Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையச் செய்திகள்

Featured Replies

1, கூகுளில் தமிழ் தட்டச்சுவான்

கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ளது.

இணைப்பு -- http://www.google.com/transliterate/indic/Tamil

நம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போல

தமிழில் தருகிறது.

ஒரு வார்த்தை அடித்து முடிந்ததும்

apace பாரை அழுத்தினால் அது

தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது.

நன்றி

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

கலைநேசன் இணைப்புக்கு நன்றி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

2, புதிய RealPlayer

என்றைக்குமே RealPlayer மென்பொருள் நமக்கு பிடித்ததாய் அமைந்ததில்லை. இணையத்தில் காணக்கிடைக்கும் பிரபலமான அபூர்வ வீடியோ கிளிப்புகள் பெரும்பாலும் rm, ram ஃபார்மாட்டில் கிடைப்பதால் ரியல் பிளயர் சும்மாவேனும் நிறுவி வைத்திருப்பது உண்டு. ஆனால் சமீபத்தில் வெளியான RealPlayer (பீட்டா) நம் அபிப்ராயத்தையே முற்றிலும் மாற்றி விடும் போலுள்ளது. இதில் நமக்கு மிக பிடித்தமான பயன் Youtube வீடியோக்கள் , Google Video-களை பிரவுஸரில் ஒரே கிளிக்கில் நேரடியாக டவுன் லோட் செய்து கொளல் தான். இவை .flv எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்பட்டு உங்கள் வீடியோ லைப்ரரியில் அழகாய் அடுக்கப்படும். பின் நேரம் கிடைக்கும் போது அவ்வீடியோக்களை பொறுமையாய் Full Screen-ல் பார்த்துக்கொள்ளலாம். நல்ல வீடியோ குவாலிட்டி கூட.

esnips.com எனும் பிரபல கோப்புகள் கிடங்குகாரர்கள் நம் பேவரைட் MP3-களை கேட்க மட்டுமே அனுமதிக்கின்றார்கள். டவுண்லோட் செய்ய வசதி தருவதில்லை. செர்வர் சுமையை தவிர்க்க தான். ஆனால் புதிய RealPlayer அந்த MP3-களையும் ஒரே கிளிக்கில் இறக்கம் செய்ய நன்கு உதவுகின்றது.இவை .ivr எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்படும்.

அநேக இலவச மென்பொருள்கள், வெப்தளங்கள், பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சன்கள் இத்தகைய வீடியோக்களை இறக்கம் செய்ய இருப்பதால் RealPlayer லேட்டாதான் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்.

download -- http://forms.real.com/netzip/getrde601.htm...type=rp11b_us_n

மூலம் -- pkp.in

Edited by கலைநேசன்1

1, கூகுளில் தமிழ் தட்டச்சுவான்

கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ளது.

இணைப்பு -- http://www.google.com/transliterate/indic/Tamil

நம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போல

தமிழில் தருகிறது.

ஒரு வார்த்தை அடித்து முடிந்ததும்

apace பாரை அழுத்தினால் அது

தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது.

இதில சில சிக்கலுகள் இருக்கிது. இஞ்ச நாங்கள் தட்டச்சு செய்யும்போது வரும் சொல்லுகள் போல வருது இல்லை. ற றி றீ றெ றே இதுகள எழுதுறது வித்தியாசமா இருக்கு. என்னால எழுத முடியவில்ல. மற்றது எழுதினாப்பிறகு தான் பிழை விட்டு இருக்கிறமா எண்டு தெரியும். தட்டச்சு செய்யும்போதே பார்க்கமுடியாது. ஆனா சுரதாவில இருக்கிற பொங்குதமிழ் இப்படி இல்லை. இதைவிட இலகுவா அடிக்கலாம்.

எண்டாலும் இதுவும் பலருக்கு பயன் உள்ளதா இருக்கும் எண்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்

கூகிள் எர்த் சேட்டலைட்கள்

கூகிள் எர்த் பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவைப்படாது. அது அவ்வளவாய் பிரபலம். ஆனால் கூகிள் எர்த் படங்களை விண்வெளியிலிருந்து சுட்டுத்தள்ளும் சேட்டலைட்கள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா?. அந்த சேட்டலைட்டின் பெயர் QuickBird (படத்தில் காண்பது). இவர் தான் மூத்த அண்ணா. இவர் விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் (October 18, 2001) பூமியின் மூலை முடுக்குகளையெல்லாம் வானிலிருந்து படம் எடுத்து பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கின்றார். அவற்றை தாம் நாம் கூகிள் எர்த்தில் அல்லது கூகிள் மேப் சேட்டலைட் வியூவில் பார்க்கின்றோம். இந்த சேட்டலைட் பூமிக்கு மேல் 450கிமீ தொலைவில் பூமியை சுற்றியவாறு உள்ளதாம். உண்மையில் இந்த சேட்டலைட் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. இது DigitalGlobe எனும் American remote sensing நிறுவனத்தினுடையது.

QuickBird-ன் தம்பி சேட்டலைட்டான WorldView I சமீபத்தில் தான் (September 18, 2007) விண்ணில் ஏவப்பட்டது. இப்போது இவரும் கலக்கலாய் தெளிவாய் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு படங்களை சுட்டு வானிலிருந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். QuickBird-ஐ விட தெளிவான படங்களாய் இவை இருக்கின்றன. விரைவில் இப்படங்கள் கூகிள் எர்த்தில் இடம்பிடிக்க தொடங்கிவிடும்.

WorldView I-னால் தினமும் 750,000 சதுரகிலோமீட்டர்களை படம்பிடிக்க இயலுமாம்.மேலும் அப்படங்களில் பூமியின் அரைமீட்டரே அளவான பொருள்களையும் காண இயலுமாம்.

WorldView I சேட்டலைட் பூமிக்கு அனுப்பிய சில சாம்பிள் படங்களை இங்கே காணலாம்.

http://www.digitalglobe.com/worldview-1_images.html

அடுத்ததாய் 2008-ல் Worldview II ஏவவிருக்கின்றார்கள். அது என்னமாயமெல்லாம் செய்யப்போகின்றதோ?.

மூலம்--- ipk.in

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

4,அழிக்க unlocker

எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்திருப்பதால் அழிக்கமுடியாதிருந்திருக்கல

Edited by கலைநேசன்1

  • தொடங்கியவர்

4,தமிழ் கணணி கலைச்சொற்களின் களஞ்சியம் இங்கே >> http://www.tcwords.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

5,குக்கீஸ்-ன் இன்னொரு அவதாரம்

ஏதோ ஒரு தேவைக்காக ஒரு

இணைய தளம் போகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். சில வாரங்கள் கழித்து மீண்டும் அதே இணைய தளம் போனால் அது "ஹாய் " என உங்கள் பெயர் சொல்லி கூப்பிட்டு வரவேற்பதோடு உங்களுக்கு பிடித்தமான சமாசாரங்களையும் பட்டியலிட்டு காட்டும். அமேசான்.காம் போன்ற தளங்கள் போனவர்கள் மிக தெளிவாகவே இதை உணரலாம். இதற்க்கு காரணம் பிரவுஸர் குக்கீஸ் (Browser Cookies). முதல் தடவை அத்தளம் போகும் போது அது உங்களை குறித்த முக்கிய தகவல்களை உங்கள் கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பில் இட்டுச் செல்லும். எனவே மறு முறை நீங்கள் அதே தளம்

செல்லும் போது அது உங்களைப் பற்றி தெளிவாக சொல்லுகின்றது.

