Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

26 JUL, 2025 | 03:50 PM

image

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26)  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

WhatsApp_Image_2025-07-26_at_15.13.53.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.57.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.54.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.56.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.54__1WhatsApp_Image_2025-07-26_at_15.13.58.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.55.jp

https://www.virakesari.lk/article/221004

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் செம்மணியை அணுகவேண்டும் - உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை - ரஜீவ்காந்

Published By: RAJEEBAN

26 JUL, 2025 | 08:00 PM

image

கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும்  என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என்ற பார்வை எனக்கு இருக்கின்றது.

300 முதல் 600 வரையிலான பேரை கொலை செய்து  எங்களிடம் மேலதிகாரிகள் தருவார்கள் - தந்தார்கள், இங்கு கொண்டுவந்து அவர்களை புதைத்திருக்கின்றோம் என அவர் சாட்சியம் வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் சர்வதேச அமைப்புகள் சர்வதே மன்னிப்புச்சபை போன்றன மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 99ம் ஆண்டு வரையிலே அகழ்வு பணியை மேற்கொண்டு சுமார் 19 எலும்புக்கூடுகளை அப்போதே கண்டுபிடித்திருந்தார்கள்.

அதுமட்டுமின்றி இன்று கட்டிடங்களிற்கான அகழ்வு வேலை இடம்பெற்றபோது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதற்கான வழக்குதொடுக்கப்பட்டு பின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்றுவரை 90 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு இனஅழிப்பின் சான்றாக, ஒரு இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட பெரும் கொலையாக நாங்கள் பார்க்கவேண்டும் - பல சிங்கள சகோதரர்கள் எங்களுடன் பேசும்போது, தர்க்கம் செய்யும்போது விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றியெல்லாம் பேசுகின்றார்கள்.

அதுவல்ல இங்கு பிரச்சினை, விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளது, பாதுகாப்பு படையினர் என்ற பெயரிலே மக்களை பாதுகாக்க வந்தவர்கள் கொலை செய்திருந்தால், அது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதை மறந்துவிடக்கூடாது.

WhatsApp_Image_2025-07-26_at_15.13.55.jp

இந்த நாட்டிலே இராணுவீரர்கள் வெற்றிவீரர்களாக அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதேநாட்டின் பிரஜைகளை கொன்றொழித்தவர்களை எவ்வாறு வெற்றிவீரர்களாக கொண்டாடுவது என்ற கேள்வி ஒரு சமூகத்திற்கு இருக்கின்றது.

எனவே அந்த அடிப்படையில் சோமரட்ண ராஜபக்ச உயிரோடு இருக்கின்றார், உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள், அவர்களிற்கு எல்லாம் தலைமை தாங்ககூடிய, முப்படை தளபதியாக இன்றைய ஜனாதிபதியிருக்கின்றார், எனவே இதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

இந்த பாரிய குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும், இதற்காக உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை என தமிழ் மக்களாகிய நாங்கள் உணர்கின்றோம், இங்கிருக்கும் மலையக சகோதரர்கள் அதனை உணர்கின்றார்கள். எனவே தான் சர்வதேச நீதி விசாரணையொன்று அவசியம் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

