Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜேவிபியின் தமிழ் அமைச்சரின் ஆதரவாளர்கள் தமிழ் மீன் தொழிளார் தலைவரை பிரச்சனைகள் பற்றி பேசியதற்கு போட்டு அடித்து தாக்கியுள்ளாராம்.


டோழர் பாலன் தனது பெயரை ஜிஹாத் பாதுகாப்பு தோழர் பாலன் என்று மாற்றி கொள்வதே பொருத்தமானது

மோடிக்கு செம்பு தூக்கினால் தான் தன்னுடைய ஆட்சியை மகிந்தா கோஸ்டியிடமிருந்து பாதுகாத்து கொள்ளமுடியும் என்று நன்றாகவே கற்று தெரிந்துள்ளார்...

ஜெ.வி.பியினர் வன்முறையில் ஈடுபட்டால அது... "சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து அடி வாங்கினாரே அது போன்றது ....

பட்டு தெளிவதுதான் ம்க்களின் வரலாறு..🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2025 at 18:36, ஏராளன் said:

இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

The Resistance Front இது என்ன அரபு பெயர் மாதிரி இல்லையே இதை மதம் அனுமதிக்குமா?

On 23/4/2025 at 08:18, ஏராளன் said:

துப்பாக்கி ஏந்தியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்க முடிந்தது.

உண்மை ஆனால் ஒரு முஸ்லிம் மட்டும் அவர்களால் சுட்டு கொல்லபட்டிருக்கின்றார்

Syed Adil Hussain Shah 🙏 அவர் மனிதநேயம் கொண்டவர் நல்லவர் மற்றவர்களை காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் போராடியதால் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார் பயங்கரவாதிகளுக்கு அவர் மத துரோகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதி பாதுகாப்பின்றி இருந்தது ஏன்? விடை கிடைக்காத 3 கேள்விகள்

பஹல்காம், ஜம்மு காஷ்மீர், இந்தியா, பைசரன்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் பணியில் உள்ள ராணுவ வீரர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், இஷாத்ரிதா லாஹிரி

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு பல காணொளிகள் வெளியாகின. அதில் ஒரு வைரல் வீடியோவில் குஜராத்தை சேர்ந்த ஷீதல் கலாதியா இருந்தார். அவரது கணவரான சைலேஷ்பாய் கலாதியாவும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் சிஆர் பாட்டில் அவருடைய குடும்பத்தைக் காண சூரத் சென்றார். அவர் முன்பு ஷீத்தல் கட்டுப்படுத்த முடியாமல் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

"உங்களுக்கு நிறைய விஐபி கார்கள் உள்ளன. வரி செலுத்தும் மக்களின் நிலை என்ன? அங்கு எந்த வீரர்களும் மருத்துவக் குழுவும் இல்லை" என்று ஷீதல் தெரிவித்தார்.

ஆங்கில நாளிதழான தி இந்து, இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த மகாராஷ்டிராவை சேர்ந்தவரான பராஸ் ஜெய்னிடம் பேசியது. இந்தத் தாக்குதல் 25-30 நிமிடங்கள் நீடித்ததாக அவர் தெரிவித்தார். அங்கு எந்த காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் பராஸ்.

இந்தத் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் (சிஆர்பிஎஃப்) முகாம் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபல்ஸ் பிரிவினரின் முகாம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத், சிஆர் பாடில், பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,சைலேஷ்பாய் கலாதியாவின் குடும்பத்தினரை மத்திய அமைச்சர் சிஆர் பாட்டில் சந்தித்தார்.

இந்தத் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினரும் நாட்டு மக்களும் மீண்டு வருகின்ற நிலையில், மறுபுறம் இதுகுறித்துப் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

தற்போது வரை இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கவில்லை.

அதில் மிக முக்கியமான கேள்வி, பஹல்காமின் மிகவும் பிரபல சுற்றுலாத் தளமாக இருக்கும் பைசரனில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இருக்கவில்லை என்பதுதான்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் பாதுகாப்பு சார்ந்த வல்லுநர்களுடன் பேசி இந்தக் கேள்விகளுக்கு விடை காண பிபிசி முயன்றது. வல்லுநர்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.

பைசரனில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இல்லை?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் பிரபலமான சுற்றுலாத் தளத்தில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்கிற கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளரும் காஷ்மீர் விவகார வல்லுநரான அனுராதா பாசின், ஜம்மு காஷ்மீரில் எப்போதுமே கடுமையான ராணுவ வீரர்களின் இருப்பைப் பார்த்ததாக நினைவு கூர்கிறார்.