பயனுள்ள தொழில்நுட்பமாக இது தெரிந்தாலும் சிலர் இதை தவறாக பயன் படுத்துவதால் பெரும்பாலோர் இந்த குக்கீகளை தாங்களாகவோ அல்லது சில பிரைவேஸி மென்பொருள் கொண்டோ அழித்து விடுவது உண்டு.

இதற்கு டிமிக்கி கொடுக்க வந்துள்ளது ப்ளாஷ் குக்கீஸ் (Flash cookies-Local Shared Object (LSO)). சாதாரண பிரவுஸர் குக்கீ போலவே இது செயல் பட்டாலும் இந்த பிளாஷ் குக்கீகள் சில விஷயங்களில் சிறிது வேறுபட்டவை.

முதலாவது உங்கள் கணிணியிலுள்ள அனைத்து பிரவுசர்களுக்கும் (Like Internet Exploere and Firefox in the same computer) ஒரே ஒரு குக்கீ மட்டுமே இருக்கும்.

இரண்டாவது இக்குக்கீகளை பராமரிக்க ஆன்லைனில் செல்ல வேண்டும். பிரவுசர் செட்டிங்ஸ் உதவாது. இக்குக்கீகளை பிரவுசர் செட்டிங்ஸ் வழி அழிக்கவும் முடியாது. இதற்காகவே macromedia.com தளம் Adobe Flash Player settings Manager-யை ஆன்லைனில் வைத்துள்ளது.

http://www.macromedia.com/support/document...gs_manager.html

To View and delete Flash Cookies on your computer click here

http://www.macromedia.com/support/document..._manager07.html

அல்லது கீழ்கண்ட இடத்தில் (ஹார்ட் டிரைவ்) உங்கள் கணிணியிலுள்ள பிளாஷ் குக்கீகளை பார்க்கலாம். அழிக்கலாம்.

[systemdrive]:\Documents and Settings\[username]\Application Data\Macromedia\Flash Player

அல்லது இருக்கவே இருக்கு Objection எனப்படும் Firefox extension to delete Flash Cookies

http://objection.mozdev.org/

சாதாரண பிரவுஸர் குக்கீகளை மட்டுமே அழித்துவிட்டு ஆகா தடயங்களை முற்றிலுமாய் அழித்து விட்டோம் என மெத்தனமாய் இனி இருக்க வேண்டாம். பிரைவசி பற்றி கவலைப்படுவோர் இனி பிளாஷ் குக்கீகளையும் அழித்து விடவேண்டும்.

மூலம்:pkp.in

  • தொடங்கியவர்

6,கைப்பேசியிலிருந்து கணிணிக்கு......

ஒரு காலத்தில் கேமரா தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு இன்றைக்கு உலகில் அதிக அளவு கேமராக்களை தயாரித்து உலகில் உலவ

விட்டுக்கொண்டிருக்கிறது "கைப்பேசி நிறுவனம்" நோக்கியா. முன்பெல்லாம் சுற்றுலா செல்லும் போதும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே தேடப்படும் கேமராக்கள் இப்போது எல்லாருடைய கையிலும் எல்லா நிமிடமும் செல்போன் வடிவில். தெருவில் தான் கண்ட கண்கொளா காட்சியை பிறருக்கும் காட்ட படங்களை கிளிக்குகிறார்கள். வீடியோக்களை பிடிக்கின்றார்கள்.

பொக்கைவாயில் சிரிக்கும் உங்கள் மழலையில் அபூர்வ சிரிப்பு ஒன்றை மொபைல் போனில் கிளிக்கி படமாய் எடுத்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை உங்கள் செல்போனில் வால்பேப்பராயும் ஆக்கி விட்டீர்கள். அந்த அபூர்வ படத்தை மடிக்கணிணிக்கு கொண்டுவருவது எப்படி?

அவசரமாய் கொண்டு வர உங்கள் செல்போன் வழி இணையத்தில் நுழைந்து அப்படத்தை உங்கள் ஈமெயில் ஐடிக்கு மின்னஞ்சல் செய்யலாம் . அப்புறமாய் உங்கள் மடிக்கணிணியில் நுழைந்து மின்னஞ்சல் வழி இறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆனால் அடிக்கடி MP3 கோப்புகள், ரிங் டோன்கள், படங்கள், வீடியோக்கள் என இன்னும் பிற

கோப்புகளை செல்போன் டு கணிணி மற்றும் கணிணி டு செல்போன் பறிமாற்றம் செய்ய உங்களுக்கு தேவை கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்று.

1.Laptop comes with Bluetooth or

2.Laptop comes with Infrared (IrDA) or

3.USB Bluetooth or (படம்) ($10 க்குள் கிடைக்கிறது)

4.USB Infrared (IrDA) or (படம்)($10 க்குள் கிடைக்கிறது)

5.USB Data Cable (படம்)

மேலும் இதன் மூலம் உங்கள் செல்போனை மோடம் (Cellphone as modem) போல் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் மடிக்கணிணி வழி இணையத்தில் நுழையலாம்.

இரு உபயோகமான மென்பொருள்கள்

If you use Bluetooth to connect Cellphone to Computer use this free software BlueSoleil to transfer files from/to mobiles phones.

Download Page

http://www.bluesoleil.com/download/

If you use USB Data Cable

floAt`s Mobile Agent- A free software to install on computer to manage Phonebook (both SIM and Phonememory), SMS, Profiles, and Files stored on the Mobile phone.

Home Page

http://fma.sourceforge.net/index2.htm

Download Page

http://sourceforge.net/project/showfiles.php?group_id=71167

மூலம் : pkp.in

  • தொடங்கியவர்

7,வயர்லெஸ் கீ போர்டு அபாயம்

வயர்லெஸ் கீ போர்டு, வயர்லெஸ் மவுஸ் என வைத்துக்கொளல் இப்போதெல்லாம் ஆடம்பர விஷயமல்ல. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவை மிக சகஜமாகிவிட்டன.

அசோக்நகர் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பின் முதலாவது மாடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு வயர்லெஸ் கீ போர்டுவழி உங்கள் கணிணியில் ஏதோ டைப்புகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு பாங்கிங் சைட் பாஸ்வேர்டாக கூட இருக்கலாம். அதை அப்படியே என்ன டைப்புகின்றீர்கள் என இரண்டாவது மாடியில் குடியிருக்கும் "பத்தாவது படிக்கும் சுட்டி" தெரிந்து கொள்ளலாம். எப்படி?

வயர்லெஸ் கீ போர்டுகள் நீங்கள் தட்டும் எழுத்துக்களை அப்படியே டைப்ப டைப்ப அவற்றை ரேடியோ அலைகளாக மாற்றி கணிணிக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும். மேல்மாடி சுட்டி ரொம்ப தொலைவில் இல்லையே. அவர்களுக்கும் அந்த ரேடியோ அலைகள் எட்டும். இந்தகால பள்ளிக்கூட படு சுட்டிகளுக்கு ஒரு வயர்லெஸ் ரிசீவரும்,எளிய டிகிரிப்டோ மென்பொருளும் கிடைத்தால் போதும். மொத்தமும் காலி. ஏன் அப்பேர்பட்ட Microsoft Wireless Optical Desktop 1000/2000 keyboard-கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம்.

அக்கம் பக்கம் யார் இருக்கானு தெரிஞ்சு வச்சிக்கிறது ஒரு விதத்தில் நல்லது தான்.

