Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ல்ட் ட்ரபோர்ட்டில் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இங்கிலாந்து அணி 433 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 121 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காம்ல் உள்ளனர். இங்கிலாந்து 75 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக பாவம் பாரத் அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

  • Replies 101
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nunavilan
    nunavilan

    மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு ச

  • vasee
    vasee

    இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியா

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................

  • கருத்துக்கள உறவுகள்

வாசிங்டன் சுந்தர் கொஞ்சம் செய்கிறார் போல் உள்ளது. சாய் சுதர்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இப்போது முன்னிலையில். ஆனால் இந்தியாவை வெற்றிகொள்ளுமா என்பது சந்தேகமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் - விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா

ஜோ ரூட்

பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எஸ். தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆண்டர்சன்–சச்சின் தொடரில், இந்த டெஸ்டில்தான் இங்கிலாந்து பெரும்பாலான செஷன்களை கைப்பற்றியிருக்கிறது. செஷன்களை அதிகம் கைப்பற்றியும் தொடரில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரில் முதல்முறையாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்றாம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமான சீதோஷ்ண நிலை நிலவியதை இங்கிலாந்து அணி பயன்படுத்திக்கொண்டது. இனி, இந்த டெஸ்டை இங்கிலாந்து பறிகொடுப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த தொடரில் முதல்முறையாக முன்றாம் நாள் முடிவிலேயே ஆட்டம், எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

இரண்டாம் நாளை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இந்தியா, முன்றாம் நாளிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னிங்ஸ் மீண்டும் தொடங்கியவுடன் ரூட்டும் போப்பும் எந்த சிரமமுமின்றி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். நேற்றும் லைன் அண்ட் லென்த்தில் கோட்டைவிட்ட பும்ரா, கால் பக்கமாக தொடர்ச்சியாக பந்துவீசி அடிவாங்கினார். ஆடுகளம் முழுக்கவும் பேட்டிங்கிற்கு சாதகமாக தட்டையாக மாறியதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

விக்கெட்டுக்கு வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் ரன் வேகத்தையாவது கட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், விக்கெட் கிடைக்காத அதிருப்தியில், விவேகத்தை தொலைத்து கண்டதையும் முயன்று ரன்களை வாரி இறைத்தனர். ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு முனையில் ஜடேஜாவை விரைவாக கொண்டுவந்திருக்க வேண்டும். ரூட், போப் இருவரும் வலக்கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அதுவொரு நல்ல உத்தியும் கூட. ஆனால், இந்திய கேப்டன் கில் அதையும் செய்யவில்லை.

பும்ரா

பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES

சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் கோட்டை விட்ட கில்

சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பான இந்திய அணியின் அணுகுமுறை இந்த தொடர் முழுக்கவே, மோசமாக உள்ளது. 'சைனாமேன்' குல்தீப் யாதவ், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இங்கிலாந்து அணி, 68 ஓவர்கள் விளையாடிய பிறகு, நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்படுகிறார். இதற்கும் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமாக பந்துவீசி, தனது கரியரின் சிறந்த பந்துவீச்சை அவர் பதிவுசெய்திருந்தார்.

கில்லின் கேப்டன்சி, உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டதாக தெரியவில்லை. பயிற்சியாளர்கள், அனலிஸ்ட்கள் கொடுக்கும் ஆலோசனையின்படி களத்துக்கு செல்கிறார். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை எனில், வியூகத்தை மாற்றாமல் அதையே திரும்பத் திரும்ப முயன்று பார்த்து சோர்ந்துவிடுகிறார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அப்படியே கில்லுக்கு நேரெதிராக இருப்பதை பார்க்கலாம். வாய்ப்பே இல்லாத ஒன்றை கூட, தனது வியூகத்தை பயன்படுத்தி, கடைசி வரைக்கும் முயன்று நிகழ்த்திக்காட்டுகிறார்.

வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,CLIVE MASON/GETTY IMAGES

கடைசியில், ரூட்–போப் பார்ட்னர்ஷிப்பை, வாஷிங்டன் சுந்தர்தான் உடைத்தார். சுந்தரை சீக்கிரம் கொண்டுவந்திருந்தால், இவ்வளவு ரன்களை போப் குவித்திருக்க மாட்டார். பந்து தாறுமாறாக எல்லாம் திரும்பவில்லை என்றபோதும், காற்றில் டிரிஃப்டை (Drift) பயன்படுத்தி, வலக்கை பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை கொண்டுசென்றார். சுந்தரின் டிரிஃப்டை கணிக்க முடியாமல்தான் போப் தவறான லைனில் ஆடி, ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாயகரமான பேட்ஸ்மேனான புரூக், இறங்கிவந்து விளையாட முயன்று ஸ்டம்பிங் ஆனார்.

வழக்கம் போல, கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாவிட்டாலும், போப்பின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தலை, உடல் இரண்டையும் முன்னகர்த்தி அவர் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் சேர்த்த விதம் அபாரமாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனுக்கு கால் நகர்வுக்கு நிகராக தலை நகர்வும் அவசியம். சுழற்பந்து வீச்சையும் நன்றாகவே எதிர்கொண்டு ரன் குவித்தார். அவருடைய துருதுருப்பான பேட்டிங், இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் இயன் பெல்லை ஞாபகப்படுத்தியது.

நாயகனாக மிளிர்ந்த ஜோ ரூட்

சந்தேகமே இன்றி நேற்றைய நாளின் நாயகன் ஜோ ரூட்தான். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ரூட் அளவுக்கு சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட ஒரு பேட்ஸ்மேன் வேறு எவருமில்லை. எப்போது ரன் சேர்த்தார் என்று தெரியாத அளவுக்கு, நேற்றைய நாள் முழுக்கவும் அடக்கமாக ரன் சேர்த்தார். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் உள்பட தனக்குப் பிடித்தமான ஷாட்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி சதத்தை எட்டினார். இந்த தொடர் முழுக்க பிரமாதமாக விளையாடாவிட்டாலும், தொடரில் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதற்கு ரூட்டின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம்.

இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் இருந்து ரூட்டை எடுத்துவிட்டால், அது ஒரு சாதாரண அணியாக மாறிவிடும். நேற்று ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில், டிராவிட், காலிஸ், பாண்டிங் என மூன்று ஜாம்பவான்களையும் முந்தினார். கம்போஜ் பந்தை ஃபைன்லெக் திசையில் தட்டிவிட்டு தனது 38வது சதத்தை பதிவுசெய்த அவர், அதிக சதங்கள் எடுத்தவர்கள் வரிசையில், சங்கக்காராவை சமன்செய்தார்.

ஜோ ரூட்

பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES

ரூட் சதத்தை கடந்த பிறகு, இந்தியா முழு நம்பிக்கையும் இழந்துவிட்டது. களத்தில் இந்திய வீரர்களின் உடல்மொழி, அதிர்ஷ்டத்தில் விக்கெட் ஏதும் கிடைக்காத என ஏங்குவதை போலிருந்தது. பும்ரா வழக்கத்தை விட வேகம் குறைவாக பந்துவீசியது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கம்போஜ் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சராசரியாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் அவருடைய பந்துகளை மிகவும் அலட்சியமாக இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொண்டு ரன் குவித்தார்கள். பிரசித் கிருஷ்ணாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று நிச்சயம் அணி நிர்வாகம் நினைத்திருக்கும்.

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, 20 விக்கெட்களை வீழ்த்துவதுதான் இலக்கு என கில் பேட்டி கொடுத்தார். ஆனால், மேட்ச் வின்னர்களை அணியில் சேர்க்காமல், 10-20 உதிரி ரன்களுக்கு ஆசைப்பட்டு ஆல்ரவுண்டர்களை வைத்து அணியை நிரப்பினால், 20 விக்கெட்கள் எடுக்க முடியாது என்பதை கில் இப்போது உணர்ந்திருப்பார்.

சுப்மன் கில்

பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES

இங்கிலாந்து அணி, ஒரே நாளில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பும்ராவை, 28 ஓவர்கள் பந்துவீச பணித்துள்ளார் கேப்டன் கில். அணித் தேர்வில் கவனம் செலுத்திருந்தால், பும்ராவுக்கு இவ்வளவு வேலைப்பளு ஏற்பட்டிருக்காது. கடைசி 3 விக்கெட்களை விரைவாக இழந்தாலும், ஸ்டோக்ஸ் களத் நிற்பதால், நான்காம் நாளில் பெரிய ஸ்கோரை பதிவுசெய்ய இங்கிலாந்து முயற்சிக்கும்.

நான்காம் நாளில், மதிய உணவு இடைவேளை வரை விளையாடினாலே, பெரிய லீடை (Lead) இங்கிலாந்து எட்டமுடியும். பிறகு, 150 ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்படும். தசைப்பிடிப்பால் ரிட்டர்ட் ஹர்ட் ஆன ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆட்டமிழந்த பிறகு, மீண்டும் களத்துக்கு வந்தது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை களைந்தது.

பென் ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES

இந்தியா தோல்வியை தவிர்க்க முடியுமா?

இந்தியா தோல்வியை தவிர்க்க வேண்டுமானால், கேஎல் ராகுல் எண்ணிலடங்கா பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். கடைசி 3 இன்னிங்ஸ்களாக ரன்னின்றி தவிக்கும் கேப்டன் கில், பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியாக வேண்டும்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சொன்னபடி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், தொடரின் இறுதிக்கட்டத்தில் வீரர்களுக்கு உடலும் மனதும் சோர்ந்து போயிருக்கும். ஆரம்பகட்டத்தில் இருந்த ஆக்ரோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டு வரும். தோல்வியின் விரக்தியில் இருக்கும் அணி, நிதானத்தை இழந்து நிறைய தவறுகளை செய்யத் தொடங்கும். கில் தலைமையிலான இந்திய அணி, இப்போது அப்படிப்பட்ட நிலையில் தான் உள்ளது.

இரண்டாம் நாளின் கடைசியில் புதிய பந்தை எடுக்காதது, புதிய பந்தை அனுபவம் இல்லாத கம்போஜிடம் கொடுத்தது, தவறான நேரத்தில் பவுன்சர் பொறியை கையில் எடுத்தது என இந்தியா செய்த தவறுகள் அநேகம். நான்காம் நாள் ஆட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து இந்திய அணி எழுச்சி பெறுமா என்று பார்ப்போம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5ye388y7l2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இந்தியாவை விட 186 ஓட்டங்கள்  முன்னிலையில் இங்கிலாந்து 

Published By: VISHNU 26 JUL, 2025 | 12:46 AM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ள இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 186 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

2507_joe_root.png

போட்டியின் 3ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (25) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

11 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஜோ ரூட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 248 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளுடன் 150 ஓட்டங்களைக் குவித்தார்.

தனது 157ஆவது டெஸ்ட போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 38ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.

இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மைல்கல் சாதனைகளையும் ஜோ ரூட் நிலைநாட்டினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மொத்த எண்ணிக்கையை 13,409 ஓட்டங்களாக உயர்த்தியதன் மூலம் சச்சின் டெண்டுல்காரின் 15,921 ஓட்டங்களுக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார்.

இந்தியாவின் ராகுல் ட்ராவிட் (13,288), தென் ஆபிரிக்காவின் யக்ஸ் கல்லிஸ் (13,289), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் (13,378) ஆகியோரை பின்தள்ளியே ஜோ ரூட் இரண்டாம் இடத்தை அடைந்தார்.

அத்துடன் 38ஆவது சதத்தைத் குவித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கார் (51 சதங்கள்), யக்ஸ் கல்லிஸ் (45), ரிக்கி பொன்டிங் (41) ஆகியோருக்கு அடுத்ததாக குமார் சங்கக்காரவுடன் (38) 5ஆம் இடத்தை ஜோ ரூட் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் ஜோ ரூட் 1128 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விளையாட்டரங்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினர். லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் அவர் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். அங்கு அவர் 2166 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.

2507_ollie_pope.png

இது இவ்வாறிருக்க, இந்த டெஸ்ட் போட்டியில் 71 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 144 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் மற்றம் ஜெமி ஸ்மித் ஆகியோருடன் 5ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களையும் பகிர்ந்த பின்னர் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். (499 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 491 ஓட்டங்களாக இருந்தபோது பென் ஸ்டோக்ஸின் தொடையில் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக தற்காலிகமாக ஓய்வுபெற்றார். அப்போது அவர் ஜோ ரூட்டுடன் 142 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார்.

2507_ben_stokes....png

கிறிஸ் வோக்ஸ் 7ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் களம் புகுந்து 66 ஓட்டங்களிலிருந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவருடன் லியாம் டோசன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியர்கள சதங்கள் குவித்த போதிலும் இந்த டெஸ்டில் இதுவரை சதம் குவிக்கவில்லை.

ஆயஷஸ்வி ஜய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷாப் பான்ட் (54) ஆகியோர் அரைச் களைப் பூர்த்திசெய்தனர்.

பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/220967

  • கருத்துக்கள உறவுகள்

நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடும் பாரத் அணி 86 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை இழந்துள்ளது! இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்சை விட 225 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் இருப்பது 4 செஸன்கள் அதாவது கிட்டத்தட்ட 120 ஓவர்கள். இந்த 225 ஓட்டங்களை ஓவருக்கு 4 ஓட்டங்கள் படி அடித்தாலும் 2 செஸன்கள் தேவை நாளை மதியம் வரை ஆடவேண்டும். மீதம் இருக்கும் இரண்டு செஸன்களில் ஒரு செஸன் ஆடி ஒரு 100 ஓட்டங்கள் லீட் எடுத்தாலும் பாரத் வெல்ல முடியாது. 30 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தின் 10 விக்கட்டுகளையும் வீழ்த்த முடியாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி

இந்தியா - இங்கிலாந்து, ராகுல் - சுப்மன் கில், ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில்

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 27 ஜூலை 2025, 01:52 GMT

இந்த டெஸ்ட் தொடர் தனது இயல்பை (எதிர்பாராத்தன்மை) மாற்றிக்கொள்ளாது போல. ஆட்டம் முடிந்தது, எல்லாம் அவ்வளவுதான் என நினைக்கும் போதெல்லாம், இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீண்டுவருவதை பார்க்கிறோம். நான்காம் நாளில் இந்தியா பெட்டியைக் கட்டும் என கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த நிலையில், உறுதியுடன் போராடி ஆட்டத்தை கடைசி நாளுக்கு எடுத்து சென்றிருக்கிறது இந்தியா.

எவ்வளவு நேரம் தோல்வியை தள்ளிப்போட முடியும் என்ற கவலையுடன் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. 544–7 என்ற வலுவான நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே ரன் சேர்ப்பதில் தீவிரம் காட்டியது. மழை பெய்திருந்ததால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கம் போல இந்திய பந்துவீச்சாளர்கள் லைன் அண்ட் லெந்த் பிடிக்காமல் பந்துவீசி ரன்களை வாரி இறைத்தனர்.

ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் தென்பட்டது. பழைய வேகம் இல்லையென்றாலும் பும்ராவின் பந்துவீச்சில் நம்பிக்கை தெரிந்தது. நல்ல லெந்த்தில் டாசனுக்கு அவர் வீசிய பந்து ஒன்று எதிர்பாராத உயரத்துக்கு எழும்பியது. அடுத்த பந்தை அதே லெந்த்தில் வீசிய அவர், சரியாக ஆஃப் ஸ்டம்ப்பின் தலைப்பகுதியை தாக்கி டாசனின் விக்கெட்டை கைப்பற்றினார். டாசன் ஆட்டமிழந்ததும், களமிறங்கிய கார்ஸ், கேப்டன் ஸ்டோக் உடன் இணைந்து அடித்து விளையாட தொடங்கினார்.

சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஓரளவுக்கு சுமாராக பந்துவீசிய சுந்தர் பந்துவீச்சையும் ஸ்டோக்ஸ் விட்டுவைக்கவில்லை. ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து, சுந்தரின் லெந்த்தையும் ரிதத்தையும் சீர்குலைத்தார்.

இந்தியா - இங்கிலாந்து, ராகுல் - சுப்மன் கில், ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ்

உணவு இடைவேளைக்கு முன்பாக, இந்தியாவை பேட் செய்ய வைத்திட வேண்டும் என்கிற திட்டத்துடன் இங்கிலாந்து விளையாடியது. கில்லின் கேப்டன்சி, வழக்கம் போல நேற்றும் சொதப்பலாகவே இருந்தது. ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்டோக்ஸ் விரும்பமாட்டார் என்பதை மறந்துவிட்டு, நேரம் கடந்த பின்தான் ஜடேஜா கையில் பந்தை கொடுத்தார்.

சாதனைகளை நிகழ்த்திய இங்கிலாந்து

புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து கேப்டனை ஜடேஜாவாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு இது சாதனைகளை நிகழ்த்துவதற்கான டெஸ்ட் போல. நேற்று ரூட் பல்வேறு சாதனைகளை செய்த நிலையில், இன்று ஸ்டோக்ஸ், தன் பங்குக்கு சிலவற்றை நிகழ்த்தினார். ஒரே டெஸ்டில் சதமும் 5 விக்கெட்களும் கைப்பற்றிய, நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். முன்னதாக, டோனி கிரைக், இயன் போத்தம், கஸ் அட்கிட்சன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், காலிஸ் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களுடன் 200 விக்கெட்களை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜடேஜா பந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்ஸர் அடிக்க முயற்சித்து, லாங் ஆன் திசையில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக 47 ரன்கள் குவித்த கார்ஸ் விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்ற, இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து, 600 ரன்களுக்கு மேல் குவிப்பது, இது ஏழாவது முறையாகும். 6 இல் 5 டெஸ்ட்களில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. 2002 டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில், இந்திய அணி டிராவிட் சதத்தின் உதவியுடன் போராடி தோல்வியை தவிர்த்தது.

இந்தியா - இங்கிலாந்து, ராகுல் - சுப்மன் கில், ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாய் சுதர்சன்

உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில், 311 ரன்கள் பின்தங்கிய இருந்த இந்தியா இன்னிங்ஸை தொடங்கியது.

ஒன்றரை நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்கிற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்சன் விக்கெட்டுகளை இழந்தது. இந்த டெஸ்ட் தொடர் முழுக்க சுமாராக பந்துவீசிய வோக்ஸ், நேற்று சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பினார். 311 ரன்கள் பின்தங்கியிருக்கிறோம் என்பதை விட உணவு இடைவேளைக்கு முன்பு 15 ஓவர்கள் விக்கெட் இழக்காமல் விளையாடியாக வேண்டும் என்ற நெருக்கடியே அவர்களது விக்கெட்டை காவு வாங்கிவிட்டது எனலாம்.

ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை சரியான கோணத்தில் பேட்டை வைக்காமல் தடுக்க முயன்று, ஸ்லிப் திசையில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். முதல் ஓவரிலேயே விக்கெட் விழும் என எதிர்பார்க்காத சாய் சுதர்சன், முறையான தயாரிப்புகளின்றி அவசர அவசரமாக களத்துக்கு ஓடிவந்தார். கடுமையான உடற்சோர்விலும் மனச்சோர்விலும் இருந்த சுதர்சன், ஷார்ட் ஆஃப் லெந்த்தில் வோக்ஸ் வீசிய பந்தை தொடலாமா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில், கடைசி நொடியில் பேட்டை உயர்த்தி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்'காகி பெவிலியன் திரும்பினார்.

கில்லின் உச்சபட்ச ஆட்டம்

கடைசியாக இந்திய அணியின் இரு தொடக்க வீரர்களும் ' டக் அவுட்' ஆனது, 1983 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில். அந்த டெஸ்டில் நான்காவது இடத்தில் களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 236 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் முதல் சில ஓவர்களுக்கு தாறுமாறாக ஸ்விங் ஆனதால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி விரைவில் சரணடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அனுபவ வீரர் கேஎல் ராகுலுடன் கைகோர்த்த கில், தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராகுல் வழக்கம் போல, பந்தை தேய்த்துக் கொடுக்கும் வேலையை எடுத்துக்கொள்ள, தைரியமாக கில் பவுண்டரிகளை அடித்து விளையாடத் தொடங்கினார். கோட்டுக்கு (crease) வெளியே நின்றுகொண்டு, நல்ல லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளையும் ஹாஃப் வாலிகளாக மாற்றி கோடு கிழித்தது மாதிரி சில டிரைவ்கள் அடித்து, இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாயிண்ட் திசையில் கில் கொடுத்த எளிமையான கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கில், அபாரமாக விளையாடி அதிரடியாக அரைசதத்தை கடந்தார்.

2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி எடுத்த 655 ரன்களை கில் முந்தினார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை (732) நெருங்குகிறார். மறுமுனையில், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல், தவறான லைன் அண்ட் லெந்த்தில் கிடைத்த பந்துகளை பின்னங்காலுக்கு சென்று பவுண்டரிக்கு அனுப்பவும் செய்தார்.

இந்திய அணி இந்தளவுக்கு போராடும் என்பதை இங்கிலாந்து நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஸ்டோக்ஸ் பந்துவீசாததை இந்திய பேட்ஸ்மென்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் என ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும் களத்தில் சோர்வில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் சுவாரசியமே இதுதான். எல்லா வித தடைகளையும் கடந்து எந்த அணி கடைசி வரை உறுதியுடன் நிற்கிறதோ அதுவே வெற்றிபெறும்.

இந்தியா - இங்கிலாந்து, ராகுல் - சுப்மன் கில், ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராகுல்–கில் இணை, கிட்டத்தட்ட 60 ஓவர்களுக்கு மேல் உறுதியுடன் விளையாடி, 174 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ரன்னின்றி (0–2) ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்ப்பது, வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1977/78 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், மெல்பர்ன் டெஸ்டில் மொஹிந்தர் அமர்நாத்–குண்டப்பா விஸ்வநாத் (105), 1902 இல் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆர்ச்சி மெக்லாரன்–ஸ்டான்லி ஜாக்சன் (102*).

ஐந்தாம் நாளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்டம் நிச்சயம் ஒரு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாக கூற முடியும். பந்த் உடற்தகுதியுடன் இல்லாத நிலையில், ராகுல்–கில் இருவரும் இன்று முடிந்தமட்டும் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம்.

இந்தியா கடந்த காலத்தில் இதுபோன்ற கடினமான சூழல்களில், மனஉறுதியுடன் விளையாடி தோல்வியை தவிர்த்துள்ளது. 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்ட், ஒரு சிறந்த உதாரணம். டிராவிட்–லக்ஷ்மண் போல, ராகுல்–கில் அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பார்களா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgn41n7e3eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிராட்மேன், கோலியை சமன் செய்த கில்: பெருஞ்சுவராய் எழுந்து அணியை காத்த சுந்தர் - ஜடேஜா

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜா, ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அடுத்து என்ன நிகழப் போகிறது என்று தெரியாத மர்மம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுக்க எத்தனையோ டி20 லீக் தொடர்கள் முளைத்துவிட்டன. ஆனால், சமபலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை மட்டும், அவற்றால் இதுவரை விஞ்ச முடியவில்லை என்பதுதான் உண்மை.

வரலாற்றை திரும்பிப் பார்க்கையில், நெருக்கடியின் போதுதான் இந்திய அணி, தனது உச்சபட்ச கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் லக்ஷ்மண்–டிராவிட் இணையின் சாகசத்தை இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். 2021 சிட்னி டெஸ்டில், விஹாரி–அஸ்வின் இணையின் போராட்டம் வரலாற்றின் ஓரங்கமாகிவிட்டது அந்த வரிசையில், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியும், சுந்தர்–ஜடேஜா இணையின் விடாப்பிடியான சதங்களும் காலம் கடந்தும் பேசப்படும்.

இந்த டெஸ்டில் இந்தியா வென்றிருந்தால் கூட, அது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. வெற்றியை எளிதாக கொண்டாடிவிட்டு கடந்து சென்றிருப்போம். கிட்டத்தட்ட கைவிட்டுப் போன ஒரு டெஸ்டில், 142 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி, இந்திய அணி தோல்வியை தவிர்த்ததுதான், இந்த டெஸ்டை ஒரு கிளாசிக்காக மாற்றிவிட்டது.

அதுவும் எப்படிப்பட்ட ஓர் அணியை வைத்து, இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதும் இந்த டிராவை ஒரு மகத்தான அனுபவமாக மாற்றியுள்ளது. மோசமான அணித்தேர்வு, ரிஷப் பந்த் காயம், தொடரில் 2–1 என பின்னிலை, கடைசி இன்னிங்ஸில் அவலமான தொடக்கம் (0–2). இத்தனை பின்னடைவுகளுக்கு பிறகு இன்னிங்ஸை தொடங்கிய ராகுல்–கில் இணை, கடைசி நாளில் இந்திய அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜா, ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் இணை

லார்ட்ஸ் டெஸ்டில் சதத்தின் மேல் கண்வைத்து கவனத்தை தொலைத்த, ராகுல் முதல் 1 மணி நேரம் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். புதிய பந்தை எடுக்கும் வரை, டாசனுடன் சேர்ந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீசியது பாராட்டத்தக்க நகர்வு. தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் நலனுக்காக, பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தில் தனது முழு சக்தியையும் இறக்கி, பந்துவீச துணிந்தார். வெற்றி தோல்விகளை கடந்து, ஸ்டோக்ஸ் ஏன் உலகின் தலைசிறந்த கேப்டனாக கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இந்த தன்னலமற்ற தலைமைத்துவம்தான் காரணம்.

உண்மையில், நேற்று ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியிலும் இல்லை. ஒவ்வொரு பந்தையும் வீசி முடித்த பிறகு, தோளை பிடித்துக்கொண்டு வலியில் துடித்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும், உயிரைக் கொடுத்து வீசி, சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். சதத்தை தவறவிட்டாலும் ராகுலின் ஆட்டம், இந்தியாவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

சிறந்த இன்னிங்ஸை விளையாடிய சுந்தர்

ராகுல் விக்கெட்டை கைப்பற்றியது ஒரு அற்புதமான பந்து. ஷார்ட் ஆஃப் த லெந்த்தில் வீசப்பட்ட பந்து, இவ்வளவு தாழ்வாக உள்ளே நுழைந்து கால்காப்பை தாக்கும் என கனவிலும் ராகுல் நினைத்திருக்க மாட்டார். அதற்கு முந்தைய பந்து, கிட்டத்தட்ட அதே லெந்த்தில் இருந்து அதீதமாக எகிறியது ராகுலின் மனதில் நின்றிருக்கக் கூடும். ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது.

ராகுல் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் கில்லுடன் கைக்கோர்த்த சுந்தர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். இடக்கை பேட்ஸ்மேனான சுந்தருக்கு எதிராக ஆடுகளத்தில் உள்ள சொரசொரப்பை பயன்படுத்தி டாசன் வீசினார். இதைத் தடுக்கும் விதமாக, டாசன் பந்தில் சுந்தருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் கில்லே பெரும்பாலான பந்துகளை விளையாடினார்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜா, ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது.

இந்திய டெஸ்டில் கில் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான்காம் நாளில் 41 ரன்களில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். நேற்று ஸ்டோக்ஸ் பந்தில் 81 ரன்களில் இருந்தபோது கவர் திசையில் கொடுத்து வாய்ப்பை, போப் கோட்டைவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கில், இந்த தொடரின் நான்காவது சதத்தை விளாசினார். இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள்(4) குவித்த கவாஸ்கர், கோலி சாதனையை சமன்செய்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக சதங்கள் எடுத்த பிராட்மேனின் சாதனையையும் கில் சமன் செய்தார்.

சதத்தை எட்டிய பிறகு ஏற்பட்ட கவனச்சிதறலில், ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியே சென்ற பந்துக்கு பேட்டை நீட்டி கில் ஆட்டமிழந்தார். பொதுவாக ஆர்ச்சர், வலக்கை பேட்ஸ்மேனுக்கு உள்ளேதான் பந்தை எடுத்துக்கொண்டு வருவார். ஆனால், அந்தப் பந்தை தனது மணிக்கட்டை பயன்படுத்தி வெளியே கொண்டுசென்றார். அதை கில் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

சரணடையாத இந்திய அணி

கில் விக்கெட்டுக்கு பிறகு, இந்தியா எளிதில் சரணடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுந்தர்–ஜடேஜா இணை, எவ்வித தவறுக்கும் இடம்கொடுக்காமல் மிகக் கவனமாக விளையாடி, ஒவ்வொரு அரைமணி நேரமாக ஆட்டத்தை நகர்த்தி சென்றது. வாஷிங்டன் சுந்தர், ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் போலவே அபாரமான டெக்னிக்குடன் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகத்தை சமாளித்து விளையாடினார்.

ஸ்டோக்ஸ் பந்தில் அவர் பறக்கவிட்ட சிக்ஸர், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் கம்மின்ஸ் பந்தில் அடித்த ஹூக் ஷாட்டை ஞாபகப்படுத்தியது. அப்போதிருந்தே தொடர்ச்சியாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து, சுந்தரை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி நிர்வாகம் அவருடைய திறமையை அங்கீகரித்ததாக தெரியவில்லை. இன்று கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார். உயரமான பேட்ஸ்மேன் என்பதால் உடலையும் கால்களையும் நன்றாக நீட்டி, சுழற்பந்து வீச்சையும் பிரமாதமாக விளையாடுகிறார்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜா, ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்

இந்த தொடரில், இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜடேஜா, நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்தார். இங்கிலாந்து மண்ணில் 6 அல்லது அதற்கும் கீழான வரையில் பேட் செய்து, 9 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் கடந்த எதிரணி வீரர் என்ற கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்தார். இந்த தொடர் முழுக்கவே இரண்டாவது இன்னிங்ஸ்களில் ஜடேஜாவை இங்கிலாந்து அணியால் ஆட்டமிழக்க செய்யமுடியவில்லை என்பது அவர் எப்படிப்பட்ட ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று. ஆனாலும், ஆங்கில ஊடகங்கள் ஸ்டோக்ஸ் பெயரைத் தான் தொடர்ந்து உச்சரிக்கின்றன.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களில், ஜடேஜா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சுந்தர்–ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத இயலாமையால் இங்கிலாந்து அணியினர் வாய்ச்சவடாலில் இறங்கினர். முதலில் ஸ்கோரை சமன் செய்து, இன்னிங்ஸ் தோல்வியை வாய்ப்பில்லாமல் ஆக்கிய பிறகு, நம்பிக்கையுடன் அவர்கள் அடித்து விளையாட தொடங்கினர்.