"கடந்த 1990களில் இருந்து பாதுகாப்பு இல்லாத எந்தப் பொது இடத்தையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. எல்லா இடங்களிலும் சில பாதுகாப்பு வீரர்கள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்க முடியும். எனவே இந்த இடத்தில் பாதுகாப்பு இருக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் பாசின்.

அவர் மேலும் சில கேள்விகளை எழுப்பினார். தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் எவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் பொதுவெளிக்கு வந்தன? இது மட்டுமில்லை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மனதை ரணமாக்கும் புகைப்படங்கள் எவ்வாறு பொதுவெளிக்கு வந்தன?

"பாதுகாப்புப் படைகள் அங்கு வந்து சேர்வதற்கு நேரம் ஆனது. ஆனால் ஒரு சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தியவரின் புகைப்படங்கள் அவர்களிடம் இருந்தன. எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார்கள்? இந்த விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாகத் தெரியவில்லை. இது போல விசாரணை மீது கேள்வி எழுப்பப்பட்ட பல சம்பவங்கள் இருக்கின்றன. எனக்குள்ள சில கேள்விகள் இவைதான்" என்கிறார் பாசின்.

கடந்த 2019ஆம் ஆண்டில் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும்கூட காஷ்மீரில் பெரிதாக இல்லையென்றாலும், இதுபோன்ற சம்பவங்கள், நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் பாசின். உலகின் மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட ஓரிடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுதான் பல கேள்விகளையும் எழுப்புவதாகக் கூறுகிறார் பாசின்.

"கடந்த ஐந்து ஆண்டுகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயுதப் போராட்டம் முடிந்ததாகச் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்கூட 'கட்டுப்படுத்தப்பட்ட' போன்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர்.

ஆயுதப் போராட்டத்தின் 'முடிவு' என்பது போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. ஆயுதப் போராட்டம் முடிந்தது என்பது ஒரு விதமான அரசியல் பேச்சுதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி எதுவென்றாலும் அவை ராணுவக் கட்டுப்பாட்டின் மூலமே ஏற்பட்டுள்ளன" என்கிறார் அனுராதா பாசின்.

பஹல்காம், பைசரன், ஜம்மு காஷ்மீர், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் அமிதாப் மட்டூ சர்வதேச மோதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வல்லுநரும்கூட.

பாசினின் கேள்விக்குப் பதிலளிக்கையில், "கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான சுற்றுலாத் தளங்களில் கடுமையான அளவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கும் போக்கு உள்ளது" என்றார் அமிதாப்.

மேலும் அவர், "இந்த யுக்தி திறம்பட இருந்தது, ஆனால் மிகவும் வெளிப்படையாக இல்லை. என்ன இருந்தாலும் இது பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தவறு" என்றார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைவர் எஸ்பி வெய்த் பிபிசியிடம் பேசியபோது, "சுற்றுலாப் பயணிகள் தொலைதூரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் காவல்துறையினர் அங்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும்" என்றார்.

அங்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருந்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார். "காவல்துறை அல்லது துணை ராணுவப் படையினர் அங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் இருந்திருந்தால் தீவிரவாதிகளைச் சமாளித்திருப்பார்கள். அதேநேரம் காவல்துறையினர் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதும் உண்மைதான். வளங்களும் குறைவாக உள்ளன. ஆனால் சுற்றுலாப் பயணிகள் தொலைவில் இருக்கும் ஓரிடத்திற்குச் செல்கிறார்கள் என்றால் நிச்சயம் அங்கு காவல்துறையினர் இருந்திருக்க வேண்டும்" என்றார்.

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலான சதிஷ் துவா நீண்ட காலம் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்துள்ளார். "அனைத்து உட்புறப் பகுதிகளிலும் ராணுவம் மற்றும் தேசிய ரைஃபல்ஸ் இருக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகளைச் சமாளிக்க எல்லைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையைப் பற்றிப் பார்க்கும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு 120 கிலோமீட்டர் நீளமும் 38 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. எல்லா இடங்களிலும் காவல்துறையினரை பணியில் வைப்பது சாத்தியம் இல்லை" என்றார்.

பொதுமக்கள் ஏன் குறிவைக்கப்பட்டார்கள்?

பஹல்காம், ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர், பைசரன், சுற்றுலாப் பயணிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.

பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டது தொடர்பாகவும் கேள்விகள் எழுகின்றன. வேறு எந்தத் தாக்குதலிலும் இல்லாத ஒரு முறையை இப்போது தீவிரவாதிகள் பின்பற்றியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் காவல்துறையினரோ ராணுவ வீரர்களோ அல்லாமல் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். ஜம்மு காஷ்மீரிலோ அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலோ இவ்வளவு பெரிய அளவில் பொது மக்கள் குறிவைக்கப்படும் சம்பவம், நீண்ட காலம் கழித்து முதல் முறையாக நிகழ்கிறது.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதிஷ் துவா இதை விவரமாக விளக்குகிறார்.

