Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 MAR, 2025 | 10:21 AM

image

நமது நிருபர்

கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின்  தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.

கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-யுனியன்வில் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/210588

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா தேர்தல்; வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை வாழ்த்து

29 APR, 2025 | 12:02 PM

image

கனடா தேர்தல் - வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது-

2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கனடிய பிரதிநிதிகளிற்கும் கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள்

juvanita.jpg

2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்கு கனடிய தமிழர் பேரவை தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 

மக்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கையை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய அரசு உறுதியுடன் செயற்படும் என நாம் நம்புகின்றோம்.

இத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கனடிய உறுப்பினர்களுக்கும்இ கனடிய தமிழர் பேரவை பெருமிதத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் சட்ட ஆலோசகரான கெளரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் மீண்டும் தெரிவாகி உள்ளார். 

canada_tamil_congress.png

கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஜோனீட்டா நாதன் அவர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாக பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். 

இதனுடன் கெளரவ அனீட்டா ஆனந்த் அவர்களும் மீண்டும் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இந்த வெற்றிகள் தமிழ் கனடிய சமுதாயத்தின் அரசியல் ஈடுபாடு மற்றும் பங்களிப்பை தெளிவாக பிரதிபலிக்கின்றன.

அரசியல் சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பாக செயல்படும் கனடிய தமிழர் பேரவை புதிய அரசுடன் இணைந்து அனைத்து கனடியர்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தும் பணிகளிலும் செயற்பட தயாராக இருக்கின்றது. புதிய அரசு மக்கள் விருப்பங்களை மதித்து ஒற்றுமை சமத்துவம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் நடவடிக்கைகளை எடுக்குமென நாங்கள் நம்புகின்றோம்.

anithaanand11.jpg

அதேபோல் நாடு எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை திறமையாக சமாளித்து கனடாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தி அனைத்து கனடியர்களுக்கும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை புதிய அரசு எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

கனடிய தமிழர் பேரவை புதிய அரசின் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து உறுதியாகக் கைகோர்க்கும்.

https://www.virakesari.lk/article/213235

  • கருத்துக்கள உறவுகள்

333.jpg?resize=750%2C375&ssl=1

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத்  தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த  முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி இறுதியில் அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராகக் கடமையாற்றுவார் எனக்  கூறப்படுகிறது.

அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதாகக்  கூறப்படுகிறது. இத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக  5 இலங்கை தமிழர்கள் வேட்பாளராக களம் இறங்கியிருந்த நிலையில்  லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட  இலங்கை தமிழர்களான  ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகியோர்  வெற்றி பெற்றுள்ளமை இலங்கையர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Athavan News
No image preview

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர...

நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத்  தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த  முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்ச...

இதில் Juanita Nathan வெற்றி பெறக்கூடாது என்று NCCT (National Council of Canadian Tamils) அமைப்பினர் தீயா வேலை செய்தனர். Juanita முதலில் தனக்கு பரிச்சயமான மார்க்கம் - தொன்ஹில் (Markham - Thornhill) பகுதியில் தான் தேர்தலில் நிற்க முயன்றார். ஆனால் NCCT அமைப்பினர் பழமைவாத கட்சியில் செல்வாக்கு செலுத்தி அங்கு இன்னொரு தமிழரான லயனல் லோக நாதனை (Lionel Loganathan) தேர்தலில் நிறுத்தினர். இரு தமிழர்கள், தமிழர்கள் வாழும் தொகுதியில் தேர்தலில் நின்றால், வாக்குகள் சிதறும் என்பதை புரிந்து கொண்ட லிபரல் கட்சி, Juanita இனை பிக்கரிங் இல் நிற்க வைத்து வெல்ல வைத்துள்ளனர்.

NCCT அமைப்பினர் தான் பழைய உலகத் தமிழர் அமைப்பினர். இவர்கள் தான் கடந்த வரும் தமிழ் கனடிய காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த வீதித் திருவிழாவையும் குழப்பி அடித்தவர்கள். Juanita பிக்கரிங்கில் கூட வெல்ல கூடாது என சித்து வேலைகள் செய்தார்கள் என கூறுகின்றனர்.

