Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்படைத்தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாது - அரசு இன்று ஒப்புக்கொண்டது

Featured Replies

வெள்ளி 26-10-2007 17:11 மணி தமிழீழம் [தாயகன்]

வான்படைத்தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாது - அரசு இன்று ஒப்புக்கொண்டது

விடுதலைப் புலிகளின் சிறப்பு தற்கொடைக் கரும்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான அநுராதபுரம் வான் படைத் தளத்தை உடனடியாகப் பாவிக்க முடியாமல் இருப்பதை, தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் இன்று சிறீலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சிறீலங்கா வான் படைத்தளபதி றொஷான் குணதிலக்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

விமானத் தளத்தின் ஓடு பாதை உட்பட பல இடங்களும், கட்டடங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், விமான எதிர்ப்புக் கருவிகள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் எனவும் வான் படைத்தளபதி றொஷான் குணதிலக்க கூறியுள்ளார்.

Pathivu

தற்போதைய நிலைமையில் ஒட்டுமொத்த சிறிலங்காவை பாதுகாக்க முடியாது: சிறிலங்கா வான்படை தளபதி

[வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 06:30 PM ஈழம்] [ப.தயாளினி]

தற்போதைய நிலைமையில் ஒட்டுமொத்த சிறிலங்காவைப் பாதுகாக்க முடியாது என்று சிறிலங்கா வான் படைத்தளபதி றொசான் குணதிலக்க கூறியுள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

சிறிலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்பை சீரமைக்க சிறிது காலம் ஆகும். அப்பணிகள் முடிவடையும் வரை சில பகுதிகள் புலிகளின் தாக்குதலுக்கு உட்படக் கூடியதாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட பகுதிகளைப் பாதுகாக்கிறோம். ஆனால் எமக்கான தேவைகளை நாம் பெறும் வரை ஒட்டுமொத்த சிறிலங்காவையும் பாதுகாக்க முடியாது.

எமது தாக்குதலின் வலிமை எந்த வகையிலும் குறையவில்லை. அதே நேரத்தில் இழந்துவிட்ட வானூர்திகளை மிக மிக விரைவில் பெற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார் அவர்.

http://puthinam.com/full.php?2eWXoZ00bpjYV...d432TF3a02uKX2e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்பை சீரமைக்க சிறிது காலம் ஆகும்.

அது வரைக்கும் நாங்கள் புலிகளோட பேச்சு வார்த்தை என்டு சொல்லிட்டு கொஞ்ச வெளிநாடுகள் சுத்திப்பாப்பம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்ய இந்தியா உதவி?: பசில் மறைமுக தகவல்

Puthinam

இந்த பாப்பாண வர்க்கத்தால் ஈழ மக்களுக்கு வாழ்நாள் முழுதும் தலைவலி தான்.

தமிழீழம் பாகிஸ்தான் போல அணு ஆயுத பலம் கொண்ட நாடாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக இருக்கலாம்.

பாதுகாப்பு, ஆயுதக் கொள்வனவு இதெல்லாம் எதற்கு என்று சிகளம் சிறிது சிந்திக்குமானால் குழப்பமில்லாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவிடலாம். இலகுவான வழியிருக்கும்போது கடினபாதையை சிங்கள அரசு நாடுகின்றது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் ஒட்டு மொத்தத் தமிழர்களையும் மீட்கப்போகின்றார்களா?

வான் பாதுகாப்பு கட்டமைப்பு 70 வீதம் பூர்த்தி தாக்குதல்கள் நடத்தும் திறன் குறையவில்லை

வான் பாதுகாப்பு கட்டமைப்பு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முற்றாக கட்டியெழுப்பப்படும். வான் பாதுகாப்பு கட்டமைப்பில் 70 வீதம் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலமாக இலங்கை விமானப்படையின் தாக்குதல்கள் நடத்தும் திறன் குறையவில்லை என்று இலங்கை

விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக்க தெரிவித்தார். புலிகளின் விமானத்தாக்குதலால் அநுராதபுரம் விமானப்படைத்தளத்தில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் புலிகளின் தரைவழி த்தாக்குதலால் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

வான் பாதுகாப்பு கட்டமைப்பை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு ஆக குறைந்தது ஆறு வருடங்கள் தேவைப்படும் எனினும் நாம் தற்போது 70 சதவீதமானவற்றை பூர்த்தி செய்துள்ளோம் கடந்த ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சம்பவமொன்றினால் வான் பாதுகாப்பு கட்டமைப்பு சீர்குலைந்திருந்தது.