"கடந்த ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நிலைமை முன்னேறியுள்ளது மற்றும் ஒரு நேர்மறையான மாற்றம் உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். சுற்றுலாத் துறையும் மிக வேகமாக வளரத் தொடங்கியது. தீவிரவாதிகள் எப்போதும் சுற்றுலாத் தலங்களைக் குறிவைக்க மாட்டார்கள். காஷ்மீரில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இதுதான் உண்மை.

ஏனென்றால் தீவிரவாதிகள் அவ்வாறு செய்தால் உள்ளூர் காஷ்மீரிகளின் வாழ்வாதாரத்தைக் குறிவைப்பார்கள். அவர்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். இது அவர்களின் ஆதரவை முடித்துவிடும். இதனால்தான் உள்ளூர் பகுதிகளில் தீவிரவாதிகள் பொது மக்களைக் குறிவைக்க மாட்டார்கள் என்கிற புரிதல் நமக்கு உள்ளது" என்கிறார் துவா.

"நான் படைத் தளபதியாக இருந்தபோது காஷ்மீருக்கு சுற்றுலா வரலாமா என என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களிடன் கண்டிப்பாக வாருங்கள். நீங்கள் தால் ஏரிக்கு அருகில் அமரலாம் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம். ஏனென்றால் இந்த இடங்களில் எந்தத் தாக்குதல்களும் இல்லை என்றுதான் எப்போதும் கூறுவேன்" என்றார்.

பஹல்காம், ஜம்மு காஷ்மீர், இந்தியா, பைசரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சஞ்சய் லேலேவின் குடும்பத்தினர்

இந்தத் தாக்குதலில் பொதுமக்களைக் குறிவைத்தற்கான காரணம் தொடர்பான கேள்விகளை எழுப்புகிறார் பேராசிரியர் அமிதாப் மட்டூ.

"ஏன் தீவிரவாதக் குழுக்கள் பொதுமக்களைக் குறிவைக்கத் தொடங்கினார்கள்? முன்னர் அவர்கள் ராணுவ நிலையங்களைத்தான் குறிவைப்பார்கள். இந்த முறை காஷ்மீர் மக்களின் உணர்வுகளை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இது இயல்புநிலை என்கிற எண்ணத்தை நிராகரிக்கும் வழியா?" என்கிறார்.

மேலும் அவர், "முன்னர் ராணுவ இலக்குகள் மற்றும் உள்ளூர் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்குகள் இடையே வேறுபடுத்துவதுதான் உத்தியாக இருந்தது. இப்போது அந்த வேறுபாடு மறைந்துள்ளது. அது தவிர இந்த முறை அவர்கள் இந்துக்களை குறிவைத்துள்ளனர்" என்றார்.

நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்பதும் பொது மக்களைக் குறிவைத்ததற்கான ஒரு காரணம் என துவா நம்புகிறார்.

"தீவிரவாதிகள் என்ன செய்தார்கள்? அவர்கள் இந்து ஆண்களை தனிமைப்படுத்திக் கொன்றுள்ளனர். இதன் நோக்கம், பெண்கள் அவர்களின் ஊர்களுக்குச் சென்று இந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான். பெண்களின் அழுகுரலுக்கு அனைத்து இடங்களிலும் தாக்கம் உண்டு. இதன் மூலம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உணர்வுகளைத் தூண்டலாம். நாம் இந்த வலையில் விழமாட்டோம் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும்" என்கிறார் துவா.

அவரைப் பொறுத்தவரை, இது 2023ஆம் ஆண்டில் நடந்த ஹமாஸ் தாக்குதலைப் போன்றதுதான்.

"அவர்கள் இஸ்ரேலின் நோவா இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் செய்ததைப் போன்ற வழிமுறையைத் தேர்வு செய்துள்ளார்கள். பாதுகாப்புப் படையினரைக் கொல்வதைவிட அப்பாவி மக்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளைக் கொல்வது மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே காரணம்" என்றார்.

இது உளவுத் துறையின் தோல்வியா?

பஹல்காம், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலில் எல்லை கடந்த தொடர்பு இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஈடுபாடு பற்றித் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்கிறார் அமிதாப் மட்டூ. அதேவேளையில், இது உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வியா என்கிற கேள்வியும் எழுகிறது.