அவர்கள் இருவரின் நேர்மறையான ஆட்டம், இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைத்தது. ஒருகட்டத்தில் ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என ஸ்டோக்ஸ் இறங்கிவந்து கேட்டபோது, இந்திய கேப்டன் கில் இசைவு தெரிவிக்கவில்லை. சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருந்த போதும், இந்திய அணிக்கு வேறு வியூகமும் இருந்தது.

ஏற்கெனவே, உடல் சோர்வில் இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலும் பந்துவீசி ஓய்ந்து போகட்டும் என இந்தியா நினைத்திருக்கலாம். இந்தியாவின் மறுப்பு, ஸ்டோக்ஸ் உள்பட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாவ புண்ணியம் பார்க்க முடியாது என்பதை பாடிலைன் பந்துவீச்சை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி எப்படி மறந்தது என தெரியவில்லை. சுந்தர்–ஜடேஜா இணை, 334 பந்துகள் தாக்குப்பிடித்து விளையாடி, 203 ரன்களை குவித்தது, இருவரும் சதம் அடித்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு ஆறுதலாக இந்த சதம் நிச்சயம் அமைந்திருக்கும்.

ஓவல் டெஸ்ட், இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களைத்துப் போயுள்ளனர். பும்ரா உள்பட இந்தியாவின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முழு உடற்தகுதியில் உள்ளனர். இந்தியா 2-1 என தொடரில் பின்தங்கி இருந்தாலும், மான்செஸ்டர் டெஸ்டில் இந்தியா விளையாடிய விதம், உளவியல் ரீதியாக இந்திய அணிக்கு ஒரு எழுச்சியை கொடுத்துள்ளது. ஓவல் டெஸ்டில் இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராவோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kzdgd7zjxo

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஜியோ ரூட் விட்ட கட்சினால் வந்த வினை! தெரியாமலா சொன்னார்கள் catches win Matches என்று!! அந்த ஒரு கேட்ச் இந்த மட்சை மட்டுமல்லாமல் தொடரையே மாற்றிவிட்டது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓவல் மைதான பராமரிப்பாளருடன் இந்திய தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் கடும் வாக்குவாதம்

Published By: VISHNU

29 JUL, 2025 | 06:42 PM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசியும் ஐந்தாவதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில், மைதான பராமரிப்பாளர் லீ ஃபோர்ட்டிஸ் மற்றும் இந்திய தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

gambir_-_fortis.png

ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது லீ ஃபோர்ட்டிஸை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டிப் பேசிய கௌதம் கம்பீர், 'நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை' என கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது திட்டவட்டமாக தெரியவராத போதிலும், கம்பீரிடம் ஃபோர்ட்டிஸ் ஏதோ கூறியதை அடுத்தே கம்பீர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

இந்தத் தொடரை சமப்படுத்துவதாக இருந்தால் வியாழக்ழமை (31) ஆரம்பமாகவுள்ள கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

இதனைக் கருத்தில்கொண்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பயிற்சியின்போது உணர்ச்சிவசப்பட்ட கம்பீர், மைதான பராமரிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் துடுப்பாட்டப் பயிற்றுநர் சித்தன்ஷு கோட்டாக் தலையிட்டு நிலைமை கட்டுப்படுத்தியுள்ளார்.

'இதனை நான் முறையிடுவேன்' என ஃபோர்ட்டிஸ் தெரிவித்ததால் வாக்குவாதம் சூடுபிடித்துள்ளது.

'உங்களுக்கு என்ன முறையிடவேண்டுமோ அதை போய் முறையிடுங்கள்' என கம்பீர் சற்று காரசாரமாக பதிலளித்துள்ளார்.

இதனை அடுத்து கோட்டாக் தலையிட்டு, மைதான பராமரிப்பாளரை தனியாக ஓர் ஓரத்திற்கு அழைத்துச் சென்று 'நாங்கள் எதையும் சேதப்படுத்த மாட்டோம்' என கூறியுள்ளார்.

இந்தியாவின் மற்றைய பயிற்றுநர்களான மோர்னி மோர்க்கல், ரெயான் டுஷே ஆகிய இருவரும் இந்த வாக்குவாத்தை கேட்டவண்ணம் இருந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் எதிற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெளிவாகாத போதிலும் அவர்கள் இருவரும் பயிற்சிக்கான ஆடுகளங்களின் தன்மை குறித்து வாதிட்டிருக்கலாம் என தெரிகிறது.

எவ்வாறாயினும்  மீண்டும்  ஃபோர்ட்டிஸை நோக்கி  திரும்பிய கம்பீர், எனது அணி 'என்ன செய்யக்கூடாது' என அவர் சொல்லத் தேவையில்லை என்றார்.

'நாங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு சொல்ல முடியாது. நீங்கள் வெறுமனே ஒரு மைதான பராமரிப்பாளர். அதற்குமேல் எதுவும் இல்லை' என கம்பீர் தெரிவித்தது வீடியோவில் காணப்பட்டது.

அதன் பின்னர் இருவரும் தத்தம் வழிகளில் சென்றதுடன் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதை  கம்பீர்  மேற்பார்வை செய்யத் தொடங்கினார்.

பின்னர் மைதானத்திலிருந்து தனது அறையை நோக்கி சென்ற ஃபோர்ட்டிஸ், 'இது ஒரு மிக முக்கியமான போட்டி. அவர் (கம்பீர்) உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221308

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம்

இந்தியா - இங்கிலாந்து, 5-வது டெஸ்ட், கம்பீர் சர்ச்சை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

கட்டுரை தகவல்

  • ஃபியோன் வின்

  • பிபிசி விளையாட்டு செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியின் போது சர்ரே மைதான பணியாளருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சர்ரே மைதானத்தின் தலைமை பணியாளர் லீ ஃபோர்டில் உடன் விரலை நீட்டி கம்பீர் பேசியது வலைப் பயிற்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில் கம்பீர், "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது" மற்றும் "நீங்கள் ஒரு களப் பணியாளர் மட்டுமே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என உரக்க கூறியதை கேட்க முடிந்தது.

சம்பவம் நடந்த போது அங்கிருந்த இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது "டெஸ்ட் போட்டிகாக விக்கெட்டை (ஆடுகளத்தை) பார்வையிட பயிற்சியாளர்கள் சென்ற போது விலகிச் செல்லுமாறு கூறப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.

"நாங்கள் விக்கெட் மீது நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மைதான பணியாளர்களில் ஒருவர் வந்து அங்கிருந்து இரண்டரை மீட்டர் தள்ளி நிற்குமாறு கூறினார். என்னுடைய கிரிக்கெட் கரியரில் யாரும் அப்படிச் சொல்லி நான் பார்த்ததில்லை" என கோடக் தெரிவித்தார்.

கௌதம் கம்பீர், இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் தொடர், ஷுப்மன் கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்ரே மைதானப் பணியாளர்கள் ஆடுகளத்தை பார்வையிட இடையூறாக இருந்ததாகக் கூறுகிறார் கோடக்.

"அவர் தலைமை பயிற்சியாளரிடம் கயிற்றுக்கு வெளியே நின்று விக்கெட்டை(ஆடுகளத்தை) பாருங்கள் எனக் கூறினார். அவ்வாறு நின்று எப்படிப் பார்க்க முடியும் என எனக்குத் தெரியவில்லை."

"ஒருவர் அவருடைய ஷூக்களை தேய்த்ததாகவோ அல்லது விக்கெட்டில் ஏதேனும் போட முயற்சித்தாகவோ அல்லது ஸ்பைக் அணிந்திருந்தாகவோ பொறுப்பாளர்கள் உணர்ந்தால் அவ்வாறு சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் அதைச் சொன்ன விதம் விசித்திரமானது" என்றார் கோடக்.

"மைதானத்தில் குறிப்பாக, ஸ்கொயர் மீது பொறுப்பாளர்கள் சற்று கூடுதல் கவனமாக இருப்பார்கள். தங்களிடம் பேசுகிறவர்கள் மிகவும் திறன்மிக்க, புத்திசாலியான நபர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "நீங்கள் மிகவும் புத்திசாலியான, அதிக திறன் மிக்க நபர்களுடன் வேலை செய்கிற போது, ஒருவர் ஆணவமாகப் பேசினால், நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால் இறுதியில் அது ஒரு கிரிக்கெட் மைதானமே. அது நீங்கள் தொடக் கூடாத, உடைந்துவிடக்கூடிய 200 ஆண்டுகள் பழைய கலைப்பொருள் அல்ல" எனத் தெரிவித்தார்.

கௌதம் கம்பீர், இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் தொடர், ஷுப்மன் கில்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி (கோப்புப்படம்)

பயிற்சிக்கென குறிப்பாக எந்த வெளிப்புற களமும் இல்லாத நிலையில், அடுத்த டெஸ்டுக்கான ஆடுகளத்திற்கு அருகே வலை அமைக்கப்பட்ட 3 ஆடுகளங்களை இந்தியா பயிற்சிக்குப் பயன்படுத்தியது. இது தான் வழக்கமான நடைமுறைதான்.

பிபிசி ஸ்போர்ட் இதுகுறித்து சர்ரே நிர்வாகத்திடம் கருத்து பெற முயன்றபோது அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் ஒரு காணொளி மூலம் இந்திய ஊடகங்களுக்குப் பதிலளித்த ஃபோர்டிஸ், "இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இரு அணிகளுக்கும் இடையே காரசாரமான மற்றும் போட்டி மிகுந்த இந்தத் தொடரில் நிகழ்ந்த சம்பவங்களில் சமீபத்திய நிகழ்வு இது. ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சதமடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியை முன்கூட்டியே டிரா செய்ய இந்தியா மறுத்துவிட்டது.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் இங்கிலாந்து வீரர்கள் "கிரிக்கெட்டின் மாண்புக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்" எனத் விமர்சித்திருந்தார். லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நேரத்தைக் கடத்தும் உத்திகளில் ஈடுபட்டதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.

கௌதம் கம்பீர், இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் தொடர், ஷுப்மன் கில்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, நான்காவது டெஸ்டில் டிரா செய்வதில் சர்ச்சை

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மான்செஸ்டர் போட்டியைத் தொடர்ந்து அடுத்த போட்டிக்கு மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் இங்கிலாந்து தனது பந்துவீச்சில் மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டோக்ஸ் பல்வேறு காயங்களுடன் அவதிப்படுகிறார். ஜேமி ஓவர்டன், அட்கின்சன் மற்றும் ஜோஷ் டங் மாற்று வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ் இதுவரையிலான நான்கு போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பி, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மறுபக்கம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த டெஸ்டில் ஆடுவாரா என்பது பற்றியும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. தொடருக்கு முன்பே அறிவிக்கப்பட்ட அதிகபட்சம் மூன்று போட்டிகளில் அவர் விளையாடிவிட்டார்.

இந்தியா - இங்கிலாந்து, 5-வது டெஸ்ட், காம்பீர் சர்ச்சை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, கவுதம் கம்பீர் சர்ரே மைதான பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

"ஓவல் டெஸ்டு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது"

பிபிசி ஸ்போர்ட்ஸின் தலைமை கிரிக்கெட் செய்தியாளர் ஸ்டீபன் ஷெமில்டின் பகுப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது.

கவுதம் கம்பீர் மற்றும் லீ ஃபோர்டிஸ் இருவருமே வெளிப்படையான நபர்கள். எந்தவொரு கருத்து வேறுபாட்டிலும் இருவருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

இந்தத் தொடரின் அதீத உணர்வுகளுக்கு இது மற்றுமொரு உதாரணம். முதலில் லார்ட்ஸில் நிகழ்ந்த எரிச்சலூட்டும் நிகழ்வுகள், அடுத்து ஓல்ட் ட்ராஃபோர்டில் நிகழ்ந்த கைகுலுக்கல் சர்ச்சை, தற்போது இந்த சர்ச்சை நிகழ்வு.

ஓவலில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டுக்கு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது. இது உச்சபட்ச விளையாட்டு. இங்கு ஒவ்வொரு முடிவும் முக்கியம். சம்மந்தப்பட்டவர்கள் அதன்மீது அக்கறையுடன் இருப்பார்கள். இதனால் சில சந்தப்ப்பங்களில் நிலைமை கைமீறிச் செல்வது ஒன்றும் புதிதல்ல.

தற்போது இருந்து ஓவல் பிட்ச் (ஆடுகளம்) வெளிச்சத்திலே இருக்கும். வரலாற்று ரீதியாக இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்து வந்துள்ளது. தற்போது நிலைமை அவ்வாறு இல்லை.

அடுத்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் லியம் டாவ்சன் இடம் பெற மாட்டார் என்ற ஊகங்கள் உள்ளன. பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பிறகு சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்ட் இல்லாமல் இங்கிலாந்து அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளது. இதன் மூலம் சுழற்பந்து வீச்சுக்கு அவர் தரும் முக்கியத்துவம் புரிய வரும்.

ஆனால், அது ஸ்டோக்ஸின் முடிவைப் பொருத்தது. ஓல்ட் ட்ராஃபோர்ட் டெஸ்டில் அதிக ஓவர்களை வீசி ஓய்ந்து போயுள்ள அவர் கடைசி டெஸ்டில் என்ன மாதிரியான பங்கு வகிப்பார் என்பது பற்றி கேள்விகள் உள்ளன.

ஸ்டோக்ஸ் 4 வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார் என்றால் டாவ்சன் அணியில் இடம்பெறுவார். ஸ்டோக்ஸ் பந்துவீசுவதில் சிரமம் இருந்தால், இங்கிலாந்து அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலை வரலாம். அவ்வாறான பட்சத்தில் டாவ்சன் அணியில் இடம் பெறுவது கடினம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj0yjmper0go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓவல் டெஸ்ட் : காயத்தால் பென் ஸ்டோக்ஸ் விலகல் - இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள்

IND Vs ENG

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கம்பீர்–ஓவல் மைதான பராமரிப்பாளர் மோதல், ஸ்டோக்ஸ் விலகல் என ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று கடைசி டெஸ்ட் தொடங்குகிறது.