அநுராதபுர விமானப்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக விமானப்படைத்தளத்திற்கு உள்ளிருந்தே தகவல்கள் சென்றிருக்கின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது, வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பம் காரணமாக அவ்வாறு தகவல்கள் சென்றிருக்குமா? என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருப்பதாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதியே கண்டுபிடித்து விட்டோம் அதற்கு பிறகு தொடர்ச்சியாக விமானத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன அண்மை காலமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக புலிகளின் விமானங்கள் மேல் எழும்ப வில்லை.

அநுராத புரம் தாக்குதல் மூலமாக விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்புகள் இரண்டொரு மாதங்களுக்குள் கட்டியெழுப்பபடும் பீச் விமானம் ஒன்று அதற்கான உபகரணங்களுடன் 6 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் வான் பாதுகாப்பு கட்டமைப்பு இருக்கின்றது. இந்நியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ராடார் கருவிகள் முறையாக இயங்கியமையினால் தான் புலிகளின் விமானங்களை மேலெழுந்ததை கண்டறிய முடிந்தது எனினும் அதற்கடுத்த கட்ட நடவடிக்கைகளை உடனடியாகவே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

மீதமுள்ள 30 வீதமான வான் பாதுகாப்பு கட்டமைப்பை விரைவில் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. புலிகளின் தாக்குதலினால் வான் படையினரின் தாக்குதல் வலிமை குறையவில்லை விமானபடையினர் வசமுள்ள விமானங்களை கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

http://www.virakesari.lk/

மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் தளபதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள வான் படை தமிழீழத்தில் புரிந்த அட்டகாசம்

TOTAL SORTIES FOR YR 2007 SO FAR= 64 (atleast)