"பாகிஸ்தானில் உள்ள அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகள் இடையே எவ்வளவு உடன்பாடு இருக்கிறது எனத் தெரியவில்லை. ராணுவம், ஐஎஸ்ஐ, லஷ்கர்-இ-தைபா போன்ற அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியுமா? இதில் பாகிஸ்தானின் ஈடுபாடு பற்றிச் சிறிதளவுகூட நான் சந்தேகிக்கவில்லை." என்றார்.

"இது உளவுத்துறையின் தோல்வி. நமக்கு ஏன் இந்தத் தாக்குதலை ஊகித்து முறியடிக்கக்கூடிய எந்த மின்னணுத் தகவலும் கிடைக்கவில்லை?" என்கிறார் மட்டூ.

உளவுத்துறை தோல்வி என்பது ஒரு மிகப்பெரிய தவறு என நம்புகிறார் சதிஷ் துவா.

"நாம் எதையாவது சிறப்பாகச் செய்திருக்க முடியுமா? ஆம். நான் எந்தத் தவறுகளுமே இல்லை எனச் சொல்லவில்லை. நாம் சிறப்பாக உளவுத் தகவல்களைச் சேகரித்திருக்கலாம். இந்தச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிப் பேசியிருந்தார்.

இந்தச் சமிக்ஞையை நாம் புரிந்திருக்க வேண்டும். எந்த பெரிய தீவிரவாதத் தாக்குதலுக்கும் மேலிடத்தில்தான் ஒப்புதல் வழங்கப்படுகின்றன. பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும். எனவே இந்த மாதிரியான விஷயங்கள் மீது நாம் கவனமுடன் இருந்திருக்க வேண்டும். நாம் களத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும்." என்கிறார் துவா.

மேலும் அவர், "இந்த நாடு மனித உளவுக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நாம் தற்போது மின்னணு உளவு அமைப்பை அதிகம் சார்ந்திருக்கிறோம். இது இரண்டும் சேர்ந்த சிறந்த அமைப்பாக இருக்க வேண்டும்" என்றார்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கையில் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு எல்லை கடந்து தொடர்பு இருப்பதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். இது மட்டுமில்லை, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் அட்டாரி எல்லையை மூடியது, விசாக்களை ரத்து செய்தது மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததும் அடங்கும். பல பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1exxldyxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்' - முன்னாள் ரா தலைவர் பிபிசிக்கு பேட்டி

ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத்

படக்குறிப்பு,ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜுகல் புரோகித்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"பஹல்காமில் நடந்த தாக்குதலில் காஷ்மீரிகளின் மீது எந்தத் தவறும் இல்லை. அங்கிருக்கும் சிலருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் அல்லது அதற்கான சதித் திட்டத்தில் பங்கேற்று இருக்கலாம்… ஆனால் இதற்காக அனைத்து காஷ்மீரிகளும் தண்டிக்கப்படக் கூடாது."

இந்தக் கருத்தைக் கூறுவது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) முன்னாள் தலைவரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அமர்ஜித் சிங் துலாத்.

கடந்த மாதம் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்? இந்தியா என்ன செய்ய வேண்டும், அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில்?

இதுபோன்ற சில முக்கியமான கேள்விகளை அமர்ஜித் சிங்கிடம் கேட்டோம், அனுபவமிக்க அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை அறிய விரும்பினோம்.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் அருகே தாக்குதல் நடந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் அருகே தாக்குதல் நடந்தது

கடந்த 1940ஆம் ஆண்டு பிறந்த அமர்ஜித் சிங் துலாத், அடல் பிஹாரி வாஜ்பேய் அரசாங்கத்தில் பிரதமர் அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தனது பணிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஜம்மு காஷ்மீரில் உளவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

பிபிசி உடனான சிறப்பு உரையாடலின்போது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்பின் குறைபாடுகள் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம்

"பஹல்காமில் நடந்தது போன்ற மிகவும் மோசமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை என்று கூறுவேன். பஹல்காம் தாக்குதல் ஒரு பாதுகாப்பு தோல்வி என்றே எனக்கு தோன்றுகிறது. அங்கு எந்த வகையான பாதுகாப்பும் இல்லை. நிர்வாகத்திற்குத் தெரியாமல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தால், இதுவும் உளவுத்துறை தோல்விதான்" என்று அவர் கூறுகிறார்.

தனது கருத்தைத் தெளிவுபடுத்தும் அவர் இவ்வாறு கூறுகிறார்: "நாம் உளவுத் தகவல்கள் அல்லது உளவுத்துறை அமைப்பு பற்றிப் பேசும்போது, காஷ்மீரில் மிக முக்கியமான துப்புகளும் தகவல்களும் காஷ்மீரிகளிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே காஷ்மீரிகளை நமக்கு இணக்கமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்."

