Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தமிழரசுக்கட்சியின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.

மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட தமிழரசுக்கிளையின் தலைவருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் கட்சியின் உறுதியுரையும் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

நடந்து முடிந்த தேர்தல் மட்டக்களப்பை பொறுத்தமட்டிலும் சரி வடக்கு கிழக்கை பொறுத்தமட்டிலும் சரி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாரிய வெற்றி கிடைத்திருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இம்முறை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே 86 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அது உண்மையில் எங்களுடைய கட்சிக்கு பெரும் வெற்றியாகும்.

2018 ஆம் ஆண்டு நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டதை விட அதிகளவான ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியாக தனித்து நின்று எங்களுடைய உறுப்பினர்களை தெரிவு செய்திருக்கின்றோம்.

நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஏதோவொரு வகையாக ஆட்சியதிகாரத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்ற நல்லதொரு செய்தியை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம். இதிலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒன்பது பிரதேச சபைகளிலே நாங்கள் தவிசாளர் ஒருவரை, மேயர் ஒருவரை, உதவி தவிசாளர் ஒருவரை, பிரதி மேயர் ஒருவரை எங்கள் கட்சியின் சார்பில் முன்மொழிய இருக்கின்றோம்.

நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பாக நாங்கள் சொன்னதற்கு இணங்க மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள். நாங்கள் சில சபைகளிலே முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40 வீதமான தமிழர்களும் 60 வீதமான முஸ்லிம்களும் இருக்கின்ற மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.

யாழ் மாநகர சபையிலே நாங்கள் எங்களுக்கு கிடைத்த பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதாக எங்களுடைய கட்சியை சேர்ந்தவர்களல்ல கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் விமர்சித்திருக்கின்றனர். அதே நேரம் 60 வீதமான முஸ்லிம்கள் வாழும் மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.

எங்களுடைய அரசியல் குழுக் கூட்டத்திலே நாங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் பேசும் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாங்கள் எங்களுடைய தவிசாளர் பதவிகளை எடுப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைத்தவிர ஆசனங்களைப் பெற்ற ஏனைய கட்சிகளாக தேசிய மக்கள் சக்தி, கிழக்குத் தமிழர் கூட்டணி அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 2 ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் உள்ளன. இதிலே இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் தவிசாளராகவும் மேயராகவும் பிரதி தவிசாளராகவும் பிரதி மேயராகவும் நாங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தும்பொழுது இதிலே தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் எங்களுடைய கட்சிக்கு விரும்பினால் ஆதரவளிக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும்.

நேற்றுக்கூட மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சாணக்கியனுடைய அலுவலகத்திற்கு அழைத்திருக்கின்றார்கள் என்று பொய்யான செய்திகளை பரப்பியிருந்தனர்.

இப்படியான பொய்யான செய்திகளை பரப்பி எங்களுடைய மாவட்டத்தில் எங்களுடைய கட்சிக்குள்ளே பல குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இது முற்றாக பொய்யான செய்தியாகும்.

பல கட்சிகள் எங்களுடன் பேசியிருந்தனர். நீங்கள் இந்த சபைகளை விட்டுத்தந்தால் நாங்கள் மற்றைய சபைகளிலே உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவோம் என்று அதிலே சில கட்சிகள் கூறியிருந்தனர். எங்களுடைய கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளராக, மேயராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றபோது எங்களுடைய கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அந்த சந்தர்ப்பத்தை இன்னுமொரு கட்சிக்கு வழங்குவதை விரும்பமாட்டார்கள்.

ஏனைய கட்சிகளுடைய செயற்பாடு எவ்வாறாக அமையுமென்று நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். தேசிய மக்கள் சக்தி ஒரு பேரினவாதக் கட்சியாகும். தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சியாகும். இந்த மாவட்டத்திலே ஆட்சியமைப்பதற்கு விரும்புமாக இருந்தால் அவர்கள் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைப்பது என்றால் அது அவர்களுடைய முடிவாகும்.

அதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதேபோல சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உறுப்பினர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கோ தேசிய மக்கள் சக்திக்கோ ஆதரவாக வழங்கப்போகின்றார்கள் என்றால் மக்கள் அதற்கான தீர்ப்பை வழங்கட்டும்.

அவர்கள் தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சியும், கூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்காது விடுவார்களானால் அவர்களுடைய எதிர்கால அரசியலைப்பற்றி மக்கள் முடிவெடுக்கட்டும். நாங்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கின்றோம். நாங்கள் பிரதானமான கட்சி என்ற வகையிலே எங்களுடைய உறுப்பினர் ஒருவரை அந்த உள்ளுராட்சிமன்றத் தலைவராக முன்மொழிகின்றோம். நீங்கள் உங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவைத் தரலாம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பது மாத்திரம் தான் உங்களுடைய நோக்கம் என்றால் எங்களுடைய கட்சியைத் தோற்கடிப்பதற்கு மனச்சாட்சிக்கு ஒவ்வாத விடயங்களை நீங்கள் செய்வீர்களானால் அதற்கான பதிலை எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் வழங்குவார்கள்.

