Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது!

adminJuly 16, 2025

3-2-2.jpg?fit=1170%2C878&ssl=1

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி , மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டு இருந்தனர்.

அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து , தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார்

நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும்.

அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது.

 

செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன 

அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன.

மேலும் வழமையாக உடல்கள்  நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை.

எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார்.

3-1-1.jpg?resize=800%2C450&ssl=1

செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை 

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது.

21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள் 

அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01”  மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் ,  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02”  புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/217901/

  • Replies 106
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    தயவு செய்து இவரின் தளத்திற்கு சென்று ஆதரவு தெரிவிக்கவும்.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இணையவன்
    இணையவன்

    புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிப்பு

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிப்பு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். 

சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 

”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைக்குழியில் 63 எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது. 

சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது 3 விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர். 

மனித புதைக்குழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எஸ் 25, எஸ் 48, எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது. உடுப்பு, உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது. 

அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்”. என்றார். 

அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது. 

ஏற்கனவே, மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற பொழுது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய காரணத்தினை வெளிப்படுத்தி நடபடி முறை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார். 

அதற்கு மேலதிகமாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது. 

இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது. தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருள்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. 

அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21 ஆம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றார். 

குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/319012

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழிகள்: மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

Published By: VISHNU

21 JUL, 2025 | 07:45 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07ஆம் திகதி திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

3__3_.jpg

இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் சேர்த்து மொத்தமாக 72 எலும்பு கூட்டு தொகுதிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

3__2_.jpg

செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும்  "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

3__1_.jpg

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு 11 நாட்களின் பின்னர் இன்றைய தினம் 16ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

3__7_.jpg 

அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றினை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய,  இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையிலையே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220579

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள்!

Published By: VISHNU

22 JUL, 2025 | 07:12 PM

image

யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

WhatsApp_Image_2025-07-22_at_18.58.26_e1

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

WhatsApp_Image_2025-07-22_at_18.59.01_21

அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

WhatsApp_Image_2025-07-22_at_18.58.42_0d

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள்  மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . 

குழந்தைகள்  அருந்தும் பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..

இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில்  65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220671

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு

Published By: VISHNU

23 JUL, 2025 | 10:08 PM

image

யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று புதன்கிழமை (23) மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில்  67 எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும்  "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது 

அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2025-07-23_at_21.01.58_74

WhatsApp_Image_2025-07-23_at_21.02.06_d0

WhatsApp_Image_2025-07-23_at_21.02.05_e6

WhatsApp_Image_2025-07-23_at_21.01.46_48

WhatsApp_Image_2025-07-23_at_21.01.41_ee

IMG_5856.jpeg

IMG_5849.jpeg

IMG_5853.jpeg

IMG_5851.jpeg

IMG_5835.jpeg

IMG_5826.jpeg

IMG_5829.jpeg

IMG_5814.jpeg

https://www.virakesari.lk/article/220760

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி : இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு

Published By: VISHNU

24 JUL, 2025 | 07:21 PM

image

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-07-24_at_19.07.10_19

செம்மணி புதைகுழி வழக்கின் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதவா குழுவினர்,

WhatsApp_Image_2025-07-24_at_19.07.10_23

சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினர், தொல்லியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சஜிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

WhatsApp_Image_2025-07-24_at_19.07.11_ef

அகழ்வு பணிகள் தொடர்பாக வியாழக்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23) பிற்பகலில் இருந்து இன்று வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள்  அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

WhatsApp_Image_2025-07-24_at_19.07.11_dd

இன்றைய நாளில் புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20வது நாளாக அகழ்வு பணிகள் தொடரும்.

சிறு போத்தலொன்றும் இரும்புகள் என்று நம்பப்படுகின்ற பல கட்டிகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/220867

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் 

26 JUL, 2025 | 09:06 PM

image

யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 11 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும்  "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதன் போது, இன்றைய தினம் சனிக்கிழமை (26) அகழ்ந்து எடுக்கப்பட்ட 09 எலும்பு கூட்டு தொகுதியுடன் 90 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 101 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது  என்றார்.

