Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் - 16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

19 MAY, 2025 | 07:48 PM

image

"பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும்.  இந்த  நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை  நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்தில் இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 16 ஆவது படைவீரர்கள் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த  தினத்தை நினைவுகூறும் நிகழ்வு இன்று (19) பிற்பகல் பத்தரமுல்ல,  படைவீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக, முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்  நடைபெற்றது.

ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு:

எமது நாடு பல தசாப்தங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. யுத்தம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை தந்தது.  பலவருடங்களின் பின்னர் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்தது. யுத்தத்தை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை நாம் இன்று நினைவு கூறுகிறோம். இது முக்கியமான வரலாற்றுத் தினமாகும். இது யுத்த நிறைவு தினம் மட்டுமன்றி மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே, கிரிஸ்தவர் என சகல மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர்.

யுத்தத்தை நிறைவு  செய்ய எமது படையினர் உயிர்த்தியாகம் செய்தனர். இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பலர் அங்கவீனமுற்றனர். பலர் தமது உடல் உறுப்புகளை இழந்தனர். அவர்களின் உறவினர், குடும்பத்தினர் பெரும் தியாகம் செய்தனர். அவர்களை நாம் தினமும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாடு கடன் பட்டுள்ளது.

யுத்தம் என்பது பாரிய அழிவாகும். யுத்தத்தில் போராடிய நீங்கள் யுத்தம் எந்தளவு நாசகரமானது என்பதை அறிந்திருப்பீர்கள். யுத்தம் செய்த எவரும் யுத்தத்தை தொடர்ந்து எதிர்பார்த்து போராடவில்லை. அனைவரும் சமாதானத்தை எதிர்பார்த்தே போராடினர். வடக்கு தெற்கு பேதமின்றி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், கணவரை இழந்த மனைவிமார் உள்ளனர். அவர்கள் கௌரவத்துடன் நினைவுத் தூபியில்  தமது உறவினர்களின் பெயர்களைத் தேடுகின்றனர். இங்கு மாத்திரமா வடக்கிலும் இதே நிலைமை தான். தமது பிள்ளைகள், கணவர்மார்களின்  புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் உறவினர்கள் வீதியோரம் ஒப்பாரி வைக்கின்றனர்.

அனைத்து பெற்றோருக்கும் தமது பிள்ளை முக்கியம். பாரிய அழிவை சந்தித்த தாய்நாட்டில் அவ்வாறான யுத்தம் மீள ஏற்படுவதை தடுப்பது எமது பொறுப்பாகும். எமது சந்ததி சண்டையிட்டது. கோபமும் குரோதமும் பரவியது. ஆனால் எமது பிள்ளைகள் வாழும் இன்றைய சந்ததினருக்கு யுத்தம் செய்யாத, மோதல் அற்ற, கோபம், சந்தேகத்திற்குப் பதிலாக நட்புறவு மற்றும் அன்புள்ள நாடு உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த கால சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். மீள அவ்வாறான நிலை எமது தாய்நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது. யுத்தமற்ற, குரோதமோ, சந்தேகமோ அற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும். மீண்டும் மோதல், குரோதம் உள்ள நாட்டுக்குப் பதிலாக சமாதானமான நாட்டை உருவாக்குவதே  அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.

நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும். அதிகாரத்தை பெறவும் பாதுகாக்கவும் யுத்தம், மோதல் மற்றும் இனவாதத்தை கடந்த காலத்தில் பயன்படுத்தினார்கள். சரத்  பொன்சேகா இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தார். அவர் என்ன தவறு  செய்தார். அவருடன் நான் அன்று நெருக்கமாக பழகினேன்.

அதிகாரத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் மற்றும் மோதல்களினால் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிள்ளைகளே பாதிக்கப்பட்டனர். யுத்தத்திற்கு எந்த காரணமும் அற்ற பங்களிக்காத கிராமத்துப் பெற்றோரின் பிள்ளைகளே இறந்தனர், அங்கவீனமுற்றனர். இது தான் அதனால் கிடைத்த அழிவாகும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டோருக்கு யுத்தம் என்பது இனிய அனுபவம். நாம் சமாதானத்திற்காக ஒன்றிணைய வேண்டும். ஆனால் இன்று சமாதானம் என்பது காட்டிக்கொடுப்பின் சின்னமாக மாறியுள்ளது. நல்லிணக்கம் என்பது காட்டிக்கொடுப்பாக உள்ளது.  யுத்தம் ஒருபோதும் வெற்றியை கொண்டுதருவதில்லை.  படைவீரர்களிடமிருக்கும் ஆயுதத்தை பயன்படுத்த தேவையற்ற அமைதியான சமூகம் உருவாக வேண்டும். 