Juanita நல்ல ஆளுமை உள்ள ஒரு தமிழ் பெண்மணி. தனிப்பட்ட ரீதியில் இவருடன் சில தடவைகள் உரையாடியிருக்கின்றேன். எனக்கு தெரிந்த ஒரு சிறுவனுக்கு ஆட்டிசம் இருப்பதால், அவனுக்கான சிறந்த சேவைகளை, கல்வியை எப்படி தெரிவு செய்வது தொடர்பாக கதைத்து இருக்கின்றேன். இங்குள்ள தமிழ் எப் எம் வானொலியிலும் அடிக்கடி பல பிரச்சனைகள் தொடர்பாக உரையாடி இருக்கின்றார்.

இவர் வென்றது மிக மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர்கள் இருவர் வெற்றி

Vhg ஏப்ரல் 29, 2025

1000492464.jpg

கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் ஆகியோர் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். 

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

1000492466.jpg

1000492465.jpg

https://www.battinatham.com/2025/04/blog-post_101.html

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

இவர் வென்றது மிக மகிழ்ச்சி.

ஆமாம் மகிழ்ச்சியான செய்தி தான் மேற்படி அமைப்பில்.

இவா முன்பு பதவி வகித்தவரா ??

அதாவது தலைவர் பதவி ஒற்றுமையாக இருந்து வேலை செய்திருந்தால் இன்னும் இருவர் வென்றுருக்கக்கூடும். மேலும் யார் அந்த பொலிஸ்?? நிஷான். ??

வென்றவர்கள். அனைவரும் இலங்கை தமிழர்களா ???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஆமாம் மகிழ்ச்சியான செய்தி தான் மேற்படி அமைப்பில்.

இவா முன்பு பதவி வகித்தவரா ??

அதாவது தலைவர் பதவி ஒற்றுமையாக இருந்து வேலை செய்திருந்தால் இன்னும் இருவர் வென்றுருக்கக்கூடும். மேலும் யார் அந்த பொலிஸ்?? நிஷான். ??

வென்றவர்கள். அனைவரும் இலங்கை தமிழர்களா ???

//ஜோனீட்டா நாதன் அவர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாக பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். //

வென்றவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள், ஜோனீட்டா நாதன் தமிழகத் தமிழர்.

1 hour ago, தமிழ் சிறி said:

ஜோனீட்டா நாதன் தமிழகத் தமிழர்.

இல்லை, இவர் இலங்கை தமிழர்.

அனித்தா ஆனந்த் எனும் தமிழ் பெண்ணும் ஓக்வில் எனும் இடத்தில் தெரிவாகியுள்ளார். இவர் இந்தியத் தமிழர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா பாராளுமன்றத்திற்கு இலங்கை தமிழர்கள் மூவர் தெரிவு

கனடா பாராளுமன்றத்திற்கு இலங்கை தமிழர்கள் மூவர் தெரிவு

கனேடிய பாராளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் மற்றும் அனிதா ஆனந்த் ஆகியோர் ஆளும் கட்சியான லிபரல் கட்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து இலங்கைத் தமிழ் பூர்விக தமிழ் கனேடியரும் கனேடிய நீதி அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி தனது ஸ்கார்பாரோ – கில்ட்வுட் – ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அதேபோல ஆளும் கட்சியில் இருந்து யுவனிதா நாதனும் பிக்கரிங் – புரூக்ளின் தொகுதியிலும் களம் இறங்கியிருந்தார். Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த் போட்டியிட்டிருந்தார்.

https://thinakkural.lk/article/317407

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

இல்லை, இவர் இலங்கை தமிழர்.

அனித்தா ஆனந்த் எனும் தமிழ் பெண்ணும் ஓக்வில் எனும் இடத்தில் தெரிவாகியுள்ளார். இவர் இந்தியத் தமிழர்.

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நிழலி.

மூன்று இலங்கைத் தமிழர்களும், ஒரு தமிழக தமிழருமாக...

நான்கு தமிழர்கள் கனடா பாராளுமன்றத்தை அலங்கரிப்பது..

மகிழ்ச்சியுடன் பெருமையாகவும் உள்ளது.

இம்முறைதானா அதிக தமிழர்கள் தெரிவாகி உள்ளார்கள்.

அல்லது முன்பும் பலர் தெரிவு செய்யப்படு இருந்தார்களா.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

இல்லை, இவர் இலங்கை தமிழர்.

அனித்தா ஆனந்த் எனும் தமிழ் பெண்ணும் ஓக்வில் எனும் இடத்தில் தெரிவாகியுள்ளார். இவர் இந்தியத் தமிழர்.