பெரும்பான்மை வீரர்கள் ஃபார்மில் இல்லாத போதும், இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில், 4 இந்திய வீரர்கள் உள்ளனர். அதிக விக்கெட்கள் கைப்பற்றவர்கள் பட்டியலில், முதல் 5 இடங்களில் 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியும், சில தவறான முடிவுகள், விவாதத்துக்குரிய அணித் தேர்வுகள் காரணமாக தொடரில் பின்தங்கியுள்ளது.

304 ரன்கள், 17 விக்கெட்கள் உடன் இருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்ற கேப்டன் ஸ்டோக்ஸ், தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வேலைப்பளு மேலாண்மையை கருத்தில்கொண்டு, அணி நிர்வாகம் பும்ராவுக்கு ஓய்வளித்திருப்பது, இந்திய அணியின் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

IND Vs ENG

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவுடன் கை குலுக்குகிறார்.

பென் ஸ்டோக்ஸ் காயம்

மான்செஸ்டர் டெஸ்டில் வலியை பொருட்படுத்தாமல் ஸ்டோக்ஸ் உயிரைக் கொடுத்து பந்துவீசியதே, காயத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த இரு டெஸ்ட்களில் 531 பந்துகளை வீசி, சோர்ந்துபோயிருக்கும் ஆர்ச்சருக்கும் சரியான லெங்த்தில் பந்தை தொடர்ச்சியாக வீசமுடியாமல் தடுமாறிய கார்ஸுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது; மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் டங், ஓவர்டன், அட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டும் விளையாடியுள்ளனர். ஓவல் மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்காது என்பதால் டாசன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பெத்தேல் அணியில் இணைந்துள்ளார். ரூட்டுடன் சேர்ந்து பெத்தேல் பகுதிநேர சுழற்பந்து வீசுவார் என எதிர்பார்க்கலாம்.

பும்ரா இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்த வேண்டிய பொறுப்பு முகமது சிராஜின் தோள்களில் இறங்கியுள்ளது. இந்த தொடரில் ஓய்வின்றி 4 டெஸ்ட்கள் விளையாடி, ஒட்டுமொத்தமாக 834 பந்துகள் வீசி, 14 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார் அவர். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள ஆகாஷ் தீப், நல்ல பவுன்ஸ் கொண்ட ஓவல் மைதானத்தில் சாதிப்பார் என நம்பலாம். அறிமுக டெஸ்டில் திணறிய கம்போஜ் நீக்கப்பட்டு, ரன்களை வாரி இறைத்ததால் நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் சேர்க்கப்படலாம். ஆல்ரவுண்டர் போர்வையில், கடந்த டெஸ்டில் அணியில் இடம்பெற்று 11 ஓவர்கள் மட்டுமே வீசிய, ஷார்துல் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வழிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை கம்பீர்–கில் கூட்டணி வழக்கம் போல, நீண்ட பேட்டிங் வரிசைக்கு முன்னுரிமை கொடுக்குமானால், ஷார்துல் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார். கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 41 முக்கிய ரன்களை ஷார்துல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை

இந்தமுறையும் 'சைனாமேன்' குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. ரிஷப் பந்த் விலகியதால், ஐந்தாவதாக இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை சுந்தருக்கு கிடைக்கவுள்ளது. இங்கிலாந்து அணியில் வோக்ஸ் தவிர மற்ற மூவரும் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் இந்திய பேட்டர்களுக்கு பெரியளவுக்கு நெருக்கடி இருக்காது. காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள வோக்ஸும் இந்த டெஸ்ட் தொடரில், எதிர்பார்த்தளவுக்கு இங்கிலாந்து அணிக்கு பங்களிக்கவில்லை. 4 டெஸ்ட்களில் 52.80 என்ற மோசமான சராசரியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றுள்ளார். இடைக்கால கேப்டன் ஆலி போப், ஒரு முக்கியமான கட்டத்தில் அணிக்கு தலைமையேற்கவுள்ளார் . கிராலி–டக்கெட் இருவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், நட்சத்திர வீரர் புரூக் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. கேஎல் ராகுல் தொடங்கி ஜடேஜா வரை பிரமாதமான ஃபார்மில் உள்ளனர். 4 சதங்களுடன் 722 ரன்கள் குவித்துள்ள கேப்டன் கில்லுக்கு, டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் (974) குவித்த பிராட்மேனின் சாதனையை முறியடிக்க 252 ரன்கள் தேவைப்படுகிறது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அசத்திய சாய் சுதர்சன், மீண்டும் ஒருமுறை டாப் ஆர்டரில் கைகொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒருவேளை பேட்டிங் வரிசையை பலப்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டால், ஷார்துல் நீக்கப்பட்டு அவரிடத்தில் கருண் நாயர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.

IND Vs ENG

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்

உளவியல் ரீதியாக உற்சாகம்

இன்றும் கடைசி இரண்டு நாள்களிலும் ஓவல் மைதானத்தில் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய அணி, மழையையும் மனதில் வைத்து வியூகம் வகுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஓவல் மைதானத்தில் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இந்தியா, 2 இல் மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக 2021 சுற்றுப்பயணத்தில் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, 2023 WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் என்பதால் டாஸ் வெல்லும் அணி, பந்துவீச்சை தேர்வு செய்யவே வாய்ப்பதிகம்.

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டெழுந்து, தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ள இந்திய அணி, கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. வெற்றி பெறுவோம் என்ற மமதையில் களத்தில் லட்சுமண ரேகையை தாண்டிய இங்கிலாந்து அணி, தலைவன் இல்லாத நிலையில் உத்வேகத்தை தொலைத்துவிட்டு நிற்கிறது. பாய்காட் உள்ளிட்ட இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான்களே ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியின் போலித்தனத்தை விமர்சித்துள்ள நிலையில், உளவியல்ரீதியாக இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் கைகுலுக்க மறுத்த ஜடேஜா, சுந்தரை இங்கிலாந்து அணி நடத்திய விதம், உலகம் முழுக்க இந்திய அணிக்கு ஆதரவு வட்டத்தை அதிகரித்துள்ளது. எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, கம்பீர்–மைதான பராமரிப்பாளர் இடையிலான வாய்த்தகராறு, டெஸ்ட் தொடரின் முடிவு மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.

IND Vs ENG

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, ஜூலை 27ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த போது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம்.

இந்த தொடரின் முடிவு எப்படி அமைந்தாலும், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்றாக வரலாற்றில் நிலைத்திருக்கும். அணித் தேர்வு, ஆட்ட வியூகம் தொடர்பில் விமர்சனங்கள் உள்ள போதும், கடினமான சூழல்களில் அணியை முன்னின்று வழிநடத்திய விதம், இளம் கேப்டன் கில்லின் தலைமைத்துவத்தை பறைசாற்றுகிறது. ஒன்றுக்கொன்று விஞ்சும் விதமாக ஒவ்வொரு டெஸ்டும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொடரின் கிளைமாக்ஸ் டெஸ்ட் அட்டகாசமான ஒன்றாக அமைந்து, ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரை முழுமை பெற வைக்குமா? அதற்கு வானிலை ஒத்துழைக்குமா? இங்கிலாந்தின் தடித்தனத்துக்கு இந்திய இளம் படை சரியான பாடம் புகட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce839788r9wo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓவல் டெஸ்ட்: ஒரு ரன்னுக்காக விக்கெட்டை விட்ட கில் - 8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம்

ஓவல் டெஸ்ட்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

  • பிபிசி தமிழுக்காக

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆண்டர்சன்–டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் சிறப்பம்சமே யார் எந்த செஷனை வெல்வார்கள் என்ற எதிர்பாராத தன்மைதான். பும்ரா, பந்த், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் அந்த பரபரப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், ஓவல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம், அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மழை குறுக்கீடுகள் இருந்தபோதும் விறுவிறுப்பு குறையாத நாளாக நேற்று அமைந்தது.

வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இந்திய அணி டாஸை பறிகொடுத்ததால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த தொடரின் அனைத்து டெஸ்ட்களிலும் கில் டாஸை துரதிர்ஷ்டவசமாக கோட்டைவிட்டுள்ளார். கடைசி 15 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக டாஸை இழந்துள்ளதை என்னவென்று சொல்வது?

இந்திய அணியில் ஷார்துல் நீக்கப்பட்டு, பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் விதமாக கருண் நாயருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். கம்போஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா உள்ளே கொண்டுவரப்பட்டார்.

ஓவல் டெஸ்ட்

பட மூலாதாரம், GETTY IMAGES

பேட்டிங்குக்கு சவால் விடுத்த மழை

மழை காரணமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக மாறியிருந்ததால், தொடக்க ஆட்டக்காரர்கள் சிரமத்துடன் இன்னிங்ஸை தொடங்கினார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால், 2 ரன்னில் அட்கின்சன் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், சக வீரர்களின் ஆதரவின்றி தனி ஒருவனாக மேல்முறையீடு செய்து விக்கெட்டை கேப்டன் போப் உறுதிசெய்தார்.

வழக்கமாக DRS எடுக்கும் போது, சொதப்பும் போப் நேற்று சரியாக செயல்பட்டது, ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் அனுபவமற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான லைன் அண்ட் லெங்க்த் பிடிக்காமல் தாறுமாறாக வீசினார்கள். குறிப்பாக டங் முதல் ஓவரிலேயே அகலப்பந்துகளுக்கு 11 ரன்களை வாரிக்கொடுத்தார்.

ஒற்றை ரன்னுக்காக பறிபோன விக்கெட்

இந்த தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது டெஸ்டில் களமிறங்கிய வோக்ஸ், இந்திய அணியின் தூணாக விளங்கும் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். இல்லாத ஒரு கட் ஷாட்டுக்கு ஆசைப்பட்டு, ஸ்டம்புகளை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் ராகுல் வெளியேறினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ராகுல் ஏன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்பதற்கு இதுபோன்ற ஷாட்கள் தான் காரணம்.

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், சுதர்சன், கில் இருவரும் நல்ல பார்ட்னஷிப் அமைத்து நம்பிக்கையளித்தனர். டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற கவாஸ்கரின்(732) சாதனையை முறியடித்தார்.

ஆனால், தொடக்கம் முதலே ரன் ஓடுவதில் இருவருக்கும் இடையில் சரியான ஒத்திசைவு தென்படவில்லை. கடைசியில் அட்கின்சன் பந்துவீச்சில் அவசரப்பட்டு ரன் ஓட முயன்று, அவரது கையாலேயே ரன் அவுட்டாகி கில் வெளியேறினார்.

ஓவல் டெஸ்ட்

பட மூலாதாரம், GETTY IMAGES

நம்பிக்கை அளித்த சுதர்சன்

கில் இருந்த ஃபார்முக்கு கொஞ்சம் பொறுமையாக நின்றிருந்தால் நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியிருப்பார். கடந்த டெஸ்டில் நம்பிக்கையளித்த சுதர்சன், நேற்று பிரமாதமாக பேட்டிங் செய்தார்.

கடினமான பந்துகளை லாவகமாக கணித்து தவிர்த்து, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன் சேர்த்தார். அவருடைய ஸ்ட்ரைட் டிரைவ் ஒன்று கோடு போட்டது போல நேர்க்கோட்டில் சென்று, மைதானத்தை ஆர்ப்பரிக்க வைத்தது.

மோசமாக பந்துவீசிக் கொண்டிருந்த டங், யாரும் எதிர்பார்க்காத படி இரண்டு அட்டகாசமான பந்துகளை வீசி சுதர்சனையும் ஜடேஜாவையும் பெவிலியனுக்கு அனுப்பினார். 108 பந்துகளை எதிர்கொண்ட சுதர்சன், 38 ரன்கள் எடுத்தார்; கடந்த டெஸ்டில் சதம் விளாசிய ஜடேஜா 9 ரன்னில் வீழ்ந்தார்.

உண்மையில், எவ்வளவு பெரிய பேட்டர் என்றாலும், அந்தப் பந்தில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. அப்படிப்பட்ட பந்துகள் அவை. அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்து, ஆட்டம் கைவிட்டு போய்விட்டது என்ற நினைத்த போது, கருண் நாயர் நம்பிக்கையுடன் விளையாடி அணியை மீட்டார்.

8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம்

ஓவல் டெஸ்ட்

தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளுக்கு கொஞ்சம் தடுமாறினாலும், போகப்போக சுதாரித்து விளையாடத் தொடங்கினார். குறிப்பாக அவருடைய சில டிரைவ்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தன.

கருண்–ஜுரெல் பார்ட்னர்ஷிப் மழை குறுக்கீடுகளையும் மீறி, அணியை சரிவிலிருந்து மீட்டது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜுரெல், அவசரப்பட்டு விளையாடி அட்கின்சன் பந்தில் ஸ்லிப்பில் புரூக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்ட இந்திய அணிக்கு, மீண்டும் ஒருமுறை வாஷிங்டன் சுந்தர் கைகொடுத்தார். கட்டுக்கோப்பாக விளையாடிய அவர், கருண் நாயருக்கு உறுதுணையாக நின்று அணியை மீட்டெடுத்தார்.

இங்கிலாந்து அணி இலக்கில்லாமல் பந்துவீசியதால், 30 எக்ஸ்ட்ரா ரன்களை விட்டுக்கொடுத்தது. பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்து அபாரமாக விளையாடிய கருண் நாயர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது முறை 50 ரன்களை கடந்தார்.

3149 நாட்களுக்கு பிறகு அவர் அடித்த அரைசதம் இது. கடைசியாக இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஓவல் டெஸ்ட்

பட மூலாதாரம், GETTY IMAGES

தொடர்ந்து கை கொடுப்பாரா கருண் நாயர்?

இங்கிலாந்தில் அட்கின்சன் தவிர வேறு யாரும் சரியாக பந்துவீசவில்லை. இந்திய அணி, இங்கிலாந்து பந்துவீச்சின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இருந்திருந்தால், நிச்சயம் இந்தியாவால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில், மழை குறிக்கீடுகளை கடந்து 64 ஓவர்களில் 204 ரன்களை எடுத்திருக்க முடியாது.

இந்திய அணி இரண்டாம் நாளில், கிடைத்த அடித்தளத்தை நன்றாக பயன்படுத்தி பெரிய ஸ்கோர் ஒன்றை பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சூரியன் துலக்கமாக வெளிப்பட்டு இந்தியாவுக்கு கைகொடுக்கும்பட்சத்தில் இந்திய அணி 350 ரன்களை கடக்க வாய்ப்புள்ளது.

அதேசமயம், நேற்றைய நாளின் தவறுகளை சரிசெய்துகொண்டு, இரண்டாம் நாளின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்களை கைப்பற்ற இங்கிலாந்து நிச்சயம் வியூகம் வகுக்கும். 50 ரன்களை கடந்து விளையாடி வரும் கருண் நாயர், பெரிய இன்னிங்ஸ் விளையாடி, அணியில் தன் இடத்தை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஓவல் டெஸ்ட்

பட மூலாதாரம், GETTY IMAGES

முதல் நாள் ஆட்டம் முடிவடைய சில ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில், பீல்டிங்கின் போது வோக்ஸ் காயமடைந்துள்ளது, இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்டில் வோக்ஸ் மீண்டும் பந்துவீசுவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால், அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை கொண்டு பந்துவீசியாக வேண்டிய கட்டாயத்துக்கு இங்கிலாந்து அணி கேப்டன் போப் தள்ளப்படுவார்.

