Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப்

trump-4.jpg

மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.

தற்போது கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று, 2ஆவது முறையாக ஜனாதிபதியானார். 3ஆவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்க தேர்தல் விதிப்படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து ட்ரம்ப் கூறுகையில் : 3ஆவது முறையாக ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நான் கூறுவது நகைச்சுவை அல்ல. இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருக்கிறது.

இது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது கவனம் முழுவதையும், 2ஆவது ஜனாதிபதி பதவிக் காலம் மீது வைத்துள்ளேன். என்று கூறியுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=318632

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் ட்ரம்ப்தான் ஆட்சிக்கு வர வேண்டும்👍

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப் - பராக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட விரும்புவதாக கருத்து

Published By: RAJEEBAN 01 APR, 2025 | 01:56 PM

image

அமெரிக்க ஜனாதிபதியாக மூன்றாவது முறை  தெரிவு செய்யப்படுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப்  முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மூன்றாவது தடவை போட்டியிட்டால் அவருக்கு எதிராக போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிடுவது சிறப்பான விடயமாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசமைப்பு ஒருவர் இரண்டு தடவைகளிற்கு மேல் ஜனாதிபதியாக போட்டியிடுவதை அனுமதிக்காத போதிலும் டிரம்ப் மூன்றாவது தடவை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான தனது  விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நான் மூன்றாவது தடவை  ஜனாதிபதியாவதற்கான  சில வழிமுறைகள் உள்ளன என  என்பிசியின் பேட்டியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா உங்களிற்கு எதிராக அவர் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நான் அதனை விரும்புகின்றேன். அது சிறந்த விடயமாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடவை அமெரிக்க ஜனாதிபதயாக பதவி வகிப்பதற்கான  வழிமுறைகள்  உள்ளதா என்பது குறித்து நான் இன்னமும் ஆராயவில்iலை என தெரிவித்துள்ள டிரம்ப் ஒரு வழியுள்ளது என சொல்கின்றார்கள், அது என்னவென்று எனக்கு தெரியாது என  குறிப்பிட்டுள்ளார்.

1951 இல் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் 22 திருத்தம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது, இது எவரும் இரண்டு தடவைகளிற்கு மேல் ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என  குறிப்பிடுகின்றது.

இதேவேளை தனது முன்னாள் மருமகள் வனேசா டிரம்புடன் தான் உறவில் உள்ளதாக டைகர்வூட்ஸ் தனிப்பட்ட முறையில் தனக்கு தெரிவித்தார் என   குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி கடந்த மாதம் நான் அவருடன் சில தடவைகள் கோல்வ் விளையாடினேன், அவர் மிகச்சிறந்த நபர் மிகச்சிறந்த விளையாட்டு வீரர், அவர் இது பற்றி எனக்கு தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இருவர் குறித்தும் எனக்கு மகிழ்ச்சி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/210831

  • கருத்துக்கள உறவுகள்

சித்தசுவாதீனம் இழப்பவர்கள் தங்களின் பின்பக்க சட்டையை தாங்களே கிழிப்பார்கள், முன்பக்க சட்டை முழுதாக இருக்கும்.............. அதனால் முன்னால் மட்டும் பார்க்கும் மற்றவர்களுக்கு பிரச்சனையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்........

முதன்முதலாக முன்பக்கத்தையும், பின்பக்கத்தையும் கிழித்துக் கொண்டு தெளிவாக நிற்கின்றார் ஒருவர்.........🫣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராக முடியுமா?

டொனால்ட் டிரம்ப் , அமெரிக்க அதிபர்கள் , அமெரிக்க அரசியலமைப்பு, சட்டத்திருத்தம்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கிராமே பேக்கர்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மூன்றாவது முறையாக அதிபராக வேண்டும் என்று ஆசைப்படுவது பற்றி தான் 'நகைச்சுவையாகக் குறிப்பிடவில்லை' என்று கூறியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

'எந்த நபரும்…. இரண்டாவது முறைக்குப் பிறகு தேர்வாகக்கூடாது,'' என்று அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் அதற்கு வேறு வழிகள் இருக்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

மூன்றாவது ஆட்சிக்காலத்தைப் பற்றி டிரம்ப் பேசுவது ஏன்?

மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி என்பிசி ஊடகத்துக்குக் கொடுத்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் ''அதற்கென உள்ள சில வழிமுறைகளின் மூலம் அதைச் செய்ய முடியும்", என்று கூறினார்.

''நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை… நிறைய பேர் நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள்," என்றவர் தொடர்ந்து, ''ஆனால் நாம் அதற்கு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும் என்று சொல்கிறேன். உங்களுக்கே தெரியும் இது நிர்வாகத்தின் ஆரம்பகாலம்தான்." என கூறினார்.

இரண்டாவது பதவிக்காலம் முடியும் சமயத்தில் 82 வயதை நிறைவு செய்யப் போகும் டிரம்பிடம், 'இந்த நாட்டின் மிகக் கடினமான வேலையில்' தொடர்ந்து சேவை புரிய விருப்பமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு, ''எனக்கு வேலை செய்யப் பிடிக்கும்'' என்று அவர் பதிலளித்தார்.

இதுதொடர்பாக அவர் கருத்து சொல்வது இது முதன்முறையல்ல. ஜனவரி மாதம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, ''ஒருமுறை அல்ல அதற்கும் அதிகமாக இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு முறைகள் சேவை செய்ய முடிவது என் வாழ்வில் மிகுந்த பெருமைக்குரிய விஷயம்", என்று குறிப்பிட்டார். ஆனால் பின்னர் இது ''பொய்யான செய்தி ஊடகங்களுக்காக" சொல்லப்பட்ட நகைச்சுவை என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

வெளிப்பார்வைக்குப் பார்க்கப் போனால், யாரும் மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. அதன் 22வது சட்டத்திருத்தம்:

"அதிபர் பதவிக்கு யாரும் இருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது, அதோடு வேறு ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட அல்லது அதிபராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட யாரும், இரண்டு வருட காலத்துக்கு மேல் பதவியில் இருந்தால், அவர்கள் ஒருமுறைக்கு மேல் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது'', என்கிறது.

அதாவது இடைக்கால அதிபராக பதவி வகிப்பவர்களும், 2 ஆண்டைக் கடந்து பதவியில் இருந்தால், மேலும் ஒருமுறை மட்டுமே நேரடியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு கிடைக்கும்.

அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டுமென்றால் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும், அதோடு நாட்டின் மாகாண அரசுகளிடம் இருந்து நான்கில் மூன்று பங்கு ஆதரவும் வேண்டும்.

டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தினாலும் தேவையான பெரும்பான்மை அதற்கு இல்லை. அதோடு மாகாண அவைகளில் 50ல் 18 ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

டிரம்ப் எப்படி மூன்றாவது முறையாக அதிபராக முடியும்?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்றத்துக்கு பதில் தெரியாத ஒரு ஓட்டை இருப்பதாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

22ம் சட்டத்திருத்தம் ஒரு நபர் இரண்டு ஆட்சிக்காலத்துக்கும் மேல் 'தேர்வாவதைத்' தான் தடை செய்கிறதே தவிர - 'பின்தொடர்வதைப்' பற்றி அத்திருத்தம் எதுவும் குறிப்பிடவில்லை என்று வாதிடுகிறார்கள்.

இந்தக் கோட்பாட்டின்படி இன்னொரு வேட்பாளருக்கு டிரம்ப் துணை அதிபராக இருக்கலாம் – 2028 தேர்தலின்போது - இப்போது அவருக்கு துணை அதிபராக இருக்கும் ஜே.டி.வான்ஸுக்குக் கூட.

அவர்கள் வென்றால் அந்த வேட்பாளர் அதிபராக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் மற்றும் உடனே ராஜினாமாவும் செய்யலாம் – அவரைத் தொடர்ந்து டிரம்ப் பதவியேற்க வழிவகுக்கலாம்.

டிரம்ப்பின் முன்னால் அறிவுரையாளர்களில் முக்கியமானவரான பாட்காஸ்டர் ஸ்டீவ் பனோன், டிரம்ப் ''மறுபடி போட்டியிட்டு மறுபடி ஜெயிப்பார்'' என்று நம்புவதாகவும், அதை எப்படிச் செய்வது என்பதற்கு 'சில மாற்றுமுறைகளும்' இருக்கிறது என்றும் கூறினார்.

மக்களைவையில் டென்னிஸி மாகாணப் பிரதிநிதியாக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆண்டி ஆகிள்ஸ் ஒருவர் மூன்று முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை ஜனவரியில் முன்மொழிந்தார். இதன்படி அது தொடர்ச்சியான பதவிக்காலமாக இல்லாத பட்சத்தில் மூன்றாவது முறை தேர்வாகலாம்.

