

ஷேக், 19 வயதுக்குட்பட்ட அணியில் சிறப்பாக விளையாடினவர். இப்போது 20 வயதாகுது. மூன்று வருடமாக அணியில் இருக்கிறார். முதன் முதலாக விளையாடப் போகிறார்.

7 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் இரன்டாவதாக வந்ததையிட்டு விருந்துக்கு ஏற்ப்பாடு செய்திருக்கிறேன்.தவறாமல் எல்லாரும் கலந்து கொழ்ழுங்கோ.😂

இஞ்ச, முட்டைக் கறி வேண்டாம். வேற ஏதாவது, நல்ல உறைப்பா, ஒண்ட வையுங்க. 🤣

37 minutes ago, கந்தப்பு said:

SRH, MI ஆகிய அணிகள் கடைசி போட்டிகளில் எழுச்சி பெற்றன.

இன்று வென்றால்தான், மேலே வரமுடியும். வெல்லுவினமா. பூரான் என்ன கட்டங்கட்டி வாறாரோ தெரியா. எதுக்கும் பூரானுக்கு ஒரு பூசையைப் போடவேண்டியதுதான்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணியில் பெரிய‌ மாற்ற‌ம்

அஸ்வினை நீக்கியாச்சு

தீப‌க் கோட‌ விளையாட‌ மாட்டார்

நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்

இண்டைக்கும் தோத்தா சென்னை அணியால் பிலே ஒவ் போக‌ முடியாது மீத‌ம் இருக்கும் 8 போட்டிய‌ தொட‌ர்ந்து வெல்ல‌னும்

அப்ப‌டி வெல்ல‌ சாத்திய‌ம் மிக‌ குறைவு.........................

  • கருத்துக்கள உறவுகள்

வாவ். என்ன ஒரு பிடி. திரிப்பாதி.... நீ ஒரு விண்ணன்தான். மேலே எழுந்த பந்தை சரியாகக் கணித்து, மிகவேகமாக ஓடிக்கொண்டே பிடித்தார். வாவ். முதலாவது விக்கட் விழுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நிக்ல‌ஸ் பூரானை 8ர‌ன்ஸ்சுட‌ன் அவுட் ஆக்கி விட்டின‌ம்..................விளையாடின‌ 5 மைச்சில் பூரான் அடி செம‌ அடி................இந்த‌ விளையாட்டில் சீக்கிர‌ம் அவுட் ஆகி விட்டார்...................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

நான் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களை பெறுபவர் என்பதில் அபிஷேக் சர்மாவை தெரிவு செய்தேன். தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் தெரிவு செய்யவில்லை.

SRH, MI ஆகிய அணிகள் கடைசி போட்டிகளில் எழுச்சி பெற்றன.

jamie overton விளையாடும் போது க‌ந்த‌ப்பு அண்ணா தான் என் க‌ண் முன்னே வ‌ந்து போகிறார்......................................

  • கருத்துக்கள உறவுகள்

CSKக்கு எல்லாம் நல்லபடியாப் போய்க்கொண்டிருக்கு. நமக்கு முட்டைதாறதில அவ்வளவு விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

CSKக்கு எல்லாம் நல்லபடியாப் போய்க்கொண்டிருக்கு. நமக்கு முட்டைதாறதில அவ்வளவு விருப்பம்.

நல்லபடியாகப் போய்க் கொண்டிருப்பதை நடு ஆற்றில் தள்ளிவிடும் திறமை இந்த சென்னை அணிக்கு இருக்கின்றது.................🤣.

180 அடிக்க வேண்டும் என்றால், 160 இல் அப்படியே நின்று விடுவார்கள்................😜.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 3-4 போட்டிகள் சென்னை வெல்லும் என்று பதிந்தேன் தோற்றது.

இன்று தோற்கும் என்று பதிந்துள்ளேன்.

எனவே வெல்லும்.

இன்றும் சென்னை தோற்றால் எப்போதும் தமிழனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

180 அடிக்க வேண்டும் என்றால், 160 இல் அப்படியே நின்று விடுவார்கள்................😜.

நித‌ர்ச‌ன‌ உண்மை குரு👍........................

ல‌க்னோ 180 அடிச்சால் சென்னையால் 181அடிக்க‌ முடியாது..............டெஸ்ட் மைச் விளையாடி விட்டு போவின‌ம் சென்னை அணி வீர‌ர்க‌ள்😁.....................................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரசோதரன் said:

நல்லபடியாகப் போய்க் கொண்டிருப்பதை நடு ஆற்றில் தள்ளிவிடும் திறமை இந்த சென்னை அணிக்கு இருக்கின்றது.................🤣.

180 அடிக்க வேண்டும் என்றால், 160 இல் அப்படியே நின்று விடுவார்கள்................😜.

179வரையும் அடிக்கலாம். மனதைத் தளர விட்டுடாதீங்க😁

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

கடந்த 3-4 போட்டிகள் சென்னை வெல்லும் என்று பதிந்தேன் தோற்றது.

இன்று தோற்கும் என்று பதிந்துள்ளேன்.

எனவே வெல்லும்.

இன்றும் சென்னை தோற்றால் எப்போதும் தமிழனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.

