Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-321.jpg?resize=750%2C375&ssl

கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு!

கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.

எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாக சாட்சிகள் விவரிக்கின்றனர்.

என்ன நடந்தது என்பது குறித்து வான்கூவர் பொலிஸார் எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால் கிழக்கு 41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவில் இரவு 8 மணிக்குப் பின்னர் ஒரு சாரதி கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

https://athavannews.com/2025/1429677

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் வான்கூவர் திருவிழாவில் கோர விபத்து : பலர் உயிரிழப்பு

Canada Accident World

By Raghav 4 hours ago

கனடாவில் (Canada)நடைபெற்ற லாபு லாபு தின தெரு விழாவில் (Lapu Lapu Day street festival) பங்கேற்ற மக்கள் மீது கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (26.04.2025) இரவு 8.00 மணியளவில் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கருப்பு நிற எஸ்யூவி வாகனம் ஒன்று அதிவேகமாக திருவிழா பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்த ஏராளமான மக்களை இடித்துத் தள்ளியுள்ளது.

கனடாவின் வான்கூவர் திருவிழாவில் கோர விபத்து : பலர் உயிரிழப்பு | Lapu Festival Vancouver Car Accident

மேலும், அந்த வாகனத்தை ஓட்டியவர் ஒரு இளம் ஆசிய இளைஞராகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

Additional footage from the scene of the incident at the Lapu Lapu Festival in Vancouver, Canada, in which an individual drove through a crowd of festivalgoers on a closed-off street, with reports right now suggesting 5-10 fatalities and well over a dozen injuries. The suspect is… pic.twitter.com/WNfYp9mXDh

— OSINTdefender (@sentdefender) April 27, 2025

https://ibctamil.com/article/lapu-festival-vancouver-car-accident-1745744961

  • கருத்துக்கள உறவுகள்
CP24
No image preview

Vancouver wakes to tragedy of nine dead in ramming attack...

Vancouver is waking to the tragic aftermath of a deadly ramming attack on a Filipino community street festival that killed at least nine people, with survivors describing horrifying scenes of victi...

Vancouver wakes to tragedy of nine dead in ramming attack on Filipino street festival..


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-331.jpg?resize=750%2C375&ssl

கனடா கார் தாக்குதல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

கனடாவின் வான்கூவர் நகரில் சனிக்கிழமை (26) நடந்த சந்தேகத்திற்குரிய கார் மோதிய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடும் வருடாந்திர லாபு லாபு விழாவில் நடந்த இந்த சம்பவத்தில் பல பொது மக்கள் காயமடைந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான ஆண் சந்தேக நபர் கை-ஜி ஆடம் லோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தற்சயம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

GpkZUZZWgAA3J4t?format=jpg&name=4096x409

என்ன நடந்தது?

இந்த தாக்குதல் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 08:14 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமை GMT 03:14) லாபு லாபு தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் நடந்தது.

இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27 அன்று கொண்டாடப்படுகிறது.

நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக பொலிஸார் சம்பவத்தின் பின்னர் தெரிவித்தனர்.

வான்கூவரின் தெற்கில் உள்ள கிழக்கு 43 ஆவது அவென்யூ மற்றும் ஃப்ரேசரில் நடந்த தாக்குதலில் ஒரே ஒரு வாகனம் ஈடுபட்டதாக விழாவிற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவத்தில் காயமடைந்த சில பாதசாரிகள் உணவு லொகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர்.

வாகனத்தின் ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

லாபு லாபு திருவிழா என்றால் என்ன?

1500 ஆம் ஆண்டுகளில் ஸ்பானிஷ் காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தேசிய வீரரான லாபு-லாபுவை நினைவுகூரும் வகையில், வான்கூவரில் நடைபெறும் லாபு லாபு விழாவும், பிலிப்பைன்ஸ் மற்றும் உலகெங்கிலும் இதே போன்ற விழாக்களும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன.

லாபுலாபு என்றும் அழைக்கப்படும் லாபு லாபு, பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு தீவான மக்டானின் பூர்வீகத் தலைவராக இருந்தார்.