மூலம்:pkp.in

  • தொடங்கியவர்

8,மின்சாரக் கனவு

முதலில் எங்கோ உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை கம்பியின்றி தொலை வானொலிகளுக்கு கடத்தி வெற்றி பெற்றார்கள். அதோடு ஒளியையும் சேர்த்து கலந்து இனிதாய் ஒலியும் ஒளியுமாய் தொலைகாட்சிகளுக்கு பின் கடத்தினார்கள்.இப்படி வெற்றிகரமாய் வயர்லெஸ் வழி ஒலியையும் ஒளியையும் கடத்தியாயிற்று.

இப்படியே மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?

அப்படி கடத்த முடிந்தால் எத்தனை மாற்றங்கள் உலகில் உருவாகும்.யூகிக்க கூட முடியாத ஒன்று.

நெடுஞ்சாலைகளில் மைல்கணக்கில் வேகமாய் நம் கூடவே வரும் அந்த பருத்த மின்கம்பங்களும், கம்பிகளும் காணாமல் போய்விடும்.

பாக்கெட்டில் இருக்கும் செல்போன் தானாய் வயர்லெஸ்ஸாய் சார்ஜ் ஆகிவிடும்.EB-க்கு தனியாய் காசு கட்டலாம்.

மின்சார பேருந்துகள் ஓடிக்கொண்டே இருக்க வயர்லெஸ்ஸாய் அதற்கு கரண்ட் சப்ளை ஆகிக்கொண்டேயிருக்கும். இப்படி எல்லாமே மாறிப்போகும்.

இதெல்லாம் சாத்தியமா? சமீபத்திய ஆய்வுகள் சில இவை சாத்தியம் என்கின்றன. இதை Wireless Electricity Power Transfer என்கின்றார்கள். மைக்ரோவேவ் ஓவன் மாதிரி ஒர் அறையை இந்த மின்னலைகளால் நிறைத்து அந்த அறை முழுவதும் மின்சாரத்தை கம்பியின்றி கடத்த முயன்றிருக்கிறார்கள். கி.பி 3000-த்தில் உங்களிடமுள்ள மின்கருவிகள் எல்லாம் வயர்கள் தொல்லைகள் எதுவும் இன்றி தானாய் இயங்க உலகமே இவ்வலைகளால் நிறைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?

அட குடி தண்ணீரை கூட குழாயின்றி கடத்தலாம்ங்க. மேகம் டன் டன்னாய் வானில் தண்ணீரை குழாயின்றி கடத்த வில்லையா என்ன? :icon_idea:

ஆனால் ஒன்று. அதுவரை மாறி மாறி குண்டு வைத்து தகர்த்து தன்னை தானே கொல்லும் மனித ஜன்மம் தான் இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

மூலம்:pkp.in

  • தொடங்கியவர்

9,யூடியூப் வீடியோக்களை VCD-யாக்கலாம்

வித விதமாக பயனுள்ள மற்றும் குப்பை வீடியோக்களால் நிரப்பபட்டுள்ள Youtube.com தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதேச்சையாக கண்ணில் பட்டது Baa Baa Black Sheep வீடியோ பாடல். அழகான வண்ணமயமான கார்டூன் கிராபிக்ஸில் இன்னிசை மற்றும் பாடல் வரிகளோடு நம் எஞ்சினியர்கள் அதை படைத்திருக்கின்றார்கள். இது போல Rain Rain go away யிலிருந்து Hot cross bun வழி Solomon Grundy வரைக்கும் குழந்தைகளின் அனைத்து நர்சரி பாடல்களும் ஒலி/ஒளி வடிவில் இந்த யூடியூப் தளத்திலுள்ளது.என்ன கொஞ்சம் தேட வேண்டும்.

இங்கே கிளிக்கி பாருங்கள் சில சாம்பிள்களை.

http://www.youtube.com/profile_videos?user=Nirooba

http://www.youtube.com/profile_videos?user=pinchal

http://www.youtube.com/profile_videos?user=aruntubeyou

ஆமா ஆன்லைனில் இருக்கும் இந்த குழந்தைகள் பாடல்களை எப்படி குழந்தைகளைப் போய் சேர்க்க? அவர்கள் இணையத்திலா நம்மைப்போல் குந்திக்கிட்டிருக்கிறார்கள

  • தொடங்கியவர்

10,தங்கமும் தாளும்

புராதன மன்னர்கள் காலங்களில் பொற்காசுகள் (தங்க காசுகள்) மற்றும் வெள்ளி காசுகள் புழங்கி வந்தன என்பார்கள்.இதுமாதிரியான பூமியின் அபூர்வ உலோகங்களில் இருந்து காசுகள் செய்ததால் அக்காசுகள் தானே தனக்கென ஒரு மதிப்பை தாங்கி உருக்காலைகளை விட்டு வெளிவந்தன. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மதிப்பு நீடித்திருக்கின்றது. கடவுள் மனிதனுக்கென அளித்த பணம் இது தானோ என்னவோ?.

என்றைக்கு மனிதன் அச்சகத்தில் பணத்தை காகிதத்தில் இஷ்டத்திற்கும் அச்சடிக்க தொடங்கினானோ அன்றைக்கு வந்தது வினை.இன்று பொட்டி நிறைய பணத்துக்கு கூட ஒன்றும் வாங்க முடிவதில்லை.எங்கும் பணவீக்கம் அதாவது Inflation. பொருளாதார வீழ்வுகளிலிருந்து எழ அமெரிக்க ஐரோப்பிய சென்ட்ரல் பாங்குகள் பில்லியன் கணக்கில் டாலர்களையும் யூரோக்களையும் அச்சடிக்கின்றார்கள். ரொம்ப எளிதாய் European Central Bank pumps $500 bn into banking system-( http://www.merinews.com/catFull.jsp?articleID=128668 )னு பேப்பர்களில் ஒரு வரி. அவ்ளோதான் செய்தி. விளைவுகள்? யாருக்கு தெரியும்.

நம்மூர் "இரண்டு ரூபாய்" தாளை விட "ஒரு ரூபாய்" காசுக்கு மதிப்பு அதிகம் தெரியுமோ? அதாவது இரண்டு ரூபாய் தாளின் மதிப்பு இரண்டு ரூபாய்தான். ஆனால் ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ஏழு ரூபாயாம்.எப்படி? அந்த ஒரு ரூபாய் காசு உலோகத்தை உருக்கி சவரபிளேடு செய்து விற்றால் அது மூலம் ஏழு ரூபாய் கைக்கு வரும். ஆனால் பேப்பர் பணம் வெறும் தாள் தான். இதுதான் உலகளாவிய அனைத்து காகித கரன்சிகளின் நிலையும் கூட.

டாலர் மதிப்பு இறங்குவதும் தங்கம் மதிப்பு ஏறுவதும் காகித கரன்சிகளில் மக்கள் நம்பிக்கை இழப்பதையும் தங்கத்தின் மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பதையும் காட்டுவதாக கூட இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு டன் கணக்கில் தங்கம் வாங்கி செயற்கையாக தட்டுப்பாட்டை வருவித்து அதன் விலையை வேண்டுமென்றே உயர்த்தி பின் டமாலென அத்தனையையும் வித்து லாபம் சம்பாதிக்க துடிக்கும் சில பெரும்புள்ளிகளின் சித்துவேலையாகவும் இருக்கலாம்.