சென்னை வீர‌ர்க‌ளை ந‌ம்ப‌ முடியாது அண்ணா

5மைச்சில் சுத‌ப்பு சுத‌ப்பென‌ சுத‌ப்பின‌வை................ல‌க்னோ அணிய‌ 160க்குள் ம‌ட‌க்க்க‌ கூடும்

இங்லாந் வீர‌ர் மோர்ன் அலிய‌ சென்னை அணி மீண்டும் ஏல‌த்தில் வேண்டி இருக்க‌னும் ந‌ல்ல‌ திற‌மையான‌ வீர‌ர்

இப்போது அவ‌ர் கே கே ஆர் அணியில் சிற‌ப்பாக‌ விளையாடுகிறார்

ப‌ந்தை ந‌ல்லா சுழ‌ட்டி போடுவார்

உள்ளூர் கில‌ப்புக‌ளில் தொட‌க்க‌ வீர‌ரா வ‌ந்து ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வ‌ர்

சென்னை அணிக்காக‌ சில‌ வ‌ருட‌ம் விளையாடின‌வ‌ர் , அவ‌ர் விளையாடின‌ போது சென்னை ஒரு முறை க‌ப் தூக்கின‌து

த‌லை கீழா நின்று யோசிச்சு பார்த்தால் ஜ‌பிஎல் ஏல‌ம் சில‌ ச‌மைய‌ம் காமெடியா தெரியும்😁.................

இந்திய‌ அணியில் இட‌ம் பிடிச்ச‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் எங்கை என்று தெரியாது..................................

  • கருத்துக்கள உறவுகள்

Matheesha Pathirana இவ‌ரை இல‌ங்கை அணியில் பெரிசா சேர்ப்ப‌து கிடையாது

ஜ‌பிஎல் மோக‌த்தால் இல‌ங்கை அணியில் சில‌ மைச் விளையாடினார் , ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் இவ‌ர் போடுவ‌து கிடையாது.....................ம‌லிங்காவின் ப‌ந்து பொல்லை நோக்கி போகும் இவ‌ரின் ப‌ந்து அதிக‌ம் வையிட் , 18வ‌து ஓவ‌ரில் 18ர‌ன்ஸ் இவ‌ரின் ஓவ‌ருக்கு அடிச்சு இருக்கின‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வெல்லுதோ இல்லையோ. விசில் போடும் கூட்டத்துக்கு இது காணும்.

  • தோனி எடுத்த review. பூரானை அனுப்பி வைத்தது.

  • தோனி எறிந்த பந்து ஓட்டமிழப்பைச் செய்து சமத்தை அனுப்பி வைத்தது.

  • தோனி பிடித்த பிடி, மிக மிக உயரே சென்ற பந்தை பிடித்த பிடி, பாந்தை அனுப்பி வைத்தது.

இதுவே காணும் இன்றைக்கு. அதோட இப்போட்டியை வென்றுவிட்டால்.... ஜயகோ. இப்பவே கண்ணக் கட்டுதே.

  • கருத்துக்கள உறவுகள்

ல‌க்னோவை பொறுத்த‌ ம‌ட்டில் 166 அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஸ்கோர்👍

சென்னை இதை அடிச்சு வெல்லுவின‌மா என்றால் ச‌ந்தேக‌ம்😛...............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

நான் இரன்டாவதாக வந்ததையிட்டு விருந்துக்கு ஏற்ப்பாடு செய்திருக்கிறேன்.தவறாமல் எல்லாரும் கலந்து கொழ்ழுங்கோ.😂

சுவை அண்ண‌

புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ மேல‌ போய் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம் தானே...............நான் 4புள்ளியோட‌ கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு கிழ‌மை நின்று இருப்பேன்

இதெல்லாம் மேட்ட‌ரே கிடையாது

இன்னும் 44 போட்டி இருக்கு

அதில் சில‌து உங்க‌ளுக்கு யோக‌ம் அடிக்க‌லாம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இதெல்லாம் மேட்ட‌ரே கிடையாது

இன்னும் 44 போட்டி இருக்கு

அதில் சில‌து உங்க‌ளுக்கு யோக‌ம் அடிக்க‌லாம்..................

கோசானுக்கும் யோகம் அடிக்குமா பையா?

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த ரஷீட் என்ற சின்னப்பையன்............... நல்லா அடிக்கின்றாரே......... இவர் ஏன் சென்னை அணியில் விளையாடுகின்றார்.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

2 minutes ago, ரசோதரன் said:

யார் இந்த ரஷீட் என்ற சின்னப்பையன்............... நல்லா அடிக்கின்றாரே......... இவர் ஏன் சென்னை அணியில் விளையாடுகின்றார்.................🤣.

CSK, அவரை 3 வருசமா அணியில வைத்திருக்கினம். போன ஏலத்திலே திரும்பவும் வாங்கி இருக்கினம். 2022ல் நடந்த U19 உலகக்கிண்ண வெற்றியாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசானுக்கும் யோகம் அடிக்குமா பையா?

அவ‌ர் உண்மையை ஒத்து கொண்டு விட்டார் சாமி தாத்தாவின்டைய‌ தான் கொப்பி ப‌ண்ணி ப‌திஞ்ச‌து என்று

பாப்போம்................அவ‌ர் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ள் அணிக‌ளுக்கான‌ புள்ளியில் மேல‌ வ‌ர‌ வாய்ப்பு இருக்கு😁👍..........................

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ப‌ர‌வாயில்லை ந‌ல்ல‌ தொட‌க்கம்....................

  • கருத்துக்கள உறவுகள்

ர‌குல் திர்ப‌தி

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிசா ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை....................

இர‌ண்டு இள‌ம் வீர‌ர்க‌க் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் அமைத்து கொடுக்க‌ ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பி விடுவின‌ம் போல் இருக்கு....................................

சென்னை வீர‌ர்க‌ள் ம‌ட்டையால் ப‌ந்தை தூக்கி அடிக்க‌ ப‌ய‌ப்பிடுகின‌ம்....................இப்ப‌டியே ப‌ந்தை வீன் அடிச்சால் பின்ன‌னி வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.