"இந்தத் தாக்குதல் ஏன் நடந்தது, எப்படி நடந்தது, என்ன நடந்தது, யார் பொறுப்பு என்பதை விசாரிக்க வேண்டும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பேணும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது, அங்குள்ள முதலமைச்சரின் கைகளில் இல்லை. எனவே மத்திய அரசு இதைப் பற்றி ஆழமாக ஆராய வேண்டும். தவறு எங்கே நடந்தது என்பதை அங்குள்ள துணைநிலை ஆளுநர் ஆராய வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

தீவிரவாத சம்பவங்களுக்கும் சுற்றுலாவுக்கு என்ன தொடர்பு?

ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

அரசாங்க தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில் 34 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். அதுவே, 2023ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

அதைவிட 2024ஆம் ஆண்டில், ஜூன் மாதத்திற்கு உள்ளாகவே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே எட்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது என்றால், அங்கு தீவிரவாத வன்முறைச் சம்பவங்கள் குறைந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

தெற்காசிய தீவிரவாத போர்ட்டலின்படி, 2012ஆம் ஆண்டில், தீவிரவாத வன்முறைச் சம்பவங்களில் ஜம்மு காஷ்மீரில் 19 பொதுமக்கள் உயிரிழந்தனர், பாதுகாப்புப் படையினர் 18 பேர் கொல்லப்பட்டனர், 84 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்

அதுவே 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தீவிரவாத வன்முறைகளில் பொதுமக்களில் 12 பேர், 33 பாதுகாப்புப் படையினர் மற்றும் 87 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2024ஆம் ஆண்டில், 31 பொதுமக்கள், 26 பாதுகாப்புப் படையினர் மற்றும் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதாவது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

ஆனால் அரசின் அறிக்கைகளில், ஜம்மு-காஷ்மீரில் 'பூஜ்ஜிய தீவிரவாதம்' போன்ற விஷயங்களும் இடம்பெறத் தொடங்கின. 'ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு ஏதுவான சூழல் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டதாகவும்' கூறப்பட்டது.

அதே நேரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே இல்லாத பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடங்கினார்கள். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகுதான், பல பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு நிர்வாகம் தடை செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் பிரச்னையை அமர்ஜித் சிங் துலாத் எப்படிப் பார்க்கிறார் என்று அவரிடம் கேட்டோம்.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. சுற்றுலா என்பது வேறு, இயல்புநிலை என்பது வேறு. ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை நிலவுவதாக நாம் கூறும்போதெல்லாம், அந்தப் பக்கத்தில் இருந்து தாக்குதல்கள் நடக்கின்றன" என்று அவர் கூறுகிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறை 'பூஜ்ஜிய பயங்கரவாதம்' பற்றிப் பேசியிருந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறை 'பூஜ்ஜிய தீவிரவாதம்' பற்றிப் பேசியிருந்தது

மேலும், "சுற்றுலாத்துறை அங்கு முன்னேறிக் கொண்டிருந்தது, பயணிகள் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தனர். ஆனால், அரசாங்கம் ஆபத்தை முன்கூட்டியே பார்த்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் எங்கு சென்றாலும், பாதுகாப்பு இருப்பதைக் காணலாம். ஆனால், தாக்குதல் நடைபெற்றபோது பஹல்காமுக்கு வெளியே, பைசரன் பள்ளத்தாக்கில் ஏன் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை" என்று அமர்ஜித் சிங் ஆச்சரியப்படுகிறார்.

'இது இந்து-முஸ்லிம் பிரச்னை அல்ல'

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, வன்முறைக்கு எதிராக ஸ்ரீநகரில் காஷ்மீர் வணிகர்கள் போராட்டங்களை நடத்தினார்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, வன்முறைக்கு எதிராக ஸ்ரீநகரில் காஷ்மீர் வணிகர்கள் போராட்டங்களை நடத்தினார்கள்

பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டே சுட்டதாக, தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன, அதன் பின்னணியில் எத்தகைய சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது, இந்தியா என்ன மாதிரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமர்ஜித் சிங் துலாத்திடம் கேட்டோம்.

"பஹல்காமில் இந்து-முஸ்லிம் பிரச்னையில் தாக்குதல் நடைபெறவில்லை. ஜம்மு-காஷ்மீரிலோ அல்லது இந்தியாவிலோ இந்து-முஸ்லிம் பிரச்னை இல்லை. பார்க்கப் போனால், இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று என்ற செய்தி தெளிவாகத் தரப்பட வேண்டும்.

கடந்த 1947இல் விடுதலை பெற்றது முதலே ஒரு சில மதப் பிரச்னைகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக இருந்த போதிலும், அங்கு ஒருபோதும் இந்து-முஸ்லிம் பிரச்னை இருந்ததில்லை" என்று அவர் பதில் கூறுகிறார்.

