Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 13:26 [IST]

Edappadi Palaniswami

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.

முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பதில்

இந்த நிலையில்தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம்.

கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பதிலடி

முன்னதாக தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது.

அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

அமித் ஷா சொன்னது என்ன?

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாகடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

நாங்கள் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது., என்றது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/it-is-nda-rule-not-aiadmk-rule-says-annamalai-to-edappadi-palanisamy-on-alliance-721157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

தேர்தல் முடிந்ததும் எடப்பாடியும் இருக்க மாட்டார் அதிமுகவும் இராது.

தன்னையும், கட்சியையும் காப்பாற்ற ஒரே வழி - தவெக கூட்டணிதான்.

ஆனால் இப்போ பாஜகவை கழட்டி விட்டால் - வழக்குகள் சரமாரியாக பாயும்.

டெலிகேட் பொசிசன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஒரு கூட்டணித் தகராறு 

Published By: VISHNU

18 JUL, 2025 | 07:13 PM

image

தி. இராமகிருஷ்ணன் 

பாரதிய ஜனதா கட்சிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஏப்ரில் மாதம் அறிவித்த போதிலும், இரு கட்சிகளும்  அவற்றுக்கிடையிலான முரண்பாடுகளை மறைப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

"எடப்பாடிஜியின் தலைமையில் நாம் தேர்தலில் போட்டியிடுவோம்" என்று  அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் அமித் ஷா கூறினார். வெற்றி கிடைக்கும் பட்சத்தில் "கூட்டரசாங்கம்" ஒன்று அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  அந்த அறிவிப்புக்கு சாதகமான முறையில் அண்ணா தி.மு.க. பதிலளித்திருக்கவில்லை.  அண்ணா தி.மு.க. மாத்திரமல்ல, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் கூட தமிழ்நாட்டில் கூட்டரசாங்கம் என்ற யோசனைக்கு  எப்போதுமே எதிராகவே இருந்து வந்திருக்கினாறன.

1980 சட்டசபை தேர்தலில் தி.மு.க. -- காங்கிரஸ் கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறியது. அந்த கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் சம எண்ணிக்கையிலான ஆசனங்களிலேயே போட்டியிட்டன.  தி.மு.க.வுடன் ஒரு சுற்று இழுபறிக்கு பிறகு அதன் தலைவர் மு. கருணாநிதியை் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்கு  காங்கிரஸ் இறுதியாக இணங்கியது. ஆனால்,  அந்த கூட்டணி தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியடையவில்லை. பதிலாக, அந்த வருடம் ஏற்கெனவே நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இரு ஆசனங்களில் மாத்திரமே வெற்றி பெற்று பிறகு தமிழ் நாட்டில் ஆட்சியதிகாரத்தையும் இழந்த அண்ணா தி.மு.க.வே சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்றது.

2001 சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. 141 ஆசனங்களில் போட்டியிட்டபோது ( முன்னென்றும் இல்லாத வகையில் அந்த கட்சி குறைந்தளவு ஆசனங்களில் போட்டியிட்ட சந்தர்ப்பம் அதுவே ) கூட்டணி நிர்ப்பந்தங்களின் பின்புலத்தில் அந்த கட்சியினால் தனியாக சாதாரண  பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றக் கூடியதாக  இருக்குமா என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், 234 ஆசனங்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் அண்ணா தி.மு.க. 118 ஆசனங்களை கைப்பற்ற வேண்டியிருந்தது. அண்ணா தி.மு.க.வின் தாபகர் எம்.ஜி. இராமச்சந்திரனும் அவருக்கு பிறகு கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதாவும்  மாநிலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் யோசனைக்கு ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், கட்சி அந்த தேர்தலில் 132 ஆசனங்களை கைப்பற்றியதால் கவலைப்படுவதற்கு காரணம் இருக்கவில்லை  

