Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rss-efef78e0e16e599dd3b84199436b55b7c441

சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

அரசுப் படைகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது.

சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மிக மோசமான வன்முறையை ஏற்படுத்தி வருகின்றன. 14 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவை ஒன்றிணைக்க புதிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் இந்த மோதல் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன்படி கிராமங்களில் நடந்த பழிவாங்கும் தாக்குதல்களில் சுமார் 140 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, இறந்தவர்களில் குறைந்தது 50 சிரிய அரசுப் படைகளும், 45 முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவினரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.

அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்த மோதலால் அங்கு நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

https://athavannews.com/2025/1424452

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் அரச படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களிற்கும் இடையில் மோதல் - சிறுபான்மை மதப்பிரிவை சேர்ந்த 750 பேர் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை

Published By: Rajeeban

09 Mar, 2025 | 11:00 AM

image

தாயின் கண்களிற்கு முன்னால் 75 வயது தந்தையும் மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர்

சிரிய பாதுகாப்பு படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதி அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினருக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் மோதல் 750 பொதுமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனிதஉரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலைகளும் பழிவாங்கும் கொலைகளும் இடம்பெறுவதாக சிரியாவின்  மனித உரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

745 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட புள்ளி விபரங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

alawaide_murder1.jpg

சிரியாவின் லட்டாக்கியா மாகாணத்தில் உள்ள ஜப்லேயில் வியாழக்கிழமை அசாத் அரசாங்கத்திற்கு சார்பான ஆயுதகுழுவினர் அரசபடையினர் மீது தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்தே இந்த மோதல் மூண்டது.

மூன்று மாதத்திற்கு முன்னர் பசார் அல் அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றிய ஹயட் தஹ்ரிர் அல்சாம் என்ற இஸ்லாமிய அமைப்பு எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் என கார்டியன் தெரிவித்துள்ளது.

பசார் அல் அசாத் சார்பு குழுவின் கிளர்ச்சியை முறியடிப்பதற்காக சிரிய அரசாங்கம் அந்த பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்பியது.

ஆயிரக்கணக்கானஅரசாங்க சார்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு தனிபட்ட நபர்களின் நடவடிக்கைகளே காரணம் எனதெரிவித்துள்ள சிரிய அரசாஙகம்,பெருமளவு ஆயுதமேந்திய நபர்கள் அந்த பகுதிக்கு சென்றதால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளது.

பொதுமக்களிற்கு தீங்குவிளைவிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார்.

முக்தரியா நகரில் பெருமளவு பொதுமக்களின் உடல்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

alawaide_mur2.jpg

இந்த நகரில் ஒருசம்பவத்தில் மாத்திரம்  வன்முறைகளில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு படையினரின் சீருடை அணிந்தவர்கள் பொதுமக்களை நெற்றிப்பொட்டில் சுடுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

சிரியாவின் கரையோர பகுதிகளில் சிறுபான்மையினரான இஸ்லாமிய அலவைட் மத பிரிவினர் அதிகளவில் வாழ்கின்றனர்.முன்னாள் ஜனாதிபதி அசாத் இந்த சமூகத்தை சேர்ந்தவர் எனினும் இந்த மதபிரிவினர் தங்களை அவருடன் இனம்காணவில்லை.

அலவைட் சமூகத்தினர் தங்கள் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருப்பார்கள் பழிவாங்கும் கொலைகள் இடம்பெறாது என சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்தனர்.

எனினும் இந்த வாரம் அரசாங்க படையினர் நூற்றுக்கணக்கான அலவைட் சமூகத்தினரை கொலை செய்துள்ளமை சிறுபான்மை சமூகத்தினரிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

alawaide_murder3.jpg

லடாக்கியாவின் ஸ்னோபார் பகுதியை சேர்ந்த ஒருவர் அரிஸ் குடும்பத்தை சேர்ந்த தனது அயலவர்களான 15 பேர் எப்படி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விபரித்துள்ளார்.