11,தேடிவரும் ஏமாற்று லாட்டரி மின்னஞ்சல்கள்

எப்போதாவது Microsoft-டிடமிருந்தோ அல்லது Yahoo போன்ற பிரபல கம்பெனிகளிடமிருந்தோ உங்களுக்கு மெயில் வந்திருக்கின்றதா?

"Your email address have just won a Yahoo cum Windows live prize money of (ONE MILLION BRITISH POUNDS STERLING) (GBP£1,000,000.00) today 9th of January,2008.

Award winners emerge through random selection of all active email subscribers online. Six are selected monthly to benefit from this promotion.

This Prize Award must be claimed in not later than 15 days from date of draw notification after which unclaimed prizes are cancelled."

எப்படி இருக்குது இது?

அல்லது நைஜீரியாவிலிருந்து யாரோ ஒரு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் உங்கள் உதவி வேண்டி ஈமெயில் வழி தொடர்புகொள்கின்றாரா? .உஷார்... உஷார்..

ஈஸியா பணம் கிடைக்குதேவென ஏமாறுபவர்கள் இதில் ஏராளம்.எப்படி?

ஏதோ ஒரு இணையதளத்திலிருந்து உங்கள் ஈமெயில் ஐடி கண்டெடுக்கப்பட்டு சில ஏமாற்றுகாரர்கள் உங்களுக்கு ஈமெயில் வழி வலைவிரிப்பார்கள். அல்லது George@yahoo.com எனப் பொதுப்பெயர் மெயில் ஐடிகளுக்கு இம்மாதிரியான

மெயில்களை அனுப்புவார்கள். George@yahoo.com என ஒருவர் இல்லாமலா போய்விடுவார்?

இந்த மோசடியில் பலரும் மாட்டுவது எப்படி?

லாட்டரியில் வெற்றி பெற்ற பணத்தை அல்லது நைஜீரிய வங்கியிலிருந்து மீட்கப்பட்ட பணத்தை பெற முதலாவது Identification-காக உங்கள் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பச் சொல்வார்கள். அவ்ளோதான் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்

திருடப்பட்டு விட்டன. யார் வேண்டுமானாலும் இப்போது தன்னை உங்களைப் போல் போர்ஜரி செய்து கொள்ளலாம்.

இரண்டாவது அந்த வெற்றிபெற்ற பணத்தை பெற ஒரு Transaction fee தொடக்கத்தில் கட்ட வேண்டும் என்பார்கள். நீங்கள் அப்பாவியாய் கட்டுவீர்கள். பின் அந்த பணத்துக்கான வரியை முதலிலேயே அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும் என சில டாலர்கள் உங்களிடமிருந்து பிடுங்குவார்கள். பின் அப்பணம் ஒரு குறிப்பிட்ட வங்கியில் தான் டெப்பாசிட் செய்யப்படும்.எனவே அந்த பேங்கில் தயவு செய்து ஒரு அக்கவுண்ட் திறவுங்கள் என்பார்கள். அந்த வங்கியில் கணக்கு திறக்க குறைந்தது $3000 போட வேண்டும் என நிபந்தனை வேறு இருக்கும். கடைசியில் தான் உணர்வீர்கள் அது ஒரு பிராடு ஆன்லைன் வங்கி என.

ஈஸி பணம் என என்றுமே சாத்தியம் இல்லை. எந்த ஒரு தனிநபரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும் மில்லியன் டாலர்களை வாரி வாரி வழங்கவும் தயாரில்லை. வாங்காத லாட்டரி உங்களுக்கு எப்படி விழும்.பேராசையால் ஏமாறாமல் இருக்க இங்கே இது ஒரு எச்சரிக்கை மணி.

இம்மாதிரி மெயில்களையெல்லாம் நம்பி ஏமாந்து பணத்தை இழந்து தனக்குள்ளே புழங்கி வெட்கப்பட்டு யாரிடமும் வாய் திறந்து சொல்லாதிருப்போர் எண்ணிக்கை தான் இங்கு அதிகம்.

மூலம் :pkp.in

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

12,பறிபோகும் பிரைவசி

கொஞ்ச நாட்களாகவே யாரோ என்னை கண்காணிப்பது போலவும்,நோட்டம் விடுவது போலவும் தோன்றிக் கொண்டே யிருந்தது. இன்றைக்கேனும் எப்படியும் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு யாருக்கும் தெரியாத கண்காணாத பிரதேசத்திற்கு போய்விடவேண்டும் என தோன்றியது.அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டேன்.

கையில் செல்போனை வைத்திருந்தால் என் செல்போன் தொடர்பு கொள்ளும் டவரை வைத்து எளிதாய் என் இருப்பிடத்தை யாரும் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் அவசரத்துக்கு உதவும் மொபைல்போனை கூட வீட்டில் விட்டு விட்டு செல்ல தீர்மானித்தேன்.

கார் திருடுபோனாலோ,வழிதப்பிப்போனா

  • தொடங்கியவர்

13,படம் சுட்டு கதை கட்டு

இனிமேலும் புகைக்காத முன்னாள் "புகைவண்டி"யை இப்போது "தொடர்வண்டி" என்கின்றோம். டிஜிட்டல் கேமராக்கள் முலம் உருவாகும் படங்களை இனிமேலும் புகைப்படங்கள் எனலாமா?.தெரியவில்லை. அதற்கொரு வார்த்தை இருப்பின் நண்பர்கள் தெரிவிக்கலாம்.

நம் விசயத்துக்கு வருவோம்.

பிறந்த நாள் விழாவாகட்டும், வளைகாப்பு விழாவாகட்டும் அல்லது வீட்டில் ஏதோ ஒரு குடும்ப விழாவாகட்டும். வரவேற்பறை தொலைக்காட்சிபெட்டியில் சீரியல்களை ஓட விடுவதைவிட அதை ஆப் செய்து போடுதல் நன்று.

ஆனால் அதை ஆப் செய்து போடுவதை விட அதில் குடும்பம்/நண்பர்கள் புடைசூழ முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை/ டிஜிட்டல் படங்களை இன்னிசை பிண்ணணியோடு ஸ்லைடு ஸோ-வாக அதில் ஓட விடல் மிகவும் நன்று. பழைய சுவாரஸ்ய நினைவுகள் நிகழ்வுகள் நண்பர்கள், உறவினர்களை மகிழ்விப்பதாயும், நெகிழ்ச்சியூட்டுவதாயும் எல்லாரையும் கொஞ்சநேரம் கலகலவென சிரித்து பேச வைப்பதாகவும் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்களை அழகாய் தொகுத்து யாரையும் புண்படுத்தா கிண்டல் வார்த்தைகளை எழுதி அல்லது பிண்ணணியில் நகைச்சுவையாய் குரல் கொடுத்து அந்த ஸ்லைடு ஷோ வை இன்னும் மெருகூட்டி ஓட விடலாம்.