நாம் மனிதாபிமானத்திற்கும் மனிதத்துவத்திற்குமே அடிபணிய வேண்டும். இந்த பூமி போதுமான அளவு இரத்தத்தில் தோய்ந்துள்ளது. பெற்றோரும் உறவினர்களும் அதிகமதிகம் கண்ணீர்  சிந்தியுள்ளனர். யுத்தத்தின் வேதனையை அனுபவித்துள்ளோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும். அனைவரும் சமாதானத்திற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்.

யுத்தத்தின் நிறைவு என்பது சமாதானத்தை நிலைநாட்டுவதாகும். நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும். நாம் சமாதானத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார். நாட்டின் சமாதானத்திற்காகவே படைவீரர்கள் பங்களித்தார்கள். எதிர்காலத்திலும் சமாதானத்திற்காக பங்களிப்பார்கள்.

சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்கு செய்யும் கைங்கரியமாகும். இது கடினமான செயற்பாடு. வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. தாய்நாட்டில் உண்மையான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை.

மண்சரிவு அபாயம் உள்ள 4900 வீடுகள் உள்ளன. மழை பெய்யும் போது அதில் எங்கு மண்சரிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது. உலகில் எங்காவது மோதல் நடக்கும் போது எமது பொருளாதாரத்திற்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் தோன்றும். இத்தகைய நிலையில் இது  சுதந்திரமான நாடா? பொருளாதார ரீதியாக வீழ்ந்த நாட்டில் எங்கு இறையாண்மை உள்ளது. பலமான பொருளாதாரமற்ற நாடாக இருக்கிறோம்.

உலகில் கௌரமான நாடாக உயர பொருளாதார ஸ்தீர நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.  குற்றங்கள், தொற்றுநோய்கள் அற்ற நாடு உருவாக வேண்டும். மோதல்களற்ற  குரோதமற்ற நாடு உருவாக வேண்டும். அதன் ஊடாகவே  பலமான இறையாண்மை ஏற்படும். 

இந்த தாய் நாட்டை நாம் நேசிக்கிறோம். உலகில் சிறந்த நாடாக  மாற்ற சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம். அதற்கான அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்க வேண்டும். படையினர் காட்டிய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தைரியம் என்பன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்.

https://www.virakesari.lk/article/215169

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி. அந்த போராட்டம் எதனால், யாரால்.எழுந்தது  என தெளிவு படுத்த மறந்து விட்டாரா? மறைத்து விட்டாரா? போராட்டத்தின் மூல வேரை அறிந்து அகற்றாவிட்டால், இவர்கள்  மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும்  சமாதானம், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது. சாந்தி, சமாதானத்தை அழித்த விழாவை கொண்டாடிக்கொண்டு, அதுபற்றி பேசுவது தங்களை தாங்களே ஏமாற்றுவதாகும். பாதிக்கப்பட்ட அந்த  மக்களுக்கும்  ஜனாதிபதி என்று சொல்ல தகுதியற்றவர்.

8 hours ago, ஏராளன் said:

சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்கு செய்யும் கைங்கரியமாகும்.

இல்லை, தங்கள் பதவிகளை தற்காத்துக்கொள்ள அந்த ஏழை இளைஞர்கள் பலி கொடுக்கப்பட்டனர். சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக அவர்கள் போர்புரிந்திருந்தால், உயிர் துறந்திருந்தால், இன்று போர் வெற்றி விழா அல்ல சமாதானத்தின் விழாவாக இருந்திருக்கும். எத்தனை பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளின், கணவரின், தந்தையின் இறுதி உடலை காணாமல் அவர்களுக்கு என்ன நடந்ததென அறியாமல் இன்றும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அது அந்த இறந்த வீரர்களுக்கு செய்யும் துரோகம்.

ஆமா, வெற்றி நாயகனின் உரை இன்னும் வெளிவரவில்லையா? இதற்குமேல் அவரால் என்ன உரையாற்ற முடியும்?  

 

  • கருத்துக்கள உறவுகள்

499426325_1114541724044132_7367158156902

499430654_1114540880710883_8599484104448

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்?

