Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-07-17-at-15.54.44.jp

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1439568

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dfda67b2-19c7-4a7e-a147-dab560d82dd6.jpg

செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன்.

“செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது” ” இன்று, இலங்கையர் அரசு என கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசுக்கு அக்னி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த நாட்டின்  தலைவருக்கு இருக்கிறது.

99996306-6537-40f8-a8a1-a09a8af8bd19.jpg

இது மட்டுமல்ல, தெற்கிலும் பல புதை குழிகள் இருப்பதாக ஆதாரங்கள் ஆங்காங்கே வெளிபட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து நீதியை நிலை நாட்டுங்கள்.

எங்களது நல்லாட்சியில் பல்வேறு காரியங்களை நாமும், வடகிழக்கு தமிழ் கட்சிகளும் நிர்ப்பந்தம் செய்து ஆரம்பித்தோம்.

ஐநா சபைக்கு கொண்டு போனோம். தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அரசியல் கைதிகளை கணிசமாக விடுவித்தோம். காணிகள் கணிசமாக விடுவித்தோம். காணாமல் போனோர் அலுவலகம், நஷ்ட ஈட்டு அலுவலகம், ஆகியவற்றை அமைத்தோம். யுத்த அவலத்துக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு “அதிகாரபகிர்வு” தீர்வை தேடி, புதிய அரசியலமைப்பு பணியை செய்தோம்.

7e121cd5-53a5-401e-949d-a87b3c7e0819.jpg

அனைத்தையும் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியவில்லை. முடியாது. ஆனால் நாம் நல்ல ஆரம்பத்தை தந்தோம்.

நாம் ஆரம்பித்த இந்த பணிகளை அப்படியே முன்னே கொண்டு செல்ல வேண்டியதே இந்த அரசின் கடமை. முதலிப் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளை அங்கே அனுப்புங்கள். அதை செய்யுங்கள் என நான் அநுர குமார திசாநாயக்கவை நான் கோருகிறேன்” இவ்வாறு மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

e3670f38-36da-45b1-84ad-7cb184fa678d.jpg

https://athavannews.com/2025/1439581

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும்.- மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள் - மெலானி குணதிலக

Published By: RAJEEBAN

16 JUL, 2025 | 05:19 PM

image

செம்மணி தெற்கில் உள்ள எங்களின் மனச்சாட்சியுடன் பேசுகின்றது. யுத்தத்தின்போது மக்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டபோது எங்களில் பலர் எங்கள் மனதுகளில் துப்பாக்கி ரவைகளையும்  குண்டுவெடிப்புகளையும் உருவாக்கினோம். நாங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தவற்றை.

ஆனால் யுத்தத்தின்போது அரசாங்கத்தின் ஆதரவுடன் யுத்தத்தின் பெயரால் பாலியல் வன்முறை சிறுவர் பாலியல் வன்முறை உட்பட பல விடயங்கள் இடம்பெற்றன.

518113386_10163688329943829_922009504602

இன்றும் செம்மணியிலிருந்து எலும்புகள் வெளியாகும் போது அப்போது அரந்தலாவை என்பதே எங்கள் குற்ற மனச்சாட்சியாக உள்ளது. 

இனவாத அரசியல்வாதிகளும் அரசியலுக்கான இனவெறியை பயன்படுத்திய சந்தர்ப்பவாதிகளும் ஊடகங்களும் பல வருடங்களாக  வெறுப்பினால் உரமிடப்பட்டிருந்த மனங்களின் மனச்சாட்சியை அழைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் காயங்களை குணப்படுத்துவதற்கு நாங்கள் ஆழமாக தோண்டி அந்த காயங்களை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் பிரீத் கேட்க்கும் நாட்டில் பொதுமக்கள் சிறிய சிறுவர்களாக புதைக்கப்பட்டபோது எம்மிடமிருந்து பறிபோன விழுமியங்கள் குறித்து நாங்கள் மீள ஆராயவேண்டும்.

வடக்குகிழக்கு மக்கள் தங்களிற்கு எதிரான அநீதிகள் குறித்து குரல் எழுப்பும் ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் மனச்சாட்சிகளை மறைத்துவைத்திருக்கின்றோம் என்பதை நாங்கள் உணரவேண்டும்.

வடக்கில் நடந்த குற்றங்களும் தெற்கில் இடம்பெற்ற குற்றங்களும் மெல்லிசைகளில் சொல்லப்பட்ட கதைகளில் எழுதப்பட்ட கவிதைகளில் தொலைந்து போயின என்பதை தெற்கில் உள்ள நாம் உணரவேண்டும்.