https://www.virakesari.lk/article/221027

  • கருத்துக்கள உறவுகள்

சோமரட்ன ராஜபக்சவும் பாதுகாக்கப்படவேண்டும். என்னை வற்புறுத்தி, பயமுறுத்தி வாக்குமூலம் பெற்றனர் என்கிற கதையெல்லாம் சோடிக்கப்படலாம். ஆனால் அவர் நீதிமன்றத்தில், நீதிபதியின் முன்னால் எந்த வற்புறுத்தலின்றி தானாகவே கேள்வி எழுப்பி வாக்குமூலம் அளித்திருந்தார். ஆகவே அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். என்ன; உதயன் கம்மன், சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்றோர் களமிறங்கக்கூடும். ஆனால் முன்போல் கூட்டம் கூடாது இவர்கள் பின்னால். இனிமேலும் மக்களை ஏமாற்றி தம்மை பாதுகாக்க முற்பட்டால், பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளாகவும் கூடும். இவர்கள் ஊழையிட்டுக்கொண்டு ஓடி வருவதால், இவர்களுக்குப்பின்னால் பெரியதொரு குற்றப்பின்புலம் இருக்கிறது. இவர்களை அழைத்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிவரும். எப்படியும் அகப்படத்தான் போகிறார்கள். இப்படியான அரைகுறைகளை உளறவிடுவதும் நல்லது. அண்மையில் கூட அருண் சித்தார்த் என்கிற குழப்ப காரன், ஒரு கதையை உருட்டிக்கொண்டு வந்தார் யாவரும் அறிந்ததே. அதாவது துணுக்காயில் புலிகளினால் கொலைசெய்யப்பட்ட மக்களின் புதைகுழி ஒன்றுள்ளது, அது தொண்நூறாம் ஆண்டு நடந்தது. அதை ஒருவர் நமக்கு சொன்னார், அவர் இங்கு வருவதற்கு அவருக்கு பயம் என்கிறார். அதே நேரம் புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்பை ஏற்படுத்தி அறிவித்தார்களாம் என்று ஒரு முன்நாள் ஒட்டுக்குழுவின் பெயரையும் சொன்னார். சரி, புலிகள் செய்த கொலையை, புதைகுழியை அடையாளம் காட்ட சம்பந்தப்பட்டவர் ஏன், யாருக்கு பயப்படவேண்டும்? அங்கு சம்பவ காலத்திற்கு முன் தொடங்கி இன்றுவரை வாழும் மக்கள் கூறுகிறார்கள், அருண் கூறும் காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில், இந்திய இராணுவத்தை தொடர்ந்து இலங்கை இராணுவமும் அவர்களுடன் ஒட்டி இருந்த ஒட்டுக்குழு, ஓணான் குழுவுமே இருந்தன அப்போ, அங்கு மக்களின் அலறல் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தன என்றும் புலிகளின் காலத்தில் அங்கே அரிசி ஆலை இயங்கியதாக கூறுகிறார்கள். இந்த இடத்தை வெளியார் யாரும் உடனடியாக அடையாளம் காண முடியாது, இது ஊரின் உள்ளே பல மைல் தூரத்தில் அமைந்துள்ளது, புதிதாக இந்த இடத்திற்கு வரும் யாரும், யாராவது உதவியின்றி உடனடியாக இங்கு வந்து சேர்ந்து விட முடியாது. சம்பவம் நடந்ததாக இவர்கள் கூறும் காலத்தில் சம்பந்தப்பட்டவருக்கு நான்கு வயது, இப்போ யாரையும் கேட்காமல், விசாரிக்காமல் இந்த இடத்திற்கு திடுதிப்பென்று வந்து, இங்கு தொண்நூறாம் ஆண்டு நாலாயிரம்பேர் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் அதில் எனது தந்தையும் ஒருவர் என்கிறார். அங்கு போலீசார் இருக்கவில்லை, விசாரணை இல்லை, முறைப்பாடு இல்லை, இந்த சம்பவம் பற்றி முன்னெப்போதும் அறியப்படவில்லை. அப்போ; இங்கு புதை குழி ஒன்று இருக்குமென்றால், அதை ஒருவர் இவர்களுக்கு அடையாளம் காட்டியிருந்தால், அதோடு சம்பந்தப்பட்ட ஒருவராலேயே அது சாத்தியம். அது யார்? அவர் கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு அருண் சித்தார்த்தை கைது செய்து உண்மையான குற்றவாளி(யை)வாளிகளை கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி, விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரவேண்டும். நாடு கடனாலும் மனித புதை குழிகளாலும் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து நாடு மீளுமா? அரசியலாளர்கள் இராணுவத்தை வைத்து சாதித்துக்கொண்டதுமல்லாமல் அவர்களை காட்டி தப்பித்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

523529150_1167718852059752_6851356584778

523490122_1167773388720965_3268668438104

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.