இதன்மூலம் இப்போது உயிரோடு இருப்பவர்களில் இதற்குத் தகுதியான ஒரே நபர் டிரம்பாகத்தான் இருக்க முடியும் என்பதே இதன் பொருள் – பராக் ஒபாமா, பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய அனைவரும் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார்கள் - டிரம்ப் மட்டும்தான் 2016ல் வென்றார், 2020ல் தோற்றார் மற்றும் மறுபடி 2024 வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தொடர்பான ஆகிள்ஸின் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறைவுதானென்றாலும் அதைப் பற்றி மக்களைப் பேச வைத்துள்ளது.

பாரக் ஒபாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாரக் ஒபாமா தொடர்ந்து இருமுறை அதிபராக பதவி வகித்துள்ளார்

டிரம்பின் மூன்றாவது ஆட்சிக்காலத்தை யார் எதிர்க்கிறார்கள்?

ஜனநாயகக் கட்சியினருக்கு ஆழமான எதிர்ப்புகள் உள்ளன.

''இந்த அரசைத் தன்வயப்படுத்தி, ஜனநாயகத்தைக் குலைப்பதற்கான அவரது முயற்சியில் இது இன்னொரு உச்சம்," என்று கூறியிருக்கிறார் நியூயார்க் பிரதிநியான டேனியல் கோல்டுமேன். இவர் டிரம்பின் முதல் ஆட்சிக்கலைப்புக்கான வழக்கில் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.

'' நாடாளுமன்றத்தில் இருக்கும் குடியரசுக்கட்சிப் பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறார்கள் என்றால், டிரம்பின் 'மூன்றாவது ஆட்சிக்கால விருப்பங்கள்' பற்றி வெளிப்படையாக எதிர்த்துப் பேசுவார்கள்".

டிரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்களில் பலருக்கும் இது மோசமான யோசனையாகத் தோன்றுகிறது.

டிரம்ப் மூன்றாவது முறையாக வெள்ளை மாளிகைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தான் ஆதரிக்கப்போவதில்லை என ஓக்லஹோமா மாகாணத்தின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்வெய்ன் முல்லின் பிப்ரவரியில் குறிப்பிட்டார்.

''முதலில் நான் அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தப்போவதில்லை, அமெரிக்க மக்கள் அப்படிச் செய்யத் தேர்ந்தெடுத்தால் தவிர", என்று என்பிசியிடம் தெரிவித்தார் முல்லின்.

சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தேர்தல் சட்டப் பேராசிரியரான டெரெக் முல்லர், அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது சட்டத்திருத்தம், ''அதிபர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியில்லாத எந்த நபரும் அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பதற்கும் தகுதியில்லை,'' என்று குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார்.

அவர் பார்வையின்படி இரண்டுமுறை பதவிக்குப் போட்டியிடுவதே ஒருவர் துணை அதிபராகப் போட்டியிடுவதையும் தகுதி இழக்கச் செய்கிறது.

''எத்தனை முறை அதிபர் ஆகலாம் என்பதை எந்த ஒரு வினோத உத்தியின் மூலமும் மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார் அவர்.

பாஸ்டனின் வடகிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அரசியலமைப்புச் சட்ட பேராசிரியரான ஜெரிமி பால், மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான 'எந்த ஒரு நம்பத்தகுந்த சட்ட வாதமும் இல்லை' என்று சிபிஎஸ் நியூஸ் – இடம் பேசியபோது தெரிவித்தார்.

இரு முறைக்கு மேல் தேர்வான ஒரே அமெரிக்க அதிபர்

இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட்

ஃப்ராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தனது நான்காவது பதவிக்காலம் தொடங்கி மூன்றாவது மாதம் முடிந்த நிலையில் 1945ம் வருடம் ஏப்ரல் மாதம் அவர் உயிரிழந்தார்.

அவர் ஆட்சிக்காலத்தின் முக்கியப் பகுதிகளான பெரும் பொருளாதார வீழ்ச்சியும், இரண்டாம் உலகப்போரும் அவர் அதிபர் காலம் தொடர்ந்ததற்கான காரணிகளாகக் கூறப்படுகின்றன.

அதுவரை அதிபர்கள் இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது என்பது சட்டமாக எழுதப்படவில்லை – மாறாக 1796ல் ஜார்ஜ் வாஷிங்டன் மூன்றாவது முறை பதவி ஏற்க மறுத்ததன் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்ட ஒரு சடங்காகத்தான் இருந்தது.

ரூஸ்வெல்ட் தொடர்ந்து பதவியில் இருந்ததால் இந்தச் சடங்கை சட்டமாக, 22வது சட்டத்திருத்தமாக 1951ல் நிறைவேற்றினார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgnxprj8rro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.