"காஷ்மீரியத் என்று நாம் அழைப்பது என்ன? காஷ்மீரியத்தின்படி, அங்குள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் நெருங்கியுள்ளனர். நாம் காஷ்மீரியத்தை இழக்கக்கூடாது என்று கூற விரும்புகிறேன், அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம்" என்று தெரிவித்தார் அவர்.

'போர் நடக்கும் என்று நான் நம்பவில்லை'

நபிசா ராஸ் இந்தியர், அவரது குழந்தைகள் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நபிசா ராஸ் ஒரு இந்தியர், அவரது குழந்தைகள் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அது தூதரக நிலை, வர்த்தகம் அல்லது மக்கள் நடமாட்டம் போன்ற விஷயங்கள் எனப் பல்வேறு விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிடிஐ செய்தி முகமையின் செய்திகள்படி, பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க ஆயுதப் படைகளுக்கு அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார்.

அதே நேரத்தில், இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்று அமர்ஜித் சிங் துலாத் என்ன நினைக்கிறார் எனக் கேட்டோம்.

கடந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைந்தது

"ராஜ்ஜீய ரீதியாக, பாகிஸ்தானுக்கு வலுவான செய்தி ஒன்றை இந்தியா அனுப்பியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளக்கூடும் என்றும் மக்கள் கூறுகிறார்கள். போர் என்பது மிகவும் தவறான வழி என்றும், வேறு வழியில்லை என்ற நிலையில் அது இறுதியானதாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். அதோடு போர் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று துலாத் கூறுகிறார்.

"எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். 2021ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டது ஏன்? அன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வாவும் இந்தியாவுடன் இணக்கமான உறவை விரும்பினார்கள்.

அதேபோல், இன்று பாகிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் நவாஸ் ஷெரீப்பும், பிரதமர் மோதியும் பரஸ்பரம் நல்லுறவைக் கொண்டுள்ளனர். எனவே சமாதானம் ஏற்படலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்."

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 போர் விமானம்

இது பற்றி மேலும் விரிவாகப் பேசும் அமர்ஜித் சிங் துலாத், "தற்போது சூழல் சற்று மோசமாக உள்ளது, நிலைமை மாற சிறிது காலம் ஆகலாம். ஆனால் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குப் பல வழிகள் உள்ளன. திரைக்குப் பின்னால் அதைச் செய்யுங்கள், பின்னணி சேனல் ஒன்றை உருவாக்கிப் பேசுங்கள்.

என்னைப் பொறுத்தவரை, அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் முடிவடையாது. நேரடியாகப் பேச விரும்பாவிட்டால், செளதி அரேபியா, இரான் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என உங்கள் சார்பாக வேறு யாராவது பேச்சுவார்த்தை நடத்துவார்கள்."

"மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கை அல்லது பாலகோட் போன்ற ஏதாவது செய்யலாம், நிச்சயமாக அதைச் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, ராணுவத்தின் பதில் நடவடிக்கை வரையறுக்கப்பட்டதாக இருக்கலாம், அதில் தவறில்லை" என்கிறார் துலாத்.

இந்த முழு விவகாரத்திலும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை பொறுப்பாக்கி, இந்தியா நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை என்பதுதான். பஹல்காம் தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதாகவே வெளியுறவுச் செயலாளர் உறுதிபடக் கூறியிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் முன்பாக அடுத்து இருக்கும் பாதை

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஆதாரங்களை வழங்குவது இந்தியாவுக்கு பயனளிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் துலாத், "பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் உதவியின்றி நடந்திருக்காது. கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கான ஆதாரங்களை இந்தியா வழங்க முடிந்தால், அவற்றைப் பிற நாடுகளும் நம்பினால், இந்தியாவுக்கு நல்லது" என்கிறார்.

ஆனால், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறும் பாகிஸ்தான், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, 'நடுநிலை' விசாரணையில் பங்கேற்கும் என்று கூறியுள்ளது.

நிர்வாகத்தின் கூற்றுப்படி, இடிக்கப்பட்ட இந்த வீடு அஹ்சன்-உல்-ஹக் ஷேக்கின் குடும்பத்திற்கு சொந்தமானது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நிர்வாகத்தின் கூற்றுப்படி, இடிக்கப்பட்ட இந்த வீடு அஹ்சன்-உல்-ஹக் ஷேக்கின் குடும்பத்திற்குச் சொந்தமானது

உள்ளூர் தீவிரவாதிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற விஷயம் புதிதானது இல்லை என துலாத் கூறுகிறார்.