1521 ஆம் ஆண்டில், அவரும் அவரது ஆட்களும் ஃபெர்டினாண்ட் மாகெல்லன் தலைமையிலான ஸ்பானிஷ் படைகளையும் அவரது சில பூர்வீக கூட்டாளிகளையும் மக்டான் போரில் தோற்கடித்தனர்.

இதனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியின் ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு தாமதமானது.

நவீன கால பிலிப்பைன்ஸில் அவர் ஒரு ஹீரோவாகக் கருதப்படுகிறார், மேலும் அவரது நினைவாக நாடு முழுவதும் நினைவுச்சின்னங்கள் பொதுவானவை.

தேசிய பொலிஸ் சேவை போன்ற பல பிலிப்பைன்ஸ் அரசு அமைப்புகள் அவரது படத்தை தங்கள் முத்திரைகளில் பயன்படுத்துகின்றன.

லாபு லாபு தினம் 2023 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர்ந்த குழுக்களில் ஒன்றாகும்.

1%2AxiX0IFrie3sgDrN8CDlZkQ.jpeg?ssl=1

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

இதுவரை, தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் அடையாளம் குறித்து மிகக் குறைவாகவே அறியப்படுகிறது.

சனிக்கிழமை நடைபெற்ற ஒரு சுருக்கமான செய்தியாளர் சந்திப்பில், வான்கூவர் காவல்துறைத் தலைவர் ஸ்டீவ் ராய், பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்குவர் என்று கூறினார்.

அவர்களின் 5 வயது முதல் 65 வயது வரை இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் தாக்குதல் வான்கூவரின் நெருக்கமான பிலிப்பைன்ஸ் சமூகத்தை ஆழமாகப் பாதித்துள்ளது.

GpkZVnvXIAAfqJH?format=jpg&name=4096x409

சந்தேக நபர் யார்?

சந்தேக நபரை கை-ஜி ஆடம் லோ (30) என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் அவர் மீது எட்டு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

“குற்றச்சாட்டு மதிப்பீடு நடந்து வருகிறது, மேலும் குற்றச்சாட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன,” என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

புலனாய்வாளர்கள் தாக்குதலின் எந்த நோக்கத்தையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், “இந்த வழக்கில் உள்ள சான்றுகள் இது ஒரு பயங்கரவாதச் செயல் என்று நம்புவதற்கு எங்களை வழிநடத்தவில்லை” என்று பொலிஸார் நம்புவதாக ராய் கூறினார்.

சந்தேக நபருக்கு “மனநலம் தொடர்பான காவல்துறை மற்றும் சுகாதார நிபுணர்களுடனான குறிப்பிடத்தக்க தொடர்புகளும்” இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

https://athavannews.com/2025/1429717

  • கருத்துக்கள உறவுகள்

வான்கூவர்: திருவிழாவில் கார் மோதி 11 பேர் பலி - சந்தேக நபர் பற்றி போலீஸ் கூறுவது என்ன?

வான்கூவர் தாக்குதல், கனடா, பிலிப்பைன்ஸ், கார் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,வான்கூவர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பெர்ன்ட் தெபுஸ்மன்ன் ஜேஆர்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • வாஷிங்டன்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவின் வான்கூவர் நகரில் சனிக்கிழமை அன்று கூட்டத்தில் ஒரு கார் மோதிய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் கலாசாரத்தைக் கொண்டாடும் வருடாந்திர லாபு லாபு திருவிழாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபராக 30 வயதான கை-ஜி-ஆடம் லோ எனக் கண்டறியப்பட்டுள்ளார். தற்போது காவலில் இருக்கும் இவர் கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.

என்ன நடந்தது?

இந்தத் தாக்குதலில் உள்ளூர் நேரப்படி சரியாக இரவு 08:14 மணிக்கு நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் லாபு லாபு தினத்தன்று இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தத் திருவிழா கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒரு வண்டி ஈடுபட்டுள்ளதாக திருவிழாவிற்குச் சென்றவர்கள் கூறுகின்றனர்.

காயப்பட்ட பாதசாரிகள் அனைவரும் உணவு வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் ஏபி செய்தி முகமையிடம் கூறியுள்ளனர்.

வாகனத்தின் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்த நிலையில் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

லாபு லாபு திருவிழா என்றால் என்ன?