இப்படி ஒரு குடும்ப ஸ்லைடு ஷோ புராஜெக்ட் செய்ய விருப்பமா? இலவசமாய் மைக்ரோசாப்ட் அளிக்கிறது போட்டோ ஸ்டோரி (Microsoft Photo Story 3 for Windows XP) எனும் மென்பொருள்.இம்மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி ஓட விடுங்கள்.எளிதாய் இம்மாதிரி இசையோடு கூடிய புகைப்பட ஓட்டத்தை படைக்கலாம். வேண்டுமானால் போட்டோக்களோடே இடைஇடையே சிறுசிறு வீடியோக்களையும் செருகலாம் என்பது கூடுதல் வசதி.

http://www.microsoft.com/windowsxp/using/d...ry/default.mspx

இல்லை இந்த மாதிரி ஸ்லைடு ஷோ அல்லாமல் மொத்தமாய் ஒரு வீடியோ காட்சி அல்லது டாக்குமெண்டரி எளிதாய் உருவாக்க மைக்ரோசாப்டின் இலவச விண்டோஸ் மூவி மேக்கரை முயலலாம்.

http://www.microsoft.com/windowsxp/downloa...oviemaker2.mspx

மூலம் -pkp.in

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

14,வின்டோஸ் CD Key மாற்றி

தற்போதைய உங்கள் வின்டோஸ் கணிணியின் Product Key என்னவென கண்டுகொள்ளவும், தேவைப்பட்டால் அக்கீயை மாற்றவும் ஒரு இலவச மென் பொருள்.அதன் பெயர் Magical Jelly Bean Keyfinder என்பதாகும். இதனை கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.download.com/3001-2094_4-10664536.html

அது சரி.எதற்காக உங்கள் Windows Product Key-யை மாற்ற வேண்டும்?

விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component என்ற ,இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே அதற்காகத்தான்.

அதற்கான தீர்வை இங்கே ......

[1] The 'Magical Jelly Bean Keyfinder' is a freeware utility that retrieves your Product Key (cd key) used to install windows from your registry. It has the options to copy the key to clipboard, save it to a text file, or print it for safekeeping. It works on Windows 95, 98, ME, NT4, 2000, XP, Server 2003, Windows Vista, Office 97, Office XP, and Office 2003.

This version is a quick bug fix to remedy the broken "Change Windows Key" in Windows XP.

Download Jellybean keyfinder from the link given below.

DOWNLOAD -

http://www.download.com/3001-2094_4-10664536.html

[2] EXTRACT the Downloaded File named "kf151.rar"(261 KB) by "Win RAR".

[3] Now Double-Click on the Extracted file named "keyfinder.exe".

[4] Click on "Options" and choose "Change Windows Key"

[5] Now enter the following key in the box named "CD Key".

*********************************

V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J

*********************************

Now, your Winxp is Orginal.

After following the above process If You have dought whether Your Windows XP is Genuine or Not then you can Examine your Windows XP copy.

To EXAMINE your Windows XP copy follow the following steps:

[1] Click on the following address.

EXAMINE YOUR WINDOWS XP COPY

http://www.microsoft.com/genuine/selfhelp/...?displaylang=en

[2] Click on the button named "Validate Now" on the middle panel.

The VALIDATION will start. It will take few seconds to examine. Then, The RESULT will show that :

"Thank you for validating your copy of Microsoft Windows.

Thank you for using the Windows Genuine Advantage program. You may now access resources for genuine Windows users."

மூலம் :pkp.in

  • தொடங்கியவர்

15,E-bomb

நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.

நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம். உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும். இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.

இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.

http://www.tribuneindia.com/2007/20070610/nation.htm#9

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.

இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.

வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.

நல்லாருக்கு.வாழுக விஞ்ஞானம்.

மூலம்:pkp.in

  • தொடங்கியவர்

16,வைரசு இருக்கா? இல்லையா?

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.

உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.

கீழ்க்கண்ட வைரசு எதிர்ப்பான்கள் இந்த சேவையில் பங்கு வகிக்கின்றன

AhnLab (V3)

Aladdin (eSafe)

ALWIL (Avast! Antivirus)

Authentium (Command Antivirus)

Avira (AntiVir)

Bit9 (FileAdvisor)

Cat Computer Services (Quick Heal)

ClamAV (ClamAV)

CA Inc. (Vet)

Doctor Web, Ltd. (DrWeb)

Eset Software (ESET NOD32)

ewido networks (ewido anti-malware)

Fortinet (Fortinet)

FRISK Software (F-Prot)

F-Secure (F-Secure)

AVG Technologies (AVG)

Hacksoft (The Hacker)

Ikarus Software (Ikarus)

Kaspersky Lab (AVP)

McAfee (VirusScan)

Microsoft (Malware Protection)

Norman (Norman Antivirus)

Panda Security (Panda Platinum)

Prevx (Prevx1)

Rising Antivirus (Rising)

Secure Computing (Webwasher)

Softwin (BitDefender)

Sophos (SAV)

Sunbelt Software (Antivirus)

Symantec (Norton Antivirus)

VirusBlokAda (VBA32)

VirusBuster (VirusBuster)

முகவரி: http://www.virustotal.com/

மூலம்:http://tamizh2000.blogspot.com/

  • தொடங்கியவர்

17,வானத்திலே திருவிழா

சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.

உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை இடைவிடாது சுற்றி வரும்

QuickBird, WorldView I போன்ற சேட்டலைட்கள் இன்றி கூகிள் எர்த் நமக்கு கிடைத்திருக்காது.

Global Navigation Satellite System-ன் அந்த 24 சேட்டலைட்கள் இன்றி அமெரிக்க கார்களின் GPS வேலை செய்யாது.

INSAT 4B இல்லாமல் சன் டிவியின் SunDTH நேரடி சேட்டலைட் வழி ஒளிபரப்பு சேவை நமக்கு கிடைத்திருக்காது.

இப்படி டிவி சேனல்களை கேபிள்களின்றி நாடுமுழுதும் ஒளிபரப்ப ,சுற்று புற சீதோஷண நிலையை மணிக்கு மணி தெரிந்துகொள்ள , கடலடி இண்டர்நெட் கேபிள் வெட்டுண்டு போனாலும் அவசரத்துக்கு இணையம் மேய, நமக்கப்பாலுள்ள அண்டங்களை ரொம்ப அவசியமாய் ஆராய, எதிரியின் தந்திர நகர்வுகளை கவனமாய் நோட்டமிட இப்படி பல உதவிகள் இந்த செயற்கை கோள்களால்.

அந்த காலத்து போர் தந்திரம் ஆரம்ப குறி எதிரியை புற உலகிலிருந்து துண்டிப்பது. சாலைகளை துண்டித்தல், பாலங்களை உடைத்தல், துறைமுகங்களை தகர்த்தல் இப்படி.

வரும் கால போர் தந்திரமும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக. பகைநாடு பற்றிய தகவல்களை அள்ளித்தரும் இந்த சேட்டலைட்களை நொறுக்குதல்.

சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.

இதையே தான் சீனாவும் (KillSat) முன்பு ஒருமுறை சாதித்துள்ளது.

ஆக இன்னொரு யுத்தம் வந்தால் முதல் இலக்கு வானமாய் தான் இருக்குமோ...?

மூலம்:pkp.in

  • தொடங்கியவர்

18,இனி மறுக்க முடியாதே

நண்பர் ஒருவருக்கு முக்கிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.அந்த மின்னஞ்சல் கிடைக்கவேயில்லை-னு அய்யா புரூடா விட்டார்.ஆனால் அவர் அந்த மின்னஞ்சலை படித்தார் என்பதற்கு என்னிடம் சரியான ஆதாரம் உள்ளது.எப்படி?

பாஸிடம் ஒரு அனுமதிகேட்டு மின்னஞ்சலிட்டேன். படித்துவிட்டும் அவர் "ஸாரிப்பா படிக்கவில்லை"-ங்கிறார்.எனக்கே டிமிக்கியானு கேட்கலாம் போலிருந்தது.ஆமாம் அவர் படித்ததற்கான ஆதாரம் இப்போது என்னிடம் இருக்கின்றது. அது எப்படி?