"இந்தத் தாக்குதலில் உள்ளூர்வாசிகளில் சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலைக் கேள்விப்பட்டபோது, எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. உண்மையில், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

பெரும்பாலும் அது நமக்குத் தெரிய வராது. ஆனால் தற்போது மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காக உதவிய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், 250-300 பேரைக் கைது செய்யாதீர்கள். ஏனென்றால், அவ்வாறு செய்வது யார் மீது தவறு இருக்கிறது என்பதை அடையாளம் காண முடியாமல் நாம் தோல்வி அடைந்ததையே காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக ஆகஸ்ட் 2019 இல் காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்த

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஆகஸ்ட் 2019இல் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் வெடித்த போராட்டங்கள்

உள்ளூர் மக்களிடையே அதிகரித்து வரும் விரக்திக்கான காரணத்தைக் கூறும் துலாத், "கடந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைந்தபோது, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இது தங்கள் அரசாங்கம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதாக மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர். இப்போதும் ஜம்மு காஷ்மீரை நடத்துவது டெல்லிதான் (மத்திய அரசு) என்று அவர்கள் கூறுகின்றனர்" என்கிறார்.

"அங்கே மீண்டும் ஒருவிதமான விரக்தி நிலை வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் அங்குள்ள மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அங்குள்ள மக்கள் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

"கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலாப் பயணியாக அல்லாமல் நிலைமையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் காஷ்மீருக்கு சென்றிருந்தால், மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டிருக்கலாம். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நாட்டில் மக்கள் மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்திருக்கலாம். ஒரு நோய் நீங்கியது என்றும் இது நல்லது என்றும் மக்கள் சொன்னார்கள்" என்று துலாத் சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்த காஷ்மீர் மக்கள், டெல்லி (மத்திய அரசு) எப்போதும் தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், ஆனால் இந்திய மக்களும் தங்களுக்கு எதிரானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் சொன்னார்கள். பின்னர் படிப்படியாக காஷ்மீர் அமைதியாகிவிட்டது. இந்த கனத்த மௌனத்தைக் கவனிக்க வேண்டும். இவ்வளவு அமைதியாக இருப்பது நல்லதல்ல" என்று தனது அனுபவத்தை மேற்கோள் காட்டி துலாத் கூறுகிறார்.

ஜம்மு காஷ்மீர் மக்களுடன் இந்தியா தொடர்ந்து பேச வேண்டும் என்று கூறும் துலாத், "சுற்றுலா மூலம் காஷ்மீரிகளுடான இடைவெளியை நிரப்ப முடியாது. அதற்குப் பேச்சுவார்த்தை அவசியம்" என்று முன்னாள் ரா தலைவர் அமர்ஜித் சிங் துலாத் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c5ygng8qnvgo

  • கருத்துக்கள உறவுகள்

UL 122 எனும் சிறிலங்கா விமானம் சென்னையில் இருந்து கொழும்பு வந்த போது அதில் 6 காஸ்மீரிய பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து கொழும்பில் அவ்விமானம் தரை இறங்கியதும் சல்லடை போட்டு தேடப்பட்டு யாரும் கண்டு பிடிக்கப்படவில்லையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஹல்காம் தாக்குதல் : இனிமேல் என்ன நடக்கும்?

07 MAY, 2025 | 11:56 AM

image

கேணல் ஆர்.ஹரிஹரன் 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் வசம் உள்ள பகுதியின் நடைமுறை எல்லை (Line of Control) வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. 

கடந்த 25 ஆண்டுகளில் அத்தகைய 12,037 மோதல்களில் 22,415 பேர் கொல்லப்பட்டதாக தெற்காசிய பயங்கரவாத விவரங்கள் தரும் வலைதளம் ஒன்று  கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் 4,980 பேர் அப்பாவி மக்கள், பெரும்பாலோர் (12,390) தீவிரவாதிகளே.

பஹல்காமின் அருகே கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த தாக்குதலில் பங்குபற்றிய  நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் அங்கே கூடியுள்ள சுற்றுலாப் பயணிகளில் இந்து ஆண்களைத் தெரிவு செய்து சுட்டுத்தள்ளினார்கள். அவர்கள் ஆயுதத்தைப் பறிக்க முயன்ற ஒரு முஸ்லிம் இளைஞனையும் வீழ்த்தினார்கள். பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா (எல்.இ.டி)யின் கீழ் காஷ்மீரில் இயங்கி வரும் “தி ரெசிஸ்ட்டன்ஸ் ஃபுரன்ட்” என்ற இயக்கத்தை சார்ந்த மூவர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அப்பாவி மக்களைக் குறிவைத்த இந்த தாக்குதல், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடைமுறை எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பஹல்காமில் சுற்றுலா வரும் மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் குறிக்கோள் என்ன? இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவம் என்ன செய்தி சொல்ல விரும்புகிறது?

