Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

23 MAY, 2025 | 02:39 PM

image

tamilguardian

67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து.

தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன.

1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன.

முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின. வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன..

அதன் பின்னர் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவின. கொழும்பில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். கொழும்பு வீதிகளில் அலைந்து திரிந்த சிங்கள காடையர்கள் தங்களை கடந்து செல்பவர்களால் சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியுமா என பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர்/கொல்லப்பட்டனர்.

அரசாங்கம் ஐந்து நாட்கள் காத்திருந்துவிட்டு அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது அரசியல் வாழ்க்கையை தீர்மானித்தது 1958ம் ஆண்டு இனக்கலவரம் என ஒருமுறை தெரிவித்திருந்தார். மார்ச் 1984 இல் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

'நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை இடம்பெற்ற 1958ம் ஆண்டு இனக்கலவரம் என் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது. சிங்கள இனவாதிகளால் எங்கள் மக்கள் எப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன்.

"எனது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த விதவைபெண் ஒருவரை ஒருமுறை நான் சந்தித்தேன், அவர் இனவெறியர்களின் படுகொலை குறித்து விபரித்தார். இனக்கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கொழும்பில் உள்ள அவரது வீட்டை தாக்கினார்கள். அவர்கள் கணவனை கொலை செய்தார்கள், வீட்டிற்கு தீ வைத்தார்கள். அவரும் அவருடைய பிள்ளைகளும் கடும் காயங்களுடன் தப்பினார்கள், அவரது உடலில் காணப்பட்ட காயங்களை பார்த்தவேளை நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்."

"சுடுதாரில் குழந்தைகளை வீசியது குறித்து நான் கேள்விப்பட்டேன். அவ்வாறான ஈவிரக்கமற்ற இதுபோன்ற கொடுமையான கதைகளைக் கேட்டபோது என் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி அமைப்பிலிருந்து என் மக்களை மீட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்" என விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார்.

எமர்ஜென்சி '58: சிலோன் இனக் கலவரங்களின் கதையில் படுகொலை பற்றி எழுதுகையில் டார்சி விட்டாச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.

கலவரங்கள் தன்னிச்சையாக நடக்கவில்லை என்று கவர்னர் ஜெனரல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தார் என குயின்ஸ் மாளிகையிலிருந்து செய்தி கசிந்தது.

அவர் கூறியது: ‘ஜென்டில்மேன் இது தன்னிச்சையாக வகுப்புவாதத்தின் வெடிப்பு என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடலாம்.

இதை கவனமாகத் திட்டமிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக அறிந்தவர்களின் பின்னால் இருந்த ஒரு சூத்திரதாரியின் வேலை இது. இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு டைம்- பொம், இப்போது வெடித்துவிட்டது.

1958 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை மக்கள் அனுபவித்த பயங்கரமும் வெறுப்பும் அந்த அடிப்படைத் தவறின் விளைவாகும். நம்மிடம் என்ன மிச்சம்? இடிந்து விழுந்த ஒரு தேசம் நாம் மறக்க முடியாத சில கொடூரமான பாடங்கள் மற்றும் ஒரு முக்கியமான கேள்வி: சிங்களவர்களும் தமிழர்களும் பிரியும் நிலையை அடைந்துவிட்டார்களா?

https://www.virakesari.lk/article/215500

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இனவாதிகளால் சந்ததிக்கு சந்ததியாக, போகத்திற்கு போகம் நடத்தப்பட்ட ஒவ்வொரு இனக்கலவரத்திற்கும்/இன அழிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நினவுத்தூபிகள் அமைக்கப்பட வேண்டும்.இப்படியான நெருக்கடிகளும் உலக அரங்கில் சிங்களத்தை தலை குனிய வைக்கும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Amirthanayagam Nixon

அமரர் ஜேஆர், சந்திரிகா, மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட மற்றும் ரணில் ஆகிய ஏழு பேரையும் நான் சிங்கள அரசியல்வாதிகளாக ஒருபோதும் எனது புவிசார் அரசியல் கட்டுரைகளில் குறிப்பிட்டது இல்லை.

ஏனெனில், இந்த ஏழு பேரினதும், கட்சி அரசியல் வெவ்வேறாக இருந்தாலும், ”சுயநிர்ணய உரிமை” வடக்குக் கிழக்கை ”சிங்கள மயப்படுத்தல்” மற்றும் “தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாட்டை சிதைத்தல் போன்ற உத்திகளை வகுப்பதில் இவர்கள் சிறந்த இராஜதந்திரிகள்.