வேலை வேண்டி விண்ணப்பம் ஒன்றை மின்னஞ்சல் வழி அனுப்பியிருந்தேன்.அந்த மின்கடிதம் எவராலும் படிக்கப்பட்டதும் உடனே தெரிஞ்சுக்க ஆசை. தெரிஞ்சுகிட்டேன். யாரோ இன்னைக்கு காலை சரியா 9.48 க்கு குறிப்பிட்ட IP Address-யிலிருந்து படித்திருக்கின்றார்கள்.எப்ப

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்கள் இனைப்புக்கு நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, கலைநேசன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவராசியமான பகுதி நன்றி கலைநேசன்.

  • தொடங்கியவர்

நன்றி sagevan,nunavilan,தமிழ் சிறி

19,மின்னஞ்சல் அட்டாச்மென்ட்டும் வைரசும்.

உங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் அட்டாச்மென்டில் வைரசு இருக்கிறதா - என்று எவ்வாறு பரிசோதிப்பீர்கள்?

அதை முதலில் இணையிறக்குவீர்கள். பின் அதை உங்களது கணினியில் உள்ள வைரசு எதிர்ப்பான் மூலம் சோதிப்பீர்கள். சில நேரங்களில் வைரசுஎதிர்ப்பான் நன்றாகவே வேலை செய்யும். அதாவது வைரசுஎதிர்ப்புத் தொகுப்புகளை நீங்கள் தினமும் இணையத்திலிருந்து அப்டேட் செய்துகொண்டே வந்தீர்கள் என்றால் மட்டும்.

இவ்வாறு மின்னஞ்சல் அட்டாச்மென்ட்டை டவுன்லோடு செய்தபிறகு அதில் வைரசுதொற்று இருக்கிறதா என சோதிப்பதைக் காட்டிலும் பின்வருமாறு செய்வது ஆபத்தில்லாத ஒரு நடைமுறை.

மாற்று :

அந்த மின்னஞ்சலை இந்த [ scan@virustotal.com ] முகவரிக்கு பார்வர்டு செய்யவும். அட்டாச்மென்ட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 10எம்பி.

தலைப்பில் [ SCAN ] என்று தட்டெழுதவும். உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் அடக்கத்தை அழித்துவிடவும். அட்டாச்மென்ட் நீங்கலாக. (அதாவது பாடி ஆப் த மெசேஜ் ஐ மட்டும் அழித்துவிடவும்.)

சில நிமிடங்களில் 'அந்த அட்டாச்மென்டின் வைரசு தொற்று பற்றிய தகவல்' உங்களுக்கு வேறு ஒரு மின்னஞ்சலாக வந்துவிடும்.

http://www.virustotal.com/

20,இணையதள பொருளடக்க உரிம ஒப்பந்தங்கள்

நீங்கள் ஒரு இணையதளம் துவங்குகிறீர்கள் என்றால், அதில் பயனுள்ள பல தகவல்களை பொருளடக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று நினைப்பது இயல்புதான். இதற்காக உங்கள் சொந்த எழுத்துக்களை பயன்படுத்தலாம், அல்லது எழுத்தாளர்களை வைத்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஏற்கனவே சிறப்பாக எழுதியவர்கள் பலர் இருக்கலாம். அவர்களிடமிருந்து அந்த எழுத்துக்களை உரிமம் பெற்று உங்கள் இணையதளத்தில் இடுவதுதான் சிறந்த முறை.

மேற்கூறிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தருவதுதான் வெப்சைட் கன்டென்ட் லைசென்ஸ் அக்ரீமென்ட். இந்த உரிமம் மூன்றாம் நபரின் பொருளடக்கங்களை உங்கள் இணையதளத்தில் பயன்படுத்துவதற்கான உரிமைகளை வழங்குவது.

ஆனால் மதிப்பு மிக்க பொருளடக்கங்களை வைத்திருப்பவர்களில் பலர் இலவசமாக அதனைப் பயன்படுத்தக் கொடுக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

வெப் உரிம ஒப்பந்தத்தில் கீழ் வரும் விஷயங்களை நாம் கவனிக்கவேண்டும்:

1. ஒருவரது தகவல்களை அல்லது எழுத்துக்களை நாம் பயன்படுத்தும் போது எந்த வகையில் அதனைப் பயன்படுத்தப்போகிறோம் என்பதை உரிமம் வழங்குபவர் எதிர்பார்ப்பார். அதனால் அவர் மிகத் தெளிவாக அவரது பொருளடக்கங்களை எப்படி, எங்கே, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாகக் கூறிவிடுவார். அதேபோல் உங்கள் இணைய தளத்தில் பயன்படுத்த மட்டுமே அவர் உங்களுக்கு அனுமதி வழங்குவார், அதனை நீங்கள் மீண்டும் வேறு ஒருவருக்கு பயன்படுத்த அளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

2. அதேபோல் உரிமம் வழங்குபவர் பிரத்யேக உரிமைகளை பொதுவாக வழங்க மாட்டார்கள். இந்த நிலையில் உங்கள் போட்டி வர்த்தக நிறுவனங்களுக்கும் அவர் உரிமம் அளித்திருக்கலாம். இதுபோன்ற விஷயங்களை தடுக்க உரிமம் வழங்குபவரின் உரிமைகளை நீங்கள் மட்டுப்படுத்த வேண்டி வரலாம். இதனை சிலருக்கு நீங்கள் வழங்கக் கூடாது என்று ஒப்பந்தத்தில் நீங்கள் வலியுறுத்தலாம்.

3. இந்த ஒப்பந்த உரிமைகளின் கால அளவு முக்கியமானது. எவ்வளவு காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட பொருளடக்கத்தை பயன்படுத்தலாம் என்பதையும், ஒருவரது ஒட்டு மொத்த எழுத்துக்களையும் எந்த அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதையும் முன் கூட்டியே தீர்மானித்து விடுவது நல்லது. உரிமம் பெறுபவருக்கு சிறந்தது என்னவெனில் நிரந்தர உரிமைகளை பெறுவதே. ஆனால் உரிமம் வழங்குபவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்தான் வழங்குவார். அப்போது உரிமத்தை புதுப்பித்தல் குறித்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடவேண்டும்.

4. ஒருவருடைய பொருளடக்கத்திற்கு எவ்வளவு தொகை பேசுகிறீர்களோ அது ஒப்பந்தத்தில் இடம்பெறவேன்டும். பணம் கொடுக்கும் முறை, கால நேரம் அனைத்தையும் அதில் குறிப்பிடுவது நலம்.

5. உங்களுக்கு ஒருவர் பொருளடக்கங்களை பயன்படுத்த உரிமம் வழங்குகையில் அது அவரது சொந்த பொருளடக்கம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அல்லது அவருக்கு பிரத்யேக உரிமைகள் உள்ள பொருளடக்கம்தானா என்பதையும் சரிபார்ப்பது நல்லது

6. உரிமம் வழங்குபவர் ஒப்பந்தங்களை மீறாமல் இருக்க, அதில் குறிப்பிட்டுள்ள உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு இழப்புக் காப்பீடு வசதி செய்து கொள்ளவும்.

