Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு முன்பு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கான யாழ் தேவி ரயிலின் புதிதாக புறப்படும் நேரத்தை காலை 6.40 மணியாக மாற்றியமைக்க வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

01.jpg

https://adaderanatamil.lk/news/cmcrj0vuv00tjqp4k7zqtg8ob

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு முன்பு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கான யாழ் தேவி ரயிலின் புதிதாக புறப்படும் நேரத்தை காலை 6.40 மணியாக மாற்றியமைக்க வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

01.jpg

https://adaderanatamil.lk/news/cmcrj0vuv00tjqp4k7zqtg8ob

உந்த தனிச் சிங்கள சுற்றறிக்கைகளை பாக்க எனக்கு விசர் தான் வாறது.

அரச மொழி மூண்டு, இந்த யாழ்தேவியை அதிகம் பாவிப்பவர்கள் தமிழர்கள். மூன்று மொழியும் நன்கு தெரிந்த ஒருவரையாவது அரச வேலையில் இணைக்க முடியாத நிலையிலா சிறிலங்கா இருக்கிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்!

Published By: DIGITAL DESK 2

06 JUL, 2025 | 05:26 PM

image

(நமது நிருபர்)

கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. 

எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/219333

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கடுகதி புகையிரதசேவை கல்கிசையில் இருந்து ஆரம்பமாகாமை குறித்து அமைச்சர் பிமல் வருத்தம் - தயாரெனின் மாத்திரம் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

09 JUL, 2025 | 09:26 AM

image

(நா.தனுஜா)

யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகாததன் காரணமாகவும், அதுகுறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாததன் விளைவாகவும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை குறித்து வருத்தமடைவதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உரிய ஆயத்தங்களின் பின்னர் புகையிரதம் கல்கிசையிலிருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி மக்களுக்கு அறிவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை (இன்டர்சிட்டி) செவ்வாய்க்கிழமை (8) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் கல்கிசையிலிருந்து ஆரம்பமாகவிருந்த அதிவேக புகையிரதசேவை முன்னறிவிப்பின்றி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் வகையில் மீள்திருத்தம் செய்யப்பட்டது.

அதன் விளைவாக அசௌகரியத்துக்கு உள்ளான பயணி ஒருவர், அவரது பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்,

யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதிகாலை 5.25 மணியளவில் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை வந்தடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அது முன்னறிவிப்பு எதுவுமின்றி இரத்துச்செய்யப்பட்டது. 

வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் காத்திருந்த பயணிகள் வினவியதன் பின்னரே, யாழ் கடுகதி புகையிரதசேவை அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் எனப் பதிலளிக்கப்பட்டது.

இதுகுறித்து முன்கூட்டியே ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படாததன் காரணமாக பயணிகள் பலர் அதிகாலையில் மிகச்சொற்ப நேரத்துக்குள் வெள்ளவத்தையில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்துக்குச் செல்வதற்கு வாகனங்களின்றி மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர்.

இச்சம்பவம் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பதற்கு தயாராக வந்திருந்தவர்களுக்கும் அநாவசியமான மனவழுத்தத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்தது.

அதுமாத்திரமன்றி கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி புகையிரசேவைக்கான டிக்கெட் கட்டணமாக 3,600 ரூபா அறவிடப்படுகின்ற போதிலும், அப்புகையிரதம் இருக்கைகள் உடைந்த நிலையில் சீராகப் பராமரிக்கப்படாமலேயே இருந்தன.

இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட கவனம் செலுத்தவேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து அப்பயணியின் எக்ஸ் தளப்பதிவின்கீழ் பதிவின்கீழ் பதிலளித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 'இதுகுறித்து நான் புகையிரதத்திணைக்களத்திடம் கேட்டறிந்தேன் அவர்களால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை இன்றைய தினம் கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகவில்லை. 

எனவே அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும், புகையிரதம் கல்கிசையில் இருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி பொதுமக்களுக்கு அறிவிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். 

அதுமாத்திரமன்றி இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கோரி அறிவிப்பொன்றை வெளியிடுமாறும் அவர்களிடம் வலியுறுத்தினேன். 

இவ்விடயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சின் சார்பில் வருத்தமடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

https://www.virakesari.lk/article/219533

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புகையிரத சேவைகள் கணனி மூலமாக பதிவு செய்யலாம் என்று முன்னர் கூறினார்கள்.

இதுபற்றி அந்த சேவையை பெற்றுக் கொண்டவர்கள் யாராவது இருந்தால்

அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த புகையிரத சேவைகள் கணனி மூலமாக பதிவு செய்யலாம் என்று முன்னர் கூறினார்கள்.

இதுபற்றி அந்த சேவையை பெற்றுக் கொண்டவர்கள் யாராவது இருந்தால்

அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே!

https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/

பதிவு செய்யலாம் என மேலுள்ள இணைப்பு காண்பிக்கிறது அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/

பதிவு செய்யலாம் என மேலுள்ள இணைப்பு காண்பிக்கிறது அண்ணை.

தகவலுக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.