நிழலி. மூன்றாவது இடமாக வந்த கட்சி தான் ஆட்சியை தீர்மானிக்கும். அந்த கட்சி சிங்கின். உடையதா. ?? முதலாவது வந்த கட்சி ஆட்சி அமைக்குமா.?? அல்லது இரண்டாவது வந்த கட்சி ஆட்சி அமைக்குமா?? அல்லது இடைநடுவில். ஆட்சி கவிழ்ந்து விடும் வாய்ப்புகள் உண்டா ?? ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள் போதுமா?? நான் ஒரு ஏழு .....எட்டு இலங்கை தமிழர்கள் இந்த முறை கனடாவில் பாராளுமன்றம் போவார்கள் என்று நம்பி இருந்தேன்,.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட, கனடாவில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம். 😂 🤣

29 minutes ago, தமிழ் சிறி said:

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நிழலி.

மூன்று இலங்கைத் தமிழர்களும், ஒரு தமிழக தமிழருமாக...

நான்கு தமிழர்கள் கனடா பாராளுமன்றத்தை அலங்கரிப்பது..

மகிழ்ச்சியுடன் பெருமையாகவும் உள்ளது.

தமிழ் சிறி, மொத்தமாக 3 தமிழர்கள் தான் தெரிவாகியுள்ளனர். அதில் இருவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். ஒருவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். தினக்குரல் வழக்கம் போல் தவறுதலாக 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களில் வெவ்வேறு பின்புலத்தைக் கொண்டவர்கள், வென்றது நல்ல விடயம். பல இந்தியத் தமிழர்கள் எம் சமூகத்துடன் நெருங்கி வாழ்கின்றனர். எம் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர். ஒரே கோவில்களுக்கு வருகின்றனர். இங்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட இந்தியத் தமிழர் தான் (சென்னையை பிறப்பிடமாக கொண்டவர்)

38 minutes ago, தமிழ் சிறி said:

இம்முறைதானா அதிக தமிழர்கள் தெரிவாகி உள்ளார்கள்.

அல்லது முன்பும் பலர் தெரிவு செய்யப்படு இருந்தார்களா.

நான் நினைக்கின்றேன் 3 தமிழர்கள் வென்றது இம் முறை தான் என.

28 minutes ago, Kandiah57 said:

நிழலி. மூன்றாவது இடமாக வந்த கட்சி தான் ஆட்சியை தீர்மானிக்கும். அந்த கட்சி சிங்கின். உடையதா. ?? முதலாவது வந்த கட்சி ஆட்சி அமைக்குமா.?? அல்லது இரண்டாவது வந்த கட்சி ஆட்சி அமைக்குமா?? அல்லது இடைநடுவில். ஆட்சி கவிழ்ந்து விடும் வாய்ப்புகள் உண்டா ?? ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள் போதுமா?? நான் ஒரு ஏழு .....எட்டு இலங்கை தமிழர்கள் இந்த முறை கனடாவில் பாராளுமன்றம் போவார்கள் என்று நம்பி இருந்தேன்,.....🤣

லிபரல்கள் பெரும்பான்மை பெற 3 ஆசனங்கள் குறைவு. அனேகமாக கியூபெக் கட்சி யின் (Bloc Québécois) ஆதரவுடன் ஆட்சியமைப்பர்.

சிங்கின் கட்சி (NDP) இம்முறை மிகக் குறைந்த ஆசனங்களையே பெற்றது. அதன் தலைவர் கூட தன் தொகுதியில் தோற்றுவிட்டார் (கொன்சர்வேட்டியின் தலைவருக்கும் இதே நிலைதான்).

பொதுவாக இங்கு ஆட்சி கவிழ்ப்பு எல்லாம் நடப்பதில்லை. அதுவும் நாடு ட்ரம் பின் வரிகளால் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, இப்போதைக்கு ஆட்சி கவிழ்ப்பு/ மாற்றம் எல்லாம் நிகழ சாத்தியங்கள் இல்லை.