அட்கின்சன், டங், ஓவர்டன் ஆகிய மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டுமே விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியா இரண்டாம் நாளில் ரன் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கலாம்.

கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கு இருக்கும் மனநெருக்கடி கற்பனைக்கு எட்டமுடியாதது. ' கிரிக்கெட்டைத் தவிர எந்தவொரு விளையாட்டிலும் தோல்வி அடைந்த ஒரு வீரன் களத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவதில்லை.

இது பட்டத்தை பறிகொடுத்த மன்னனின் சோகத்திற்கு நிகரானது.' என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லி. 8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல், கருண் நாயரின் கரியர் முடிந்திருந்தால் எவ்வளவு சோகமாக இருந்திருக்கும்?

முதல் 3 டெஸ்ட்களில் சரியான தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாத அவருக்கு, காலம் இன்னொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இரு அணிகளும் தங்களுடைய மேட்ச் வின்னர் வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ஓவல் டெஸ்டில், முதல் நாளில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2djxz2ne6ko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை

இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட், ஓவல் டெஸ்ட், பிசிசிஐ, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டமிழந்த டக்கெட்டின் தோளில் கைபோட்டு ஆகாஷ் நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகியுள்ளது.

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்.எஸ்

  • பிபிசி தமிழுக்காக

  • 2 ஆகஸ்ட் 2025

இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மழை குறுக்கீடுகளையும் கடந்து புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் முதல் நான்கு டெஸ்ட்களும் தட்டையான ஆடுகளங்களில் தான் நடந்தன. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களில் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தில் தாறுமாறாக பந்துவீசிய டங், ஒரு அபாரமான பந்தின் மூலம் கருண் நாயர் கால்காப்பை தாக்கி, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பிறகு சீட்டுக்கட்டு போல, இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.

வாஷிங்டன் சுந்தரை சரியாக குறிவைத்து வீசப்பட்ட பவுன்சர் மூலம் கைப்பற்றிய அட்கின்சன், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரையும் ரன் ஏதுமின்றி வெளியேற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட், ஓவல் டெஸ்ட், பிசிசிஐ, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு, இந்த தொடரின் மற்ற போட்டிகளில் தடுமாறிய கருண் நாயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

கடும் நெருக்கடியில் இருந்தபோது நன்றாக விளையாடியவர், அரைசதம் அடித்த திருப்தியில் கவனத்தை தொலைத்துவிட்டாரோ என்று தோன்றும் விதமாக அவர் ஆட்டமிழந்த விதம் அமைந்தது. என்னதான் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும், சுந்தர் ஆட்டமிழந்த பந்து, அவருடைய திறமைக்கு பொருத்தமான ஒன்றல்ல. இரண்டாம் நாளில் இன்னிங்ஸ் தொடங்கி, வெறுமனே 34 பந்துகளில் இந்திய ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கிய போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவான ஒன்றாக மாறியிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிராலி–டக்கெட் இருவரும் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் அடித்து விளையாடினார்கள். கிராலி வழக்கம் போல கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஆஃப் டிரைவ் என பாரம்பரிய முறையில் ரன்கள் குவிக்க மறுபுறம் டக்கெட் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் என விளையாடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார்.

குறிப்பாக ஆகாஷ் தீப்–டக்கெட் இடையிலான சமர், ஆட்டத்துக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது. டியூக்ஸ் பந்து, முதல் 12–15 ஓவர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காது என்பதால் சிராஜுக்கு தொடக்கத்தில் ஒன்றும் சரியாக அமையவில்லை. 38 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்த டக்கெட், அபாயகரமான ஷாட் ஒன்றை ஆட முற்பட்டு, ஆகாஷ் தீப் பந்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார்.

இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட், ஓவல் டெஸ்ட், பிசிசிஐ, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது

ஆட்டமிழந்து சென்று கொண்டிருந்த டக்கெட் தோள் மீது கைபோட்டு ஆகாஷ் தீப் நடந்துகொண்ட விதம் பேசப்பட்டது. தினேஷ் கார்த்திக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ஆகாஷ் தீப் நடந்து கொண்ட விதத்தை விமர்சித்ததுடன் டக்கெட் காட்டிய நிதானத்தை பாராட்டவும் செய்துள்ளனர். இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. சிராஜ்–ஆகாஷ் தீப் இருவரும் ரன்களை வாரி இறைத்ததால், கொண்டுவரப்பட்ட பிரசித் கிருஷ்ணா, தொடக்கத்தில் சில பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார்.

ஜெஃப்ரி பாய்காட் அடிக்கடி உச்சரிக்கும் "The corridor of uncertainty" என்று சொல்லக்கூடிய லெங்த்தில் வீசினார். புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கிராலியின் விக்கெட்டை கிருஷ்ணா கைப்பற்றிய பிறகு, ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது.

கிராலி விக்கெட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. ஓரளவுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போப், சிராஜின் தவிர்க்க முடியாத உள்ளே வரும் பந்தில் (Nip backer) எல்,பி.டபிள்யூ ஆகினார். பிரசித் கிருஷ்ணா உடனான வாய்த் தகராறால், வழக்கத்துக்கு மாறாக களத்தில் ஆக்ரோஷத்தை காட்டிய ரூட், அதனாலேயே கவனத்தை தொலைத்து சிராஜ் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட், ஓவல் டெஸ்ட், பிசிசிஐ, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார்.

முதல் இரு டெஸ்ட்களில் தாறுமாறாக வீசியதால், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். தன்னை நிரூபித்தாக வேண்டும் என்கிற தாகம், அவருடைய பந்துவீச்சில் தெரிந்தது. பெத்தேல் விக்கெட்டை சிராஜ் கைப்பற்ற, கடைசிக்கட்ட விக்கெட்டுகள் அனைத்தையும் பிரசித் கிருஷ்ணா சடசடவென கைப்பற்றி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

மழை குறுக்கீடு அடிக்கடி இருந்ததால், அதைப் பயன்படுத்தி இந்திய அணி வீரர்கள் களைப்பின்றி பந்துவீசினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், நட்சத்திர வீரர் புரூக் ஒருபக்கம் அடித்து விளையாடினார். அதிர்ஷ்டமும் அவருக்கு நிறைய கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி அவரும் சிராஜ் பந்துக்கு ஸ்டம்புகளை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, கடைசி 9 விக்கெட்களை 155 ரன்களுக்கு இழந்தது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்கள் கைப்பற்றினர்.

காயம் காரணமாக வோக்ஸ் பந்துவீச முடியாத சூழலில், டங் புதிய பந்தை கையிலெடுத்தார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறைக்கு சவால் அளிக்கும் விதமாக, அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போல சிக்ஸர்களும் பவுண்டரியுமாக விளாசி, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்.

அபாரமாக வீசப்பட்ட சில பந்துகளை சிறப்பாக எதிர்கொண்ட ராகுல், ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். தொடரின் ஆரம்பத்தில் தென்பட்ட கவனமும் உற்சாகமும் இப்போது ராகுலின் ஆட்டத்தில் குறைவாகத் தெரிகிறது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் கைகோர்த்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். சாய் சுதர்சனின் கேட்ச் வாய்ப்பையும் கிராலி தவறவிட்டபோதும், அந்த வாய்ப்பை சுதர்சன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ஆட்டம் முடிவதற்கு சில பந்துகள் இருந்த நிலையில், அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சரியக்கூடாது என்ற முன்னெச்சரிகையில் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் 51 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.

இன்று சூரியன் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி வலுவான நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. வோக்ஸ் இல்லாததால், 3 வேகப் வீச்சாளர்களின் ஸ்பெல் முடிந்தவுடன் எப்படியும் சுழற்பந்து வீச்சாளர்களை நோக்கிதான் இங்கிலாந்து கேப்டன் போப் சென்றாக வேண்டும்.

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத இங்கிலாந்தின் பந்துவீச்சில் தென்படும் பலவீனத்தை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார முன்னிலை பெற்று இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். நேற்றைய நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இப்படியாக ஓவல் டெஸ்டில் இரண்டாவது நாளிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp8z2nnzdmro

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொடரில் தோற்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது போல் தோன்றுகின்றதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கில் சாதனை, ஜெய்ஸ்வால் சதம்: இங்கிலாந்தின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய ஆகாஷ் தீப் - யாருடைய கை ஓங்கியுள்ளது?

இந்தியா - இங்கிலாந்து, ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப்

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும்.

ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில் களம்புகுந்த ஆகாஷ் தீப், நேற்று உடும்பு போல விக்கெட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் நிம்மதியை கெடுத்தார். கிடைக்கும் ஒவ்வொரு ரன்களும் அணிக்கு லாபம் என்று, ஜெய்ஸ்வாலும் அவருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே, பெத்தேல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியை ஆரம்பித்த ஆகாஷ் தீப் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. உயிரைக் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை, அலட்சியமாக ஸ்லிப் பிராந்தியத்திலும் மிட் விக்கெட் திசையிலும் பறக்கவிட்டு ரன் சேர்த்தார். ஆகாஷ் தீப் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து பீல்டர்கள் சொல்லிவைத்தது போல போட்டிப் போட்டுக்கொண்டு தவறவிட்டனர்.

ஆகாஷ் தீப் மீது இங்கிலாந்து அணியின் பார்வை திரும்பியதை பயன்படுத்திக் கொண்டு, ஜெய்ஸ்வால் சத்தமின்றி சதத்தை நோக்கி நகர்ந்தார். ஜெய்ஸ்வால் பெரிதாக எந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தனக்கு தோதான பந்துகள், தனக்கு விருப்பமான திசையில் கிடைக்கும் போது நம்பிக்கையுடன் பேட்டை விளாசினார். ஒரு நல்ல தொடக்க பேட்டருக்கு, பந்தின் வேகத்தை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்க வேண்டும். கழுத்தை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை ரொம்பவும் லாவகமாக தேர்ட் மேன் திசையில் அப்பர் கட் விளையாடினார்; தவறான லைனில் வீசப்பட்ட பந்துகளை பாயிண்ட் திசையிலும் சீவிவிட்டார்.

இந்தியா - இங்கிலாந்து, ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்ததைக் கொண்டாடும் ஜெய்ஸ்வால்

வோக்ஸ் இல்லாத குறை இங்கிலாந்து பந்துவீச்சில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மொத்த ஓவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே பங்கிட்டு வீசினர். அதிர்ஷ்டத்தின் துணையுடன் 67 ரன்கள் குவித்த ஆகாஷ் தீப், ஓவர்டனின் பேக் ஆஃப் எ லெந்த் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்று, அட்கின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் முக்கியமான ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி, மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் களைப்படைய செய்தார். இது ஆட்டத்தின் பின்பகுதியில் இந்திய பேட்டர்களுக்கு கைகொடுத்தது.

ஜெய்ஸ்வால்–ஆகாஷ் தீப் ஜோடி, 107 ரன்களை குவித்தது. ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கிரஹாம் கூச்சின் (752) சாதனையை கில் (754) முறியடித்தார். ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகான முதல் பந்திலேயே அட்கின்சன் பந்தை கால்காப்பில் வாங்கி, எல்பிடபிள்யூ முறையில் மீண்டும் ஒருமுறை ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்ஸை போலவே மிகவும் எளிதாக விக்கெட்டை தூக்கிக் கொடுத்த விதம், கில் போன்ற ஒரு மிகத்திறமையான பேட்டருக்கு அழகல்ல. 700 ரன்களுக்கு மேல் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு தொடர்ச்சியாக அவர் விக்கெட்டை பறிகொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த பலவீனத்தை விரைவில் சரிசெய்யாவிட்டால், எதிரணிகள் அவருடைய காலைக் குறிவைத்து வியூகம் வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கில் தனது ஆட்டத்தில் விடாப்பிடித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். ஜெய்ஸ்வாலிடம் இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடித்து விளையாடுவதற்கான டெக்னிக் இல்லை. கில் அளவுக்கு அவருக்கு பேட்டிங்கில் டைமிங்கும் கிடையாது. ஆனால், எப்படியாவது தாக்குப்பிடித்து விக்கெட்டை பத்திரப்படுத்தி விளையாடி ரன் சேர்க்கும் நுட்பம் அவருக்கு வாய்த்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து, ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்

அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது சதத்தை பதிவுசெய்தார்; இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 4 சதங்களை குவித்துள்ளார். கில் பெவிலியன் திரும்பிய பிறகு களமிறங்கிய கருண் நாயர், தொடக்கம் முதலே தடுமாறினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் தடுமாறியதை பார்க்கும்போது தான், ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் மதிப்பு புரிந்தது. ஆடுகளம் முழுவதுமாக தட்டையாகவில்லை; இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதை கருண் நாயரின் குறுகிய நேர இன்னிங்ஸ் உணர்த்தியது.

ஒவ்வொரு பந்துக்கும் விக்கெட்டை கொடுப்பதற்கு தயாராக இருந்த கருண், அட்கின்சன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸை கருண் நாயர் விளையாடிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். 118 ரன்களில் டங் பந்தில் ஆஃப் சைடில் தனக்கு பிடித்த ஷாட் விளையாட ஆசைப்பட்டு, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி கோட்டைவிட்டது. ஒட்டுமொத்தமாக ஆறு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. முதல் டெஸ்டில் தான் தவறவிட்ட கேட்ச்களுக்கு பரிகாரம் தேடியதை போல, கிடைத்த வாய்ப்புகளை ஜெய்ஸ்வால் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜுரெல் ஆரம்பம் முதலே நல்ல ஷாட்கள் விளையாடி ரன் குவித்தார். நறுக்கென்று நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்த ஜுரெல், ஓவர்டன் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார். டங் பந்தில் பவுண்டரி விளாசி, அரைசதத்தை கடந்த ஜடேஜா, ஒன்பதாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தருடன் ஜோடி சேர்ந்து வேகமாக ரன் சேர்த்தார். கடந்த டெஸ்டின் நாயகர்கள் இருவரும் சீக்கிரம் ரன் சேர்த்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடியது போல தெரிந்தது.

77 பந்துகளில் 53 ரன்களை குவித்த ஜடேஜா, இந்த தொடரில் முதல்முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்துகளில் சிராஜும் வெளியேற, ஓவல் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிய வைத்தார் வாஷிங்டன் சுந்தர். 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்த அவர், கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். வாஷிங்டன் சுந்தரின் கடைசிகட்ட வாணவேடிக்கை, 335 இல் இருந்த ஸ்கோரை ஐந்தே ஓவர்களில் 374 ரன்களுக்கு கொண்டு சென்றது.