இலங்கை உள்நாட்டு போர், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை, தெற்காசியா, விடுதலைப் புலிகள், ஈழம்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 21 மே 2025, 16:02 GMT

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

இவ்வாறு நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும், ஜனாதிபதித் தலைமையில் நடைபெறுகின்ற நிலையில், இம்முறை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறும் என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண கடந்த 16ம் தேதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

''2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான கட்டளையிட்ட, இந்த நாட்டில் தற்போது உயர்நிலையிலுள்ள மூன்று மார்ஷல்களும், அதேபோன்று, ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு பிரதி அமைச்சரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.''

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னணியில், அது தொடர்பில் நாட்டில் மக்கள் மத்தியில் சர்ச்சையாக நிலைமை தோன்றியிருந்தது.

இந்த நிகழ்வானது, ஜனாதிபதி தலைமையில் நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விட ஆரம்பித்திருந்தனர்.

''நான் அவரின் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன். அவரது வேலைப்பளுவான வாழ்க்கையில் ஐந்து நிமிடங்களை இந்த நிகழ்விற்காக ஒதுக்கிடுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். அனைத்து ராணுவத்திற்காகவும் வழங்கப்படும் கௌரவமாக நாம் இதனை பார்க்கின்றோம்.'' என இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ரியல் அட்மிரல் (ஓய்வு பெற்ற) டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் என கடந்த 18ம் தேதி ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண மீண்டும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

''ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொள்ளவுள்ளார். அதேபோன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மூன்று மார்ஷல்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்கின்றனர்" என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேசியது என்ன?

இலங்கை உள்நாட்டு போர், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை, தெற்காசியா, விடுதலைப் புலிகள், ஈழம்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

இதன்படி, கடந்த 19ம் தேதி நடைபெற்ற ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொண்டு பேசினார்.

''இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எமது படையினர் பெரும்பாலானோர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த பெயர் பலகை நிரம்புவதற்கு அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோன்று பெரும்பாலானோர் நிரந்த மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர். இந்த நாடு அவர்களுக்கு எப்போதும் கடன்காரர்கள் தான்." என்று கூறினார் அநுர குமார திஸாநாயக்க.

மேலும், "இந்த பெயர் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கின்றதா?, தனது கணவரின் பெயர் இருக்கின்றதா? தனது தந்தையின் பெயர் இருக்கின்றதா? என்பதை விரல் விட்டு தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மாத்திரமா, இல்லை வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகள், தனது கணவரை இழந்தோர் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக்கொண்டு தனது கணவர், பிள்ளைகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து பெற்றோருக்கும் தனது பிள்ளை ஒரு இரத்தினக்கல். அதிகாரத்திற்காக வடக்கிலும், தெற்கிலும் தமது பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரத்திற்காக ஒன்றுமே அறியாதோரின் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டனர். தெற்கிலும் சரி, வடக்கிலும் சரி. அவ்வாறே இடம்பெற்றது. அனைத்து படையினரதும் கைகளிலுள்ள துப்பாக்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது" என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பிரவேசம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட கருத்து

இலங்கை உள்நாட்டு போர், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை, தெற்காசியா, விடுதலைப் புலிகள், ஈழம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்

ஜனாதிபதி ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

''ஜனாதிபதி முதலில் இருந்தே இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள தீர்மானித்திருந்தார். ஏற்பாடுகள் மாத்திரம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதற்காகவே பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நிகழ்வு நடைபெறுகின்றது என முதலில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. கருத்து வெளியிடும் போது ஏற்பட்ட பிரச்னையே இதற்கான காரணம். ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலிலேயே தீர்மானித்திருந்தார்.'' என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இலங்கை உள்நாட்டு போர், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை, தெற்காசியா, விடுதலைப் புலிகள், ஈழம்

பட மூலாதாரம்,UDAYA GAMMANPILLA FACEBOOK

படக்குறிப்பு,பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலில் மறுப்பு தெரிவித்து, பின்னர் நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து எதிர்க்கட்சிகள் செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ''விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சத்தினால், ஜனாதிபதி ராணுவ வெற்றி தேசிய நிகழ்வை புறக்கணிக்க தீர்மானித்திருந்தாலும், தேசபற்றாளர்களினால் வெளியிடப்பட்ட எதிர்ப்புகள் காரணமாக ஏற்பட்ட கடும் அழுத்தத்தினால் விருப்பமில்லையேனும், ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது" என்கிறார்.