7. உரிமம் வழங்குபவரும் ஒரு சில விஷயங்களை வலியுறுத்துவது வழக்கம். அதாவது உங்கள் இணையதளம் தொழில் ரீதியாக, சட்ட பூர்வமாக நடத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புவர். உரிமம் பெற்ற பொருளடக்கங்கள் உங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்போது, அதற்கு முறையாக அங்கீகாரம் வழங்கப்படுமா என்பதையும், அந்த குறிப்பிட்ட பொருளடக்கத்தின் காப்புரிமை தன் பெயரில் உள்ளதை குறிப்பிடுகிறோமா என்பதையும் அவர் உறுதி செய்து கொள்வார்.

8.இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது ஒப்பந்தம் முடிவுக்கு வருவது குறித்தும் அதில் இடம்பெறவேண்டும். அதாவது உரிமம் வழங்குவோர்/பெறுவோர் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பதும், அவ்வாறு ரத்து செய்த பிறகான நடைமுறைகள் குறித்தும் அதில் இடம்பெறவேண்டும்.

மேற்கூறிய பரிந்துரைகளுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தின் மாதிரி எங்காவது கிடைத்தால் பார்க்கலாம். அல்லது இதுகுறித்து ஒரு வழக்கறிஞரை நாடி ஆலோசனை பெறலாம்.

21,ஆன்லைன் பேங்கிங்: பாதுகாப்புக்கு சில டிப்ஸ்

இணையவழி வங்கி நடவடிக்கைகள் தற்போது சுலபமான முறையில் நடந்து வருகிறது. ஆனால் இணையத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகள், ஆன்லைன் பேங்கிங் சேவைக்கும் ஏற்படுகிறது.

மாதம் முழுவதும் கடுமையாக உழைத்த பிறகு நம் சம்பள காசோலையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு பிறகு நிறைய பூஜ்ஜியங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம்தான், அதே போல் நம் வங்கிக் கணக்கில் 6 இலக்க அல்லது 7 இலக்க தொகைகள் இருப்பதைப் பார்ப்பதும் நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான்.

ஆனால் ஒருநாள், உங்கள் வங்கி கணக்கை இணைய வழியில் பார்க்கும்போது வெறும் பூஜ்ஜியம் மட்டுமே இருந்தால் என்ன ஆகும்? இது போன்று நடக்கவே நடக்காது என்று கூற முடியாது, இது நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ஒரு எச்சரிக்கை உணர்வே.

இணையவழி வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயனாளர்களுக்கான சில எளிய டிப்ஸ்கள்:

பொதுக் கணினியில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கை அணுக வேண்டாம்: உங்கள் சொந்த கணினிகளிலேயே வங்கி நடவடிக்கைகளைச் மேற்கொள்ளுங்கள். ஏனென்றால் சைபர் கஃபேக்கள் அல்லது பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் கணினிகளை வங்கி நடவடிக்கைக்கு பயன்படுத்தினால், உங்கள் முக்கியமான கிளிக்குகள் கண்காணிக்கப்படலாம். இதனால் கயவர்கள் உங்கள் கணக்கு எண், கடவுச்சொல் (Password) ஆகியவற்றை அறியும் வாய்ப்புகள் அதிகம்.

ஏமாற்று மின்னஞ்சல் வலையில் விழ வேண்டாம்:

அதாவது நமது வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு வரும் மின்னஞ்சல்கள் நம்பி எந்த தகவலையும் அளிக்க வேண்டாம். ஏனென்றால் எந்த வங்கியும் இணையதள கடவுச்சொல், பின் நம்பர், கடன் அட்டை விவரங்கள் போன்றவற்றை கேட்கவே கேட்காது. எனவே இதுபோன்ற மின்னஞ்சல்கள் மோசடியே.

லாக்-ஆஃப் (Log off) செய்வது முக்கியம்:

இணையதள வங்கி நடவடிக்கைகளை முடித்த பின், அந்த வங்கி இணையதளம் குறிப்பிட்டுள்ள முறைப்படி, உங்கள் கணக்கை, லாக்-ஆஃப் செய்வது அவசியம். அப்படியே உங்கள் உலாவியை நீங்கள் நிறுத்தினால், அடுத்ததாக லாக்-ஆன் செய்யும் வேறு ஒரு நபருக்கு உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் சென்றடைய வாய்ப்பிருக்கிறது.

கடவுச்சொல்லை பாதுகாத்தல்:

கடவுச்சொல் தான் இணையதள வங்கி சேவையில் முக்கியமானது. அதை ஒருவரிடமும் தெரிவிக்க வேண்டாம். வங்கி ஊழியர் கேட்டால் கூட நீங்கள் கூறக் கூடாது.

கடவுச்சொல்லை உருவாக்கும் போது எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உருவாக்க வேண்டும், உங்கள் பெயரின் ஒரு பகுதி, உறவினர் அல்லது குழந்தை பெயரின் ஒருபகுதி ஆகியவற்றை கடவுச் சொல்லில் சேர்ப்பதை தவிர்க்கவும். உங்கள் கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருங்கள்.

போலி இணையதளங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்:

நீங்கள் லாக்-இன் செய்து உங்கள் கணக்கு விவரங்களை அளிக்கும் இணையதளம் உண்மையானது தானா என்பதை கண்டறிவது அவசியம். சில மோசடி பேர்வழிகள் உங்கள் வங்கி இணையதளத்தை போன்றே போலி இணையதளங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள் அதில் போய் நாம் அனைத்து விவரங்களையும் கொடுத்தால் அவ்வளவு தான்.

உங்கள் கடவுச் சொல்லை டைப் செய்யும் முன் இணையதள முகவரியின் நம்பகத் தன்மையை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.

மற்ற உலாவிகளை மூடவும்: வங்கிக் கணக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மற்ற விண்டோக்களில் திறந்து வைத்திருக்கும் இணையதளங்களை மூடுவது நல்லது. இதனால் போலி மென்பொருளைக் கொண்டு இயங்கும் இணையதளம் உங்கள் கணக்கு விவரங்களை திருடுவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஃபயர்-வால் (FireWall) ஏற்படுத்தவும்:

உங்கள் கணினியை அதிகாரபூர்வமற்ற முறையில் பிறர் பயன்படுத்தப்படுவதை தடுக்க, ஃபயர் வால் பெருமளவு உதவும். கணினியின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொண்டே இருக்கவும்.

பேட்-லாக் (Pad-Lock) குறியீட்டை பார்க்கவும்:

உங்கள் வங்கி இணையதளத்தின் கீழ் வலது பக்கத்தில் பேட்-லாக் குறியீடு இருக்கும். இதுவே அந்த இணையதளம் பாதுகாப்பானது என்பதற்கு அடையாளம்.

இணையதளம் மூலம் வங்கி நடவடிக்கைகள் செய்யும் போது ஒரு சிறு தவறு கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். எச்சரிக்கையாய் இருப்பது நம் கையில்தான் உள்ளது.

மூலம்:http://tamizh2000.blogspot.com

22,மடிக்கணிணி திருட்டைக் கண்டுபிடிக்க ஒரு தீர்வு

தரவு பாதுகாப்பு சொல்யூஷன்களை வழங்கும் யூனிஸ்டார் சிஸ்டம் திருட்டுப் போன லேப்டாப்களை கண்டு பிடிக்க “லொகேட் லேப்டாப்” என்ற புதிய களவுத் தடுப்பு சொல்யூஷனை கண்டுபிடித்துள்ளது.

"லொகேட் லேட்ப்டாப்" மென்பொருள் இணைய மோப்ப தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பை திருடியவன் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்துக் கூறி விடும்.

