Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

495188286_1097463589083681_3348958817251

யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 இரவு 9 .40 மணியளவில் இயற்கை எய்தினார்.

கொழும்பில் வைத்திய சிகிச்சை பெற சென்ற அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த நிலையில் இயற்கை எய்தியதாக தெரிய வருகிறது. சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அன்று ( 02.05.2025) மாலை பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 11-04-1981 இல் பூரணத்துவம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக வீற்றிருந்து அறமாற்றிய சுவாமிகள், யுத்த காலத்திலும் தன்னாலான பணிகளைச் சிறப்பாக ஆற்றி வந்தவர். சிறந்த மனிதநேயப் பண்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்.com

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1002112075-1.jpg?resize=750%2C375&ssl=1

நல்லை ஆதீனம் இறையடி குறித்து இறை பிரார்த்தனை செய்தி வெளியிட்டார் தருமை ஆதீன குரு முதல்வர் !

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்காக வெளியிட்ட இறை பிரார்த்தனை செய்திக் குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாம் மாவிட்டபுரம் கும்பாபிஷேகம் தரிசிக்க சென்றபோது கூட சித்தாந்த மாநாட்டிற்கு அவருக்கு  அழைப்பு விட்டோம் எனவும் இந்தியாவில் தங்கி மருத்துவம் பார்க்கலாம் எனவும் கேட்போது  வருகிறேன் என்று கூறி மகிழ்ந்தவர் மாநாடு தொடக்கத்தில்  முதல்நாள் பரிபூர்ணம் எய்தியமையால் தாங்முடியாது துயறுருகின்றோம் என்று அவர் இறை பிரார்த்தனை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தருமை ஆதீனத்தில் முறையாக காஷாயம் தீட்சைகள் பெற்று ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பலமாநாடு நிகழ்வுகளில் பங்கேற்று சமயம் பரப்பிய பெருமைக்குரியவர் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

சைவம் காக்கும் தூண்சரிந்தது தக்கவர்கள் அம்மடத்தின்னின்று சமயத்தை காக்க செந்தமிழ் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம் – என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1430344

  • கருத்துக்கள உறவுகள்

பரிபூரணம் அடைந்த நல்லை ஆதீன குருமுதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி

Published By: DIGITAL DESK 3 02 MAY, 2025 | 04:38 PM

image

பரிபூரணம் அடைந்த நல்லை ஆதீன சுவாமியின் புகழுடல் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை 6.15 அளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு உள்ளது.

அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிற்பகல் 4 மணி அளவில் பரிபூரணத்துக்குரிய கிரியைகள் ஆதீனத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் தகனம்  செய்யப்படவுள்ளது.

3e9615f7-6eb9-4e55-bf91-9da20c965c1d.jpg

33d374a4-360d-476f-9c8b-ab52bac54459.jpg

4d02b098-cd72-477e-a4e5-3e9af058b9f4.jpg

203fc207-96eb-4707-a953-7e577b9b7f2b.jpg

52af8b73-bb6e-4a35-9052-3378df4f7c20.jpg

https://www.virakesari.lk/article/213511

  • கருத்துக்கள உறவுகள்

நல்லை ஆதீனத்தின் திருவுடல் தீயுடன் சங்கமம்

574730724.jpg

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (02) திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நல்லை ஆதீன குரு முதல்வர் கடந்த வியாழக்கிழமை பரிபூரணமடைந்தார்.

சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு கொண்டுவரப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு திருவுடல் ஊர்வலமாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றது.

https://newuthayan.com/article/நல்லை_ஆதீனத்தின்_திருவுடல்_தீயுடன்_சங்கமம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.