இதேவேளை, இந்த அகழ்வு நடடிக்கைளில் 46 சாட்சிய ஆதாரப் பொருட்கள் இதுவரை அகழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-07-26_at_19.24.21__2

WhatsApp_Image_2025-07-26_at_19.24.21__1

WhatsApp_Image_2025-07-26_at_19.24.21.jp

WhatsApp_Image_2025-07-26_at_19.24.20.jp

WhatsApp_Image_2025-07-26_at_19.24.19.jp

https://www.virakesari.lk/article/221028

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன

Published By: DIGITAL DESK 2

27 JUL, 2025 | 03:16 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழிகளில், இன்று ஞாயிற்றுக்கிழமை (05) புதிய எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்று புதிதாக எலும்புக்கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 7 நாட்களில் மட்டும் 30 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுகள், நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல - 01” மற்றும் “இல - 02” என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 22வது நாளாக பணி முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 7 நாட்களில் 36 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 101 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 95 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளுடன் இருந்த ஒரு பொலித்தீன் பை, மேலதிக ஆய்விற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

IMG_6035.jpeg

IMG_5991.jpegIMG_6028.jpegIMG_6021.jpegIMG_5999.jpegIMG_5995.jpegIMG_6007.jpeg

https://www.virakesari.lk/article/221080

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். செம்மணி மனித புதைகுழிகளில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு ; இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

Published By: VISHNU 29 JUL, 2025 | 09:12 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 24 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாய்க்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

அதன் போது, 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி பகுதிகளை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டு தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டதுடன், துறைசார் நிபுணர்களுடன் புதைகுழிகளின் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்க தாமதிக்கப்படுவதால், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஸ்கான் நடவடிக்கை முன்னெடுக்கபடும் - என்றார்.

https://www.virakesari.lk/article/221315

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியில் நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம்

02 Aug, 2025 | 06:34 PM

image

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (02) இரண்டாவது கட்டத்தில் 28 வது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது புதிதாக நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதை குழியில் இதுவரை 126 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்றையதினம் நான்கு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இதுவரை 117 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

IMG-20250802-WA0100__1_.jpg

IMG-20250802-WA0099.jpg

IMG-20250802-WA0098.jpg

IMG-20250802-WA0092.jpg

IMG-20250802-WA0088__2_.jpg

IMG-20250802-WA0094.jpg

https://www.virakesari.lk/article/221642

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Published By: Vishnu

04 Aug, 2025 | 08:25 PM

image

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (4) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-08-04_at_20.19.06_1f

இதன் அடிப்படையில் இதுவரை 135 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 126 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - செம்மணி  சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 30வது நாளாக இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-08-04_at_20.19.05_62

அத்தோடு திங்கட்கிழமை (4) இடம்பெற்ற அகழ்வு பணிகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221825

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் ஸ்கான்

written by admin August 4, 2025

IMG_6680.jpg?fit=1170%2C658&ssl=1

 

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை  . அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில்  நாளைய தினம் செவ்வாய்க்கிழமை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_6664.jpg?resize=800%2C450&ssl=1IMG_6671.jpg?resize=800%2C450&ssl=1IMG_6684.jpg?resize=800%2C450&ssl=1IMG_6670.jpg?resize=800%2C450&ssl=1

Global Tamil News
No image preview

செம்மணியில் ஸ்கான் - Global Tamil News

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு…
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு

Published By: VISHNU

05 AUG, 2025 | 09:28 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் செவ்வாயக்கிழமை (5) புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 31 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 65 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 40  நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 04 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 130 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 141 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இன்றைய தினம் செவ்வாய்கிழமையும் செம்மணியில் தற்போதுள்ள மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது. 

https://www.virakesari.lk/article/221919

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழி: இதுவரை 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; 133 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது - சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன்

Published By: VISHNU

06 AUG, 2025 | 08:09 PM

image

செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் புதன்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-08-06_at_19.48.11_ae

அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது.

மூன்று மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-08-06_at_19.59.08_00

147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது.

எலும்புக்கூடொன்று நேற்று முன்தினம் செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூடொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை செருப்பு, தாயம், காசு உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இன்றுடன் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்படுவதால் அடையாளம் காணப்பட்ட மேலும் எழு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/221997

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நீதவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

13 AUG, 2025 | 03:14 PM

image

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம்  முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 07ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தது. 

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணைகளின் போது உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/222489

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்:

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியரும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பேராசிரியரின் அறிக்கையில், ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தது எட்டு வாரங்களுக்கு மேலதிக அகழ்வுப் பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதனடிப்படையில், நான் இரு தடவைகள் அகழ்வு இடத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தேன். இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையில் சில முக்கிய விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையின் கீழ் நடைபெறுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் இதற்கென தனியான சட்ட ஏற்பாடுகள் இல்லை. உடல் கண்டெடுக்கப்பட்டால், அது உடனடியாக மரண விசாரணையாக மாற்றப்படுகிறது. மரண விசாரணையின் முதன்மை நோக்கம், கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவதாகும். எனவே, அகழ்வுப் பணிகளுடன், உடல்களை அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி, இப்பணிகளில் நிபுணத்துவம் இல்லை என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதாக முறைப்பாடு செய்தார். இது தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கையில் அகழ்வுப் பணிகளுக்கு நிபுணத்துவம் இருந்தாலும், உடல்களை அடையாளப்படுத்துவதற்கு உரிய நிபுணத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

உதாரணமாக, 1999இல் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகள் முதலில் இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு நிபுணத்துவம் இல்லாததால், அவை திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது அவை இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிகிறோம்.