தமிழர் பகுதிகளில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ”இலங்கை இராணுவக் கட்டமைப்பு“ என்ற பொறிமுறையை இந்த ஏழு பேரும், காலத்துக்கு ஏற்ப பாதுகாத்தனர்.

தமிழர் பகுதிகளில் “இராணுவ பொறிமுறை“ நிர்வாகத்தை மொசாட் உதவியுடன் ஆரம்பித்தவர் ஜேஆர்.

2009 இல் போரை வென்றது மகிந்தவாக இருக்கலாம். அந்த நேர புவிசார் அரசியல் சாதகமாகவும் இருந்திருக்கிறது.

ஆனால்-- --

மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட அந்த ஏழுபேருமே சிங்கள உண்மையான பௌத்த தேசிய காவலர்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதமே பிரச்சினை எனவும் மிக நுட்பமாக சித்தரித்து சர்வதேசத்தை நம்பவைத்தார்கள்.

புலிகளுக்கு எதிரான மனநிலையுள்ள ஆங்கிலம் தெரிந்த படித்த தமிழர்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தியதும் இந்த ஏழு பேரும் தான். (அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் சர்வதே விவகார அறிவுத் தரத்தை (Sophistication) மிக நுட்பமாக பயன்படுத்தியவர் சந்திரிகா)

ஆனால் ஜேவிபி, சந்திரிகாவை தவிர ஏனைய ஆறு பேரையும் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் எனவும் இலங்கைத்தீவை பிளவுபடுத்தவுள்ளனர் என்று பொய்யான பரப்புரை மேற்கொண்டு, சிங்கள மக்களின் அனைத்துக் கவனத்தையும் திசை திருப்பியுள்ளனர்.

இந்த அறுவடைதான் தற்போதைய JVP - NPP அரசாங்கம். ஆனால் மேற்படி சுட்டிக்காட்டிய சிறந்த இராஜதந்திரிகள், JVP - NPP அரசாங்ககத்தில் இல்லை. ஆதரவாக இருக்கும் தமிழர்கள் சிலருக்கும், அந்தளவு நுட்பமான அறிவு இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனால் சர்வதேச அரங்கில் ஏழு பேராலும், தமிழர்களுக்கு எதிராக வகுக்கப்பட்ட இராஜதந்திர வியூகங்களை JVP - NPP சாதகமாக பயன்படுத்த முற்படுகிறது.

இராணுவ பொறிமுறை பரிந்துரைகள் மூலமே வடக்கில் ஐயாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியானது.

அம்பாறை உடந்தை முருகன் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட புத்தர் நிலையும் இந்த இராணுவ பொறிமுறை அறிவுறுத்தல் தான்.

2024 நம்பவர் இடம்பெற்ற தேர்தலில் சஜித் அல்லது ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும், இந்த வர்த்தமானி அறிவித்தலும் புத்தர் சிலை வைப்பும் நடத்துதான் இருக்கும்.

1949 இல் கிழக்கு மாகாணம் கல்லோ குடியேற்றத் திட்ட செயற்பாட்டுக்கு 1983 இல் ஜேஆர் நுட்பமாக செதுக்கிய உத்தியின் வளர்ச்சிதான் இவை.

இடையில் நடந்த 30 ஆண்டு கால போர் அதற்குத் தடையாக இருந்தது. ஆனால் 2009 மே மாததத்துக்குப் பின்னர், இலகுவாக சிங்கள மயப்படுத்தல் நடக்கிறது.

அதுவும் 2015 நல்லாட்சி என்று தூக்கிப் பிடித்த மைத்தி - ரணி அரசாங்கம், தொல்பொருள் திணைக்களம், காணி திணைக்களம், வனஇலாக திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் மூலம் சட்டரீதியான முறையில் குடியேற்றங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

2009 இற்குப் பின்னர் இவை பற்றி விஞ்ஞான ரீதியாக விளக்கமளிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? .

அநுரகுமார அல்ல, ஜேஆர் காலத்தில் இருந்து வகுக்கப்பட்ட இராணுவ பொறிமுறை இயங்குகின்ற முறைமை பற்றிய விளக்கங்கள் முக்கியமானவை.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.