மேலும், "எனினும், ராணுவ வீரர்கள் என்ற சொல்லை பயன்படுத்தாதிருப்பதற்கு ஜனாதிபதி செயற்பட்டிருந்தார். ராணுவ வீரர்களை படையினர் என்றே விழித்திருந்தார். அனைத்து ராணுவ வீரர்களும் படையினர் என்ற போதிலும், அனைத்து படையினரும் ராணுவத்தினாராக முடியாது. படையினர் ராணுவ வீரராகுவதற்கு, அவர் போர் களத்தில் போரில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே, ராணுவத்தினருக்கு முன்பாக நீங்கள் உண்மையாக பேசியிருக்க வேண்டும். மாறாக இனவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதத்துடன் செயற்படுகளின் புலம்பெயர் தமிழர்களின் முன்னிலையிலேயே இந்த பேச்சை பேசியிருக்க வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதிக்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றோம்" என உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

இலங்கை உள்நாட்டு போர், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை, தெற்காசியா, விடுதலைப் புலிகள், ஈழம்

பட மூலாதாரம்,KAVINDA JAYAWARDANA

படக்குறிப்பு,ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன

ராணுவ வெற்றி நிகழ்விற்கான ஜனாதிபதியின் பிரவேசம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தை மேற்கோள்காட்டி, காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.

''விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தில் எங்களுக்கு பிரச்னையொன்று உள்ளது. இந்த நிகழ்விற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ராணுவ வெற்றி விழா கொண்டாட்டம், 2025 மே மாதம் 19ம் தேதி மாலை 16 மணிக்கு என குறிப்பிட்டு, அதில் கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் என அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இல்லை. மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்த அழைப்பிதழை வெளியிட்டது யார் என்ற கேள்வி எழுகின்றது" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்புகின்றார்.

'தமிழர்களை சமாதானப்படுத்த ஜனாதிபதி செயற்படுகிறார்'

இலங்கை உள்நாட்டு போர், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை, தெற்காசியா, விடுதலைப் புலிகள், ஈழம்

பட மூலாதாரம்,WIMAL WEERAWANDSA FACEBOOK

படக்குறிப்பு,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச

புலம்பெயர் தமிழர்களை சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.

''அவர் இந்த நிகழ்விற்கு வர இருக்கவில்லை. எனினும், அவர் வரவில்லை என்பது முன்பே தெரியவந்தமையினால் சமூகத்திலிருந்து வெளியிடப்பட்ட அழுத்தங்கள் காரணமாக விருப்பமின்றி அவர் வருகைத் தந்தார். அவர் அந்த இடத்தில் நிகழ்த்திய உரையில் என்ன சொல்கின்றார். அதில் உரையில் தடை செய்யப்பட்ட பல சொற்கள் உள்ளன. ராணுவம் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது. உயிர் நீத்த படையினர், உயிர் நீத்த படை உறுப்பினர்கள் என்றே கூறுகின்றார். மிகவும் மோசமான செயற்பாடு. வராதிருந்திருந்தால் அதை விட சிறந்ததாக இருந்திருக்கும்" என விமர்சித்துள்ளார் விமல் வீரவங்ச.

மேலும், "புலம்பெயர் தமிழர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சமே அதற்கான காரணம். அந்த அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருந்தார். அடுத்த தடை செய்யப்பட்ட சொல். பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்ற சொல் எங்கும் இல்லை. எமது ராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போராடினார்கள். கிளர்ச்சியாளர்களுடனான போராடினார்கள். போருக்காக போராடவில்லை. சமாதானத்திற்காக போராடினார்கள். அப்படியென்றால் பயங்கரவாதிகளும் சமாதானத்திற்காகவே போராடியுள்ளனர்.

தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தியது சமாதானத்திற்காக. ஸ்ரீமகா போதியில் இருந்த பக்தர்களை கொலை செய்தது சமாதானத்திற்காக. சமாதானத்திற்காக நன்றாக செய்துள்ளனர். வடக்கிலும், தெற்கிலும், அதிகாரத்திற்காக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறுகின்றார். வடக்கில் கேட்கவில்லை. தெற்கில் எங்கே கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெற்கில் கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காக தேவை யாருக்கும் கிடையாது.'' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y66ln1neqo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.