374 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுவதற்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, நம்பிக்கையுடன் அடித்து விளையாடியது. கிராலி–டக்கெட் இருவரின் ஆட்டமும், ஆடுகளம் இன்னும் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை காட்டியது. போகப் போக கவனமாக விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விக்கெட் கொடுக்காமல் விளையாடினர். முன்றாம் நாளின் கடைசி ஓவரின், ஐந்தாவது பந்தில் சிராஜின் யார்க்கரில் கிராலி வீழ்ந்தார்.

நாளின் கடைசி ஓவரில் ஷேன் வார்ன்தான் இதுபோன்ற மாயாஜாலங்களை நிகழ்த்துவார். இல்லாத ஒன்றை இருப்பது போல பேட்டரை நம்பவைத்து, எதிர்பாராத ஒன்றை செய்து விக்கெட் எடுப்பது அவருடைய பாணி. ஜெய்ஸ்வாலை லெக் சைடில் பவுண்டரி லைனுக்கு நகர்த்தி, பவுன்சர் போடப் போவதாக போக்கு காண்பித்து, யார்க்கரில் ஆளை காலிசெய்தார்.

ஆட்ட நேர இறுதியில் விக்கெட்டை இழந்தாலும், இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் என்றே சொல்ல வேண்டும். இன்னும் 324 ரன்கள் தேவை என்கிற நிலையில், நான்காவது நாளில் இங்கிலாந்து அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்று தேவைப்படுகிறது. ஹெடிங்லி டெஸ்டில் 371 ரன்கள் இலக்கை அநாயசமாக விரட்டிய இங்கிலாந்து அணி, ஓவலிலும் அதை நிகழ்த்திக் காட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்து அணி, இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி எட்டும்பட்சத்தில், அது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேஸாக அமையும்.

2021–2022 தொடரில் இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் 378 ரன்களை சேஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ் பேட் செய்ய களமிறங்க 99 சதவிகிதம் வாய்ப்பில்லாத நிலையில், இந்திய அணி டெஸ்டை வென்று தொடரை சமன்செய்ய 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆட்டத்தின் முடிவு எப்படியும் நான்காவது நாளிலேயே தெரிந்துவிட அதிக வாய்ப்புள்ளது. ஒன்று இந்தியா வென்று தொடரை சமன் செய்யும். அல்லது இங்கிலாந்து வென்று 3–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். டிராவுக்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c30zd27z71po

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வரலாறு எழுதிய ஜடேஜா - 23 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சகல துறை துடுப்பாட்ட வீரர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இமாலய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் 6 ஆம் இலக்கத்தில் அல்லது அதற்குக் கீழான துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா தன்வசப்படுத்தியுள்ளார்.

இதன்படி அவர் குறித்த தொடரில் 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 5 அரை சதங்களும், ஒரு சதமும் உள்ளடங்கும்.

அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்

முன்னதாக விவிஎஸ் லக்ஷ்மன் கடந்த 2002 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 474 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது.

Sir Ravindra Jadeja

குறித்த சாதனையை 23 ஆண்டுகளின் பின்னர் ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்

அத்துடன் SENA டெஸ்டில் 6 வது வரிசையில் களமிறங்கி இரண்டாவது சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/indian-cricketer-jadeja-break-world-record-1754192102?itm_source=parsely-top

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேப்டனாக தடுமாறும் கில்: ஆதிக்கம் செலுத்திய இந்தியா வெகுமதியை தவறவிடக் காரணமான தவறுகள்

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சிராஜ், ஜோ ரூட் - ஹாரி புரூக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்தின் ஜோ ரூட் - ஹாரி புரூக் இணை

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 ஆகஸ்ட் 2025, 02:01 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் இதுவரை இந்தியா 31 செஷன்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், 20 செஷன்களை மட்டும் வெற்றி கொண்ட இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா சிறப்பான கிரிக்கெட் விளையாடியும் அதற்கான வெகுமதியை பெற முடியாததற்கு முக்கிய தருணங்களில் செய்யும் தவறுகளே காரணம். ஓவல் டெஸ்டிலும் அப்படிப்பட்ட சில தவறுகள்தான் ஆட்டத்தை ஐந்தாம் நாள் வரை கொண்டுசென்றுள்ளன.

வெற்றிக்கு 324 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை டக்கெட்டும் போப்பும் தொடர்ந்தனர். மேகமூட்டத்தையும் ஈரப்பதத்தையும் பயன்படுத்திக் கொண்டு, சிராஜும் ஆகாஷ் தீப்பும் நல்ல ரிதத்தில் பந்துவீசினர். குறிப்பாக டக்கெட்டுக்கு எளிதாக பவுண்டரிகள் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தனர்.

எதிர்பார்த்த வேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை என்ற அழுத்தத்தில், பிரசித் கிருஷ்ணாவின் முழு நீளப் பந்தை கவர் டிரைவ் விளையாட முயன்று, இரண்டாவது ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதிரடி தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், இன்னிங்ஸை கட்டியெழுப்ப வேண்டிய சுமை போப், ரூட் ஆகியோரின் தலையில் இறங்கியது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய போப், அடுத்த ஓவரிலேயே சிராஜின் வோபுள் பந்துக்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுக்க வோபுள் சீம் (wobble seam) பந்துக்கு நிறைய விக்கெட்டுகள் விழுவதை பார்த்து வருகிறோம்.

வோபுள் சீம் பந்துவீச்சு என்பது பந்தை நேராக வைத்து, தையலை தளர்வாக பிடித்து வீசும் பாணிக்கு பெயர். வோபுள் சீம் (Wobble Seam) பந்தை இரண்டு விதமாக வீசலாம். தையலை (seam) வழக்கத்தைக் காட்டிலும் தளர்வாகப் பிடித்து வீசுவது ஒருமுறை. விரல்களை தையலின் மேல் அகலப் படரவிட்டுக் கொண்டும் வீசலாம். காற்றில் ஊசலாடியபடி பயணிக்கும் பந்தின் தையல் ஆடுகளத்தில் எந்தப் பக்கம் விழுகிறதோ அந்தப் பக்கம் பந்து திரும்பும். (seam).

இதிலுள்ள சுவாரஸ்யமே தையல் எந்தப் பக்கத்தைப் பார்த்து விழுமென்பது பேட்டருக்கு மட்டுமில்லாமல் பந்து வீச்சாளருக்கும் தெரியாது என்பதுதான். இந்த எதிர்பாராத் தன்மைதான் வழக்கமான ஸ்விங் மற்றும் சீம் பந்துவீச்சில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சிராஜ், ஜோ ரூட் - ஹாரி புரூக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாரி புரூக்

நெருக்கடிக்கு உள்ளாக்கிய புரூக்

106 ரன்களுக்கு 3 விக்கெட்களை தொலைத்த நிலையில், பாஸ்பால் பாணியை கைவிட்டு, அடக்க ஒடுக்கமாக ரூட்–புரூக் ஜோடி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அழுத்தமான சமயங்களில் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பாஸ்பால் வரையறையின்படி, இந்திய பந்துவீச்சாளர்களை புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.

முன்னும் பின்னும் நகர்ந்து விளையாடி, அவர்களின் லைன் அண்ட் லெந்த்தை சிதைத்ததோடு உளவியல் ரீதியாகவும் இந்திய பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தார்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சிராஜ், ஜோ ரூட் - ஹாரி புரூக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹாரி புரூக் அடித்த பந்தை கேட்ச் பிடித்த முகமது சிராஜ் தவறுதலாக எல்லைக் கோட்டை மிதித்துவிட்டதால் நடுவரால் 6 ரன்கள் கொடுக்கப்பட்டன.

19 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் தவறவிட, அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட புரூக் சதத்தில்தான் போய் நின்றார். கடந்த 70 ஆண்டுகளில் குறைந்த டெஸ்ட்களில் 10 சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் தலைசிறந்த பேட்டரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் பேட்டரும் எவ்வித பதற்றமும் இன்றி, வெற்றி இலக்கை நோக்கி வீறுநடை போட்டனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது வேகப்பந்து வீச்சாளர்களின் வேலைப்பளுவை அதிகரித்ததால் லைன் அண்ட் லெந்த்தில் அவர்கள் தவறு செய்தனர். களத்தடுப்பில் தாக்குதல் பாணியா, தற்காப்பு பாணியா என்பதை முடிவுசெய்ய முடியாமல் கில் தடுமாறியதை பார்க்க முடிந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் களைப்பில் தவித்த போதும் சுழற்பந்து வீச்சாளர்களை தாமதமாக கொண்டுவந்தது ஏன் என்பது சுத்தமாக விளங்கவில்லை. முந்தைய இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணாவுடனான மோதலால் கவனத்தை தொலைத்த ரூட், ஒன்றிரண்டு ரன்களை ஓடுவதை மறந்து, பவுண்டரிகளை மட்டும் குறிவைத்து சொதப்பினார். ஆனால், இந்தமுறை வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார்.

இந்தியா - இங்கிலாந்து, சுப்மன் கில், சிராஜ், ஜோ ரூட் - ஹாரி புரூக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார்.

களத்தில் இந்திய அணியினரின் உடல்மொழி, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. குல்தீப் அணியில் இருந்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரி, இந்தியாவுக்கு சாதகமாக கூட அமைந்திருக்கலாம். ஆகாஷ் தீப் பந்துகளில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் விளாசிய புரூக் , இறங்கிவந்து அடிக்கப் பார்த்து, பேட்டை காற்றில் பறக்கவிட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்தியாவுக்கு திறந்த கதவு

ரூட்–புரூக் இணை, நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்களை குவித்து ஆட்டத்தை முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டது. களமிறங்கியது முதலே பொறுப்பில்லாமல் கண்ணை மூடிக் கொண்டு பேட்டை சுழற்றிக் கொண்டிருந்த பெத்தேல், 5 ரன்னில் பிரசித் பந்தில் போல்டாகி சென்றார்.

இங்கிலாந்து அணி இலக்கை சிரமமின்றி நெருங்கி கொண்டிருந்த போது , பிரசித் கிருஷ்ணாவின் ஒரு அற்புதமான பேக் ஆஃப் எ லெந்த் (back of a length)பந்தின் மூலம் ரூட் (105) விக்கெட்டை கைப்பற்றினார். ரூட் விக்கெட்டுக்கு பிறகு, ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது.

ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் களத்தில் இருந்தபோது, மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. எப்படியும் நான்காம் நாளில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐந்தாம் நாளை நோக்கி ஆட்டத்தை இயற்கை நகர்த்தியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிசயத்தை நிகழ்ந்தினால் ஒழிய, இந்தியாவால் இந்த ஆட்டத்தில் தலையெடுக்க முடியாது. 9 பந்துகளில் பிரசித் கிருஷ்ணா ரூட், பெத்தேல் விக்கெட்களை தூக்கியிருப்பது இந்தியாவுக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இன்று 3 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து கிடைக்குமென கூறப்படும் நிலையில், புதிய பந்தில் விக்கெட் எடுக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும்படி சென்று கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடர், கடைசி நாளில் என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce9382en8njo

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2025 at 04:38, நியாயம் said:

இந்தியா தொடரில் தோற்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது போல் தோன்றுகின்றதே.

இப்போ இந்தியா தொடரை சமனாக்க கூடிய நிலையில் உள்ளது போல் தெரிகிறது. எல்லாம் இன்று காலநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துத்தான். நல்ல வெய்யில் அடித்தால் இங்கிலாந்து வெல்லும். மழை மூட்டம் என்றால் இந்தியா வெல்ல வாய்ப்புக்கூட! இப்போ இருக்கும் இரு ஆட்டக்காரர்களுக்கும் பந்து மட்டையில் படுவதைவிட காலில்தான் படுகிறது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RESULT

5th Test, The Oval, July 31 - August 04, 2025, India tour of England

India FlagIndia224 & 396

England FlagEngland(T:374) 247 & 367

India won by 6 runs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 - 2 என சமப்படுத்தியது

Published By: Digital Desk 3

04 Aug, 2025 | 05:19 PM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை இந்தியா ஈட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2 - 2 என சமப்படுத்திக்கொண்டது.

கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ஓட்டங்களும் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்களும் தேவைப்பட்டதால் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலை உருவானது.

கடைசி நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மேலதிக 28 ஓட்டங்களுக்கு கடைசி நான்கு விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

முதலாம் நாளன்று இடது தோற்பட்டையில் கடும் உபாதைக்குள்ளான கிறிஸ் வோக்ஸ் அடுத்த 3 நாட்களும் விளையாடாமல் ஓய்வுபெற்று வந்தார்.

ஆனால், இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 17 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டதால் கிறிஸ் வோக்ஸ் இடது கையில் பண்டேஜ் போட்டவாறு ஒற்றைக் கையுடன் துடுப்பெடுத்தாட 11ஆவது வீரராக களம் புகுந்தார்.

கிறிஸ் வோக்ஸை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு 13 பந்துகளை எதிர்கொண்ட கஸ் அட்கின்ஸன் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது  மொஹம்மத் சிராஜினால் போல்ட் செய்யப்பட இந்தியா 6 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

லீட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களாலும் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.

பேர்மிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.

போட்டியில் இரண்டு நாட்கள் முழுமையாக இருந்தபோது 3ஆம் நாள் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நான்காம் நாளன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்ததுடன் நான்காம் நாளன்றே வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்தின் அடுத்த 3 விக்கெட்களை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதால் போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை உருவானது.

இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் அது இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.

ஹெரி ப்றூக், ஜோ ரூட் ஆகிய இருவரும் மிகத் திறமையாக இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு நான்காம் நாளன்று குவித்த சதங்கள் இறுதியில் வீண் போயின.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களையும் இங்கிலாந்து 247 ஓட்டங்களையும் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களையும் பெற்றன.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 224 (கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38, வொஷிங்டன் சுந்தர் 26, கஸ் அட்கின்சன் 33 - 5 விக்., ஜொஷ் டங் 57 - 3 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஸக் க்ரோவ்லி 64, ஹெரி ப்றூக் 53, பென் டக்கெட் 43, ஜோ ரூட் 29, ப்ரசித் கிரிஷ்ணா 62 - 4 விக்., மொஹம்மத் சிராஜ் 86 - 4 விக்.)

இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 396 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவிந்த்ர ஜடேஜா 53, வொஷிங்டன் சுந்தர் 53, த்ருவ் ஜுரெல் 34, ஜொஷ் டங் 125 - 5 விக்., கஸ் அட்கின்சன் 127 - 3 விக்., ஜெமி ஓவர்ட்டன் 98 - 2 விக்.)

இங்கிலாந்து வெற்றி இலக்கு 374 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 367  (ஹெரி ப்றூக் 118, ஜோ ரூட் 103, பென் டக்கெட் 54,  மொஹமத் சிராஜ் 104 - 5 விக். , ப்ரதிஷ் கிரிஷ்ணா 126 - 4 விக்., )

ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ் (86 - 4 விக்., 104 - 5 விக்.)