Oct 02,2007 0630H-0730H,2 jets,16 bombs,base,Visuvamadu East MOD,TNet

Sep 29,2007 0630H-0730H,Kfir +Mig27,base,Puthukkudiyiruppu,MOD

Sep 25,2007 1215H 2 jets 8 bombsPooneryn,MOD,TNet

Sep 21,2007 0715H 2 jets Visuvamadu,MOD,Tnet

Sep 20,2007 1115H 2 jets, 16 bombs,Puthukkudiyiruppu, MOD,TNet

Sep 20,2007 1150H KFir+MiG27 Ammo Dump,Puthukuduiruppu,MOD,TNet

Sep 19,2007 1330H jets, camp, Vallaipaadu,Poonaryn,MOD

Sep 13,2007 1830H Jets, Sea tiger boats,Mullaittivu MOD

Sep 13,2007 0820H Kfir,MiG 27 12 bombs Fin cent,Puthukuduiruppu MOD,TNet

Sep 11,2007 0830H-0930H 4 Kfirs Vaddakkachchi area,Ki'linochch,TNet

Sep 07,2007 0000H-1200H 7 jets Iranamadu runway, DM,

Sep 07,2007 0000H-1200H 7 jets Kilinochchi,DM

Sep 07,2007 0000H-1200H 7 jets Mullaitivu areas,DM

Sep 05,2007 9999H jets Mullaitivu areas,SLMM

Sep 05,2007 9999H jets Manner areas,SLMM

Aug 29,2007 9999H 2 jets 8 bombs Mullaittivu,SLMM

Aug 22,2007 0725H 2 jets 2 bombs Sea Base, Mullaittivu Reuters,TNet

Aug 22,2007 0750H 2 jets 16 bombs Sea Base, Mullaittivu Reuters,TNet

Aug 21,2007 9999H Unk Pooneryn Artillery positions DM

Aug 17,2007 0000H-1200H Mi-24 Unk # Nedunkerni vicinity TNet

Aug 13,2007 0640H jets Unk # 'training center,Nedunkerni' MOD

Aug 06,2007 1605H MiG27* more than 1Poonakari vicinity TNet

July 27,2007 1215H-1350H KFir 2X 2 Alampil, Mullaitivu SLMM + TNet

Jul 26,2007 0905H-1240H Kfir 2x2 Muththaiyankaddu and Oddisuddaan TNet

Jul 26,2007 1200H-1700H Kfir atleast 2 Pooneryn (Poonakari) TNet

July 25,2007 9999H jets unk# Pooneryn SLMM

Jul 12,2007 1530H Kfir 1 Vavunia (parts fell off the plane turned out

to be parts of a cluster bomb dropped) TNet

July 11,2007 1500H jets unk# Alampil, Mullaitivu SLMM

July 24,2007 9999H jet unk East of Mankulum SLMM

July 04,2007 0900H jets unk# base-Thoppigala' MoD

Jun 28,2007 0615H-1500H Bombers atleast 2 Nedukerni TNet

Jun 27,2007 9999H jets unk# 'Mullaitivu' SLMM

Jun 08,2007 0815H jets Unk# 'airstrip- Irnamadu' MoD

Jun 05,2007 0920H jets Unk# 'LTTE location,Mankulam area' MoD

Jun 04,2007 0915H jets Unk# 'Mortar position (2)' MoD

May 30,2007 9999H Kfir atleast 2 Pudukudyiruppu TNet

May 29,2007 1345H-1420H Kfir 2# Pudukudyiruppu TNet

May 19,2007 1000H Kfir atleast 2 Kanjikudichchiaru, Ampara TNet

May 11,2007 0730H-1120H Mig27 2x2 Pudukudyiruppu TNet

May 10,2007 0815H Mig27 2 Pudukudyiruppu TNet

May 08,2007 1030H Bombers 2 Kar'nankudiyiruppu in Puthukkudiyiruppu TNet

May 07,2007 0730H Bombers atleast 2 fuel storage at Vaddakkachchi TNet

Apr 30,2007 1445H Kfir 1 Iranamadu(supposed to have turned in to a Mig

after shot at by Automatic Air defence system of LTTE) TNet

Apr 26,2007 0700H 2 jets Thiruvaiyaaru TNet

Apr 24,2007 1630H 2 jets Puthukkudiyiruppu TNet

Apr 05,2007 1300H Kfir (2+) Iyakkachchi and Kaddaikkaadu TNet

Apr 04,2007 1300H Kfir (2+) Kaivaeli - Puthukkudiyir'uppu TNet

Apr 03,2007 1400H Kfir (2+) Alampil TNet

Apr 01,2007 2330H Mi24 (2+) puliyangkulam TNet

Mar. 26,2007 0600H-1200H Kfirs Unk# 'north of Mannar' ST

Mar. 21,2007 0600H-1200H jets Unk# 'South Vavunathivu area' CP

Mar 16,2007 0945H-1145H Kfir atleast 2 Chundikulam TNet

Mar. 13,2007 0600H-1200H jets Unk# 'Narakamulla,Thoppigala' CP

-- First Sortie by new SLAF MiG 27Ms--

Mar. 01,2007 0800H MiG 27M 'training base,Mankulam Jungle ' MoD

---First Sortie by new SLAF MiG 27Ms-----

Feb. 20,2007 0600H-1200H Jets Unk# 'artillery pos, Oddusudan' CP

Feb. 06,2007 0600H-1200H Mi 24 Unk# 'hideout Morawewa' CP

Jan. 22,2007 1600H-1900H Mi 24 Unk# 'CAS,Kumburupiddi,Trincomalee' CP

Jan. 22,2007 1600H-1900H KFir Unk# 'CAS,Kumburupiddi,Trincomalee' CP

Jan. 17,2007 0600H-1900H KFir Unk# 'CAS,Verugal,Trincomalee' CP

Jan. 16,2007 0600H-1900H KFir Unk# 'CAS, Verugal,Trincomalee' CP

Jan. 04,2007 0715H jets Unk# 'sea base,Alampil' MoD

Jan. 03,2007 1000H jets Unk# 'gun position,Verugal,Batticoloa' MOD

Jan. 02,2007 0930H jets Unk# 'sea base-Iluppaikadawali,Mannar' MoD

Jan. 02,2007 1020H jets Unk# ' mortar position-Vakarai' MoD

புதிய இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்ய இந்தியா உதவி?: பசில் மறைமுக தகவல்

Puthinam

இந்த பாப்பாண வர்க்கத்தால் ஈழ மக்களுக்கு வாழ்நாள் முழுதும் தலைவலி தான்.

தமிழீழம் பாகிஸ்தான் போல அணு ஆயுத பலம் கொண்ட நாடாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக இருக்கலாம்.

கடன்முறியால் கிடைக்கும் நிதியை வானூர்திக் கொள்வனவுக்கு பயன்படுத்துவோம் - பசில்

கடன்முறி மூலம் பெறப்படும் பன்னாட்டு நிதியை வானூர்திக் கொள்வனவுக்கு பயன்படுத்தவுள்ளதாக சிறீலங்கா அரச அதிபரின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசிஸ் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து பசிஸ் ராஜபக்ச தெரிவிக்கையில்....

அநுராதபுர வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட வானூர்திகளுக்காக புதிய வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு அனைத்துலக ரீதியில் சில நாடுகள் முன்வந்துள்ளன. எனினும் அனைத்துலக ரீதியாக கிடைக்கும் கடன்முறி ஊடாகக் கிடைக்கும் நிதியை வானூர்திக் கொள்வனவுக்கு பயன்படுத்துவற்கு எமது அரசாங்கம் பின்னிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.