தாயின் கண்களிற்கு முன்னால் 75 வயது தந்தையும் மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையையும் மகன்களையும் கொலை செய்த பின்னர் தாயார் அணிந்திருந்த தங்கநகைகளை தருமாறும் இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரடடினார்கள். என அந்த குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208679

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு பெரிய மோதல் - நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள்

சிரியா

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், இயன் ஐக்மேன்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிரியாவில் பாதுகாப்பு படைக்கும், அலவைட் மத சிறுபான்மையினருக்கும் இடையே பல நாட்களாக நடந்து வரும் மோதலில், நூற்றுக்கணக்கான அலவைட் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டின் தலைவர் அகமது ஷாரா அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் அலவைட் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட சுமார் 30 "படுகொலைகளில்" சுமார் 745 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு செயல்படும் 'சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம்' (SOHR) தெரிவித்துள்ளது.

இந்தக் கூற்றுக்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

"நாம் முடிந்தவரை தேசிய ஒற்றுமையையும் சிவில் அமைதியையும் பாதுகாக்க வேண்டும். மேலும் கடவுளின் அருளால், இந்த இந்த நாட்டில் நாம் ஒன்றாக வாழ முடியும்" என்று அகமது ஷாரா கூறினார்.

இப்போது சிரியாவில் நடப்பவை, பஷர்-அல்-அசத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு "எதிர்பார்க்கப்பட்ட சாவால்களின்" ஒரு பகுதியாகும் என்று இடைக்கால அதிபர் அகமது ஷாரா, காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் அதிபர் பதவியில் இருந்து பஷர்-அல்-அசத் அகற்றப்பட்ட பிறகு, அவருக்கு ஆதரவு அளித்த முக்கிய கடலோர மாகாணங்களான லடாகியா மற்றும் டார்டஸில் இருந்து, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. பஷர்-அல்-அசத், அலவைட் மதப்பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படைகளை சேர்ந்தவர்களையும் கணக்கிட்டால், கடந்த 4 நாட்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது. மோதலில் அரசின் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 125 பேரும், அசத்துக்கு ஆதரவான படையை சேர்ந்த 148 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கிளர்ச்சியாளர்கள் அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்ததிலிருந்து சிரியாவில் நடந்த மிக மோசமான மோதல்களில் இது ஒன்றாகும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைட்டுகள், சிரியாவின் மக்கள் தொகையில் சுமார் 10% இருக்கின்றனர். சிரியாவில் சுன்னி இஸ்லாமியர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர்.

சிரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிரியாவின் பாதுகாப்பு படையினருக்கு எதிரான ''சதி தாக்குதல்களுக்கு'' பிறகு, அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டியுள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்நாட்டின் சனா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறியதாக கூறப்படும் இந்த மோதல் அலவைட் மக்களை "திகிலூட்டும் நிலையில்" ஆழ்த்தியுள்ளது என்று சிரியா ஆர்வலர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார்,

லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு ரஷ்ய ராணுவ தளத்தில் ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் பகிர்ந்த வீடியோ காட்சிகள், அந்த ராணுவ தளத்துக்கு வெளியே டஜன் கணக்கான மக்கள், "அனைத்து மக்களும் ரஷ்யாவின் பாதுகாப்பை விரும்புகிறார்கள்" என்று கோஷமிடுவதைக் காட்டியது.

இதற்கிடையில், டஜன் கணக்கான குடும்பங்கள் அண்டை நாடான லெபனானுக்கு தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் கடலோர பகுதிகளில் "பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த மிகவும் கவலையளிக்கும் செய்திகளால்", தான் "மிகுந்த அச்சத்தில்" இருப்பதாக சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கெய்ர் பெடர்சன் கூறினார்.

சிரியாவை "ஸ்திரதன்மை நோக்கிக்கொண்டு செல்ல" மற்றும் "நம்பகமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மாற்றத்துக்கு", ஆபத்து விளைவிக்கும் செயல்களில் இருந்து அனைத்து தரப்பினரும் விலகி இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c5yxpvwd9d4o

  • கருத்துக்கள உறவுகள்

“தங்கள் வீடுகளில் பலர் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன், பெண்களும் குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்” - சிரிய படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்

Published By: RAJEEBAN

10 MAR, 2025 | 11:00 AM

image

bbc

சிரியாவில் அலவைட் சிறுபான்மை முஸ்லீம் மதபிரிவினர் அவர்களில் வீடுகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அவற்றை நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபத பசார்அல் அசாத்தின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதான பழிவாங்கல் தாக்குதல்  ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்துள்ள நிலையில் சிரியாவின் இடைக்கால தலைவர் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அசாத்தின் ஆதரவு கோட்டைகளான லடாகியா மற்றும் டர்டஸ் ஆகிய கடலோர மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சூறையாடல்கள் குறித்தும் சிறுவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து உள்ளுர் மக்கள் விபரித்துள்ளனர்.