1999இல் மரண தண்டனைக் கைதியான சோமரட்ன ராஜபக்ச, மேல் நீதிமன்றத்தில் அளித்த கூற்றின் அடிப்படையில் செம்மணியில் அகழ்வு நடத்தப்பட்டது. அவர் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. தற்போது, 150 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராஜபக்ச குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ளதால், அவரது கூற்று உண்மையாக இருக்கலாம் என்பது தற்போது நிரூபணமாகிறது.

செம்மணி விவகாரம் தொடர்பாக B2899 என்ற வழக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிலர் விடுவிக்கப்பட்டு, ஐவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கை மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நான் கோரியுள்ளேன். இதனைப் பரிசீலித்து, இரு வழக்குகளும் தொடர்புடையதாக இருப்பின், மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

1999இல் செம்மணி பகுதியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து, கலாநிதி தெவநேசன் நேசையா தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, 2003 ஒக்டோபர் 28இல் 210 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில், அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாண நகரம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு படைத்தரப்பினர் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள், முகாம்களின் பொறுப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை அறிக்கையில் உள்ளன. இவ்வறிக்கையின் பிரதியை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன்.

இவ்விடயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளேன். இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழமையாக, மரண விசாரணை முடிந்த பின்னரே குற்றப் புலனாய்வு ஆரம்பிக்கப்படும். ஆனால், பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் பேரில், இதற்கு இணையாக புலனாய்வு நடத்தப்படுகிறது.

இன்று, சட்டத்தரணிகளான மணிவண்ணன், குருபரன் மற்றும் நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் அளிக்க வந்தவர்களை பயமுறுத்தியதாக முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து, வாக்குமூலங்கள் பகிரங்கமாக, அனைவரும் காணக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இவ்விசாரணையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

மேலும், சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்போது, அவை உரிய மேற்பார்வையுடன் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு அனுபவமிக்க ஆய்வகங்கள் தேவை எனவும் வலியுறுத்தினேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் ஆய்வகத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது உகந்ததல்ல என நான் குறிப்பிட்டேன். அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள ஆய்வகங்களே இதற்கு பொருத்தமானவை என வாதிட்டேன். எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20ஆம் திகதி அகழ்வு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி மீண்டும் பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmebja1p202k7qp4k6eihllkv

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Published By: Vishnu

29 Aug, 2025 | 07:16 PM

image

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 174 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 37வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223736

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Published By: Vishnu

30 Aug, 2025 | 09:04 PM

image

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (30) மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 38வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223795

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்

Published By: Digital Desk 3

31 Aug, 2025 | 04:18 PM

image

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10  எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம்  மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது. 

1__8_.jpg

1__7_.jpg

1__5_.jpg

1__3_.jpg

1__1_.jpg

1__2_.jpg

https://www.virakesari.lk/article/223857

  • கருத்துக்கள உறவுகள்

540260815_1199534988878138_5138085124733

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Published By: Vishnu

01 Sep, 2025 | 07:29 PM

image

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (1) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-09-01_at_19.20.47_ce

இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-09-01_at_19.20.48_b5

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223972

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு 

02 Sep, 2025 | 06:38 PM

image

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 41வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

8359bfc4-c1b4-4ae7-b909-b8b0362294c3.jpg

54c7f9ca-d9dd-4015-a036-10d434995eee.jpg

f9e63360-f2a4-4666-84be-faddf2735709.jpg

https://www.virakesari.lk/article/224057

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Published By: Vishnu

04 Sep, 2025 | 07:43 PM

image

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

01__3_.jpeg

இதன் அடிப்படையில் இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 224 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 43 வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01__3_.jpeg

https://www.virakesari.lk/article/224232

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:27 AM

image

செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே, அவை தொடர்பிலான விபரங்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை புதன்கிழமை (3) இரண்டு என்பு கூடுகளின் குறுக்காக காணப்பட்ட என்பு கூடும் , ஒரு என்பு கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறு காணப்பட்ட என்பு கூடும் இன்றைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் இன்றைய தினம் சட்டை பொத்தான்கள் சிலவும், காசும், கைகளில் கட்டும் சிறிய தாயத்து ஒன்றும் புதைகுழியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. 

செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 45 நாட்கள் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை 43 நாட்கள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் சனிக்கிழமையுடன், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முடிவுறுத்தப்படவுள்ளது. 

அதேவேளை புதைகுழியை அண்டிய பகுதிகளில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் புதைகுழிகள் காணப்பட்டலாம் என வலுவாக நம்பப்படுவதால், மேலும் 08 வார கால பகுதி அகழ்வு பணிக்காக தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பாதீடுகளை தயாரித்தல் மற்றும் அதற்கான ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தி இருந்தது. 

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/224243

  • கருத்துக்கள உறவுகள்

543135190_122209825430114056_47270958748

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Babu Babugi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.