Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20250410_064310.jpg?resize=750%2C375&ssl

யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!

யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது.

குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்றும் வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428116

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

489581174_1111348161008041_3045290253065

யாழில் பாதை திறப்பு! யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி (T சந்தி) வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதி மக்களின் பாவனைக்காக 35 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் (10) ஆம் திகதி அதிகாலை 6 மணிமுதல் இராணுவத்தினரால் கட்டுப்பாடுகளுடன் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தியூடாக அச்சுவேலி செல்லும் வீதி திறக்கப்பட்டது. இன்று இரண்டாம் கட்டமாக வசாவிளான் சந்தியிலிருந்து- பலாலி T சந்திவரை திறக்கப்பட்டதையடுத்து பலாலி வீதி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; பொங்கல் பொங்கி கொண்டாடிய மக்கள்

இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த யாழ்ப்பாணம் வசாவிளான் – பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.

35 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன் வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஒரு தேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/316935

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பாவனைக்கு அந்த வீதி திறந்தது நல்ல விடயம் .......! 👍

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்!

Published By: DIGITAL DESK 2 10 APR, 2025 | 11:18 AM

image

யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான  கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக  வியாழக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதி மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் இன்று (10) வீதி கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் வீதியில் தேங்காய் உடைத்து , பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

45__3_.jpg

 45__1_.jpg

https://www.virakesari.lk/article/211674

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran.jpg

IMG-2822.jpg

465462914_8370366529753141_4542564094435

கடந்த ஒக்ரோபர் மாதம்... சுமந்திரன், அச்சுவேலி – வசாவிளான் வீதியை.. தான் சொல்லித்தான் திறந்தது என்று "பீலா" விட்டு.. பொங்கல் பொங்கி தின்ற மாதிரி, இன்று திறக்கப் பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதியும் தன்னால் தான் திறக்கப் பட்டது என்று "பீலா" விடவில்லையா. 😂

அல்லது தனது சுத்துமாத்துகள் எல்லாம், இனி வேலைக்கு ஆகாது என்று சுமந்திரன் அமைதியாக இருக்கின்றாரா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் 

10 Apr, 2025 | 04:35 PM

image

யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக வியாழக்கிழமை (10) திறக்கப்பட்டதையடுத்து, காங்கேசன்துறை - பலாலி - யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் குறித்த வழித்தட பேருந்துகள் வசாவிளான் சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தின் வீதி தடையுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்திக்கொண்டன. 

தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால், இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து, அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும், அதன் மூலம் பலாலி வடக்கு, அந்தோணிபுரம், மயிலிட்டியை சென்றடையும்.

மக்கள் குறித்த பேருந்து சேவை ஊடாக இலகுவாக யாழ்ப்பாண நகர் பகுதிக்கு தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும், இன்னமும் ஓரிரு நாட்களில் நேர அட்டவணைகள் தயார் ஆனதும் , பேருந்து சேவைகள் இடம்பெறும் என 764ஆம் இலக்க வழித்தட , தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 35 ஆண்டுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு முக்கிய சாலை திறப்பு - அதில் என்ன இருக்கிறது?

இலங்கை

பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 59 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தின் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வீதியொன்று கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 10) கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பலாலி பகுதியின் அச்சுவேலி முதல் பருத்தித்துறை வரையான வீதி, சுமார் 35 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி திறக்கப்பட்டதை முன்னிட்டு, அந்த பிரதேச மக்கள் வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை

பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM

கட்டுப்பாடுகள் என்ன?

பலாலி அதிவுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ராணுவ குடியிருப்பின் ஊடாக இந்த வீதி செல்வதாக அந்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அந்த அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

  • நாளாந்தம் அதிகாலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே இந்த வீதி திறக்கப்பட்டிருக்கும்.

  • இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல் மற்றும் திருப்புதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

  • வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.

  • இந்த வீதியில் நடைபயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

  • இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்களை தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • இந்த வீதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அதிகூடிய வேகமாக 40 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.

  • இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM

படக்குறிப்பு,இந்த வீதியூடாக பயணிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வீதியில் என்ன இருக்கின்றது?

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த பகுதி முழுமையாக அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு என அழைக்கப்படும் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் காணிகளை ராணுவம் கையகப்படுத்தியிருந்தது.

இவ்வாறு பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள் உள்ளிட்ட ராணுவ பயன்பாட்டுக்கள் இடம்பெற்று வந்த பின்னணியில், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், கடந்த கால அரசாங்கங்கள் பல காணிகளை விடுவித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு முன்நகர்வாக இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பட மூலாதாரம்,NIRUJAN SELVANAYAGAM

காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை

35 வருடங்களின் பின்னர் இந்த வீதியூடாக பயணித்தவர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அந்த வீதியின் தற்போதைய நிலைமை குறித்தும் கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்த வீதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ராணுவ முகாம்கள், ராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ செயற்பாடுகளை அவதானிக்க முடிவதாக மக்கள் கூறுகின்றனர்.

''இந்த வீதி விடுவிக்கப்பட்டமைக்கு மக்களை பொருத்தவரை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதேபோன்று எங்களுடைய காணிகளை சும்மா தான் வைத்திருக்கின்றார்கள். பலாலி மாத்திரமன்றி, வலிகாமம் வடக்கில் வசாவிலான், கட்டுவான், குரும்பசிட்டி, பலாலி, மயிலிட்டி, ஊரணி என்று சொல்லி ஏராளமான காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றையும் விடுவித்து தர வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.'' என வீதி திறப்பிற்காக வருகைத் தந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கின்றார்.

மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

''இந்த பிரதேசத்திலுள்ள ஏனைய விடயங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்பட வேண்டியிருக்கின்றது. இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இவற்றோடு மக்களின் குடியிருப்பு காணிகள் இன்னும் விடுப்பட வேண்டியிருக்கின்றது, உடனடியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. படிப்படியாக இந்த தேவைகளை பூர்த்தி செய்து, மக்கள் சுபீட்சமாக சந்தோசமாக வாழ்வதற்காக ஏதுவான காரணிகளை செய்து கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்'' என இந்த இடத்திற்கு வருகைத் தந்த மதக்குரு ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

''எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். எங்களுடைய நிலத்தில் நாங்கள் குடியேற வேண்டும். எங்களுடைய காணிகளில் நாங்கள் சாவதற்கு முன்னர் குடியேற வேண்டும் என்பதே எங்களுடைய ஆசையாக இருக்கின்றது. நான் செத்த பிறகு என்னுடைய பிள்ளைக்கு காணி தெரியாது. நான் வந்து காட்டினால் தான் காணி பிள்ளைக்கு தெரியும். எங்களுடைய காலத்தில் விடுவிக்கப்பட வேண்டும்'' என அந்த பிரதேசவாசி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை

படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன்

''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்ல''

இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

''இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட 'உயர் பாதுகாப்பு வலயம்' அல்ல. மாலை 5 மணியிலிருந்து காலை 6 மணி வரை இதனை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும்தான் பாதைகளைத் திறப்பீர்களா? எனவும் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளுடனாவது பாதை திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளருடமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை

பட மூலாதாரம்,MOD SRI LANKA

படக்குறிப்பு,நலின் ஹேரத்

90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டன - ராணுவம் பிபிசிக்கு தெரிவிப்பு

யுத்தக் காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''ஏனைய காணிகளை நாங்கள் மீளாய்வுகளின் பின்னர் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். பூகோள ரீதியில் முக்கியத்துவமாக உள்ள காணிகளே விடுவிக்கப்படாது காணப்படுகின்றன. உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். முடியுமான காணிகளை நாங்கள் விரைவில் விடுவிப்போம். 90 வீதமான காணிகளை விடுவித்துள்ளோம். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அதிலுள்ள காணிகளை மீளாய்வு செய்து, ராணுவத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டிய காணிகளை வைத்துக்கொண்டு, எஞ்சிய அனைத்து காணிகளையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். '' என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cy0yy4wqg2lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.