கடலோர நகரமான பனியாவில் உள்ள அல்வைட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் ஹை அல் குசூரில் இரத்தம் தோய்ந்த பெருமளவு உடல்கள் சிதறிக்கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

alawaide_5.jpg

பலவயதுடைய ஆண்கள் இங்கு சுடப்பட்டனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நாங்கள் ஜன்னலிற்கு வெளியே எட்டிப்பார்ப்பதற்கு கூட அஞ்சினோம் என தெரிவித்துள்ள பொதுமக்கள் இணையசேவை பாதிக்கப்பட்டிருந்தது அது ஒழுங்காக செயற்படதொடங்கியவேளை முகநூல் பதிவுகள் மூலம் அயலவர்களின் மரணங்கள் குறித்து நாங்கள் அறிந்தோம் என தெரிவித்துள்ளனர்.

பசார் அல் அசாத்தை முகநூலில் விமர்சித்தமைக்காக 2023இல் என்னை கைதுசெய்தார்கள்,கடந்த டிசம்பரில் பசார் அல் அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்டபின்னர் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்கள் சிறையிலிருந்து பலரை விடுதலை செய்தவேளை என்னையும் விடுதலை செய்தார்கள் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அய்மென் பரெஸ் சில நாட்களிற்கு முன்னர் ஹை அல் குசூர் மீது இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்கள்( அரசதரப்பினர்) தாக்குதல்களை மேற்கொண்டவேளை என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள் என்னை கொலை செய்யவில்லை ஆனால் எனது கார்களை எடுத்து சென்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் புதியவர்களாக நான் இதுவரை பார்க்காதவர்களாக காணப்பட்டனர்,அவர்கள் உஸ்பெக் அல்லது செச்சினியாவை சேர்ந்தவர்களாகயிருக்கவேண்டும் என பரெஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களுடன் சிரியாவை சேர்ந்தவர்களும் காணப்பட்டனர் ஆனால் அவர்கள் பாதுகாப்பு படையினர் இல்லை சில பொதுமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

alawaide_7.jpg

தங்கள் வீடுகளில் பலர் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன், பெண்களும் குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில்காணப்பட்டனர்,சிலர் உயிர் தப்புவதற்காக வீடுகளின் கூரைகளிற்கு தப்பிச்சென்றனர் ஆனால் அவர்களும் இந்த இரத்தக்களறியிலிருந்து உயிர் பிழைக்கவில்லை என பரெஸ் தெரிவித்துள்ளார்.

லடாக்கியா ஜப்லே பணியாசில் 750க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தவிர அசாத் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினர் இடையிலான நேரடி மோதலில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பனியாஸ் நகரிற்கு சிரிய பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்ததை தொடர்ந்து நிலைமை ஸ்திரமடைந்தது என பரெஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் ஏனைய ஆயுததாரிகளை அங்கிருந்து வெளியேற்றி பொதுமக்களிற்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் கரையோர பகுதிகளில் சிறுபான்மையினரான இஸ்லாமிய அலவைட் மத பிரிவினர் அதிகளவில் வாழ்கின்றனர்.முன்னாள் ஜனாதிபதி அசாத் இந்த சமூகத்தை சேர்ந்தவர் எனினும் இந்த மதபிரிவினர் தங்களை அவருடன் இனம்காணவில்லை.

alawaide_6.jpg

அலவைட் சமூகத்தினர் தங்கள் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருப்பார்கள் பழிவாங்கும் கொலைகள் இடம்பெறாது என சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்தனர்.

எனினும், இந்த வாரம் அரசாங்க படையினர் நூற்றுக்கணக்கான அலவைட் சமூகத்தினரை கொலை செய்துள்ளமை சிறுபான்மை சமூகத்தினரிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/208765

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.