இந்தியாவுக்கான தொடர்நாயகன்: ஷுப்மான் கில் ( 4 சதங்களுடன் 754 ஓட்டங்கள்)

இங்கிலாந்துக்கான தொடர்நாயகன்: ஹெரி ப்றூக் (2 சதங்களுடன் 481 ஓட்டங்கள், 14 பிடிகள்)

https://www.virakesari.lk/article/221803

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

இப்போ இந்தியா தொடரை சமனாக்க கூடிய நிலையில் உள்ளது போல் தெரிகிறது. எல்லாம் இன்று காலநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துத்தான். நல்ல வெய்யில் அடித்தால் இங்கிலாந்து வெல்லும். மழை மூட்டம் என்றால் இந்தியா வெல்ல வாய்ப்புக்கூட! இப்போ இருக்கும் இரு ஆட்டக்காரர்களுக்கும் பந்து மட்டையில் படுவதைவிட காலில்தான் படுகிறது!!

இந்திய அணி தொடரையே வென்றது போன்ற மகிழ்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறும் படத்தை பார்த்தேன். மிகவும் சிரமப்பட்டு உள்ளார்கள் போலும். என்னதான் ஐபில் ஆட்டத்தை மாத கணக்கில் விளையாடினாலும் இந்திய மண்ணிற்கு வெளியில் போட்டி என வந்தால் இவர்களிற்கு போராட்டம் தான்.

ஐபிஎல் இல் அதிக ஓட்டங்கள் குவித்த சாய் சுதர்சனால் சோபிக்க முடியவில்லை. இவர் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாடவே தகுதியானவர் போலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து பேட்டிங் லைனை காலி செய்த சிராஜின் வியூகம் : கடைசி நேரத்தில் வகுத்த திட்டம் என்ன?

முகமது சிராஜ், ஓவல் டெஸ்ட், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார். எஸ்

  • பிபிசி தமிழுக்காக

  • 22 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு டெஸ்ட் தொடர் வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால், அதன் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டும் போதாது; முடிவும் பொருத்தமாக அமைய வேண்டும்.

2 ரன்களில் ஆஸ்திரேலிய அணி தோற்ற, எட்ஜ்பஸ்டன் டெஸ்டையும் ஆஷஸ் 2005 தொடரையும் இன்னமும் கிரிக்கெட் உலகம் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது.

அதுபோல ஒன்றாக ஓவல் டெஸ்டும் ; ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரும், கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத டெஸ்ட் தொடராக மாறிவிட்டது. டெஸ்டை வென்று, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்ற 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் ஐந்தாம் நாளில் இன்னிங்ஸை தொடர்ந்தனர்.

தூண்டில் போட்டு தூக்கிய சிராஜ்

முகமது சிராஜ், ஓவல் டெஸ்ட், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி தொடரை 2-2 என்று சமன்செய்ய வேண்டுமானால், 4 விக்கெட்டுகளை கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது.

ஐந்தாம் நாளின் முதலிரு பந்துகளில் ஓவர்டன் பவுண்டரிகளை அடிக்க, இந்திய ரசிகர்களின் அடிவயிறு கலக்கத்தை சந்தித்தது. இந்த தொடரில், இந்திய அணி எப்போதெல்லாம் நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் கைகொடுத்து தூக்கிவிட்ட சிராஜ், ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தை கையிலெடுத்தார்.

முதல் இரண்டு பந்துகளை பேட்டில் தொடக்கூட முடியாத அதிரடி விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்துக்கு, மேலும் வைடாக வீசி ரிஸ்க் எடுத்து தூண்டில் போட்டார் சிராஜ். தனது பொறுமையை சோதிப்பது இந்திய அணியின் வியூகம் என்பதை உணராத ஸ்மித், மீண்டும் ஒருமுறை இலக்கின்றி பேட்டை வீசி, விக்கெட் கீப்பர் ஜுரெலிடம் கேட்ச்சை மட்டுமல்ல, ஆட்டத்தையே தூக்கிக் கொடுத்தார்.

டெஸ்ட் தொடரின் சர்ச்சையான தருணங்கள்

கையில் கட்டுடன் களமிறங்கிய வோக்ஸ்

முகமது சிராஜ், ஓவல் டெஸ்ட், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Shaun Botterill/Getty Images

கருமேகங்கள் சூழ்ந்த போதும், செயற்கை விளக்குகளை பய்ன்படுத்தாமல் இருந்தது ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. புதிய பந்தை விட பழைய பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்யும் சிராஜ், தனது அடுத்த ஓவரில், அபாயகரமாக திகழ்ந்த ஓவர்டனின் கால்காப்பை தாக்கி, LBW முறையில் ஆட்டமிழக்க வைத்தார்.

லெக் சைடில் சென்றது போல கோணம் அமைந்ததால், ஏதொவொரு நம்பிக்கையில் டிஆர்எஸ் மேல்முறையீட்டுக்கு ஓவர்டன் சென்றார்; குருட்டு நம்பிக்கையில் கூட சென்றிருக்கலாம். ஓவர்டனுக்கும் இங்கிலாந்துக்கும் வேறு என்ன வழி இருந்தது? LBW உறுதிசெய்யப்பட, ஓவல் மைதானத்தின் குளிரையும் மீறி ஆட்டம் சூடுபிடித்தது.

புதிய பந்தை எடுத்தவுடன் பிரசித்தும், சிராஜும் கட்டுக்கோப்பாக பந்துவிசீனர். ரன்களை வாரி இறைப்பதற்கு பெயர் போன பிரசித் கிருஷ்ணா, பதற்றத்தில் கண்டதையும் முயற்சி செய்யாமல், சரியான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார்.

புதிய பந்து எடுத்து மூன்றாவது ஓவரிலேயே, ஒன்பதாவது விக்கெட்டையும் வீழ்த்தி கையில் கட்டுடன் இருக்கும் வோக்ஸை பேட் அனுப்பியாக வேண்டும் என்று இங்கிலாந்து அணிக்கு செக் வைத்தார்.

சிராஜின் செட்டப் மாஸ்டர் கிளாஸ்

டங் விக்கெட்டை அவர் எடுத்த விதம் செட்-அப் மாஸ்டர்கிளாஸ் என்றே சொல்லவேண்டும். தேர்ட் மேன் திசையில் இருந்த ஃபீல்டரை பவுண்டரி லைனுக்கு அனுப்பி, அடுத்து வருவது ஒரு பவுன்சர்தான் என்று டங்கை நம்பவைத்தார்.

அதேநேரம் யார்க்கர் லெங்த்தில் வீச முற்பட்டாலும், ஆக்சனில் கிடைக்கும் சமிக்ஞையை கொண்டு பேட்டர் சுதாகரித்து விடுவார் என்று, முழு நீளத்தில் கால் பக்கம் வேகமாக வீசி, டங்கை போல்டாக்கினார்.

வரலாற்று கடமையென நினைத்து கையில் கட்டுடன் வோக்ஸ் களமிறங்கியதும், வேறு வழியில்லை என்று எதிர்முனையில் இருந்த அட்கின்சன், அடித்து ஆட தலைப்பட்டார். சிராஜ் வீசிய முழு நீளப்பந்தை அபாயம் என்று தெரிந்தும் கவ் கார்னர் திசையில் தூக்கியடித்தார்.

எல்லைக் கோட்டில் ஆகாஷ் தீப்பின் முயற்சி பலனளிக்காமல் போகவே, அணியின் ஸ்கோர் 363 ஆக உயர்ந்தது. சரியாக கடைசி பந்தில் சிங்கிள் ஓடி, அடுத்த ஓவர் ஸ்ட்ரைக்கை அட்கின்சன் தக்கவைத்து கொண்டார். வியூகத்து மாறாக நடந்துகொண்டதால் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெலை சிராஜ் கடிந்துகொண்டார்.

கடைசி விக்கெட்டுக்கான ரிஸ்க்

முகமது சிராஜ், ஓவல் டெஸ்ட், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

ரன் ஓடுகையில், கடும் வலியையும் பொருட்படுத்தாமல் வோக்ஸ் ஓடியது, டெஸ்ட் கிரிக்கெட் மீதும் அணியின் நலன் மீது அவருக்கிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தியது.

லெக் சைடில் பவுண்டரி குறைவான தூரம் என்பதால், பிரசித் கிருஷ்ணா ஓவரை குறிவைத்து தாக்க முற்பட்டார் அட்கின்சன். ஆனால், எவ்வளவு தான் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றியும், பெரிய ஷாட் எதையும் அட்கின்சனால் அடிக்க முடியவில்லை.

கடைசி பந்தில் வோக்ஸுக்கு சிரமம் ஏறப்பட்டு விடாதபடி, மிட் ஆஃப் திசையில் இந்தமுறையும் சிங்கிள் எடுத்துக்கொண்டார். இங்கிலாந்து வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 'செய் அல்லது செத்துமடி' என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட சிராஜ், பெரிய ரிஸ்க் எடுத்து, குறை உயர ஃபுல்டாஸ் பந்தை வீசினார்.

லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்ட அட்கின்சன் முயற்சி தோல்வியடையவே, பந்து ஆஃப் ஸ்டம்பை பதம்பார்த்தது.

தொடரின் முந்தைய டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன?

ஆட்ட நாயகனான சிராஜ்முகமது சிராஜ், ஓவல் டெஸ்ட், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 9 விக்கெட்களை அள்ளிய சிராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தொடர் நாயகன் விருதை 754 ரன்கள் குவித்த கில்லும் 481 ரன்கள் எடுத்த புரூக்கும் பெற்றுக்கொண்டனர். கோலி, ரோஹித், அஸ்வின் என பெரிய தலைகள் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற கில், இங்கிலாந்து மண்ணில் பேட்டராக மட்டுமின்றி கேப்டனாகவும் சாதித்துள்ளார்.

இந்திய அணி அணித் தேர்வு, வியூக வகுப்பில் நிறைய தவறுகளை செய்தாலும், இந்த தொடர் முழுக்கவே கடைசி வரை போராடிப் பார்ப்பது என்ற விடாப்பிடித்தனதுடன் விளையாடினர். இந்திய கிரிக்கெட்டின் உச்சபட்ச தருணங்களில் ஒன்றாக ஓவல் வெற்றி கொண்டாடப்படும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp37y2x93veo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டிக்கு போட்டி மாறிய கணிப்புகள்: சமத்துவமில்லாத தொடரில் சாதித்துக் காட்டிய இந்திய இளம்படை

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார் எஸ்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நவீன இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2000-2001 ஆஸ்திரேலிய தொடருக்கும் 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கும் முக்கிய இடமுண்டு. இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் தொடர் வெற்றிகளில் ஒன்றாக மதிப்பிடப்படும் அவை இரண்டுக்கும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. மோசமான தோல்விக்குப் பிறகு ஓர் அணியாக ஒன்றுதிரண்டு, அசாத்தியத்தை களத்தில் நிகழ்த்தி, கடுமையாக போராடி வெற்றியை ஈட்டியிருப்பார்கள்.

2000-2001 தொடரில் லக்‌ஷ்மணின் இன்னிங்ஸ், 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அஸ்வின் - விஹாரி போராட்டம் போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவ்விரு தொடர்களுக்கும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

அவை இரண்டும் பலவீனமான நிலையில் இருந்து, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி மீண்டெழுந்து வந்த கதைகள். ஆனால், இந்த தொடரில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருந்தன.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மாறிய கணிப்புகள்

முதலில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில், கோலி, ரோஹித் இல்லாத கில் தலைமையிலான இளம் இந்திய அணியால் எதிர்கொள்ள முடியுமா என்று நிறைய சந்தேகங்கள் இருந்தன. பும்ராவின் உடற்தகுதி குறித்த தகவல்களும், 3 டெஸ்ட்களில் மட்டுமே அவர் விளையாடுவார் என்ற அறிவிப்பும், இந்திய அணி மீது பெரிதாக நம்பிக்கை வைத்துவிட வேண்டாம் என்பதையே ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லின.

பழைய பலத்துடன் இல்லாவிட்டாலும், ஸ்டோக்ஸின் தலைமைத்துவமும் போராட்ட குணமும் இங்கிலாந்தை எளிதாக வெற்றிக் கோட்டை தாண்ட வைக்கும் என்றே பெரும்பாலான கணிப்புகள் இருந்தன. தினேஷ் கார்த்திக்கையும் (2-2) மைக்கேல் கிளார்க்கையும் (2-3) தவிர எந்தவொரு கிரிக்கெட் நிருபணரும் இந்தியா வெல்லும் என்று ஆரூடம் சொல்லவில்லை. டேவிட் லாய்ட், கிராம் ஸ்வான், ஜாஸ் பட்லர் போன்றவர்கள் இந்திய அணி ஸ்டோக்ஸின் இங்கிலாந்திடம் எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடையும் என்றே கணித்தனர்.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பர்மிங்காம் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணி தொடர்பான கதையாடல்கள் வேறொரு தொனிக்கு மாறின. இந்திய அணியின் தற்காப்பான அணித் தேர்வுகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. உலகின் தலைசிறந்த 'சைனாமேன்' சுழற்பந்து வீச்சாளராக மதிப்பிடப்படும் குல்தீப் யாதவை பயன்படுத்தாதது சரியல்ல; 10-20 ரன்களுக்கு ஆசைப்பட்டு, மேட்ச் வின்னர்களை புறக்கணிப்பது நல்லதல்ல என விமர்சன கணைகள் பறந்தன.

இந்திய அணி தொடரை வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கே தெரியாமல், இந்திய அணியின் வலிமையை ஏற்றுக்கொள்ள தொடங்கினர். இந்திய அணி வலிமையான அணிதான்; அதன் வியூக வகுப்பில்தான் பிரச்னை என்பதாக ஒரு பிம்பம் உருவானது.

லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி ஸ்டோக்ஸின் படையிடம் மண்டியிடாமல், கடைசி வரை உயிரைக் கொடுத்து விளையாடியும், துரதிருஷ்டவசமாக தோற்ற பிறகு புதுவிதமான யோசனைகளும் ஆலோசனைகளும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டன. கடைசி விக்கெட்டான சிராஜ் களமிறங்கியவுடனே, ஜடேஜா அடித்து விளையாடி இருக்க வேண்டும். 2019 ஹெடிங்லி டெஸ்டில் ஜேக் லீச்சை வைத்துகொண்டு ஸ்டோக்ஸ் நிகழ்த்தியதை சுட்டிக்காட்டி, ஜடேஜாவின் உத்திகள் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டன.

அனில் கும்ப்ளே உள்ளிட்ட இந்திய ஜாம்பவான்களே, ஜடேஜா மீது மென்மையான கண்டிப்பை வெளிப்படுத்தினர். இன்னும் ஒருசிலர், இந்திய அணி மனத்திட்ப ரீதியில் (Temperament) மிகவும் பலவீனமாக உள்ளது. இது காலங்காலமாக தொடர்ந்து வரும் பிரச்னை, இதை நிவர்த்தி செய்வதற்கு தகுதியான விளையாட்டு உளவியலாளர்களை இந்திய அணி நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதின.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

'எதிரிக்கு எதிரி நண்பன்'

இந்திய அணியின் மீதான விமர்சனங்களின் பரிணாம வளர்ச்சியை கவனியுங்கள். முதலில் இந்திய அணி தாக்குப்பிடிக்காது என்றார்கள்; அடுத்ததாக, கம்பீர் தலைமையிலான வியூக வகுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றனர். அடுத்த கட்டமாக, மனத்திட்பத்தில் உள்ள பிரச்னைதான் காரணம் என்றனர்.