2006 சட்டசபை தேர்தலில் சாதாரண பெரும்பான்மைக்கு குறைவான ஆசனங்களில் (96) தி.மு.க. வெற்றிபெற்றது.  அவ்வாறிருந்தாலும், தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தது. காங்கிரஸுடன் அதிகாரத்ணைப் பகிர்ந்துகொள்ளாமல், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கக்கூடிய அளவுக்கு தி.மு.க. தலைவருக்கும் காங்கிரஸின் அன்றைய தலைவி சோனியா காந்திக்கும் இடையில் நல்லதொரு நட்புறவு இருந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டரசாங்கம் அமையும் என்று ஏப்ரிலில் அறிவித்த பிறகுைஅமித் ஷா அந்த நிலைப்பாட்டை  பல நேர்காணல்களில் ஊடகங்களுக்கு மீண்டும் வலியுறுத்தி தெரிவித்தார். ஆனால், அது விடயத்தில் அண்ணா தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கவில்லை. மத்திய அமைச்சரின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணா தி மு.க. பேச்சாளர் வைகைச்செல்வன் தமிழ்நாடு மாநிலத்தில் கூட்டரசாங்கம் என்ற கோட்பாட்டை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று குறிப்பிட்டார்.

அதேபோன்றே 2026 சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தை ஜூலை 7 ஆம் திகதி தொடக்கிய பழனிச்சாமியும் தனியாக பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய பிறகு அண்ணா தி.மு.க  அரசாங்கத்தை அமைக்கும் என்று குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது. அமித் ஷாவின் நிலைப்பாடு தொடர்பாக பழனிச்சாமியிடம் கேட்கப்பட்டபோது மாநிலத்தில் தனிக்கட்சி ஆட்சியை ஷா  ஏற்றறுக் கொண்டதாகவே அவரின் கருத்தை தான் அர்த்தப்படுத்துவதாக கூறினார்.

இரு கட்சிகளுமே முரண்பாடான கருத்துக்களைை வெளிப்படுத்தியிருப்பதற்கு மத்தியிலும் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும்  பழனிச்சாமியின் பிரசாரத் தொடங்க நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

ஒரு நேர்காணலில் அமித் ஷா முதலமைச்சர் பதிவிக்கு அண்ணா தி.மு.க.வில் இருந்தே நியமனம் செய்யப்படும் என்று கூறினாலும் பழனிச்சாமியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இதை தி.மு.க. வட்டாரங்கள் கவனிக்கத் தவறவில்லை. அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரை அசௌகரியப்படுத்துவதில் நாட்டம் காட்டிய தி.மு க . மத்திய அமைச்சர் ஷாவின் கருத்து பழனிச்சாமியின் தலைமைத்துவ தகைமைகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது என்று கூறியது. இறுதியில், பழனிச்சாமியே அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவார் என்று தெளிவுபடுத்த வேண்டிய நிலை நாகேந்திரனுக்கு ஏற்பட்டது.

அவ்வாறிருந்தாலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த  முன்னாள் மாநகராட்சி நிருவாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியையே அமித் ஷா மனதில் கொண்டிருக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக அடிபட்டன.   முன்னர் அண்ணா தி.மு.க.வில் பலம்பொருந்தியவராக விளங்கும் வேலுமணி சுமார் மூன்று வாரக்களுக்கு முன்னர் பேரூர் ஆதீனத்தின் தலைவர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின்  நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  ராஷ்டிரிய சுயம்சேவக் .(ஆர்.எஸ்.எஸ். ) தலைவர் மோகன் பகவாத்துடனும் 

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களுடனும் ஒரே மேடையில் கலந்து கொண்டார். அது தொடர்பாக பிறகு விளக்கமளித்த வேலுமணி அந்த நிகழ்வை ' அரசியல் சார்பற்றது " என்று வர்ணித்ததுடன் உள்ளூர் ட்டசபை உறுப்பினர் என்ற வகையில் மாத்திரமே அதில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு குறித்து அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக  வேலுமணி உட்பட மூத்த சகாகக்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் அபிப்பிராய பேதங்கள் நிலவியதாக செய்திகள் வெளியாகின.

அரசாங்கத்தின் தன்மை குறித்து மூண்டிருக்கும் விவாதம் எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாக அமையும் என்பதால், அந்த பிரச்சினையை நேரகாலத்தோடு தீர்த்துக்கொள்வது கூட்டணியின் நலன்களுக்கு உகந்ததாக அமையும். பல்வேறு கூட்டணிகளில் அங்கம் பெறவிருக்கும் அரசியல் கட்சிகள் குறித்து இன்னமும் இறுதி செய்யப்படாமல் ஒரு சூழ்நிலையில் அண்ணா தி.மு.க. -- பாரதிய கூட்டணியில் இந்த விவாதம் மூண்டிருப்பதை விளக்கிக்கொள்ள முடியவில்லை.

(தி இந்து ) 

https://www.virakesari.lk/article/220351

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.