2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு இரத்துச் செய்யப்பட்ட பிறகு, தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. முக்கியமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தாக்குதல்கள் பாதியாக குறைந்தது மட்டும் அல்லாமல் அவற்றின் தீவிரமும் குறைந்துள்ளது. அதனால் அங்கே சுற்றுலா வர்த்தகம் குறிப்பிடத்தக்க எழுச்சி அடைந்துள்ளது. உதாரணமாக, 2023ஆம் ஆண்டில், முன்னெப்போதும் காணாத வளர்ச்சியாக 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியில் சுற்றுலாத்துறை  ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15.13%ஆக வளர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்திய கொள்கையின் அடிப்படையே ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுப்பதாகும். ஆகவே தான் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களில் பாகிஸ்தான் மூன்று முறை காஷ்மீரை மையப்படுத்தியது. ஆகவே அங்கே முன்னேறிவரும் பொருளாதார வளர்ச்சி தீவிரவாதத்தை நீர்த்துப் போகச்செய்வதால், பாகிஸ்தான் அதைத் தடுக்கவே சுற்றுலா பயணிகளின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

இரண்டாவதாக, பாகிஸ்தானில் உள்ள பி.எல்.ஏ என்று கூறப்படும் பலூச் விடுதலை இராணுவப் போராளிகள் அண்மையில் பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து தமது தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 380 பயணிகளுடன் பயணித்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை அவர்கள் கடத்தினார்கள். பாகிஸ்தான் ராணுவம் அணுகுவதற்கு கடினமாக இருந்த ஒரு மலைப்பகுதியில் அதை நிறுத்தினார்கள். பலூச் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது பணயக் கைதிகள் கொல்லப்படுவார்கள்  என்று அந்த அமைப்பு 48 மணிநேர இறுதி எச்சரிக்கை விடுத்தது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் இராணுவத்தின் இயலாமையை உலகுக்கு எடுத்துக்காட்டியது. இந்த கடத்தலில் இந்தியா பலூச் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பாகிஸ்தான்  இராணுவம் நம்புகிறது.

பாகிஸ்தானின் இராணுவத் தலைமைத் தளபதி (COAS) ஜெனரல் சையத் அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னரும்  பின்னரும்  பேசுகையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையான இரு நாடுகள் கோட்பாட்டை எழுப்பினார்.  "முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்று அல்ல, இரண்டு தனித்தனி நாடுகள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இருநாடுகள் கோட்பாடு. மதம், பழக்க வழக்கங்கள், மரபுகள், சிந்தனை மற்றும் அபிலாசைகள் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்" என்று பாகிஸ்தான் இராணுவ அகடமியில் (PMA) நடந்த பயிற்சி அணிவகுப்பில் உரையாற்றும்போது அவர் கூறினார். இந்த மனப்பான்மையின் பிரதிபலிப்பே இந்த தடவை தாக்குதலில் தீவிரவாதிகள் இந்துக்களை தனிமைப்படுத்தி கொன்றது என்று கொள்ளலாமா என்ற ஐயம் ஏற்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அவர் பேசுகையில் "நமது முன்னோர்கள் பாகிஸ்தானை உருவாக்க மகத்தான தியாகங்களைச் செய்தனர். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று அவர் கூறியது இந்த பிரச்சினையை எளிதில் முடிக்க பாகிஸ்தான் தயாராக இல்லை எனக் காட்டுகிறது. இந்தியா தொடர்பான தீர்மானங்களை பாகிஸ்தானில் இராணுவமே எடுக்கும். ஆகவே இந்திய-பாகிஸ்தான் தீவிரவாதப் போர், இராணுவப் போராக மாறும் அபாயம் அதிகமாகி வருகிறது என்றே கொள்ளலாம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மற்றும் இந்தியா சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ள தீவிரவாதத்தை எதிர்த்து தனது நிலைப்பாட்டை விளக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 

1960இல் பாகிஸ்தானுடன் கையொப்பமான சிந்து நதி தண்ணீர் பங்கீடு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆகவே தற்போது, இந்தியா போரில் ஈடுபடாமல் மாற்று வழிகளில் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்க விரும்புகிறது என்று கொள்ளலாம். இதனால் பயன் உண்டா என்பது சந்தேகமே. ஏனெனில், 26 நவம்பர் மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவே கூட பாகிஸ்தான் இதுவரை திருப்தியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போர் விளையுமா என்ற வினாவுக்கு விடை காண்பது அவ்வளவு எளிதில்லை.

https://www.virakesari.lk/article/214090

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.