வான்கூவரில் நடைபெறும் லாபு லாபு திருவிழா, பிலிப்பைன்ஸ் மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் இது போன்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் லாபு - லாபுவின் நினைவைப் போற்றும் விதமாக நடத்தப்படுகின்றன. இவர் 1500களில் பிலிப்பைன்ஸில் இருந்த ஸ்பெயின் காலனியாதிக்கத்தை எதிர்த்த இவர், தேசிய ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

லாபு லாபு, பிலிப்பைன்ஸில் உள்ள தீவான மேக்டனின் பூர்வகுடி தலைவராக இருந்துள்ளார்.

1521ஆம் ஆண்டில் நடைபெற்ற மேக்டன் யுத்தத்தில் இவரும் இவருடைய படை வீரர்களும் ஃபெர்டினன்ட் மகெல்லன் தலைமையிலான கூட்டுப் படைகளை வீழ்த்தி ஸ்பெயின் ஆக்கிரமிப்பை 40 ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டனர்.

நவீன கால பிலிப்பைன்ஸில் இவர் ஒரு ஹிரோவாகக் கருதப்படுகிறார். நாடு முழுவதும் இவரின் புகழைப் போற்றும் நினைவிடங்கள் மிகவும் இயல்பாகத் தென்படுகின்றன.

தேசிய காவல் சேவை உட்பட பல பிலிப்பைன்ஸ் அரசு அமைப்புகள் அவர்களுடைய முத்திரையில் இவரின் புகைப்படத்தைப் பயன்படுத்துகின்றன.

2023ஆம் ஆண்டில் லாபு லாபு தினத்தை பிரிட்டிஷ் கொலம்பியா அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இந்த மாகாணத்தில் பெரிய புலம்பெயர்ந்த குழுவாக பிலிப்பைன்ஸ் நாட்டினர் உள்ளனர்.

வான்கூவர், கனடா, கார் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,கனடாவின் வான்கூவரில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடம்

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் பற்றி தற்போது வரை குறைவான தகவல்களே தெரியவந்துள்ளன.

சனிக்கிழமை அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வான்கூவர் பொறுப்பு காவல்துறை தலைவர் ஸ்டீவ் ராய், பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளனர். இவர்களில் 5 முதல் 65 வயதைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தாக்குதல் வான்கூவர் நகரில் நெருக்கமாக வாழ்ந்துவரும் ஃபிலிப்பினோ சமூக மக்களை கடுமையாகப் பாதித்திருக்கிறது.

"கடந்த இரவு மிகவும் கடினமானதாக இருந்துள்ளது. இதை ஃபிலிப்பினோ சமூகம் மிக நீண்ட காலத்திற்கு உணரும்" என ஃபிலிப்பினோ பிசி அமைப்பின் தலைவரான ஆர்ஜே அக்யுனோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "நிறைய கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். எங்களிடம் அனைத்து பதில்களும் இல்லை. ஆனால் நாங்கள் வருந்துகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.

சந்தேகப்படும் நபர் யார்?

சந்தேகத்திற்குள்ளான நபர் 30 வயதான கை-ஜி-ஆடம் லோ எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் மீது எட்டு எண்ணிக்கையிலான இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"குற்றச்சாட்டுகள் தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றன. மேலும் சில குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது." எனக் காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் என்று எதையும் விசாரணை அதிகாரிகள் தற்போது வரை உறுதி செய்யாத நிலையில், இந்த வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்கள் இது பயங்கரவாத செயல் என நம்ப வைக்கும்படியாக இல்லை என ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் காவல்துறையினருடனும் மருத்துவத் துறை வல்லுனர்களுடனும் மன நலம் சார்ந்து தொடர்பு கொண்ட பின்னணி உள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

வான்கூவர் நகரின் மேயர் கென் சிம், "மன நலம்தான் இங்கு அடிப்படை காரணமாக தெரிகிறது." எனக் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவருடன் காவல்துறைக்கு என்ன மாதிரியான விசாரணை நடத்தியுள்ளது, அவற்றில் என்ன கிடைத்துள்ளது அல்லது இவை எப்போது நடந்தது என்பது பற்றி எந்த மேலதிக தகவல்களும் வழங்கப்படவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj68g50y021o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.