Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்

Shyamsundar IUpdated: Monday, March 10, 2025, 15:00 [IST]

Edappadi Palaniswami naam tamilar BJP

சென்னை: பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் சேரும் அதிமுக - பாஜக

பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேச்சு

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிமுக பாஜக கூட்டணி வர சான்ஸ் இல்லை. அப்படி வந்தாலும் ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் எடப்பாடிக்கு சிக்கல். இன்னும் 1 வருடம் இருக்கிறது. தினகரன் பாஜக கூட்டணிக்கு வருவார். அது எடப்பாடிக்கு சிக்கலாக மாறும். அண்ணாமலை கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்.

அண்ணாமலை பெரிய ஆள் ஆகிவிட்டார். டெல்லி சப்போர்ட் உள்ளது. அதனால் அவரை பகைக்க எடப்பாடி விரும்பவில்லை. இதனால் எடப்பாடி பாஜக கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளார். அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். அண்ணாமலையின் ஜாதி பின்புலம் இதற்கு முக்கியம் காரணம். அண்ணாமலை கவுன்சிலர் கூட இல்லை என்றாலும்.. அவருக்கு ஜாதி பலம் பெரிதாக உள்ளது .

அதனால்தான் அதிமுக தலைகள்.. எடப்பாடிக்கு பதிலாக அண்ணாமலையை திருமண விழாவிற்கு அழைக்கிறார்கள். அண்ணாமலை கவுன்சிலர் இல்லையே. ஏன் அழைக்கிறார்கள். இதுதான் காரணம். அவருக்கு பலம் இருக்கிறது. அவர் பெரிய ஆள் ஆகிவிட்டார். எடப்பாடி பலவீனம் ஆகிவிட்டார். சீமானிடம் ஏற்கனவே எடப்பாடி பலவீனமாகிவிட்டார்.

பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?

செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. சீமான் கூட முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. வேலுமணி ஆகலாம்.. அண்ணாமலை ஆகலாம். சீமான் பெரிய ஆள் ஆகிவிட்டார். அவரை அதிமுக ஏற்றுக்கொள்ளுமோ கொள்வதோ.. டெல்லி அவரை கருத்தில் கொள்ளலாம். மோடி அவரை டிக் அடிக்கலாம். இன்னும் 1 வருடம் இருக்கிறது. அதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம்.

சீமான் வளர்ந்து நிற்கிறார். அதனால் அவரை ஊர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் சீமான் வளர்ந்து இருக்கிறார்.

https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palanisamy-will-not-be-the-cm-candidate-of-aiadmk-nda-says-raveendran-duraisamy-686433.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards


டிஸ்கி

யாரிந்த ரவீந்திரன் துரைசாமி?

ஊடகவியளாலர் என்ற போர்வையில் உலாவும் ஒரு பிஜேபி ஏஜெண்ட்.

அதை வெளிப்படையாக சொல்பவர்.

அண்மைகாலமாக சீமான் ஆதரவாளர்.

ரஜனி-சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நேரம் நானும், ரசோ அண்ணாவும் எழுதினோம்…எடப்பாடி செய்த மிக பெரிய பிழை - சீமான் போட்டியிட அதிமுக போட்டியிடாமல் போனது.

இப்போ அதைவைத்தே ஏதோ அதிமுகவை விட சீமான் பெரிய ஆள் என்ற விம்பத்தை உருவாக்க்கி, செங்கோட்டையன், தினகரன், வேலுமணி, சசி, சீமான் என பலராலும் எடப்பாடியை அடிக்கிறார்கள்.

  1. அதிமுக+பிஜேபி+நாதக+ஏனையோர்

    அல்லது

  2. அதிமுக+பிஜேபி+ஏனையோர் (சீமான் வாக்கு பிரிப்பு -வழமையான பார்முலா)

    அல்லது

  3. அதிமுக உடைப்பு +பிஜேபி+சீமான்+ஏனையோர் (எடப்பாடி-அதிமுக தனித்து)

இவ்வாறே பிஜேபி காய் நகர்த்த போகிறது.

இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை.

ஜெ செய்தது போல் செங்கோட்டையன், வேலுமணி அனைவரையும் கட்டம் கட்டி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி விட்டு, அதிமுக தலைமையில் விஜையுடன் கூட்டணி என போவதே, எடப்பாடிக்கும், அதிமுகவுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது.

பிஜேபி உள்ள கூட்டணி வெற்றிக்கு கிட்ட வந்தாலே - ஆளுனரை கொண்டு ஆட்சியை பிடிப்பார்கள்.

அதன் பின் மும்மொழி கொள்கை, ஹைடிரோகாபன், இன்னும் சகலதையும் கொண்டு வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே ஆசையாக உள்ளது. இலங்கை கடற்படையை அண்ணனின் நெய்தல் படை அடித்து துவம்சம் செய்யும் நாள் நெருங்கிவருகிறது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானைப்பற்றி எழுதினால் எப்படித் தான் மணந்து பிடித்து வாறாங்களோ?

சென்ரிக்கு நின்ற பழக்க தோசமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சீமானைப்பற்றி எழுதினால் எப்படித் தான் மணந்து பிடித்து வாறாங்களோ?

சென்ரிக்கு நின்ற பழக்க தோசமோ?

அது சென்றிக்கு நிக்காமல் ஊரை விட்டு கிளம்பிய ஆட்கள் புரிந்து கொள்ள முடியாத ரகசியம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che @Justin அண்ணனின் நெய்தல் படையை பார்தது நீங்கள் இருவரும் சிரித்துள்ளீர்கள்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள்….ஒரு நாள்…. இந்த நிலம் அண்ணன் கையில் சிக்கிடிச்சு…. நீங்கள் இருவரும் செத்தீங்க.! 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சீமான் வளர்ந்து நிற்கிறார். அதனால் அவரை ஊர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

முழுவதுமே சிரிப்புத்தான்............... அதிலும் இந்த ஒற்றைவரி அல்டிமேட்.............

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

சீமான் வளர்ந்து நிற்கிறார். அதனால் அவரை ஊர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் கூட எழுத்துப் பிழை(!) யோ எண்டுநினைச்சன் 😁.

சிரிச்சிட்டுப் போங்கோ, சீரியசா எடுக்காதீங்கோ:


large.1382280448_.jpg

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, villavan said:

நான் கூட எழுத்துப் பிழை(!) யோ எண்டுநினைச்சன் 😁.

சிரிச்சிட்டுப் போங்கோ, சீரியசா எடுக்காதீங்கோ:


large.1382280448_.jpg

🤣...............

இந்த ரவீந்திரன் துரைசாமி சும்மாவே இருந்திருக்கலாம்................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.