நாங்கள் இறக்கவில்லை என்று சொன்னாலும் மரணத்தை நோக்கிப் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. செம்மணிக்கு நீதி கேட்கும்போது சிறு குழந்தைகளின் எலும்புகள் வெளிப்படும்போது அது ஒரு இருண்ட உணர்வு. ஆனால் "அப்புறம் அரலகங்வில அறந்தலவா" என்று அலறும் இதயத்துடன் சிறிது நேரம் உட்காருங்கள். கோபத்தைத் தாண்டி குற்ற உணர்வை நீங்கள் எதிர்கொள்வீர்கள். சிரமத்தைத் தாங்கி அந்த உணர்வை அடையாளம் காணுங்கள். இனவெறி மதம் சார்ந்த பெயரடைகளை அகற்றி மற்றவர்களை மனிதர்களாகப் பார்க்கத் தொடங்க வேண்டிய இடம் அதுதான்.

செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும். மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள்.

https://www.virakesari.lk/article/220156

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம் - பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

17 JUL, 2025 | 05:10 PM

image

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் குழப்பநிலையேற்பட்டது.

518838519_24151211141174265_519233165497

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்னாள் நீதிக்கான மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் இடம்பெற்றது.

518936651_24151211157840930_239932602608

GwDHrm4WMAAn2JU.jpg

செம்மணி உட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான நீதிக்கான குரலைபலப்படுத்துவோம்  ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை  இல்லை என்பதை உலகிற்கு கூறுவோம், சர்வதேச தரத்திலான  அகழ்வு பணி மட்டுமல்ல, நீதிக்கான சர்வதேசத்தின் தலையீட்டையும் குற்றவாளிகள்  நீதியின் முன் நிறுத்தப்படவும் ஓங்கி குரல் எழுப்புவோம் என தெரிவித்து நீதிக்கான மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டத்தில் பெருமளவானவாகள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டோர் 'புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா? செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..! யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து' போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில்    சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தில் பெருமளவானவாகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

GwDHrmpXwAAfPCC.jpg

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களை முன்னோக்கி செல்வதற்கு அனுமதிக்குமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் குழப்பநிலையேற்பட்டது.

இதேவேளை  தமது போராட்டம் குறித்து தெரிவித்துள்ள நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் 1990 இன் பின்னர் வடக்கிலும் தெற்கிலுமாக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. துரையப்பா விளையாட்டரங்கு, மிருசுவில், மன்னார் சாதொச கட்டிட தொகுதி, மாத்தளை  போன்ற இடங்களிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் அவற்றை தேடுவதிலோ அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்காக  எந்த ஆட்சியாளரும் துணியவில்லை  பட்டலந்த வதை முகாம் சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் தற்போது இது குறித்து மௌனமே நிலவுகின்றது என தெரிவித்துள்ளனர்.

அரசபயங்கரவாதத்தின் கோரப்பிடிக்குள்  1971-1988-89  காலப்பகுதியில்  சிக்கி கொடுமைகளை  அனுபவித்த மக்க  விடுதலை முன்னணியினர் ஆட்சியில் இருந்தாலும்  அவர்களும் கடந்த கால  ஆட்சியாளர்களை போலவே  குற்றவாளிகளை  பாதுகாக்கும் நிலையிலேயே உள்ளனர், ஆதலால்  இவர்கள் காலத்திலும் பாதிக்கப்பட்டோருக்கு  நீதி கிட்டப்போவதில்லை  என்பது திண்ணம் என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/220243

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நடக்கும் இப்படியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்... மனோ கணேசனைத் தவிர, வடக்கு, கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் வசிக்கும் சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருக்குமோ.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பில் நடக்கும் இப்படியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்... மனோ கணேசனைத் தவிர, வடக்கு, கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் வசிக்கும் சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருக்குமோ.

அய்யா இது ஒரு மடைமாற்றும் நிகழ்வு....அரசுக்கு சாமரம் வீச செம்மணியை...கறிவேப்பிலையாகப் பாவிக்கிறார்கள்.. கக்கீமும் ..மனோவும்....அனுரவந்து 8 மாதமாகிவிட்டது ...பிள்ளையானை வைத்து கிளித்தட்டு விளையாடுகின்றார்....மற்ற முதலைகள் .. சி.ஐ .டிக்குபோய் ..டீ குடிச்சிட்டுப் போகினம்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.