பல கட்சிகள் இன்று கைகளில் இருக்கும் விரல்களின் எண்ணிக்கையை விடவும் குறைவான உறுப்பினர்களை பெற்றிருக்கின்றார்கள். அதுவும் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை அனைத்து சபைகளிலும் தவிசாளராக நியமிப்பதற்கு அனைத்து கட்சிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் தமிழ் மக்களுக்க எதிரான ஒரு சக்தி பிரதேசங்களில் ஆட்சியமைப்பதற்கு உதவியாக இருக்கின்றீர்கள் என்ற செய்திதான் வெளிவரும். நாளைய தினமிருந்து சபைகளிலே வாக்கெடுப்பு ஆரம்பமாக இருக்கின்றது. போரதீவுப்பற்று, வவுனதீவு சபைகளில் நாங்கள் அறுதிப்பெரும்பான்மையுடன் வென்ற காரணத்தினால் எங்களால் அங்கு ஆட்சியமைக்கக்கூடியதாக இருந்தது. 09 ஆம் திகதி இரண்டு சபைகளிலும் தவிசாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள்.

இன்று (11) முதலாவதாக மாநகரசபையிலே வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது.

நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அனைத்து சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்கக்கூடியதாக இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல சபைகளிலும் வாக்கெடுப்பை நடத்தி முடிப்போம். எங்களுடைய உறுப்பினர்கள் அனைத்து சபைகளிலும் தலைவர்களாக தெரிவுசெய்யப்படுவார்கள்.

இது ஒரு பாரிய வெற்றியாகும். இந்த வெற்றியிலிருந்து எங்களுடைய அடுத்த இலக்கு மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை வைத்து எங்களுடைய மக்களுக்கு பிரதேச ரீதியாக சேவைகளை வழங்கலாம். ஆனால் மாகாண ரீதியாக பல நிர்வாகச்சிக்கல்கள் இருக்கின்றது.

சுகாதாரத்துறை, கல்வித்துறை, நீர்ப்பாசனத்துறை, வீதி அபிவிருத்தி எனப் பல துறைகளிலும் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் இருக்கும் குழப்பங்கள் காரணமாக பல நிர்வாகச் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன. இதனால் எங்களுடைய மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமலிருக்கின்றனர். இதற்கான தீர்வை காண்பதாக இருந்தால் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு ஒரு பாரிய பொறுப்பிருக்கின்றது. நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவான ஆசனங்களை பெற வேண்டும் என்ற நோக்குடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சேர்ந்து வேலைகளை செய்திருக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மூவரும் நீங்கள் 86 பேரும் இணைந்து செயற்பட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் பதவியை எடுக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்காள நாங்கள் ஓரணியில் நின்று உழைக்க வேண்டும். ஒரு   சவாலாக இதனை எடுத்து எங்கடைய அரசியற் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு நாளும் பல தரப்புகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். வெளியிலிருந்து பலவாறாக விமர்சித்துக் கொள்ளலாம். சில சபைகளிலே ஆட்சியமைப்பதற்காக நாங்கள் விரும்பாத சில வேலைகளையும் சில இடங்களுக்கும் சென்று சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

எங்களுடைய சத்தியப் பிரமாண நிகழ்வு எல்லா மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அழைத்து செய்திருக்கின்றனர். அந்தந்த பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவதற்கு உதவியாக இருந்த உதவி வேட்பாளர்களையும் கிளை உறுப்பினர்களையும் நாங்கள் அழைத்திருக்கின்றோம். கட்சியினுடைய சத்தியப் பிரமாண நிகழ்வென்றால் நாங்கள் அழைப்பிதழ் வழங்கத் தேவையில்லை. அதனை அறிந்தால் அனைவரும் வரவேண்டும்.

கிடைத்த வெற்றியினுடைய பங்காளிகளாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் நாங்கள் அனைவரும் இணைந்து ஓரணியாக நின்று இலங்கை தமிழரசுக் கட்சியை, எங்களுடைய மக்களுடைய பிரதான கட்சியை மென்மேலும் பலப்படுத்துவோம் என தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cmbrheg1o01obqpbsjd7qo0c9

  • கருத்துக்கள உறவுகள்

M. A. Sumanthiran 

https://www.facebook.com/share/16Undgtm51/

502560059_10222503578578367_774931428523

505877177_10222503623059479_853872546119

504426285_10222503623419488_372276567893

Nadeshan Thusyanathan

மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு அஸ்மி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் 11.06.2015 காலை 09.40 மணிக்கு இடம்பெற்றது.

அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த கௌரவ சிவம் பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியை சேர்ந்த கௌரவ மாசிலாமணி சண்முகலிங்கம் அவர்கள் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த கௌரவ நவரெத்தினராசா ரகுநாதன் (ரகு) அவர்கள் வழிமொழிந்தார். வேறு தெரிவுகள் எதுவும் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு பிரதி முதல்வராக கௌரவ வைரமுத்து தினேஸ்குமார் அவர்கள் போட்டிக்கு மத்தியில் மொத்த 34 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.