தற்போது வியாபாரிகள் உள்ளிட்ட தனி நபர்கள் பயணத்திலேயே பயன்படுத்துவதற்காக லேப்-டாப்புகளை அதிகம் வாங்குகின்றனர். இதனால் இதற்கு கிராக்கி அதிகமாகியுள்ளது. எந்தவொரு பொருள் அதிகமாக விற்பனையாகிறதோ, அடுத்தபடியாக அந்த பொருளைத் திருடுபவர்களும் அதிகரிப்பார்கள் என்பது நாம் பார்த்துப் பழகிய ஒன்றே.

இந்த மென்பொருள் குறித்து அதனை அறிமுகம் செய்த யூனிஸ்டால் நிறுவனத் தலைவர் அலோக் குப்தா கூறுகையில், லேப்டாப் திருட்டு, தொலைந்து போதல் தற்போது அதிகமாகி வருகிறது, இதனால் தொழில் நுட்ப பணியாளர்கள் மட்டுமல்ல லேப்டாப்பில் அனைத்து தக்வல்களையும் ஏற்றி வைக்கும் கார்ப்பரேட் பணியாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

திருட்டுப் போன லேப்டாப்களில் 97 சதவீதம் திரும்பக் கிடைப்பதில்லை, மேலும் 57 சதவீத கார்ப்பரேட் தொடர்பான குற்றங்கள் இந்த திருட்டுடன் தொடர்புடையது என்று எச்சரிக்கிறார்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு இந்த லொகேட் லேப்டாப் மென்பொருள் பல விதங்களில் பயன்படுகிறது. ஊழியருக்கு லேப்டாப் கொடுப்பது தற்போது ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களிலுமே நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், பிரயாணத்தில் உள்ள நிறுவன ஊழியர் எந்தப் பகுதியில் இருக்கிறார் என்பதை இந்த மென்பொருள் கூறிவிடும். லேப்டாப்பைத் திறந்து வெப் வழியாக லாக்-ஆன் செய்யும்போது முழு விவரங்களுடன் அறிக்கை ஒன்றை தயாரித்து இந்த மென்பொருள் அனுப்பி விடும். இது அந்த ஊழியருக்கு தெரியாமலேயே செய்யப்படும் ஒரு காரியம்.

உங்கள் லேப்டாப்களில் "லொகேட் லேப்டாப்" மென்பொருளை நீங்கள் இன்ஸ்டால் செய்யவேண்டியதுதான். அது மறைந்திருந்து தனது வேலையைக் காட்டும். சிஸ்டம் தொலைந்து போனாலோ, களவு போனாலோ பயனாளர்கள் வெப் பெர்சனல் டிராக்கிங் அன்ட் மானிட்டரிங் பேஜில் லாக்-இன் செய்து லேப்டாப் எங்கு உள்ளது என்பதை அறியமுடியும்.

திருடியவன் லேப்டாப்பிற்கு இணையதள இணைப்பு கொடுக்கும்போதே, இந்த வெப் மோப்ப தொழில் நுட்பம் அவன் உள்ள நகரம், ஐபி. முகவரி ஆகியவற்றோடு, அவன் எங்கெல்லாம், எப்போதெல்லாம் இணையதள இணைப்பு கொடுக்கிறானோ அப்போதெல்லாம் அது இயக்கப்படும் இடத்தை கண்டுபிடித்துக் கூறிவிடும் இந்த லொகேட் லேப்டாப் மென்பொருள். எங்கு இருக்கிறான் என்று தெரிந்தவுடன் அந்த இடத்தின் உள்ளூர் காவல்துறையை வைத்து லேப்டாப்பை கைப்பற்றலாம்.

திருட்டு என்பது ஏறக்குறைய ஒழிக்க முடியாது என்ற கட்டத்தை எப்போதோ எட்டிவிட்ட நிலையில், களவு போன லேப்டாப்பை குறித்த காலத்தில் கண்டுபிடித்துக் கொள்ளும் வசதிகளை எந்த ஒரு வாடிக்கையாளரும் பயன்படுத்துவதுதான் இதற்கு ஒரே வழி.

மூலம்:MSN

23,எத்தனை திறவுசொல்கள் வைத்தாய் இறைவா

அடப்பாவமே! இந்த நவீன மின்னணு உலகில் எத்தனை கடவுசொல்கள் தான் நினைவில் வைத்திருப்பதோ? வங்கி ஏடிஎம் போனால் அங்கு ஒரு கடவு சொல்.ஆன்லைன் பாங்கிங்கில் நுழைந்தால் அங்கு ஒரு கடவு சொல். கிரெடிட்கார்டு கணக்குக்குள் நுழைய இன்னொன்று.ஜிமெயில் பார்க்க இன்னொன்று.அப்பப்போ கவுந்து வயிற்றை கலக்கும் பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்ய இன்னொரு பாஸ்வேர்ட்.

இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்ட்கள் வைத்து மறு நிமிடமே மறந்து தத்தளித்த நம்மாட்கள் அத்தனைக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைக்க தொடங்கினர்.அதுவும் அதிகம் போனால் குழந்தையின் பெயர், செல்ல நாயின் பெயர், காதலரின் பெயர், பிறந்த நாள், பிறந்த இடம், செல்போன் நம்பர் இதில் ஏதாவதொன்றில் நிற்கும்.

அனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைத்தல் எப்போதுமே ஆபத்து தான்.எங்கோ உங்கள் திறவுசொல் தவறி கயவன் கையில் கிடைத்தால் அத்தனைக்குள்ளும் நுழைந்து கைவரிசையை காட்டி விடுவான் அவன்.

வேறென்ன தான் செய்ய?

இங்கே ஒரு தீர்வு.

சாதாரண டெக்ஸ்ட் கோப்பு ஒன்றில் அனைத்து வெவ்வேறு பாஸ்வேர்ட்களையும் எழுதி வைத்து அக்கோப்பை கீழ்க்கண்ட மென்பொருளைக்கொண்டு என்கிரிப்ட் செய்து வைத்துக் கொள்ளல் ஒரு எளிய தீர்வு.

Download Omziff- http://www.xtort.net/apps/omziff.zip

Omziff Homepage- http://www.xtort.net/xtort-software/omziff/

இந்த ஓம்சிப் (Omziff) மென்பொருள் 336kb அளவே உடையதால் USB டிரைவிலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். விருப்பமான ஹைடெக் என்கிரிப்ஷன் அல்காரிதம் ஒன்றை தெரிவு செய்து கொண்டு பாஸ்வேர்ட் ஒன்றையும் கொடுக்கலாம்.

என்கிரிப்ட் செய்யப்பட்ட இந்த டெக்ஸ்ட் கோப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தவிர வேறுயாரும் அதை திறந்து படிக்க இயலாது.

பொதுவாக இதுமாதிரி பாஸ்வேர்ட்களை ஒரு காகிதத்தில் எழுதியோ அல்லது கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பாகவோ தட்டி வைத்திருத்தல் எப்போதுமே நல்ல பழக்கம் இல்லை. ஆகவே கவனம் தேவை.

ஒன்றுக்கு இரண்டு முறை மேற்சொன்ன கடவுசொல்கள் அடங்கிய சாதாரண டெக்ஸ்ட் கோப்பை என்கிரிப்ட் செய்து,நிஜமாகவே என்கிரிப்ட் ஆகியிருக்கிறதாவென சோதனை செய்து சரிபார்த்த பிறகே இம்முறையை நடைமுறை படுத்தவும்.

மூலம்:pkp.in

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.