மான்செஸ்டர் டெஸ்டுக்கு பிறகுதான் இந்திய அணி மீதான கதையாடல்களில் ஒரு மாற்றம் தென்பட்டது. சொல்லப் போனால், இங்கிலாந்து vs இந்தியா என்று ஆங்கில ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட தொடர், அபோதுதான் இந்தியா vs இங்கிலாந்து தொடராக நியாயமான அங்கீகாரத்தை பெற்றது. கைகொடுக்காத விவகாரம் (Handshake scandal) இங்கிலாந்து கிரிக்கெட்டின் இரட்டை நிலைப்பாட்டையும் போலித்தனத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கோதாவில், ஆஸ்திரேலிய ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் ஜடேஜா – சுந்தர் வீரதிர இன்னிங்ஸுக்கு புகழாரம் சூட்டியதோடு, ஹாரி புரூக்கை வைத்து பந்துவீச செய்து இந்திய அணியை கொச்சைப்படுத்திய ஸ்டொக்ஸுக்கு கண்டனமும் தெரிவித்தன. ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் உண்மையில் இந்த இடத்திலேயே இங்கிலாந்தின் தோல்வி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. கிரிக்கெட் மைதானத்தில் தோற்பதற்கு முன்பாகவே தார்மீக ரீதியாக (Moral ground) ஸ்டோக்ஸ் அணி தோல்வியடைந்துவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சமத்துவமில்லாத தொடர்

எப்படி இங்கிலாந்து vs இந்தியா என்று வர்ணிக்கப்பட்ட தொடர் பிறகு இந்தியா vs இங்கிலாந்து என்று மாறியதோ, அதேபோல பேட்டிங் தொடர் என்று வர்ணிக்கும் அளவுக்கு, எக்கச்சக்கமான ரன்களும் சதங்களும் குவிக்கப்பட்ட தொடர். கடைசி ஒரு மணி நேரத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் விடாப்பிடித்தனமான போராட்டத்தால் பந்துவீச்சு தொடராக உருமாற்றம் அடைந்தது.

பிபிசி ஸ்போர்ட்ஸில் பிரசுரித்திருந்த ஒரு புள்ளிவிவரம் இந்த தொடரில் பேட்டர்கள் எப்படி ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதையும் கிரிக்கெட் ஏன் இன்னும் சமத்துவம் இல்லாத (பேட்டர் vs பவுலர்) இடமாகவே தொடர்கிறது என்பதையும் வெளிக்காட்டியது.

ஒட்டுமொத்தமாக 5 டெஸ்ட்களிலும் சேர்த்து 7187 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இத்தனை ரன்கள் எடுக்கப்படுவது இதுதான் முதல்முறை. 21 சதங்கள் விளாசப்பட்டு, 50 அரைசதங்கள் எடுக்கப்பட்டு இதற்கு முந்தைய சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் கேப்டன் கில் உள்பட 3 வீரர்கள் ஐநூறு ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சிகரம் தொட்ட சிராஜ்

கடைசி விக்கெட்டாக அட்கின்சன் ஆஃப் ஸ்டம்பை சிராஜ் தகர்த்ததோடு சேர்த்து, 45 முறை பவுல்டு முறையில் விக்கெட் கிடைத்துள்ளன. பும்ரா 3 டெஸ்ட்கள் மட்டுமே விளையாடிய இந்த தொடரில், அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்திய சிராஜ், 5 டெஸ்ட்களிலும் ஓய்வின்றி விளையாடி 1,113 பந்துகள் வீசி, 23 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

1981 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயான் போத்தமின் பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் விதமாக 'போத்தம் ஆஷஸ்' என்பார்கள். அதுபோல, 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் வரலாற்றில் 'சிராஜ் தொடர்' என்றே எழுதப்படும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg7j07mp89zo

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு டொகுமென்ரரியாக எதிர்காலத்தில் காட்டுவார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் சுவாரசியம் குன்றாது.

நேற்று வேலைக்குப் போவதா, ஓவல் மைதானத்திற்குப் போவதா என்று குழம்பி கடைசியில் வேலைக்கே போயிருந்தேன். ஆனால் 11 இலிருந்து 12 வரை கிரிக்கெட்டைப் பார்த்துக்கொண்டிருந்தோம்😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓவல் டெஸ்டில் ரசிகர்கள் கண்ணிமைக்க மறந்த கடைசி 57 நிமிடங்கள்

ஓவல் டெஸ்டில் ரசிகர்கள் கண்ணிமைக்க மறந்த கடைசி 57 நிமிடங்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஸ்டீபன் ஷெமில்ட்

  • தலைமை கிரிக்கெட் நிருபர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஓவல் மைதானத்தில் உள்ள ஜேஎம் ஃபின் ஸ்டாண்டின் உள்ளே, பெவிலியனுக்கு எதிரே, டெஸ்ட் போட்டி சிறப்பு கமெண்ட்ரி அறைக்கு செல்லும் ஒரு படிக்கட்டு உள்ளது. இது ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரபரப்பான ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மைதானம் காலியாகிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த படிக்கட்டில் ஒரு இடது கால் ஷூ, உள்ளாடை, வலது கால் ஷூ ஒன்றும் இருந்தன.

அவற்றின் அளவை வைத்து பார்க்கும்போது அவை ஒரு ஆணுடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தங்கள் உடைமைகளை அவர் எவ்வாறு தவறவிட்டார், அவற்றை இழந்ததை எப்போது உணர்ந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், யாரோ ஒருவர் இந்த புகழ்பெற்ற மைதானத்தில் இருந்து செல்லும்போது, காலணிகள் மற்றும் உள்ளாடைகள் இல்லாமல் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இது, திங்கட்கிழமை காலை ஏற்கனவே நிகழ்ந்த உற்சாகமான களேபரத்துடன் முற்றிலும் பொருந்தியிருக்கும்.

அங்கு, நீங்கள் பார்க்க விரும்பும் மிக தீவிரமான, பரபரப்பான உணர்ச்சிகரமான விளையாட்டு 57 நிமிடங்கள் அரங்கேறியிருந்தது.

இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்த பரபரப்பான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி நாளன்று, ஒரு ஒற்றைக் கை மனிதன் தெற்கு லண்டனின் 22 யார்டு புல்வெளியில் வலியுடன் ஓடுவதை பார்க்க முடிந்தது.

வாரத்தின் முதல் பணிநாளில் இங்கிலாந்தின் உற்பத்தித்திறன் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும், அல்லது மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் எத்தனை அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன என நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.

ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் மாலையில் ஆட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கும்போது, நிலைமை வித்தியாசமாக இருந்தது. மழை மற்றும் மங்கலான வெளிச்சம் காரணமாக வீரர்கள் டிரெசிங் ரூமிற்கு சென்றனர். பின்னர், மங்கலான மாலைப் பொழுது பளிச்சென மாறியபோதும், போட்டி மீண்டும் தொடரவில்லை.

ஞாயிறு மாலை நிகழ்வுகள் ஏற்படுத்திய எரிச்சல், திங்கள்கிழமை என்ன நடக்கும் என்ற ஆவலாக உருமாறியது. முப்பத்தைந்து ரன்கள் அல்லது நான்கு விக்கெட்டுகள்.

ஓவல் மைதானத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்திருந்தது, ஆனால் போட்டியை காண வருவதற்கு யாரேனும் அக்கறை காட்டுவார்களா? என்ற சந்தேகமும் இருந்தது.

ஆனால் ரசிகர்கள் வந்தார்கள், வந்து வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தை தொடர்ந்து சத்தத்தாலும், பரபரப்பான உற்சாகத்தாலும் நிரப்பினார்கள். 2005 ஆஷஸ் கிளாசிக் போட்டியில் இரண்டே பந்துகளுக்காக எட்ஜ்பாஸ்டன் மைதானம் நிரம்பியிருந்ததை இது நினைவூட்டியது.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

அன்று போலவே, இங்கு வந்தவர்களுக்கும் அற்புதமான விருந்து காத்திருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவை இரண்டு ரன்களில் இங்கிலாந்து வீழ்த்தியதற்குப் பிறகு, இந்தியாவின் இந்த ஆறு ரன்கள் வெற்றிதான் இந்த நாட்டில் இவ்வளவு நெருக்கமான வெற்றியாகும்.

போட்டித்தொடரின் இறுதி நாளன்று ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இந்திய அணி விளையாடத் தொடங்கியது, அங்கு, பாதுகாவலர்கள், சமையல்காரர், பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவருமே அந்தக் கூட்டத்தில் இருந்ததாகத் தோன்றியது.

பொருத்தமாக, இது சர்ரே அணிக்கு எதிராக எதிராக இங்கிலாந்து விளையாடுவது போல இருந்தது. ஜேமி ஓவர்டன் முதல் இரண்டு பந்துகளிலும் நான்கு ரன்கள் எடுத்தபோது, இங்கிலாந்துக்கு தேவையான ரன்களில் கால் பகுதியை கிட்டத்தட்ட எட்டியது. அதுதான் அன்று அவர்களுக்கு கிடைத்த சிறந்த தருணம்.

தனது முதல் ஐந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த ஜேமி ஸ்மித், சற்று சோர்வாக தெரிந்தார். அவர் இரண்டு பந்துகளை வீணாக்கினார், மூன்றாவது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஆட்டமிழந்தார். பாரத் ஆர்மியின் மேளம் "வி வில் ராக் யூ" இசையின் தாளத்தை அடித்து, அதிர வைத்தது. ஓவர்டன் காலில் பந்து பட்டபோது, நடுவர் குமார் தர்மசேனா, 2005-ல் ரூடி கோர்ட்ஸனின் மெதுவான விரல் அசைவை நினைவூட்டும் வகையில் தனது முடிவை அறிவித்தார்.

ஞாயிறு மாலை, வோக்ஸ் தனது முறிந்த தோள்பட்டையை கிரிக்கெட் வெள்ளை உடைகளுக்குள் திணித்துக்கொண்டு அரங்கிற்குள் வந்தார், இது நினைப்பதற்கே வலியைத் தருகிறது. டங்கின் ஸ்டம்புகள் பிரசித் கிருஷ்ணாவால் சிதறடிக்கப்பட்டபோது, பாதுகாப்பு பணியாளர்கள் ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து மைதானத்திற்கு விரைந்தனர்.

ஆனால், கிரிக்கெட்டில் மிகவும் நல்ல மனிதரான வோக்ஸ்தான் மிகவும் தைரியமானவர் என்பது அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது

வோக்ஸ் தனது இடது கையில், கடந்த ஆண்டு காலமான தனது தந்தை ரோஜரின் நினைவாக பச்சை குத்தியிருந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது.

கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களிலும் உலகக் கோப்பை வென்றவராகவும், ஆஷஸ் கோப்பையை வென்றவராகவும், இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த 'சீமர்'களில் ஒருவர் என்றும் கிரிக்கெட் சரித்திரத்தில் வோக்ஸ்க்கு சிறப்பான இடம் உண்டு.

அதிலும், தோள்பட்டை காயத்தால், ஒரு கையில் கட்டுப்போட்டிருந்த நிலையில், தனது அணியை காப்பாற்ற ஒற்றைக் கையால் பேட்டிங் செய்ய களமிறங்கிய மந்திரவாதி என்று கிரிக்கெட்டர் கிறிஸ் வோக்ஸ் போற்றப்படுவார்.

அடிபட்ட கையுடன் விக்கெட்டுகளுக்கு இடையில் நான்கு முறை ஓடுவது வோக்ஸுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கும் என்பதை அவர் ஓடும்போது, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் அவர் தோள்பட்டை நடுங்கியதை வைத்து உணரமுடிகிறது. நல்லவேளையாக, ஒற்றை கையுடன் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை அவருக்கு வரவில்லை.

ஸ்கோரை சமன் செய்து தொடரை வெல்லக்கூடிய சிக்ஸரை அடிக்க முயன்ற அட்கின்சன் லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்டார். அந்த முயற்சி தோல்வியடைந்து, ஆஃப் ஸ்டம்பை பந்து பதம்பார்த்துவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

இளம் இந்திய அணியில் தளராத மனம் கொண்ட முகமது சிராஜ், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது உத்வேகமான போர் குணத்தை எடுத்துச் செல்லும் திறன் சிராஜுக்கு இருந்தது.

இந்த டெஸ்டில் சிராஜ் பந்து வீசாமல் பெவிலியனில் இருந்த சந்தர்ப்பமே இருக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ராவின் நிழலில் விளையாடாதபோது, பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படும் சிராஜின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக்-ரேட் இரண்டும் சிறப்பாக இருக்கும்.

இந்தத் தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த இரு வெற்றிகளும் பும்ரா விளையாடாத போட்டிகளில் இருந்தே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது வருத்தத்தை அளித்தாலும், தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது நியாயமான முடிவாகும்.

அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவையோ அல்லது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் அடித்த சிக்ஸர்களில் ஏதேனும் ஒன்றையோ இங்கிலாந்து அணியினர் கேட்ச் செய்திருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது தொலைக்காட்சி தயாரிப்பு குழுவினரை பாடல் மூலம் வழிநடத்திய காட்சி, எந்த அணி இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொன்னது.

374 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்றது மிகவும் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி தவறவிட்டது துரதிருஷ்டவசமானது.

தற்போதைய இங்கிலாந்து அணிக்கு இது இறுதி உள்நாட்டு டெஸ்ட் போட்டியாக இருக்கும் வாய்ப்புகளும் தென்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து, முகமது சிராஜ், சுப்மன் கில், ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

மோசமான ஆஷஸ், கேப்டன் ஸ்டோக்ஸ் அல்லது பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அணியில் இருந்து விலகிச் செல்ல வழிவகுக்கலாம்.

வோக்ஸின் வீரம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும், இது, அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாக இருக்கலாம். மார்க் வுட்டுக்கு ஜனவரியில் 36 வயது. இங்கிலாந்தின் அடுத்த உள்நாட்டு டெஸ்ட் ஜூன் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் போட்டியின்போது சனிக்கிழமை காலை, இங்கிலாந்து பீல்டிங் செய்து, DRS மதிப்பாய்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தருணமும் இருந்தது. உரையாடலில் ஸ்மித், அட்கின்சன், சாக் கிராலி, ஜேக்கப் பெத்தேல், ஓலி போப் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இருந்தனர். அடுத்த முறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது இங்கிலாந்தின் மூத்த வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான ஒரு காட்சியாக இதைப் பார்க்கலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgkrgjl4754o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.