Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 MAY, 2025 | 10:37 AM

image

அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/215555

  • கருத்துக்கள உறவுகள்

என்னது..... கதிரையிலிருந்து விழுந்து காயமடைந்து ஆறுமாதம் விமானத்தில் பயணம் செய்ய முடியாதா? அப்படியென்ன கதிரையது? அது கதிரையாக இராது, குதிரை என நினைக்கிறன். நீதிமன்றம் போகவேண்டி வந்தால் அரசியல்வாதிகள் பலருக்கு உடல்நல பிரச்சனை வருவது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழமை.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

என்னது..... கதிரையிலிருந்து விழுந்து காயமடைந்து ஆறுமாதம் விமானத்தில் பயணம் செய்ய முடியாதா? அப்படியென்ன கதிரையது? அது கதிரையாக இராது, குதிரை என நினைக்கிறன். நீதிமன்றம் போகவேண்டி வந்தால் அரசியல்வாதிகள் பலருக்கு உடல்நல பிரச்சனை வருவது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழமை.  

493732141_4016925531971271_7954882119685

பசில், இலங்கையில் இருக்கும் போதே....

சட்டத்தின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவன்.

அமெரிக்காவில் இருந்து என்னென்ன செய்யப் போகின்றானோ.

முதலில்... இவனை வெளிநாட்டுக்கு செல்ல விட்டதே தவறு.

இப்ப... குத்துது, குடையுது என்றால் என்ன செய்வது.

உள்ளூரில் இருக்கும்... மகிந்த, கோத்தாவையே... இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம், இப்ப... அமெரிக்காவில் இருக்கும் பசிலை பிடித்து... நொங்கு எடுக்கப போகிறார்களாம். எல்லாரும் பம்மாத்து விளையாட்டு காட்டுறாங்கள். மக்கள்தான்... எல்லாவற்றையும் ஆவென்று பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாய், பக்கத்திலிருந்த புத்தர் கூட கைவிட்டு விட்டாரே பசிலை? கையிலை எத்தனை மீற்றர் நூல் கட்டியிருந்தும் பயனில்லை, பிறகேன் அதை ஓதி கட்டுகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

பசில், இலங்கையில் இருக்கும் போதே....

சட்டத்தின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவன்.

493732141_4016925531971271_7954882119685

ஏதோ நாடகம் போட எடுத்த படம் மாதிரியே தெரிகின்றது. வைத்தியசாலை கட்டில். சாதாரண உடை. வைத்தியசாலை கட்டிலில் படுத்திருந்தால் உப்படி உடை அணியலாமா தெரியவில்லை. இனவாதிகள் கையில் எடுக்கும் பொருளான புத்தர் சிலை!!!!!

எங்கையோ இடிக்குது..

  • கருத்துக்கள உறவுகள்

அது சாமியார், நீதிமன்றத்திற்காக விபத்து, வைத்தியசாலை அனுமதி, வைத்தியர் அறிக்கை. அமெரிக்க வைத்தியசாலையில் புத்தர் சிலை வைக்கலாமா, வைத்தியசாலை உடை தவிர வேறு உடை அணியலாமா என்பதை யஸ்ரின் உறுதிப்படுத்தவேண்டும். அல்லது பசில் வீட்டை  வைத்தியசாலை ஆக்கிவிட்டார்களா தெரியவில்லை? ஒரு வைத்தியசாலை அறிக்கை, விமானப்பயணத்தை மட்டும் ஏன் விளித்து எழுதியது? நோயாளிகளுக்கு பொதுவான அறிவித்தல் கொடுப்பார்கள், நாம் பயணம் செய்ய இருப்பதை தெரிவித்தால் மட்டுமே பிரத்தியேக விளக்கம் கொடுப்பார்கள். ஒரு சாதாரண கதிரையில் இருந்து விழுந்து ஆறுமாதம்...... விளங்கவில்லையா? கைதை தடுக்கும் வழி! இங்கிருந்திருந்தாலும் இந்த நாடகந்தான் நடந்திருக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மஹிந்தவின் மகனை விசாரணைக்கு அழைத்தபோது, நான் நினைக்கிறன் ஒரு பாட்டி அவரின் பெயர் டெய்ஸீ என. அவருக்கு மறதி நோய் அவருடைய பணம் அது என்றும் அவரால் இப்போது நினைவு படுத்த முடியாதென்றும் அறிவித்தார்கள். உண்மையிலேயே அது அவரின் பணந்தானா? அவருக்கு மறதிநோய் இருப்பது உண்மைதானா என யாரும் உறுதிப்படுத்தியதாக தெரியவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, satan said:

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மஹிந்தவின் மகனை விசாரணைக்கு அழைத்தபோது, நான் நினைக்கிறன் ஒரு பாட்டி அவரின் பெயர் டெய்ஸீ என. அவருக்கு மறதி நோய் அவருடைய பணம் அது என்றும் அவரால் இப்போது நினைவு படுத்த முடியாதென்றும் அறிவித்தார்கள். உண்மையிலேயே அது அவரின் பணந்தானா? அவருக்கு மறதிநோய் இருப்பது உண்மைதானா என யாரும் உறுதிப்படுத்தியதாக தெரியவில்லை?

On 24/5/2025 at 15:34, தமிழ் சிறி said:

பசில், இலங்கையில் இருக்கும் போதே....

சட்டத்தின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவன்.

ஏனுங்கோ! உவர் பசில் சிறிலங்காவுக்கு வரி கட்டாமல் உங்கை வந்து ஒளிச்சிருக்கிறார் எண்டு சிங்கன் டொனால்ட் ரம்புக்கு பெட்டீசம் எழுதினால் எப்பிடியிருக்கும்? cool

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

ஏனுங்கோ! உவர் பசில் சிறிலங்காவுக்கு வரி கட்டாமல் உங்கை வந்து ஒளிச்சிருக்கிறார் எண்டு சிங்கன் டொனால்ட் ரம்புக்கு பெட்டீசம் எழுதினால் எப்பிடியிருக்கும்? cool

அடுத்த நிமிடம்... கைவிலங்கு போட்டு ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைக்கப் படுவார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஏனுங்கோ! உவர் பசில் சிறிலங்காவுக்கு வரி கட்டாமல் உங்கை வந்து ஒளிச்சிருக்கிறார் எண்டு சிங்கன் டொனால்ட் ரம்புக்கு பெட்டீசம் எழுதினால் எப்பிடியிருக்கும்?

ஒன்றுக்கு தப்பினால், இன்னொன்றில் மாட்டத்தானே செய்வார். இங்கு எமது பதிவுகளை பலநாடுகளில் உள்ளோர் வாசிக்கின்றனர் போலுள்ளது. இனி காரியம் ஆகலாம்.

9 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த நிமிடம்... கைவிலங்கு போட்டு ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைக்கப் படுவார்.

இல்லை அடுத்த விமானத்தில் பசிலே வந்து  இறங்கி  விடுவார். அதனை சிங்கள அரசு விரும்பாது செய்யாது அதற்கு காரணமும் உண்டு. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, satan said:

ஒன்றுக்கு தப்பினால், இன்னொன்றில் மாட்டத்தானே செய்வார். இங்கு எமது பதிவுகளை பலநாடுகளில் உள்ளோர் வாசிக்கின்றனர் போலுள்ளது. இனி காரியம் ஆகலாம்.

டொனால்ட் ரம்புக்கு கடிதம் எழுதுவமா? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.