Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

national-joseph-vijay-284136727-16x9_0.w

தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர்.

காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசாலை முறைகேடு தொடர்பாக தீர்மானம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றம்,மீனவர்கள் போராட்டத்திற்கு தீர்வு: அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இலங்கை தமிழர் பிரச்சினைக்க்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும், கூட்டணி அமைப்பு, கட்சியை வழிநடத்துவது தொடர்பாக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றியிருந்தார்.

டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள்.

அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம்.

இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.

Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என தனது உரையில் கூறினார்.

https://athavannews.com/2025/1426754

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!

நேற்று ஒரு முகப்புத்தகத்தில் மாணவிக்கு பரிசு கொடுத்துவிட்டு புகைப்படத்துக்காக இரண்டு கரையில் நின்றவர்களின் தோளில் கையைப் போட ஒரு பிள்ளை கையை எடுக்கச் சொல்லுது.

விஜே கொஞ்சம் அப்செட்டாகி கையை எடுக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்று ஒரு முகப்புத்தகத்தில் மாணவிக்கு பரிசு கொடுத்துவிட்டு புகைப்படத்துக்காக இரண்டு கரையில் நின்றவர்களின் தோளில் கையைப் போட ஒரு பிள்ளை கையை எடுக்கச் சொல்லுது.

விஜே கொஞ்சம் அப்செட்டாகி கையை எடுக்கிறார்.

விஜய் ... போக வேண்டிய துராம், நிறைய உள்ளது. 😂

எடுத்தவுடன் எல்லோரும்... எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாதுதானே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

'த.வெ.க - தி.மு.க இடையில்தான் போட்டி' - பொதுக்குழுவில் விஜய் பேசியது என்ன?

விஜய்

பட மூலாதாரம்,TVK

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி" என, த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு பல்வேறு வகைகளில் தி.மு.க ஆட்சி இடையூறு செய்வதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

த.வெ.க முதல் பொதுக்குழுவில் என்ன நடந்தது?

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது.

கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பேசி முடித்த பிறகு விஜய் பேசினார்.

"கதறல் சத்தம் எப்படி உள்ளது" எனத் தொண்டர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய விஜய், "ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா அல்லது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?" என பேச்சைத் தொடங்கினார்.

மன்னராட்சி விமர்சனம்

விஜய்

பட மூலாதாரம்,TVK

தொடர்ந்து பேசிய அவர், "எல்லாருக்கும் நல்லது நடப்பதுதான் அரசியல். அது தான் நமது அரசியல். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் எனக் கூறி மக்கள் பிரச்னைகளை மடை மாற்றி மக்களாட்சியை மன்னராட்சி போன்று நடத்துகிறார்கள்" என விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சியில் உள்ளவர்கள் இடையூறு செய்வதாகக் கூறிய விஜய், த.வெ.க மாநாட்டில் தொடங்கி பரந்தூர் மக்கள் போராட்டம், பொதுக்குழு வரை எத்தனையோ தடைகளைத் தாண்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தான் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தனது பேச்சில், 'மன்னராட்சி முதல்வரே' என இரண்டு முறை முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு த.வெ.க தலைவர் விஜய் பேசினார். "பெயரில் உள்ளதைப் போல செயலிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீரத்தைக் காட்ட வேண்டும்" எனக் கூறினார்.

விஜய்

பட மூலாதாரம்,TVK

தொடர்ந்து பேசிய அவர், "மத்திய பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சி எனக் கூறுகிறார்கள். அதற்குக் குறைவில்லாத பாசிச ஆட்சியைத் தானே நீங்களும் கொடுக்கிறீர்கள்? கட்சித் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார்?" எனக் கேட்டவர், சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

"நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆக கனவு காண்பதாக கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது எனக் கூறுகிறீர்கள். பிறகு ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை த.வெ.க-வுக்கு கொடுக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளதாகவே தெரியவில்லை எனவும் விமர்சித்தார் விஜய்.

தி.மு.க ஆட்சியில் பள்ளிக் குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரையில் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாகக் கூறிய அவர், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என போராட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்" என்றார்.

அடுத்து மத்திய பா.ஜ.க ஆட்சியை தனது பேச்சில் விஜய் விமர்சித்தார்.

"பிரதமர் மோதியின் பெயரைச் சொல்வதற்கு பயம் உள்ளதாக கூறுகிறார்கள். மத்தியில் ஆள்கிறவர் எனக் கூறுகிறோம். அங்கு என்ன காங்கிரஸா உள்ளது? பிறகு ஏன் பெயரைக் கூற வேண்டும் என சொல்கிறார்கள் " எனக் கூறினார்.

"தமிழ்நாடு.. தமிழர்கள் என்றாலே பிரதமர் மோதிக்கு அலர்ஜி" எனக் கூறிய விஜய், "ஜி.எஸ்.டியை சரியாக வாங்கிவிட்டு நிதியை ஒதுக்குவதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் எனத் தொடங்கியபோதே உங்கள் திட்டம் தெரிந்துவிட்டது. உங்களிடம் சொல்ல விரும்புவது எல்லாம் தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள்" என பிரதமர் மோதியை சுட்டிக் காட்டி பேசினார்.

விஜய்

பட மூலாதாரம்,TVK

"தி.மு.க, த.வெ.க இடையில்தான் போட்டி"

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அறுதிப் பெரும்பான்மை மற்றும் அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி அமைத்ததும் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் என தனது பேச்சில் நடிகர் விஜய் தெரிவித்தார்.

"அடுத்த ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்" எனக் கூறிய விஜய், "இரண்டு கட்சிக்கும் இடையில்தான் போட்டி. ஒன்று த.வெ.க, இன்னொன்று தி.மு.க" எனவும் தெரிவித்தார்.

தி.மு.க, பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்வதால் அவர்களின் பெயரைக் கூற வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளதாக கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.

தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி உள்ளதாக விஜய் பேசியதையும் அவர் மறுக்கிறார். " தி.மு.க என்பது நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி. த.வெ.க அப்படி இல்லை" எனக் கூறுகிறார்.

முன்னதாக, த.வெ.க பொதுக்குழுவில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது; மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; இரு மொழிக் கொள்கையில் உறுதி; நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்பன உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு ஆகியவற்றை தனது தீர்மானங்களாக த.வெ.க வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2828w5l5zo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.