எத்தனை பேர் வாக்களித்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என்பது அந்த தொகுதியில் இருக்கும் மொத்த வாக்களார்களின் எண்ணிக்கையை பொறுத்தது. அத்துடன், இனம் பார்த்து வாக்களிப்பதும் இங்கு குறைவு. Juanita வென்றது, தமிழர்கள் ஏனைய இடத்தை விட (ஸ்கார்பரோ, மார்க்கம் பகுதிகளுடன் ஒப்பிடும் போது) குறைவாக வாழும் இடத்தில் தான். அவருக்காக உழைத்தவர்களில் எனக்குத் தெரிந்த ஒரு இலங்கை முஸ்லிம் குடும்பமும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

தமிழ் சிறி, மொத்தமாக 3 தமிழர்கள் தான் தெரிவாகியுள்ளனர். அதில் இருவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். ஒருவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். தினக்குரல் வழக்கம் போல் தவறுதலாக 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களில் வெவ்வேறு பின்புலத்தைக் கொண்டவர்கள், வென்றது நல்ல விடயம். பல இந்தியத் தமிழர்கள் எம் சமூகத்துடன் நெருங்கி வாழ்கின்றனர். எம் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர். ஒரே கோவில்களுக்கு வருகின்றனர். இங்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட இந்தியத் தமிழர் தான் (சென்னையை பிறப்பிடமாக கொண்டவர்)

நான் நினைக்கின்றேன் 3 தமிழர்கள் வென்றது இம் முறை தான் என.

விரிவான தகவலுக்கு நன்றி நிழலி.

இங்கும் பல நிறுவனங்கள் ஐ.ரி. சம்பந்தமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து பெருமளவிலான இந்தியர்களை வேலைக்கு எடுத்துள்ளது. அதிலும் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஈழத்தவர்களின் கோவில் பூசை நாட்களில்... நிறையப் பேர் வருவார்கள். அவர்களைப் பிடித்து சாமி தூக்க விட்டால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவில் பணிகளை செய்வார்கள். இந்தியாவில் தம்மை சாமிக்கு கிட்டவே விட மாட்டார்கள் என்று சொல்வார்கள். இங்கு அவர்களை சாமி தூக்க விடுவதால் அவர்களுக்கு நல்ல புளுகம். அவர்களுடன் வேலை செய்யும் மற்றைய வட இந்தியர்களையும் கூட்டி வருவதால்... கோயில் எப்போதும் களை கட்டியபடி இருக்கும். 🙂

இப்போது எம்மவர்களை விட... அவர்களின் வருகை அதிகமாக உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

லிபரல்கள் பெரும்பான்மை பெற 3 ஆசனங்கள் குறைவு. அனேகமாக கியூபெக் கட்சி யின் (Bloc Québécois) ஆதரவுடன் ஆட்சியமைப்பர்.

சிங்கின் கட்சி (NDP) இம்முறை மிகக் குறைந்த ஆசனங்களையே பெற்றது. அதன் தலைவர் கூட தன் தொகுதியில் தோற்றுவிட்டார் (கொன்சர்வேட்டியின் தலைவருக்கும் இதே நிலைதான்).

பொதுவாக இங்கு ஆட்சி கவிழ்ப்பு எல்லாம் நடப்பதில்லை. அதுவும் நாடு ட்ரம் பின் வரிகளால் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, இப்போதைக்கு ஆட்சி கவிழ்ப்பு/ மாற்றம் எல்லாம் நிகழ சாத்தியங்கள் இல்லை.

எத்தனை பேர் வாக்களித்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என்பது அந்த தொகுதியில் இருக்கும் மொத்த வாக்களார்களின் எண்ணிக்கையை பொறுத்தது. அத்துடன், இனம் பார்த்து வாக்களிப்பதும் இங்கு குறைவு. Juanita வென்றது, தமிழர்கள் ஏனைய இடத்தை விட (ஸ்கார்பரோ, மார்க்கம் பகுதிகளுடன் ஒப்பிடும் போது) குறைவாக வாழும் இடத்தில் தான். அவருக்காக உழைத்தவர்களில் எனக்குத் தெரிந்த ஒரு இலங்கை முஸ்லிம் குடும்பமும் உள்ளது.

விரிவான பதிலுக்கு நன்றி நிழலி சிங். தோற்றது நல்லது மகிழ்ச்சி உரிய விடயம் இவர்கள் எந்த நாட்டிலும். இலங்கை தமிழர்களுடன். இணைந்து வேலை செய்ததை நான் அறியவில்லை காணவும் இல்லை இந்தியா தமிழர்களுடன். கனடாவில் வாழும் இலங்கை தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.